அறிமுகம் (Introduction)
தொழிற்சாலைகளில் மிகையாக அல்லது தவறாக வேதியற் பொருட்களை பயன்படுத்துவதால் வேதியற் பேரிடர்கள் ஏற்படுகின்றன. பொறுப்பின்றி சகதிவாய்ந்த வேதியற் பொருட்களைக் கையாளுவதால் பேரழிவுகள் உருவாகலாம். தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்து அல்லது செயலிழப்பு அல்லது தொடர்புடைய தொழிற்சாலை செயல்பாடுகள், சொத்துக்கள் மற்றும் உற்பத்தியைப் பாதிக்கும் பேரிடர்கள் ஆகியவற்றால் தொழிற்சாலைப் பேரிடர்கள் உண்டாகலாம்.
இயற்கை அல்லது மனிதன் மூலம் வேதியற் பேரிடர் நிகழலாம். ஒன்றோ அல்லது பலவோ ஆபத்தான வேதியற் பொருட்களைக் கையாளும்போதோ (தொழிற்சாலை செயல்பாடுகள்), சேமிக்கும் போதோ அல்லது கொண்டுசெல்லும் போதோ உண்டாகும் கதிர்வீச்சு, தீ, அல்லது வெடிவிபத்து ஆகியவற்றால் வேதியற் பேரிடர் ஏற்படுகிறது.
மேலும் வாசிக்கவும்:
வேதியற் பேரிடர் (தொழிற்சாலை) வழிகாட்டுதல்கள்
வேதியல் (தீவிரவாதம்) பேரிடர் வழிகாட்டுதல்கள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (Precautions)