தில்லி அரசு ஊழியர் சுகாதாரத் திட்டம்
மத்திய அரசின் சுகாதாரத் திட்ட முறைப் படி, தில்லி அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியக்காரர்களுக்கும் அவர்களைச் சார்ந்திருப்போருக்கும் விரிவான மருத்துவ வசதிகளை வழங்கும் எண்ணத்தோடு தில்லி அரசு ஊழியர் சுகாதாரத் திட்டம் (DGEHS) ஏப்ரல் 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தில்லி தேசியத் தலைநகர்ப் பகுதி அரசால் நடத்தப்படும் அனைத்து மருத்துவ நிலையங்களும் தில்லி நகராட்சிக் கழகம், புது தில்லி நகராட்சிக் கழகம், தில்லி கண்டோன்மெண்ட் வாரியம், போன்ற தில்லி அரசின் உள்ளாட்சி அமைப்பின் கீழ் இயங்கும் அனைத்துத் தனியாட்சி அமைப்புகளும், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், பட்டேல் நெஞ்சு நிறுவனம் (தில்லிப் பல்கலைக் கழகம்) போன்ற, மத்திய மற்றும் பிற அரசு நிறுவனங்கள் அனைத்தும் இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும், அவ்வப்போது அறிவிக்கை மூலம் பட்டியல் படுத்தப்படும் சில தனியார் மருத்துவ மனைகளும் நோய்கண்டறியும் மையங்களும் பரிந்துரைக்கப் பட்டுள்ளன,.
குறிப்பு: delhi.gov.in
மாநில சுகாதார உளவுத்துறை பணியகம்-சுகாதாரச் சேவை இயக்ககம்
சுகாதாரச் சேவை இயக்ககத்தின் ஓர் அலகான மாநில சுகாதார உளவுத்துறைப் பணியகம், இயக்ககத்தின் பல்வேறு புறநிலையங்களில் இருந்தும் அரசு மற்றும் தில்லியில் செயல்படும் பெரும் தனியார் மருத்துவமனை/முகவாண்மையங்களில் இருந்தும் திரட்டப்பட்ட சுகாதாரம் தொடர்பான தரவுகளை சேகரித்து, தொகுத்து ஆய்வுசெய்யும் பொறுப்பு கொண்டது.
குறிப்பு: delhi.gov.in
தொடர் மருத்துவக் கல்விப் பிரிவு (CME Cell)
தொடர் மருத்துவக் கல்விப் பிரிவு: இது மருத்துவத் துறையில் ஒரு சிறப்புத் தொடர் கல்வி. மருத்துவத் துறையிலும் பிற தொடர்புடையத் துறைகளிலும் புதிய மற்றும் வளரும் பகுதிகளை கற்றறியும் திறனைப் பேண இது உதவுகிறது. மருத்துவத் துறையில் மனித வளத்தை மேம்படுத்த தொடர் மருத்துவக் கல்விப் பிரிவு ஒரு முக்கிய பகுதியாகும். தில்லி சுகாதார அமைப்பின் தொடர் மருத்துவக் கல்விப் பிரிவு, மேற் சொன்ன நோக்கங்களை அடைய உருவாக்கப்பட்டது. மேலும் தில்லி அரசின் மருத்துவ மற்றும் சார் மருத்துவ பணியாளர்களின் பணித் திறனை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும். ”தொடர் பல் துறை மருத்துவக் கல்வி” என்ற திட்டத்தை நடை முறைப்படுத்தும் பொறுப்பு இப்பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரப் பராமரிப்பு வழங்கும் அனைத்து வகையினருக்கும் சேவைப் பயிற்சி இதன் மூலம் அளிக்கப்படும்.
குறிப்பு: www.delhi.gov.in
தில்லி சுகாதார நிதி
தில்லி சுகாதார நிதி ஒரு பதிவு பெற்ற சங்கம் ஆகும். அரசு மருத்துவ மனை அல்லது அறிவிக்கை செய்யப்பட்ட தனியார் மருத்துவ மனைகளில் நீர்ப்பிரிப்பு சிகிச்சை பெறும் பொருளாதார ரீதியாக பலவீனமான பகுதியினருக்கு இது நிதி உதவி அளிக்கிறது. இதன் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி பெற முடியும்.
குறிப்பு: www.delhi.gov.in
தில்லி ஆரோக்கிய நிதி
உயிருக்கு ஆபத்தான நோய்களுக்காக அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குப் பொருளாதர உதவிகள் செய்வதே மாநில நோய் உதவி நிதி ஆகும். தில்லி ஆரோக்கிய நிதி என்ற சங்கத்தால் இது பராமரிக்கப்பட்டு வருகிறது. இச் சங்கம், சங்கப் பதிவு சட்டம் 1860-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு: www.delhi.gov.in
பள்ளிச் சுகாதாரத் திட்டம்
தேசிய தலைநகர்ப் பகுதி தில்லி அரசு மார்ச் 1979-ல் பள்ளிச் சுகாதாரத் திட்டத்தைத் தொடங்கியது. ஆரம்பத்தில் இதன் கீழ் ஆறு பள்ளி சுகாதார மருத்துவ மனைகளே இருந்தன. பின்னர் இவை பள்ளிக் குழந்தைகளுக்கு சேவை அளிக்கும் வண்னம் விரிவாக்கப்பட்டது. இவை பள்ளி மாணவர்களின் வசதிக்காகப் பள்ளி வளாகத்திலேயே தொடங்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்லிகளில் பயிலும் மாணவர்களுக்குச் சேவை செய்யும் வண்ணம் இவை திட்டமிடப்பட்டுள்ளன.
குறிப்பு: www.delhi.gov.in
நடமாடும் சுகாதார வசதி
தில்லியின் 35% மக்கள் சேரிக் குடிசைகளிலும் அங்கீகாரமற்ற குடியிருப்புகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் அங்கீகாரம் அற்ற பகுதிகளில் வாழ்வதாக முத்திரை குத்தப் பட்டிருப்பதால் உள்ளாட்சி அமைப்புகளால் தேவைப்படும் அடிப்படை வசதிகளை வழங்க முடியவில்லை. புதிதாக அமைந்துள்ள தில்லி அரசு, இத்தகைய குடிசை வாழ் சேரி மக்களின் மோசமான சுகாதார நிலையைக் கருத்தில் கொண்டு தேவைப்படும் உதவிகளை அவர்களது வீட்டு வாசலிலேயே அளிக்க முடிவு செய்துள்ளது. வாரந்தோறும் தில்லியின் பல்வேறு சேரிகளை சென்று சேவைகள் அளிக்கும் வண்ணம் தொடக்கத்தில் 20 நடமாடும் மருத்துவமனைகள் 1989-ல் தொடங்கப்பட்டன. நிதி பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, பின்னர் ஆர்வம் காட்டிய அரசு சாரா நிறுவனங்களின் உதவியோடு தற்போது 90 நடமாடும் மருத்துவ மனைகள் தில்லியின் சேரிகள்/ சேவையற்ற பகுதிகள்/ கட்டுமான பகுதிகளில் சேவை ஆற்றி வருகின்றன.
குறிப்பு: www.delhi.gov.in