வேலை வாய்ப்புகள் (Career Prospects):
அறிமுகம்
நவீன வாழ்க்கைமுறையின் அதி வேகத்தின் காரணமாக மனிதன் தன் மனதிலும் உடலிலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உடலியல் மற்றும் உளவியல் அழுத்தத்திற்கு ஆளாகிறான். ஆகவே, பயிற்சி பெற்ற உடற்தகுதி பயிற்சியாளர்களுக்கான தேவை பல மடங்கு அதிகரித்து உள்ளது. வளர்ந்துவரும் சுகாதார மற்றும் உடற்தகுதி விழிப்புணர்வு இந்த புதிய துறையின் தோற்றத்துக்கு வித்திட்டுள்ளது. தற்காலப் பணிச்சூழல் நம்மைக் கணினி மற்றும் நவீன தொழிற்நுட்பத்திற்குள் பிணைத்து விட்டதால் உடற்பயிற்சிக்கான வாய்ப்புகள் அரிதாகி விட்டன. இதனால் சமுதாய்த்தின் பெரும்பகுதியான மக்கள், குறிப்பாகப் பெருநகரங்களில் வாழ்வோர், நீரிழிவு, இதய நோய்கள், உடல்பருமன், இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்.
உடற்தகுதி என்ற கருத்துரு புரட்சிகரமான மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. உடற்தகுதி என்பது வருமானம் அளிக்கும் வணிகமாகவும் நிரந்தர வேலை வாய்ப்புகளுள்ள துறையாகவும் எழுந்துள்ளது. உயர் வகுப்பினரும் பணக்காரர்களும் மட்டுமன்றி மக்கள் தொகையின் பெரும்பகுதியினர் உடற்தகுதி என்ற உணர்வுக்கு ஆளாகியுள்ளனர். உடற்தகுதி என்பது உடல்நலத்தோடு இருப்பது மட்டுமல்லாமல் தோற்றப் பொலிவையும் சுறுசுறுப்பான வாழ்க்கையை நடத்துவதையும் குறிக்கிறது.
படிப்பு விவரங்கள்
உடற்தகுதித் தொழில் துறை மிகவும் போட்டி நிறைந்ததாக மாறி வருகிறது. சான்றிதழ் எதுவும் தேவைப்படாவிட்டாலும் தகுதி வாய்ந்த பயிற்சியைப் பெற்றுக்கொண்டால் உங்கள் போட்டியாளரை மிஞ்ச முடியும். பயிற்சி வாய்ப்புகள் பலதிறப்பட்டன. எந்தப் பாடத் திட்டத்தையாவது அடிப்படையாகக் கொண்டு நீங்கள் 10+2 முடித்திருக்க வேண்டும். எந்த ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்தாவது உடற்பயிற்சி இயலில் ஒரு முறையான கல்வித்தகுதியை நீங்கள் பெறலாம். இந்திராகாந்தி உடற்கல்வி, மற்றும் விளையாட்டு அறிவியல்கள் நிறுவனம், புதுதில்லி, லக்ஷ்மிபாய் தேசிய உடற்கல்வி கல்லூரி போன்றவை சில கல்வி நிறுவனங்கள் ஆகும்.
உடற்கல்வி துறையில் நீங்கள் ஆழமாகப் புக வேண்டுமானால் ஆய்வுப் படிப்பையும் மேற்கொள்ளலாம். இந்தத் துறையில் நீண்ட காலம் நிலைத்திருக்க நவீன ஆராய்ச்சிகள், பயிற்சி சாதனங்கள், ஊட்டச்சத்து குறித்த ஆய்வுகள் பற்றிய உங்கள் அறிவைப் புதுப்பித்துக் கொண்டே வரவேண்டும்.
