அறிமுகம் (Introduction)
யுனானி மருத்துவம் குணப்படுத்தும் அறிவியல் மற்றும் கலை என்று கருதப்படுகிறது. துன்புறும் மன்பதையைக் குணமாக்கும் ஓர் உன்னதமான தொழில் அது. அதனுடைய தடுத்து, மேம்படுத்தி, நலமாக்கும் தனித்துவமான அணுகுமுறையால் அது சமுதாயத்தில் பெயர்பெற்று விளங்குகிறது. ஒரு இணை மருத்துவ முறையாக அது மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. தங்கள் வேலைவாய்ப்பை வளப்படுத்த இந்திவிலும் வெளிநாட்டிலும் மக்கள் யுனானி மருத்துவத் துறையைத் தேர்ந்து எடுக்கிறார்கள்.
இந்திய மருத்துவ மத்திய நிறுவனத்தால் இம்முறை முறைப்படுத்தப் படுகிறது. பல்வேறு பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
யுனானி மருத்துவத்தில் வேலை வாய்ப்புகள் அபரீதமாக உள்ளன. இத்தொழிலை ஒரு நல்வாய்ப்பு என்பதை விட ஒரு கடமை எனலாம். யுனானி மருத்துவத்தில் ஈடுபடுவது ஒரு கடின உழைப்பு: ஆனால் மிகவும் நிறைவு அளிக்கும் ஒன்றாகும். பல சிக்கல்களினால் பல விதமான நோய்கள் உருவாகிவரும் நிலையில் அதிகச் செலவு செய்து மருத்துவம் செய்து கொள்ள முடியாத ஏழை மக்கள் நிறைந்த சமூகத்தில் யுனானி மருத்துவம் குறைந்த செலவில் பலன்தரும் சிகிச்சையைப் பக்கவிளைவுகள் இன்றி அளிக்கிறது.
இன்றைய வேகமான வாழ்க்கை முறை, உடல் உழைப்பு இன்மை, அழுத்தம் நிறைந்த பணிப்பழு, ஒழுங்குமுறை அற்ற உணவுப்பழக்கம் ஆகியவையால் பலவகையான நோய்களால் பாதிக்கப்படும் மக்களை ஒரு யுனானி மருத்தவரால் தகுந்தபடி கையாள முடியும். யுனானி மருத்துவராக விரும்பும் ஒருவருக்கு நல்ல நினைவாற்றல், உடலாற்றல், பொறுமை, ஒருமன ஆற்றல், சுயமுனைப்பு, உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறன், தர்க்க ரீதியாகப் பகுத்தறியும் மனம், தொழில் மூலம் அனைத்தையும் கற்றும் நேரத்துக்கு ஏற்றபடி முடிவெடுக்கும் திறன் ஆகியவை அவசியம். ஒரு நோயாளியின் உயிர் மருத்துவரை சார்ந்திருப்பதால் ஒரு யுனானி மருத்துவர் பொறுப்புணர்வு மிக்கவராக இருக்க வேண்டும்.
காலந்தோறும் யுனானி மருத்துவப் படிப்பு பல மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளன. அதன் சிறப்புப் பிரிவுகள் எட்டில் இருந்து பதினான்காக உயர்ந்துள்ளன. பெரும் பிரிவுகளில் அடங்குவன:
யுனானி மருத்துவத்தில் சிறப்புப் பிரிவுகள்
குல்யாத்தே உமுரே தபியா (யுனானி மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள்), முனேபேஉலாசா (உடலியல்), இல்முல் அத்வியா (மருந்தாக்கவியல்), இல்முஸ் சைத்லா (மருந்தியல்), தகபிஜிவாசமாஜிதிப் (தடுப்பு மற்றும் சமூக மருத்துவம்), இல்முல் அத்ஃபால் (குழந்தை மருத்துவம்), மாலிஜாத் (மருந்துகள்), இல்முல் அம்ராஜ் (நோயியல்), இலாஜ் பில் ததாபீர் (ரெஜிமெண்டல் சிகிச்சை), அமராஜி ஜில்ட் ஓசெராவியா (தோல் மற்றும் பால்வினையியல்), த்ஷ்ரிஹுல் பதன் (உடற்கூறியல்), இல்முல் ஜராஹத் (அறுவை), அமராஜே உஸ்ன், அனஃப்வாஹலக் (காது, மூக்கு, தொண்டை நோய்), இல்முல் கபாலா வாம்ஜே நிஸ்வான் (மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல்).
