ஆயுர்வேதத்தின் தோற்றம்

ஆயுர்வேதத்தின் தோற்றம் (Origin of Ayurveda)

 

ஆயுர்வேதத்தின் தோற்றம் வேத காலத்தை ஒட்டியது ஆகும். ஆரோக்கியத்தையும் நோய்களையும் பற்றிய பல செய்திகளை அதர்வண வேதத்தில் காணலாம். ஆயுர்வேதம் அதர்வண வேத்த்தின் ஒரு பகுதி என்று வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர். இருப்பினும், வேதங்களில் பழமையான ரிக் வேதமும் நோய்களையும் மூலிகைகளையும் பற்றி குறிப்பிடுகிறது. வசம்பு, கீழாநெல்லி போன்ற மூலிகைகளைக் குறித்து அதர்வண வேதப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன. இமய மலையின் அடிவாரத்தில் நடைபெற்ற ரிஷிகளின் மாநாட்டு காலமான வரலாற்றுக்கு முந்திய காலகட்டமே முறைப்படுத்தப்பட்ட ஆயுர்வேதத்தின் காலமாகும். சரக சமிதாவே ஆயுர்வேதத்தின் முதல் குறியிடப்பட்ட ஆவணமாகும். சுஷ்ருதா சமிதா இன்னொரு குறிகளிலான ஆவணம்.  தன்வந்த்ரியில் இருந்து தோன்றி பரப்பப்பட்டது சுஷ்ருத பரம்பரை என்றும் ஆத்ரேயாவின் வழிவழியாக உருவானது சரகப் பரம்பரை என்றும் கூறப்படுகிறது. சுஷ்ருதப் பரம்பரையில் அறுவை மருத்துவ நுட்பங்களும் சரக சமிதாவில் உள்மருந்துகளும் மேலோங்கி இருந்தன.

அக்னிவேஷ், பேலா, ஜடுகர்னா, பரஷார், ஹரிதா, க்‌ஷார்பனி ஆகியோர் ஆத்ரேயாவின் சீடர்கள் என சரக சமிதா குறிப்பிடுகிறது. இவர்கள் தனித்தனியாக உள் மருந்துகளின் கொள்கைகளை வகுத்தனர். இவை ஆறில், சரக சமிதாவும் பேல சமிதாவும் இன்று ஆதார வடிவில் கிடைக்கின்றன. ஹரித சமிதாவும் கிடைத்தாலும் அதன் உண்மைத்தன்மை கேள்விக்குரியதே. வெளிநாட்டுப் படை எடுப்புகளால் பல சுவடிகள் மறைந்தொழிந்தன. வாழ்க்கையைப் பற்றிய இந்தப் பழங்கால அறிவுக்கு இது பேரிழப்பு ஆயிற்று.

  • PUBLISHED DATE : Sep 07, 2016
  • PUBLISHED BY : Zahid
  • CREATED / VALIDATED BY : R. Davidson
  • LAST UPDATED ON : Sep 07, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions