விவரங்கள் (Details)
அறிமுகம் (Introduction)
நிலச்சரிவு என்ற சொல்லுக்குள் மலைச்சரிவுகளில் அமைந்துள்ள பலவகையான தொகுதிகளின் நகர்ச்சி அடங்கும். மலைச் சரிவுகளில் அமைந்திருக்கும் பாறைகள், மண், செயற்கையாக நிரப்பப்பட்டப் பொருட்கள் அல்லது இவைகள் அனைத்தும் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு, கீழ்நோக்கியோ அல்லது வெளிப்புறமாகவோ மெதுவாக அல்லது வேகமாக, விழுந்தோ, வழுகியோ அல்லது பாய்ந்தோ செல்லுவது நிலச்சரிவு என்று வரையறுக்கப்படுகிறது.
பாறை விழுதல் போன்ற பரந்துபட்ட நில நகர்வைக் கொண்ட நிகழ்வே நிலச்சரிவு. இது கடற்கரை மற்றும் உட்புறப்பகுதிகளில் ஏற்படலாம்.
மேலும் வாசிக்கவும்: நிலச்சரிவுகள் பற்றிய வழிகாட்டுதல்
செய்யக்கூடியவையும் கூடாதவையும் (Do’s and Don’t’s)
1. கட்டிடத்துக்கு உள் இருந்தால் அங்கேயே இருக்கவும். மேசை போன்ற கடினமான பொருட்களின் கீழ் பாதுகாப்பாகப் பதுங்கவும்.
2. வெளியே இருந்தால் நிலச்சரிவு போக்கில் இருந்து விலகி ஓடி அருகில் உள்ள உயரமான சமநிலத்தில் நிற்கவும்.
3. நிலச்சரிவு நின்ற பின்னும் அதன் பாதையில் இருந்து விலகியே நிற்க வேண்டும். ஏனெனில் கூடுதல் சரிவுகள் நிகழ வாய்ப்புண்டு.
4. வானொலி அல்லது தொலைக்காட்சியில் அவசரகால அறிவிப்புகளைக் கேட்கவும்.
5. குறிப்பாக வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதையோர நிறுத்துமிடங்கள் சரியும் ஆபத்து கொண்டவை. பாதைகளில், குலைந்த ஓரங்கள், மண், பாறை போன்ற சரிவுப் பொருட்கள் கிடக்கின்றனவா என்று கவனிக்க வேண்டும்.
6. நிலச்சரிவு ஏற்படும் அல்லது சரிந்த பொருட்கள் விழும் பகுதிகளில் இருந்தால் பாதுகாப்பான இடத்துக்கு அகலவும்.
முக்கிய இணைப்புகள் (Important Links)
1. கதவுகள் அல்லது சன்னல்கள் திறக்க முடியாமல் ஒட்டிக்கொள்ளுதல்.
2. பூச்சு, ஓடு, செங்கல், அடித்தளத்தில் வெடிப்புகள் தோன்றுதல்.
3. நிலத்தில் அல்லது தெருவில் வெடிப்புகள் மெதுவாக உருவாகுதல்.
4. வேலி, சுவர்கள், கம்பங்கள், மரங்கள் சரிதல் அல்லது நகர்தல்.
நிலச்சரிவு பற்றிய காட்சிப்படம்