குறிப்புகள்:
www.ccim.org
www.indianmedicine.nic.in
www.nium.in
அடிக்குறிப்பு: இந்தப் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் அளித்த விவரங்களில் இருந்து இத்தகவல்கள் தொகுக்கப்பட்டன.
படிப்பு விவரங்கள் (Course Details)
1. பட்டப்படிப்பு
யுனானி மருத்துவத்தின் அடிப்படைப் பட்டம் கமிலி துப்வா ஜரஹத் (யுனானி மருந்து மற்றும் அறுவை இளவர்-பி.யு.எம்.எஸ்). இது ஐந்து ஆண்டுப் படிப்பு (1 ஆண்டு உள்ளுறைவுக் கல்வி).
www.ccimindia.org/unani-ug-regulation.html
பி.யு.எம்.எஸ்ஸில் சேர அடிப்படைத் தகுதி
மேனிலைப் பள்ளி (10+2) அல்லது அதற்கு இணையான அறிவியல் பிரிவுப் படிப்பில் (இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் 50 % மதிப்பெண்களுடன்) வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதனுடன் உயர்நிலைப் பள்ளி அளவில் உருது, அரேபியம் அல்லது பெர்சியனை விருப்பப் பாடமாகப் படித்திருக்க வேண்டும்.
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம், வாரியம் அல்லது எந்த ஒரு பதிவு பெற்ற சங்கத்தில் உருது மொழியுடன் 10+2 வகுப்பில் வெற்றி பெற்றவர்களும் இப்படிப்பிற்குத் தகுதி உடையவர்களே.
ஓர் ஆண்டு கால அளவுள்ள முன் – திப் தேர்வில் வெற்றி பெற்றுள்ள ஒருவரும் பி.யு.எம்.எஸ்ஸில் சேர தகுதி பெற்றவரே.
இந்திய மருத்துவ மத்திய நிறுவனத்தால் அங்கீகாரம் பெற்றுள்ள மதர்சாவில் 10+2 வகுப்பிற்கு இணையான படிப்பில் வெற்றி பெற்றவர்கள் முன் – திப் பில் சேரத் தகுதி உடையவர்கள்.
www.ccimindia.org/unani-ug-regulation.html
அரசு மருத்துவக் கல்லூரிகளில், நுழைவுத் தேர்வு, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களால் நடத்தப்படுகின்றன. தனியார் யுனானி மருத்துவக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு அந்தந்த நிறுவனங்களாலேயே நடத்தப்படுகின்றன.
2. முது நிலை படிப்புகள்
மகிர்இதிப் (எம்.டி. யுனானி) மற்றும் மகிர் இ ஜராஹத் (எம்.எஸ். யுனானி) ஆகிய முதுநிலை படிப்புகள் மூன்றாண்டு கால வரையறை கொண்டவை.
www.ccimindia.org/unani-pg-regulation-Minimum.html
எம்.டி/எம்.எஸ் படிப்புகளுக்கான தகுதிகள்
இவற்றிற்கான அடிப்படைப் படிப்புத் தகுதி பி.யு.எம்.எஸ் ஆகும். இந்திய மருத்துவ மத்திய நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் இப்பட்டப் படிப்பில் 60% மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
முதுநிலையில் 14 தனித்தனி சிறப்புப் பிரிவுகள் உள்ளன.
