விவரங்கள்
அறிமுகம் (Introduction)
ஆழிப்பேரலை என்பது தொடர்ந்து எழும் நீர் அலைகள் ஆகும். பெருங்கடல் போன்ற நீர்நிலைகளின் பெரும் அளவிலான நீர் இடமாற்றம் அடையும் போது இவை உண்டாகின்றன. நிலவதிர்ச்சி, நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு அல்லது பெரும் விண்கல் தாக்கம் ஆகியவற்றால் துரிதமாக ஏரி அல்லது கடலின் நீர்த்தொகுதி இடமாற்றம் அடைவதனால் உருவாகும் அலைகள் பெரும்பாலும் தொலைதூரக் கரைகளைத் தாக்குகின்றன.
காரணம் எதுவாக இருந்தாலும், கடல் நீர் கடுமையாக இடப்பெயர்ச்சி அடைந்து பெருகி கரையின் மீது அழிக்கும் ஆற்றலோடு புரள்கிறது. ஆழிப்பேரலையின் விளைவு காணமுடியாதது அல்லது பேரழிவு கொண்டது ஆகும்.
மேலும் வாசிக்கவும்: ஆழிப்பேரலையைக் கையாள வழிகாட்டுதல்கள். http://www.ndma.gov.in/images/guidelines/ndma%20guidelines-%20management%20of%20tsunamis.pdf
செய்யக்கூடியவையும் கூடாதவையும் (Dos and Dont’s)
1. உங்கள் தெரு கடல்மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதையும், கடற்கரை அல்லது ஆபத்தான நீர்நிலைகளில் இருந்து உங்கள் தெரு எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதையும் அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
2. தப்பிச் செல்லும் வழிகளை முன்கூட்டியே திட்டமிடவும். வீடு, பள்ளி, பணியிடம் அல்லது ஆழிப்பேரலை எழும்போது இருக்கக் கூடிய வேறு இடங்கள் ஆகியவற்றின் வழிகளை நன்கு அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
3. கடற்கரை வீடுகளை உயரமாக அமைக்க வேண்டும். பெரும்பாலான ஆழிப்பேரலை அலைகள் 3 மீட்டர் உயரம் கொண்டனவையே. ஆகவே வீடுகளை உயர்த்திக் கட்டும்போது பெரும்பாலான ஆழிப்பெரலைகளின் மூலம் சொத்து சேதம் அடைவதைக் குறைக்கலாம்.
4. காலநிலை வானொலி அல்லது கடற்கரைப் பாதுகாப்பு அறிவிப்பைத் தொடர்ந்து கேட்கவும்.
5. குழந்தைகள், முதியோர், போக்குவரத்து வசதி அற்றவர்கள் போன்ற தனிப்பட்ட உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவுங்கள்.
முக்கியத் தொடர்புகள் (Important Links)