வேலைவாய்ப்புகள் (Career Prospects):
அறிமுகம் (Introduction)
ஒருவரது சுகாதாரப் பராமரிப்பில் முக்கியமாக அவரது உடல் அம்சங்களில் கவனம் செலுத்தி வேதனைகளைத் தீர்க்கும் மருத்துவத் துறையே உடற்பயிற்சி மருத்துவம் எனப்படும். உடல் இயக்கக் கோளாறுகளைத் தடுத்துச் சரிசெய்ய இது உதவுகிறது. இத்துறை சாதரண நீவுதலில் இருந்து வளர்ச்சி பெற்று பல்வேறு கூட்டு சிகிச்சை முறையாக வளர்ந்துள்ளது. தற்போது இதற்குப் பல்முனை சிறப்பு பயன்பாடுகள் உள்ளன. மக்களிடையே உடல் ஊனத்தைக் குறைத்து புனர்வாழ்வு அளிப்பதற்கு உடற்பயிற்சி மருத்துவம் அர்ப்பணிக்கப்படுள்ளது. பொதுவாக இது மாற்றுத் திறனாளிகளுக்கு அல்லது மூட்டுவாதம், நரம்புக்கோளாறுகள் போன்ற சிதைவுக் கோளாறுகளால் வருந்துவோருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் பரிந்துரை செய்யப்படுகிறது. மருத்துவத்துறையில் வேகமாக வளரும் பிரிவுகளில் ஒன்றாகும் இது.
உடற்பயிற்சி மருத்துவத்தை வாழ்க்கைத் தொழிலாகத் தேர்வது அறிவார்ந்த முடிவாகும். ஏனெனில் இதில் தேர்ந்தெடுக்கப் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வேலைக்கான வாய்ப்புகளுக்கு எல்லை இல்லை.
படிப்பு விவரங்கள் (Course Details)
உடற்பயிற்ச்சி மருத்துவத்தில் நாட்டம் உடையவர்கள் ஒரு உடற்பயிற்சி மருத்துவப் பட்டப்படிப்பிற்கு செல்லலாம். அதற்குச் சில தேவைகளை நிறைவேற்ற வேண்டும். உயிர் அறிவியலான உயிரியல், உடற்கூறியல் போன்றவற்றைப் படிப்பவர்களுக்கு உடற்பயிற்சி மருத்துவப் படிப்பு கிடைக்கும் வாய்ப்புண்டு. படிப்பவருக்கு உளவியல், சமூக அறிவியல் பின்னணி இருந்தால் இப்படிப்பிற்கு மேலும் உதவும். ஏனெனில் இப்பாடங்கள் விரிவாக உடற்பயிற்சி படிப்பில் போதிக்கப்படுகின்றன.
உடற்பயிற்சி மருத்துவம் இரு நிலைகளில் உள்ளது. 1) உடற்பயிற்சி மருத்துவ இயல் இளம்நிலை பட்டப்படிப்பு 2) உடற்பயிற்சி மருத்துவ இயல் முதுநிலை பட்டப்படிப்பு. இளநிலைப் படிப்பிற்கு 4 ½ ஆண்டுகளும் (உள்ளகக்கல்வி உட்பட), முதுநிலைப் படிப்பிற்கு இரண்டு ஆண்டுகளும் பயில வேண்டும். உயிரியலைப் பாடமாகக் கொண்டு +2 முடித்த எவரும் இளநிலைப்படிப்பிற்குத் தகுதி உடையவர் ஆவார். முதுநிலைக்கு உடற்பயிற்சி மருத்துவத்தில் இளநிலைப் பட்டம் அவசியம். இத்துறையில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ள விரும்புகிறவர்கள் இளநிலை ஆய்வாளர் தேர்வில் (Junior Research Fellowship) வெற்றிபெற்றிருக்க வேண்டும்.
வேலைவாய்ப்புகள் (Job Prospects)
வேகமான வாழ்க்கை முறையாலும் மனவழுத்தம் தரும் வேலைகளாலும் தசை மற்றும் எலும்புப் பிரச்சினைகளான முதுகு வலி, உடலுறுப்பு இறுக்கம் ஆகியவை தற்காலத்தில் பரவலாகக் காணப்படுகின்றன.