யுனானி மருத்துவத்தின் முக்கிய சிறப்புத் துறைகள்:
குல்யாத்தே உமுரே தபியா (யுனானி மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள்), முனேபேஉலாசா (உடலியல்), இல்முல் அத்வியா (மருந்தாக்கவியல்), இல்முஸ் சைத்லா (மருந்தியல்), தகபிஜிவாசமாஜிதிப் (தடுப்பு மற்றும் சமூக மருத்துவம்), இல்முல் அத்ஃபால் (குழந்தை மருத்துவம்), மாலிஜாத் (மருந்துகள்), இல்முல் அம்ராஜ் (நோயியல்), இலாஜ் பில் ததாபீர் (ரெஜிமெண்டல் சிகிச்சை), அமராஜி ஜில்ட் ஓசெராவியா (தோல் மற்றும் பால்வினையியல்), த்ஷ்ரிஹுல் பதன் (உடற்கூறியல்), இல்முல் ஜராஹத் (அறுவை), அமராஜே உஸ்ன், அனஃப்வாஹலக் (காது, மூக்கு, தொண்டை நோய், இல்முல் கபாலா வாம்ஜே நிஸ்வான் (மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல்).
www.ccimindia.org/unani-pg-regulation-Minimum.html
3. யுனானி மருத்துவத்தில் முதுநிலைப் பட்டயப்படிப்பு
கீழ்க்காணும் சிறப்புப் பிரிவுகளில் 2 ஆண்டு முதுநிலைப் பட்டயப் படிப்புகள் உள்ளன.
சைதியா(மருந்தியல்), அம்ராஜி எய்ன் (கண்), அம்ராஜி உஸ்ன், அனஃப் வா ஹலக் (காது, மூக்குத், தொண்டை), இலாஜ் பில் த்த்பீர் (ரெஜிமெண்டல் சிகிச்சை).
பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதி
இந்திய மருத்துவ மத்திய நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்.கல்லூரிகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் (எம்.டி/எம்.எஸ்-யுனானி) பெற்ற்றவர்கள் முதுநிலைப் பட்டயப் படிப்பிற்குத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
மத்திய அளவில் இந்தப் படிப்புகளுக்கான விதிமுறைகளை இந்திய மருத்துவ மத்திய நிறுவனச் சட்டபடி சி.சி.ஐ.எம் உருவாக்கும்.
www.ccimindia.org/unani-pg-regulation-Minimum.html
4. யுனானி மருத்துவத்தில் பிஎச்.டி படிப்பு
மோவாலிஜாத்தின் தேசிய யுனானி மருத்துவ நிறுவனத்தில் ஆராய்ச்சிப் படிப்பு உள்ளது. இதற்கான கால வரையறை 3-7 ஆண்டுகள்.
www.nium.in/news/frontscroller141025821317.pdf
துறைகளுக்கு இடையிலான ஆராய்ச்சிப் படிப்பு (பிஎச்.டி):
புதுதில்லி ஜாமியா ஹம்தர்த் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறை (யுனானி) மற்றும் அறிவியல் துறையில் இப்படிப்பு உள்லது. கால வரையறை 3-7 ஆண்டுகள்.
கல்வித்தகுதி
சி.சி.ஐ.எம் – மால் அங்கீகரிக்கப்பட்டப் பல்கலை/கல்லூரி யுனானி முதுநிலைப் பட்டதாரிகள் அந்தந்த சிறப்புப் பிரிவுகளில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளத் தகுதி பெற்றவர்கள்.
jamiahamdard.edu/phd-and-mphil-courses
குறிப்புகள்
அடிக்குறிப்பு: இந்தப் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் அளித்த விவரங்களில் இருந்து இத்தகவல்கள் தொகுக்கப்பட்டன.
வேலை வாய்ப்புகள்(Job Prospects)
மலிவு, பாதுகாப்பு மற்றும் எளிதாக கிடைப்பது ஆகிய அம்சங்களால் யுனானி மருத்துவர்களுக்கானத் தேவை நாளும் நாளும் அதிகரித்து வருகிறது. சமுதாயத்தால் காலம் காலமாக இம்மருந்துகள் பயன்படுத்தப்பட்டு அதன் பலன்களும் விளைவுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மூலிகைத் தொழிற்சாலைகளின் வளர்ச்சியும் அதன் தேவையை அதிகரித்துள்ளது.
