இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்பநல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால்(CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
இந்த இணைய தளத்தில் இடம்பெறும் உள்ளடக்கத்தில் துல்லியத்தையும் நிகழ்நிலவரங்களையும் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் உறுதி செய்யப்பட்டாலும் இதையே சட்டத்தின் பாற்பட்ட ஓர் அறிக்கையாகக் கொள்ளவோ அல்லது எந்த ஒரு சட்ட நோக்கதிற்காக இதைப் பயன்படுத்தவோ கூடாது. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை, பயன்படும்தன்மை அல்லது பிறவற்றைக் குறித்த எத்தகையப் பொறுப்பையும் தேசிய சுகாதார இணையதளம் (NHP) ஏற்காது. இந்த இணைய தளம் வழங்கும் தகவலின் அடிப்படையில் செயல்படும் முன்னர், தொடர்புடைய அரசு துறைகளின் தகவலையோ மற்றும்/அல்லது பிற ஆதாரங்களையோ சரிபார்த்து/சோதித்துப் பின் ஒரு வல்லுநர் ஆலோசனையைப் பெறும் படியாக பயனர்க்கு ஆலோசனை அளிக்கப்படுகிறது.
எந்த வகையிலும் அரசோ அல்லது தேசிய சுகாதார இணையதளமோ இந்த இணைய தளத்தில் இருந்து கிடைக்கும் அல்லது அதன் பயன்பாட்டின் தொடர்பாகக் கிடைக்கும் தரவின் பயன்பாட்டால் அல்லது பயன்பாட்டு இழப்பால் உருவாகும் எந்த ஒரு செலவினத்திற்கோ, இழப்புக்கோ அல்லது சேதத்திற்கோ பொறுப்பாகா.
பிற வலைத்தளங்களோடு கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் பொது மக்கள் வசதி கருதி மட்டுமே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் உள்ளடக்கத்திற்கோ, இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் நம்பகத் தன்மைக்கோ, தேசிய சுகாதார இணைய தளம் பொறுப்பாகாது. மேலும், அவற்றில் வெளியிடப்பட்டுள்ள கருத்துகளை வழிமொழிய வேண்டும் என்ற தேவையும் இல்லை. இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளப் பக்கங்கள் எப்போதும் கிடைக்கும் என்பதற்கும் நாங்கள் உத்தரவாதம் தர முடியாது.
இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் இந்தியச் சட்டத்திற்கு ஏற்பவே செயல்படுத்தவும் புரிந்துகொள்ளவும் வேண்டும். இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மூலம் எழுகின்ற எந்த ஒரு சர்ச்சையும் இந்திய நீதிமன்றங்களின் முழு சட்ட எல்கைக்குள்ளேயே அமையும்.
விளம்பரக் கொள்கை
இந்தத் தளம் தனிநபர் மற்றும் வல்லுநர் பயன்பாட்டுக்கு உரியது. இந்தத் தளத்தின் உள்ளடக்கம் நோயாளிகள் தங்கள் சுய சிகிச்சைக்காக பயன் படுத்துவதற்கு உரியது அல்ல. இது இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் நிதி உதவி மூலம் நடை பெறும் வணிக ரீதி அல்லாத வலைத்தளம் ஆகும். விளம்பரங்கள் இங்கு இடம் பெறுவதில்லை. இந்த தளத்திற்கு வருகை புரிவோரின் தனிப்பட்ட தகவல் வெளியிடப் படுவதில்லை
அந்தரங்கம் பற்றிய கொள்கை
இணைய தளம் தனிப்பட்டத் தகவலைத் தருமாறு உங்களிடம் வேண்டினால், எந்த காரணத்திற்காக உங்களிடம் இருந்து அது சேகரிக்கப்பட்டதோ அதற்கான குறிப்பிட்ட காரணம் உங்களுக்கு அறிவிக்கப்படுவதுடன் அந்த அந்தரங்க தகவலைப் பாதுகாக்கப் போதுமான காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இணைய தளத்தில் தாமே முன் வந்து தரப்படும் அந்தரங்கமான இனங்காணக்கூடிய தகவலை நாங்கள் எந்த ஒரு மூன்றாவது நபருக்கும் (பொது/தனியார்) பகிரவோ விற்கவோ மாட்டோம். இந்த இணைய தளத்திற்கு வழங்கப்படும் எந்த ஒரு தகவலும் இழப்பு, தவறான பயன்பாடு, அதிகார பூர்வமற்ற அணுகல் அல்லது வெளிப்பாடு, திருத்தம் அல்லது சிதைவில் இருந்து பாதுகாக்கப்படும்.
