உலகப் பார்வை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் வியாழக் கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இது அக்டோபர் 12-ஆம் தேதி அமைகிறது. ‘உலக சுகாதார நிறுவனப் பார்வை 2020: பார்வைக்கான உரிமை’ உலகளாவிய முன்முயற்சியின் கீழ் உள்ள உலகப் பார்வையிழப்புத் தடுப்பு முகவாண்மையத்தால் (IAPB) உலக பார்வை தினம் ஒருங்கிணைக்கப் படுகிறது.
இது, தவிர்க்கக் கூடிய பார்வை இழப்பு மற்றும் பார்வைக் கோளாறு ஆகிய உலகளாவிய பிரச்சினைகளின் மேல் கவனத்தைத் திருப்பும் ஓர் உலக விழிப்புணர்வு நாள். உலகப் பார்வை தினம் 2017-ன் கருத்து வாசகம்: உலகளாவிய கண் நலம். இந்தக் கருத்துரு, உலக சுகாதார நிறுவனச் செயல் திட்டம் 2014-2019 துடன் தொடர்புடையது. மேலும் இது ஒரு தொடர்ந்து வரும் கருத்துருவாகப் பயன்படுத்தப் படுகிறது. எனினும் ஒவ்வொரு ஆண்டும் உலகப் பார்வையிழப்பு தடுப்பு முகவாண்மையம் (IAPB) ஒரு ‘நடவடிக்கைக்கான அறைகூவல்’ மீது கவனம் செலுத்துகிறது.
இந்த ஆண்டு உலகப் பார்வை தினத்தின் ‘நடவடிக்கைக்கான அறைகூவல்’: பார்வையை எண்ணுவோம். இந்த உலகப் பார்வை தினத்தில் எண்ணிக்கையை வெளிப்படுத்துவோம். இதனால் நாம் எங்கே நிற்கிறோம் என்பதை அறிய முடியும்.
பார்வையிழப்பைத் தடுக்கும் முயற்சிகளை ஊக்கப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உலகப் பார்வைதினம் வலியுறுத்துகிறது. ஏனெனில் 80 % பார்வையிழப்பு தவிர்க்கக் கூடியவையே (தடுக்கக் கூடியவை அல்லது/மற்றும் குணப்படுத்தக் கூடியவை). 5-ல் 4 பேருக்கு தவிர்க்கக் கூடிய பார்வையிழப்பே உள்ளது. தவிர்க்கக் கூடிய பர்வையிழப்பையும் பார்வைக் கோளாறுகளையும் ஒழிக்கப் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தனிநபர்களையும் சமுதாயங்களையும் ஆதரிக்க நிறுவனங்களுக்கு உலகப் பார்வை தினம் மேடை அமைத்துத் தருகிறது.
பார்வை 2020 என்றால் என்ன?
‘பார்வை 2020: பார்வைக்கான உரிமை’ என்பது, ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையான தடுக்கக் கூடியதும் குணப்படுத்தக் கூடியதுமான பார்வையிழப்பை 2020 ஆம் ஆண்டுக்குள் ஒழிக்கும் ஓர் உலகளாவிய முன்முயற்சி ஆகும். உலகப் பார்வையிழப்புத் தடுப்பு முகவாண்மையத்தோடு இணைந்து உலக சுகாதார நிறுவனம் 18 பெப்ருவரி 1999-ல் இதைத் தொடங்கியது.
பார்வை இழப்பு வல்லுநர் குழுவின் கண்டுபிடிப்பு அறிக்கை 2017:
பார்வை இழப்பு மற்றும் பார்வைக் கோளாறைக் கட்டுப்படுத்தும் தேசியத் திட்டம்*: இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் 100% நிதி உதவித் திட்டம் இது. விரிவான கண் பராமரிப்பு சேவையை வழங்கி இந்தியாவில் கண் பராமரிப்பு பற்றிய சமுதாய விழிப்புணர்வை அதிகரித்து பார்வையிழப்பையும் பார்வைக் கோளாறையும் தடுக்க 1976 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டுக்குள் பார்வையிழ்ப்பு கொண்டவர்களின் எண்ணிக்கையை 0.3% ஆகக் குறைக்கும் இலக்கிற்கு நேராக பல்வேறு நடவடிக்கைகள்/ முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் குழந்தைப்பருவப் பார்வையிழப்பு/குறைந்த பார்வை ஆயிரத்துக்கு 0.80 ஆக உள்ளது. கண்புரை, விலகல் பிழை, வெண்படலக் குருடு, கண்ணழுத்தம் ஆகியவையே பார்வையிழப்புக்கான முக்கிய காரணங்கள். ஆகஸ்ட் 25-செப்டம்பர் 8, 2017 வரை 32 வது தேசிய கண் கொடை இருவாரம் கொண்டாடப்பட்டது.
கண் நலக் குறிப்புகள்:
”குடும்பத்தினருக்கு, குறிப்பாக பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு, கண் சோதனை அவசியம்: இளம் வயதினர், பள்ளி செல்வோர், வயதானோர், நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோயாளிகள்.”
குறிப்புகள்:
https://www.iapb.org/advocacy/world-sight-day/world-sight-day-2017/
http://www.who.int/blindness/partnerships/vision2020/en/
http://npcb.nic.in/writereaddata/mainlinkFile/File338.pdf