நேரத்தை சுதந்திரமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவதாலும் நல்ல வருமானத்தாலும் சுய வேலை வாய்ப்பே பலராலும் விரும்பப் படுகிறது. காரணம் அறியா நோய்கள், நீடித்த நோய்கள், தொற்றற்ற நோய்கள், வாழ்க்கைமுறை நோய்கள் மற்றும் பொதுவான நோய்களின் பெருக்கத்தால் இம்முறைக்கு முக்கியத்துவம் பெருகி வருகிறது.
மருத்துவமனைகள் நல்ல வேலை வாய்ப்பை நல்கினாலும் யுனானி மருத்துவர்கள் சுயமாக மருத்துவம் செய்வதையே விரும்புகின்றனர்.
யுனானி மருத்துவப் பட்டதாரிகள் (BUMS), மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்கள், ஊழியர்கள் மாநில காப்பீட்டுத் திட்டம், ஆரம்பச் சுகாதார மையம், யுனானி மருத்துவமனைகள், யுனானி சுகாதார மையங்கள், தனியார் மருத்துவ மனைகள், யுனானி மருந்தகங்கள் மற்றும் மத்திய மாநில வேலைகளில் சேரலாம். ஆராய்ச்சி மையங்கள், கல்வி நிறுவனங்கள், மாநில அரசின் மருத்துவ மனைகள் ஆகியவற்றிலும் பணியாற்றலாம். உத்தரப் பிரதேசம் போன்ற சில மாநில ஆரம்ப சுகாதார மையங்களில் மூன்றாவது அலுவலராக யுனானி மருத்துவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
அங்கீகாரம் அளிக்கும் அலுவலகம் மற்றும் அமைப்புகளில் யுனானி வல்லுநர்கள், ஆலோசகர்கள்,/நிபுணர்களாகப் பகுதிநேர வேலையும் உள்ளது. வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் தூதரகங்களிலும் யுனானி மருத்துவப் பட்டதாரிகள் பணியாற்றலாம்.
ஊதியம் தனிநபரின் அனுபவத்தையும் திறமையையும் பொறுத்தது. மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கைப் பொறுத்து தனியாகச் செய்யும் தொழிலும் அமையும். அரசுத் துறையிலும் நல்ல ஊதியம் அளிக்கப்படுகிறது. தனியார் துறையில் ஊதிய விகிதம் வேறுபடும்.
யுனானி மருத்துவருக்கான வேலை வாய்ப்புகள்
குறிப்புகள்: www.indianmedicine.nic.in
அடிக்குறிப்பு: இந்தப் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் அளித்த விவரங்களில் இருந்து இத்தகவல்கள் தொகுக்கப்பட்டன.
படிப்பை வழங்கும் நிறுவனங்கள் (Institutes Offering Courses)
வ.எண் |
யுனானி மருத்துவக் கல்லூரியின் பெயர் |
1 |
அரசு நிசாமியா திபியா கல்லூரி, சார்மினார், ஐதராபாத் – 500002, ஆந்திரப் பிரதேசம். |
2 |
டாக்டர் அப்துல் ஹக் யுனானி மருத்துவக் கல்லூரி & மருத்துவ மனை, 40/23, பார்க் சாலை, கர்நூல் -518001, ஆந்திரப்பிரதேசம். |
3 |
அரசு திபியா கல்லூரி, கதம் குவான், பாட்னா – 800003, பீகார். |
4 |
ஜுல்ஃபிக்கர் ஹைதர் யுனானி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, பி.பி.இ. எண்12, நாவல்பூர், சிவான் – 841226, பீகார். |
5 |
சல்பியா யுனானி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை,லகேரியா (அஞ்) சராய், தர்பங்கா – 846 001, பீகார். |
6 |
நிசாமியா யுனானி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, தும்ரி கிராமம்& அஞ்சல். ராசல்பூர், புனியார்ச் கஞ்ச் வழி, கயா – 823002, பீகார். |
7 |
