விவரங்கள்:
அறிமுகம் (Introduction)
நிலநடுக்கம் என்பது எச்சரிக்கை எதுவும் இன்றி ஏற்படும் நிகழ்வாகும். இதனால் நிலம் கடுமையாக அதிரும். நகரும் நிலத்தகடுகளின் திரண்ட அழுத்தம் வெளியேறும்போது இது விளைகிறது. உலகம் முழுவதும் உயிருக்கும், உடைமைகளுக்கும் நிலநடுக்கங்கள் பெரும் சேதம் விளைத்திருக்கின்றன. நிலநடுக்கங்களால் இந்தியாவுக்குப் பெரும் ஆபத்து உள்ளது.
ஆண்டின் அல்லது பகலின் அல்லது இரவின் எந்த நேரத்திலும் எந்த முன் அறிகுறியும் இன்றி நிலநடுக்கங்கள் திடீரென கடுமையாகத் தாக்குகின்றன. இந்தியாவின் 60% நிலம் நிலநடுக்கங்கள் தாக்கும் வாய்ப்புள்ளதாகும். பெரும்பாலான நிலநடுக்கங்கள் ஒரு நிமிடம் அல்லது அதற்குக் குறைவாகவே நீடிக்கின்றன. நிலத்தகடுகளின் நகர்வாலேயே நிலநடுக்கங்கள் நிகழுகின்றன.
உலகில் ஜப்பானிலேயே அதிக அளவில் நிலநடுக்கங்கள் நிகழுகின்றன. சில விலங்குகள் (நாய், பாம்பு, மீன்) நிலநடுக்கங்களையும் அதற்கு முன்னான மின் சமிக்ஞைகளையும் முன்னுணரும் திறன் கொண்டுள்ளன. ஆனால் அறிவியல் கருவிகள் எதுவும் இல்லை. பொதுவாக நிலநடுக்கங்கள் நிலவியல் வெடிப்புகளால் நிகழுகின்றன. இருப்பினும் நிலச்சரிவு, அணுகுண்டு சோதனை, சுரங்கச் சோதனை மற்றும் எரிமலையாலும் நிகழக்கூடும்.
மேலும் வாசிக்கவும்: நிலநடுக்கப் பேரிடர் வழிகாட்டுதல்கள்
செய்யக்கூடியவையும் கூடாதவையும்: (Do’s and Don’ts)
1. நிலநடுக்கம் ஏற்பட்டால் வீட்டுக்குள்ளும் வெளியிலும் பாதுகாப்பான இடங்களை இனங்காண வேண்டும்:
உட்சுவரை ஒட்டி
வலுவான மேசை அல்லது கட்டிலுக்கு அடியில்
சன்னல், கண்ணாடி, படங்கள் ஆகிய கண்ணாடி சிதறக்கூடிய இடங்கள், கனமான புத்தக அலமாரிகள், விழக்கூடிய கனமான பொருட்களில் இருந்து தள்ளி.
கட்டிடம், மரம், தொலைபேசி மின் கம்பங்கள், மேம்பாலங்கள், பாலங்கள் அற்ற திறந்த வெளியில்.
தெருவிளக்குக் கம்பங்களில் இருந்து விலகவும்.
2. உடையக்கூடிய கண்ணாடி ஜன்னல் அல்லது கண்ணாடி அல்லது விழக்கூடிய கனரக பொருட்களுக்கு அருகில் நிற்க வேண்டாம்.
3. நகரும் வாகனத்தில் சென்றால், கட்டிடம், மரம், மேம்பாலம், மின்கம்பிகள் அருகில் நிறுத்த வேண்டாம்.
4. தரையில் படுக்கவும்; ஒரு மேசையின் பக்கவாட்டில் மறைந்து இருக்கவும். இதனால் சிதைவுகள் பாதிக்காது.
5. வாகனம் செலுத்தினால் நிலநடுக்கத்தால் சிதைந்த பாலங்கள் அல்லது சரிவுப்பாதைகளில் செல்ல வேண்டாம்.
6. சிதைவுகளுக்கு அடியில் அகப்பட்டுக் கொண்டால் மண்ணை உதைக்க வேண்டாம். கடைசி முயற்சியாகவே கத்த வேண்டும். ஏனெனில் கத்தும் போது ஆபத்தான அளவுக்கு தூசி உட்புகும் அபாயம் உள்ளது.
முக்கிய இணைப்புகள் (Important Links)
Earthquake emergency survival guide