இந்த சிகிச்சை, உடற்பயிற்சி, தடவுதல் போன்ற உடலியல் முறைகளைக் கொண்டு ஊனங்களை சரிசெய்தும் அசைவுகளை அதிகமாக்கியும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்றது. இன்றைய ஓய்வற்ற வாழ்க்கை முறையில் உடற்தகுதி முக்கியமான அக்கறையாக இருப்பதால் உடற்பயிற்சி மருத்துவர்களுக்கு மருத்துவ மனைகள், பராமரிப்பு இல்லங்கள், மறுவாழ்வு மையங்கள், தனியார் மருத்துவ மனைகள் போன்றவற்றில் வேலை வாய்ப்பு அதிகம். மேலும் உடற்தகுதி மையங்கள், சுகாதார மன்றங்களிலும் பணி செய்யலாம்.
உடற்பயிற்சி மருத்துவத் தகுதி உடையவர்கள் வேலை வாய்ப்பைப் பெற, தகவல் தொடர்பு, ஆய்வுச் சிந்தனைத் திறன்களோடு குழுமனப்பாங்கு உடையவராக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் சம்பளம் குறைவாக இருந்தாலும் தொடர் அனுபவங்களுக்குப் பிறகு அபரீதமாக உயரும் வாய்ப்புண்டு. ஆயினும், நிறுவனங்களுக்கு ஏற்றவாறும் கல்வி பெறும் நிலையங்களுக்குத் தக்கதாகவும் சம்பளம் வேறுபடும்.
படிப்பை வழங்கும் நிறுவனங்கள் (Institutes Offering Courses)
1. லவ்லி பர்ஃபஷனல் பல்கலைக்கழகம்
ஜலந்தர்- தில்லி ஜி.டி. சாலை, NH-1
பக்வாரா, பஞ்சாப் – 144 411
தொடர்பு: 01824-404404
வலைத்தளம்: http://www.lpu.in
2. உடல் ஊனமுற்றவர்களுக்கான பண்டிதர் தீன தயாள் உபாத்யாய் நிறுவனம்,
4, விஷ்ணு திகம்பர் மார்க், புது தில்லி – 110002
தொடர்பு: 011- 23232403
வலைத்தளம்: http://www.iphnewdelhi.in/
3. அப்பொல்லோ உடற்பயிற்சி மருத்துவக் கல்லூரி
அப்பொல்லோ மருத்துவமனை வளாகம், ஜூபிலி ஹில்ஸ்
ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம் - 500033
தொடர்பு: 040-23388346/ 23607777
வலைத்தளம்: http://www.apollohealthcity.com/
4. மருத்துவ அறிவியல்களுக்கான நிஜாமின் நிறுவனம்
பஞ்சகுட்டா, ஐதராபாத், ஆந்திரப்பிரதேசம் - 500082
தொடர்பு: 040-23489000/23396552
வலைத்தளம்:: http://nims.ap.nic.in/
5. இந்திய சுகாதாரக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம்
சுகாதார நிறுவனச் சாலை, பேயூர், பாட்னா - 800002
தொடர்பு:: 09386745004
வலைத்தளம்: http://iiher.com/
6. பாட்னா மருத்துவக் கல்லூரி
பாட்னா - 800004
தொடர்பு:: 0612-2300343
வலைத்தளம்: http://patnamedicalcollege.com/
7. அமர்ஜோதி உடற்பயிற்சி மருத்துவ நிறுவனம்
அமர்ஜோதி மறுவாழ்வு மற்றும் ஆய்வு மையம், கற்கற்டூமா
விகாஸ் மார்க், புது தில்லி - 110092
தொடர்பு:: 011-22379827
வலைத்தளம்: http://www.ajipt.org/
8. மகாராஷ்ட்ரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
வாணி சாலை, SH17 மகாஸ்ருல் நாஷிக்
மகாராஷ்ட்ரா - 422004
தொடர்பு: 0253-2539192
வலைத்தளம்: www.muhs.ac.in
9. ஜாமியா ஹம்தர்த்
தொடர்புடைய சுகாதார அறிவியல்கள் துறை
ஜாமியா ஹம்தர்த். ஹம்தர்த் நகர்,
புதுதில்லி- 110062
தொடர்பு: 011-26059688
வலைத்தளம்: www.jmi.ac.in
10. குரு கோபித்சிங் இந்த்ரபிரஸ்தா பல்கலைக்கழகம்
செக்டார் 16C, துவாரகா,
தில்லி- 110078
தொடர்பு: 011- 25302170
வலைத்தளம்: www.ipu.ac.in
அடிக்குறிப்பு (Note): படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் அளித்துள்ள தகவல்களில் இருந்து இந்த செய்திகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.