மோசின் – இ- மிலத் யுனானி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, மகபூபியா சௌவுக், பாய்ஜ்நாத்-பாரா, ராய்ப்பூர்-492001, சத்திஷ்கர். |
8 |
ஆயுர்வேதா & யுனானி திபியா கல்லூரி, கரோல்பாக், புதுதில்லி-110005. |
9 |
மருத்துவத் துறை (யுனானி), ஜாமியா ஹம்தர்த் நிகர்நிலைப் பல்கலைக் கழகம், ஹம்தர்த் நகர், புதுதில்லி-110062, தில்லி. |
10 |
யுனானி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, ஆசிய மருத்துவ அறிவியல் நிறுவனம், பாபா அணு ஆராய்ச்சி மையம் அருகில், ஹபாக் கிராசிங், ஸ்குரா, ஸ்ரீநகர்-190001, ஜம்மு & காஷ்மீர். |
11 |
காஷ்மீர் திபியா கல்லூரி மருத்துவமனி & ஆராய்ச்சி நிலையம், சைதாகதல், ஸ்ரீநகர்-190010, ஜம்மு & காஷ்மீர். |
12 |
அரசு யுனானி மருத்துவக் கல்லூரி, சித்தையா புரானிக் சாலை, பசவேசுவர் நகர், பெங்களூரு-560079, கர்நாடகா. |
13 |
லுக்மன் யுனானி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, பி.எல். கராடி வளகம், 12, நௌபாக், பீஜாப்பூர்-586101, கர்நாடகா. |
14 |
திப்பு சுல்தான் யுனானி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை,, அ.பெ.எண்.99, அரசு பால் பண்ணை எதிரில், மிலத் நகர், சுற்றுச் சாலை, குல்பர்கா-585104, கர்நாடகா. |
15 |
எச்.எம்.எஸ். யுனானி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை,சதாசிவ நகர், 2வது நிலை, சுற்றுச் சாலை, மரலூர் அஞ்சல், தும்கூர், 572105, கர்நாடகா. |
16 |
தேசிய யுனானி மருத்துவ நிறுவனம், கொட்டிகே பாளையா, மகாதி முக்கியச் சாலை, பெங்களூரு -560091, கர்நாடகா. |
17 |
சைஃபியா ஹமிதியா யுனானி திபியா கல்லூர் & மருத்துவ மனை, கணபதி நக்கா அருகில், காந்த்வா சாலை, புர்ஹன்புர்-450 331, மத்தியப்பிரதேசம். |
18 |
அல்-பரூக் யுனானி திபியா கல்லூரி, புறச் சலை, அரேந்தியா கிராமம், இந்தூர்-452 001, மத்தியப் பிரதேசம். |
19 |
ஹக்கிம் சையது சாகுல் ஹசன் அரசு யுனானி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, கோலார்-நேரு நகர் புறச்சலை, போப்பால், 462001, மத்தியப்பிரதேசம். |
20 |
ஹக்கிம் அப்துல் ஹமிது யுனானி மருத்துவக் கல்லூரி , 3, இத்கா சாலை, தேவாஸ் -455001, மத்தியப் பிரதேசம். |
21 |
அஞ்சுமன் –இ-இஸ்லாமின் டாக்டர்.எம்.இஷாக் ஜம்கானாவாலா திபியா மருத்துவக் கல்லூரி & ஹாஜி அப்துல் ரசாக் கல்சேகர் திபியா மருத்துவ மனி, 60, யாரிச் சாலை, வெர்சோவா, அந்தேரி (மேற்கு), மும்பை-400061. |
22 |
ம்கமதியா திபியா கல்லூரி & அசையர் மருத்துவமனை, அ.பெ.எண்.128, மன்சூரா, மலேகாவுன், நாசிக்-423203, மகாராஷ்ட்டிரா. |
23 |
சுலேக்கா பாய் வாலி முகமது யுனானி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை,, 2390-பி, கே.பி.ஹிதயத்துல்லா சாலை, புது மோதிகானா முகாம், அசாம் வளாகம், ஆங்கிலோ உருது பள்ளி வளாகம், புனே-411 001, மகாராஷ்ட்டிரா. |
24 |
அகமது காரிப் யுனானி மருத்துவக் கல்லூரி,அக்கால்குவா, நந்துர்பார்-425415, மகாரஷ்ட்டிரா. |
25 |
இக்ரா யுனானி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை & ஆராய்ச்சி மையம், ஜி.எண்.25/2, இக்ரா நகர், ஷிர்சோலி சாலை, மோதிஷிவார்-425 135,மகாராஷ்ட்டிரா. |
26 |
ஹக்கிம் ராயிஸ் யுனானி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை,சம்பல், மொரதாபாத் மாவட்டம், உத்தரப்பிரதேசம்-244302. |
27 |
ராஜ்புதனா யுனானி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை & ஆராய்ச்சி மையம்,மோ.கோ-நகைஇரியன், ஜகத்புரா சாலை, ஜெய்ப்பூர்-302002, ராஜஸ்தான். |
28 |
ராஜஸ்தான் யுனானி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை,ஜகதாம்பா கலனி, பாலடி மீனா, ஆக்ரா சாலை, ஜெய்ப்பூர், ராஜஸ்தான். |
29 |
அரசு யுனானி மருத்துவக் கல்லூரி,அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவ வளாகம், அரும்பாக்கம், சென்னை-600106, தமிழ்நாடு. |
30 |
மாநில தக்மில்-உத்-திப் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை,ஹக்கிம் அப்துல் அஜிஸ் சாலை, ஜவாய் தோலா சௌபதியா, லக்னோ-226 003, உத்தரப்பிரதேசம். |
31 |
மாநில யுனானி மருத்துவக் கல்லூரி ஹிமத்கஞ்ச்,அலகாபாத்-211`003, உத்தரப்பிரதேசம். |
32 |
ஜமியா திபியா தியோபந்த், ஜி.டி.சாலை, தியோபந்த், சாகரன்பூர்-247554, உத்தரப்பிரதேசம். |
33 |
இபன்-இ-சினா திபியா மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை,பீனாபரா, சராய் மீர் வழி, அசம்கர்-276 305, உத்தரப்பிரதேசம். |
34 |
தியோபந்த யுனானி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை& ஆராய்ச்சி மையம்,நயா பன்ஸ், தல்ஹேரிசுங்கி, தியோபந்த், சாகரன்பூர்-247 554, உத்தரப்பிரதேசம். |
35 |
அல்லம்மா இக்பால் யுனானி மருத்துவக் கல்லூரி,ரூர்க்கி சுங்கி அருகில், ஜி.டி.சாலை, முசார்புர் நகர்-251002, உத்தரப்பிரதேசம். |
36 |
அலிகார் யுனானி மருத்துவக் கல்லூரி & ஏ.சி.என்.மருத்துவமனை,குல்மார்க் வளாகம், புரானிசுங்கி, அனூப் சாகர் சாலை, அலிகார்,202 002, உத்தரப்பிரதேசம் |
37 |
ஷேம்-இ-கவுசியா சிறுபான்மையோர் யுனானி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை,சாஹேரி, நந்கஞ்ச் வழி, காசியாபூர்-233 001, உத்தரப்பிரதேசம். |
38 |
எராம் யுனானி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, குர்சி சாலை, குதம்பா காவல் நிலையம், லக்னோ-226022, உத்தரப்பிரதேசம். |
39 |
டாக்டர் அப்துல் அலி திபியா கல்லூரி & மருத்துவமனை. கட்டௌவ்லி, மலிகாபாத், லக்னோ-227111, உத்தரப்பிரதேசம். |
40 |
அஜ்மல் கான் திபியா கல்லூரி, அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம், அலிகார்-202002, உத்தரப் பிரதேசம். |
41 |
யூனுஸ் பஸ்லானி மருத்துவக் கல்லூரி & அல்-பஸியானி யுனானி மருத்துவமனை, குஞ்கேதா, அ.பெ.எண், 03, தஹ்.கன்னட், அவுரங்காபாத்-03, மகாராஷ்ட்டிரா. |
42 |
கல்கத்தா யுனானி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, 8/1, அப்துல் ஹலிம் லேன், கொல்கத்தா-700016 (மேற்கு வங்கம்) |
அடிக்குறிப்பு: இந்தப் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் அளித்த விவரங்களில் இருந்து இத்தகவல்கள் தொகுக்கப்பட்டன.