இணைய நெறிமுறை (IP) முகவரி, ஆள்களப் பெயர், உலாவி வகை, இயக்க முறைமை, வருகையின் தேதி மற்றும் நேரம், வருகை பக்கம் போன்ற பயனர் பற்றிய சில தகவலை நாங்கள் சேகரிக்கிறோம். இணைய தளத்திற்கு சேதம் விளைவிக்கும் முயற்சி எதுவும் நடை பெறாத நிலையில் இந்த முகவரிகளை எங்கள் தளத்திற்கு வருகை தரும் தனிநபர்களின் அடையாளத்துடன் இணைக்க நாங்கள் எந்த முயற்சியும் செய்வதில்லை.
காப்புரிமைக் கொள்கை
தேசிய இணைய தளத்தின் காப்புரிமை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்குச் சொந்தம் ஆனதால் அவை காலந்தோறும் அவர்கள் வெளியிடும் வழிகாட்டுதல் மூலம் கட்டுப்படுத்தப்படும்.
இணைப்புக் கொள்கை
புற வலை/இணைய தளங்களோடு இணைப்புகள்
இந்த இணைய தளத்தின் பல இடங்களில் பிற வலை/இணைய தளங்களுடன் இணைப்புகள் இருப்பதை நீங்கள் காணலாம். இவை உங்களது வசதிக்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் உள்ளடக்கம் மற்றும் நம்பகத் தன்மைக்கு தேசிய இணையதளம் பொறுப்பேற்காது. அவற்றில் வெளிப்படுத்தப்படும் கருத்துகளைத் தேசிய சுகாதார இணைய தளம் ஆதரிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. வெறுமனே ஒரு இணைய தள முகவரி இருப்பதாலும் அது பட்டியல் இடப்பட்டிருப்பதாலும் மட்டுமே அதை ஏதோ ஒரு வகையான ஒப்புதல் என்று கருதிக் கொள்ளக் கூடாது. அத்தகைய இணைப்புகள் எப்போதும் இயங்கும் என்று எங்களால் உறுதி கூற முடியாது. அத்தகைய இணைப்புள்ள பக்கங்களின் இருப்பு எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை.
இந்திய இணைய தளத்தோடு பிற வலைத்தளங்களின் இணைப்பு
நீங்கள் இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலுடன் நேரடியாக இணைப்பு வைத்துக் கொளவதில் எங்களுக்கு எந்த விதமான மறுப்பும் இல்லை; இதற்காக எந்த முன் அனுமதியும் தேவை இல்லை. இருப்பினும், இதில் செய்யப்படும் மேம்பாடுகளையும் மாற்றங்களையும் குறித்து உங்களுக்கு நாங்கள் அறிவிப்பதற்கு வசதியாக இந்த இணைய தளத்துடன் நீங்கள் கொடுக்கும் இணைப்பைப் பற்றிய தகவலை நீங்கள் எங்களுக்கு அளிக்கும் படி வேண்டுகிறோம். மேலும், எங்கள் பக்கங்கள் உங்கள் வலைத்தள சட்டகங்களில் அப்படியே பதிவேற்றம் செய்யப்படுவதை நாங்கள் அனுமதிப்பதில்லை. இந்த இணைய தளத்திற்கு உரிய பக்கங்கள் பயனரின் புதிதாகத் திறக்கப்பட்ட உலாவிச் சாளரத்திலேயே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
இந்தப் பக்கத்தின் உள்ளடக்கம், நோடல் அதிகாரி, திட்ட இயக்குநர் மற்றும் சுகாதாரத் தகவல் மையத்தின் துணை இயக்குநர் (மருத்துவம்) ஆகியோரால் மேற்பார்வை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பக்கத்திலும் தகுந்த குறிப்புகள் மேற்கோள் காட்டப்படுகின்றன.