வேலை வாய்ப்புகள்
உடற்தகுதித் தொழிற்துறை மாபெரும் வளர்ச்சிக் கட்டத்தை எட்டியுள்ளது. தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களுக்கு வேலைவாய்ப்புக்குப் பஞ்சமே இல்லை. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிற்சியாளர்களுக்கு ஏராளமான பணி இடங்கள் காத்திருக்கின்றன. முதுநிலை அல்லது உயர் பட்டங்கள் பெற்றவர்களும் பல்வேறு கல்லூரிகளிலும் கல்விநிலையங்களிலும் ஆசிரியர்ப் பணிகளுக்கு மனு செய்யலாம். உங்களது சொந்த உடல் பயிற்சி நிலையங்களையும் துவங்கலாம். புகழ் பெற்றவர்களின் தனிப் பயிற்சியாளர்களாகவும் பணிபுரியலாம். ஐந்து நட்சத்திர உணவுவிடுதிகளிலும், மனமகிழ்மனைகளிலும், நீர்மருத்துவமனைகள், விளையாட்டு மற்றும் உடற்தகுதி நிலையங்கள் ஆகிய எண்ணற்ற இடங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன.
வாய்ப்புகளுக்கு முடிவில்லை. மானிட உடற்கூறு, உணவு, ஊட்டச்சத்து, போன்ற பிற உடல்நலச் செய்திகளில் உள்ள அறிவின் அடிப்படையில் பயிற்சியாளர்கள் தங்கள் வாடிக்கையாளரின் உடற்தகுதி நிலையைக் கணித்து அவர்கள் தங்கள் உடற்தகுதி இலக்கை அடைய உதவுகிறார்கள். வயது, எடை, உடல்நிலையின் அடிப்படையில் ஒரு உடற்தகுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. தனிப்பயிற்சியாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உடற்பயிற்சி நிலையத்தில் அல்லது வீட்டில் பயிற்சி அளிக்கின்றனர். சில பயிற்சி யாளர்கள் மூச்சுப்பயிற்சி அல்லது எடைப்பயிற்சியில் தனித்திறமையுள்ளவர்கள்; சிலர் பலதுறைப் பயிற்சி பெற்றவர்கள்.
தொடக்க நிலை சம்பளம் குறைவாக இருக்கலாம். ஆனால் உங்கள் திறமை நிலைநாட்டப் பட்டவுடன் வருமானம் அதிகரிக்கத் தொடங்கும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். பல படிப்புகளின் மூலம் அறிவை விரிவு படுத்த வேண்டும். இவை அல்லாமல், சாகசச் சுற்றுலா போன்றத் துறைகளையும் முயன்று பார்க்கலாம்.
படிப்பை வழங்கும் நிறுவனங்கள்
1. BFY (உங்களுக்கான சிறந்த உடற்தகுதி)
207, கல்பதேவி, 1வது தளம்,
மும்பை, மகாராஷ்ட்டிரம் - 400002
தொலைபேசி: 022-22413636/ 22408320
வலைத்தளம்: http://www.bfysportsnfitness.com
2. இந்திரா காந்தி உடற்கல்வி நிறுவனம்
B-பிளாக், விகாஸ்புரி, புதுதில்லி-110015
தொலைபேசி: 011-25624753
வலைத்தளம்: http://igipess.du.ac.in/
3. லக்ஷ்மிபாய் தேசிய உடற்கல்விக் கல்லூரி
காரியாவட்டம் அஞ்சல், திருவனந்தபுரம்
கேரளா - 695581
தொலைபேசி: 0471-2418712
வலைத்தளம்: http://lncpe.gov.in/
4. தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்
8வது தளம், ஈ.வி.கே. சம்பத் மாளிகை, கல்லூரிச் சாலை
நுங்கம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு- 600006
தொலைபேசி: 044-28252247
வலைத்தளம்: http://www.tnpesu.org/
5. GFFI உடற்தகுதிக் கழகம்
35, NWA, பஞ்சாபி பாக், கிளப் சாலை
மேற்கு பஞ்சாபி பாக், புது தில்லி-110026
தொலைபேசி: 09811309667
வலைத்தளம்: www.gffi-fitness.org
6. ராம்ஜாஸ் கல்லூரி
தில்லிப் பல்கலைக்கழகம்
பல்கலைக்கழக என்கிளேவ்
புதுதில்லி-110007
தொலைபேசி: 011-27667706
வலைத்தளம்: http://www.ramjascollege.edu
அடிக்குறிப்பு (Note): படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் அளித்துள்ள தகவல்களில் இருந்து இந்த செய்திகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன