அறிமுகம் (Introduction)
வெள்ளம் என்பது இந்தியா அடிக்கடி எதிர்கொள்ளும் இயற்கைப் பேரழிவு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு பகுதியில் வெவ்வேறு அளவில் வெள்ளம் ஏற்படுகிறது. ஆற்றுப் போக்கில் அல்லது கரையில் வெள்ளத்தின் மட்டம் அளவுக்கு அதிகமாகி மூழ்காத நிலப்பகுதிகளில் நீர்ப்பெருக்கு ஏற்படுவதே வெள்ளம் ஆகும்.
வெள்ளம் சில வேளைகளில் படிப்படியாக ஏற்பட்டு வெள்ளப் பெருக்காக மாறப் பல மணி நேரம் ஆகும். அல்லது கரை உடைவதாலோ, பெருமழையாலோ எந்த ஓர் எச்சரிக்கையும் இன்றி திடீரெனவும் ஏற்படக் கூடும். திடீர் வெள்ளம், ஆற்றுப்படுகை வெள்ளம், நகர்ப்புற வெள்ளம் போன்று வெள்ளம் பலவகைப்படும்.
மேலும் வாசிக்கவும்: வெள்ள வழிகாட்டுதல்
செய்யக் கூடியவையும் கூடாதவையும் (Do’s and Don’t’s)
வெள்ளப்பகுதியில் இருந்து மக்களை வேகமாக வெளியேற்றவும்
அவசரகாலப் பெட்டியை பாதுகாப்பாகவும் நனையாமலும் வைத்திருக்கவும்.
குழந்தைகளைக் கவனித்துக் கொண்டே இருக்கவும். வெள்ள நீரில் விளையாடவோ நீந்தவோ அனுமதிக்க வேண்டாம். இது ஆபத்தானது. காயம், தொற்று அல்லது நோய்கள் ஏற்படலாம்.
ஆற்றங்கரை அல்லது கால்வாய் விளிம்புகளில் நடக்கக் கூடாது-இடிந்து விழும் வாய்ப்பு உள்ளது.
வெள்ளத்தில் நனைந்த எரிவாயு, மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம்.
வெள்ளத்தில் நனைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டாம்.
வெள்ள காலத்தில் செய்யக் கூடியவையும் கூடாதவையும் (இந்தியில்)