Migraine.png

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி ஒரு நரம்புக் கோளாறு ஆகும். தலையின் ஒரு பகுதியில் அதிகத் துடிப்பும், விண்ணென்று தெறிக்கும் வலியும் ஏற்படும். துடிப்போடு காணப்படும் இந்த ஒரு பக்கத் தலைவலி, 2-லிருந்து 72 மணி நேரம் வரை நீடிக்கலாம்.

சூழலியல் மற்றும் மரபியல் காரணிகளின் கலவையே ஒற்றைத் தலைவலிக்குக் காரணம் என நம்பப்படுகிறது. சுயவரையறையுடைய (self-limited), அடிக்கடி வரும் கடுமையான ஒற்றைத் தலைவலி, தன்னியக்க அறிகுறிகளுடன் (autonomic symptoms)தோன்றும்.

குறிப்புகள் : www.who.int
                      www.nhs.uk
                      www.nlm.nih.gov
                      www.ninds.nih.gov

ஒற்றைத்தலைவலியின் கட்டங்களைக் கொண்டு அறிகுறிகளை வகைப்படுத்தலாம். ஒற்றைத் தலவலிக்குத் தெளிவான ஐந்து கட்டங்கள் உண்டு. ஆனால் எல்லோருக்கும் இந்த ஐந்து கட்டங்களும் தோன்றுவதில்லை.

  1. தலைவலிக்கு முன் நிலை: ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு பல மணி நேரம் அல்லது நாட்களுக்கு முன் சிலருக்கு மனநிலை, ஆற்றல் நிலை, நடத்தை, பசிநிலை ஆகியவற்றில் மாற்றமும், சில வேளைகளில் வலியும் உண்டாகும்.
  2. முன்னுணர்வு: ஒற்றைத் தலைவலி தொடங்குவதற்கு சற்று முன்னர் சிலருக்கு முன்னுணர்வோ ஒளியோ தோன்றும். ஒளிவீச்சு அல்லது இருள் புள்ளிகள், மன ஒருமைப்பாட்டில் சிக்கல், உடைந்த கண்ணாடி வழியாக பார்ப்பது போல் பொருட்கள் தென்படுதல்  ஆகியவை முன்னுணர்வில் அடங்கும். இக்கட்டம் 15 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை நீடிக்கும்.
  3. தலைவலி நிலை: தலையின் ஒரு பகுதியில் பொதுவாக துடிப்புடன் அல்லது விண்ணென்று தெறிக்கும் தலைவலி உண்டாகும். குமட்டலும் வாந்தியும் இருக்கும். அதிக ஒளி அல்லது ஒலியை சகிக்க முடியாது. ஓர் இருட்டு அறைக்குள் போய் படுத்துக்கொள்ள உந்துதல் உண்டாகும். இக்கட்டம் நான்கில் இருந்து 72 மணி நேரம் நீடிக்கும்.
  4. முடிவு நிலை: பெரும்பாலான தலைவலி மெதுவாக குறைந்து அகலும். சிலருக்கு நோய்க்குப் பின் திடீரென தலைவலி நின்று போகும். அறிகுறிகளில் இருந்து, தூக்கம் பெரும்பாலும் நிவாரணம் அளிக்கும்.
  5. பின் தலைவலி நிலை: தலைவலிக்குப் பின் களைப்பும் பலவீனமும் இருக்கும். வேறு சில அறிகுறிகளும் ஒற்றைத் தலைவலியின் போது ஏற்படலாம். அவையாவன:
  • மன ஒருமைக் குறைவு
  • வியர்வை
  • அதிக சூடாகவும் அதிகக் குளிராகவும் உணர்தல்
  • வயிற்று வலி
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்

குறிப்பு : www.nhs.uk

ஒற்றைத்தலைவலிக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. உடலியல் காரணிகளைத் தூண்டும் பல காரணிகள் இருக்கின்றன:

  • மனவழுத்தம்
  • பசி
  • களைப்பு

மாதவிடாய் சுழற்சி, கர்ப்பத்தடை மருந்துகள், கர்ப்பம், மாதவிடாய் நிற்பதற்கு முன்பின் நிலைகள் ஆகியவற்றால் உண்டாகும் இயக்குநீர் பாதிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. முன்னுணர்வு இல்லாமல் உண்டாகும் ஒற்றைத் தலைவலியில் இத்தகைய இயக்குநீர் பாதிப்புகள் பெரும்பங்கு வகிக்கின்றன.

உணவுத் தூண்டிகள்:

  • குறைவான உணவு (விரதம்)
  • நேரம் பிந்திய அல்லது முறை தவறிய உணவு
  • நீர்ச்சத்திழப்பு
  • மது
  • தைராமின் அதிகமாக அடங்கிய உணவுகள் (உதாரணம்: பால் பொருள், இறைச்சி, கோழிப்பொருள், மீன்)
  • தேனீர், காப்பி போன்ற காஃபின் பொருட்கள்
  • சாக்கலேட், எலுமிச்சை வகைப் பழங்கள், பாலாடை போன்ற குறிப்பிட்ட உணவுகள்.

சூழலியல் காரணிகள்:

  • பிரகாசமான ஒளி
  • புகை
  • கூட்டமான சூழல்
  • அதிக ஒலி
  • ஈரப்பத மாற்றம் அல்லது மிகவும் குளிர் போன்ற வானிலை வேறுபாடு
  • தொலைக்காட்சி அல்லது கணினியில் மினுங்கும் திரை

குறிப்புகள் : www.nlm.nih.gov
                         www.nhs.uk
 

அறிகுறிகளைக் கொண்டே ஒற்றைத்தலைவலி கண்டறியப்படுகிறது.

தலைவலியின் பிற காரணங்களைக் கண்டறிய பிம்ப சோதனைகள் செய்யப்படுகின்றன.

தேசிய சுகாதார இணையதளம், ஆரோக்கியம் பற்றிய புரிதலுக்காக குறிப்பான செய்திகளையே தருகிறது. நோய்கண்டறிதலுக்கும் சிகிச்சைக்கும் உங்கள் மருத்துவரையே நீங்கள் நாட வேண்டும்.

குறிப்பு : www.nhs.uk

தற்போது ஒற்றைத்தலைவலிக்கு என்று மருத்துவம் இல்லை. வலி நிவாரணிகளான பரசெட்டமால் மற்றும் ஆஸ்பரின் நல்ல பலனளிக்கும். சுமட்ரிப்டான் (இமிட்ரக்ஸ்), ரிசாட்ரிப்டான் (மாக்சால்ட்) போன்ற ட்ரிப்டான்கள், வலியையும் ஒற்றைத் தலைவலியோடு சம்பந்தப்பட்ட பிற அறிகுறிகளையும் கட்டுப்படுத்துவதில் பலன் தருவதாகும்.

  • பால்பொருட்கள், சூழலியல் தூண்டிகளைத் தவிர்க்கவும்
  • உடற்பயிற்சிகள் மனவழுத்தத்தைக் குறைத்து ஒற்றைத் தலைவலியைத் தடுக்கின்றன.
  • பெண்களுக்குப் பெண்ணியக்க நீர்களால் தலைவலி தூண்டப்பட்டாலோ, அதிகரித்தாலோ எஸ்ட்ரோஜன் உள்ள மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.

  • PUBLISHED DATE : May 18, 2015
  • PUBLISHED BY : NHP CC DC
  • CREATED / VALIDATED BY : NHP Admin
  • LAST UPDATED ON : Jun 04, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.