கண்சவ்வடி குருதிக்கசிவு

கண்சவ்வடி குருதிக்கசிவு ஒரு தீங்கற்றக் கோளாறு. கண்சவ்வு சிவப்புறலுக்கு இது ஒரு பொதுவான காரணம். வெளிக்கசிவோ அழற்சியோ இல்லாத நிலையில் கண்சவ்வடியில் குருதிக்கசிவு ஏற்படுவதாலேயே செந்நிறம் காணப்படுகிறது. இளம் நோயாளிகளில் காயம் மற்றும் தொடுவில்லை அணிதலே முக்கிய ஆபத்துக் காரணிகள். ஆனால் வயதான நோயாளிகளில் மண்டலம் சார்ந்த குருதிக்குழல் நோய்களான இரத்த அழுத்த மிகைப்பு, நீரிழிவு மற்றும் தமனித்தடிப்பு ஆகியவையே பொதுவான காரணங்கள்.

தொடர் கண்சவ்வடி குருதிக்கசிவு இருந்தால் மண்டலம் சார் இரத்த அழுத்த மிகைப்பு, கண் அல்லது மண்டல நோய்கள், இரத்தக்கசிவுக் கோளாறுகள் மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகள் ஏதேனும் உள்ளதா என ஆய்ந்து காண வேண்டும்.

கண்சவ்வடி குருதிக்கசிவின் பரப்பு வேறுபடும். ஊசிமுனை குருதிக் கசிவில் இருந்து முழு குமிழ் கண்சவ்வு முழுவதையும் பாதிக்கும் அளவுக்கும் உருவாகும். பொதுவாக கண்சவ்வின் மேல் மற்றும் கீழ்ப்பகுதியிலேயே கண்சவ்வுக் குருதிக் கசிவு காணப்படும். காயத்தால் அந்தந்தப் பகுதியிலேயே குருதிக்கசிவு உண்டாகும்.

பொதுவாகக் கண்பார்வை பாதிப்படைவதில்லை. பரந்த அளவிலான குருதிக் கசிவு இமை வரை காணப்படும். பொதுவாக இவை ஓரிரு வரங்களில் குணமாகும்.  இரண்டு அல்லது மூன்று குறுகிய கால கசிவும் ஏற்படலாம்.

குறிப்புகள்:

Khurana AK. Ophthalmology Third Edition. New Age International (P) Limited, Publishers 2003. P 108- 109.

Bowling Brad. Kanski’s Clinical Ophthalmology – A Systematic Approach Eighth Edition. Elsevier 2016. P 166.

Cameron Peter, Jelinek George, Everitt Ian, Browne Gary,Raftos Jeremy. Textbook of Paediatric Emergency Medicine Second Edition.Churchill Livingstone Elsevier 2012. P 329.

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3702240/

https://www.researchgate.net/publication/248397385_Subconjunctival_hemorrhage_Risk_factors_and_potential_indicators

http://www.djo.org.in/articles/27/3/bilateral-subconjunctival-hemorrhage-and-periorbital-petechiae-due-to-chronic-cough-in-a-child.html

 

பொதுவாகக்  கண்சவ்வடி குருதிக்கசிவு அறிகுறிகளைக் காட்டாது. சீரான சிவப்பு நிற எல்லைகள் வரையறுக்கப்பட்ட  ஒரு தட்டையான தகடாக இவை காணப்படும். குமிழ் கண்சவ்வில் கட்டி இரத்தம் திரண்டிருக்கும். படல சந்திப்பில் இவை படருவதில்லை.

கண் கோளத்தில் ஏற்படும் காயத்தால் உருவான கண்சவ்வடி குருதிக்கசிவில் பின் எல்லை கண்ணுக்குப் புலப்படும். ஆனால் கண் கோள காயத்தால் ஏற்படுபவைகளில் இது தெரியாது. பெரிய கசிவு இமைகளுக்குள்ளும் பரவும்.

கசிவு உறிஞ்சப்படும் போது முதலில் கட்டி சிவப்பில் இருந்து செம்மஞ்சளாகவும் பின் மஞ்சளாகவும் மாறும். கடும் கசிவில் சில நிறமிகள் தேங்கி நிற்கும்.

சில வேளைகளில் ஒரு கண நேர வலி அல்லது துடிப்பு அல்லது குமிழிடும் உணர்வு ஏற்படக் கூடும்.

பார்வை பொதுவாகப் பாதிப்பதில்லை. ஆனால் அதிக கசிவோடு டெல்லென் உருவானால் பார்வை பாதிக்கக் கூடும்.

 

கண்சவ்வடி குருதிக்கசிவுக்கான காரணங்கள்:

 • நோய்க்கரணம் அறியாதவை, குறிப்பாக முதியவர்களுக்குத் திடீரெனத் தோன்றுபவை
 • காயம்
 • தொடுவில்லை அணிதல், குறிப்பாக இளம்வயதினருக்கு
 • இருமல், தும்மல் மற்றும் வாந்தி ஆகிய பொதுவான காரணங்கள்
 • கண் அறுவை
 • கண்சவ்வழற்சி
 • இரத்த அழுத்த மிகைப்பு போன்ற மண்டலம் சார் குருதிக்குழல் நோய்கள், குறிப்பாக முதியோருக்கு
 • உயிர்ச்சத்து சி குறைபாடு, குறிப்பாக சிசிக்களுக்கு
 • குழந்தைகளுக்குத் தவறிழைப்பு

 

மருத்துவ ரீதியாகவே நோய் கண்டறியப்படுகிறது.

கசிவோ அல்லது அழற்சியோ இல்லாத போதும் கண்சவ்வின் அடியில் கடும் வலியற்ற சிவப்பு கானப்படும். இது பரந்த பரப்பில் புள்ளி இரத்தக் கசிவை ஏற்படுத்தும்.

கண்சவ்வின் கீழ்ப்பகுதி அல்லது மேல் பகுதியில் பெரும்பாலும் கண்சவ்வடி குருதிக்கசிவு காணப்படும். ஆனால் காயம் பகுதி சார் குருதிப் போக்கை உருவாக்கும்.

திசுவியல்

கண்சவ்வுக்கும் வெண்படல மேலடுக்குக்கும் இடைப்பட்ட பகுதியில் கண்சவ்வடி குருதிக்கசிவு இருக்கும். கண்சார் குருதிகுழல்கள் உடையும்போது இரத்த மூலப் பொருட்கள் கண்சவ்வின் வெண்படல திசுவலையில் காணப்படும்.

 

 

குருதிக்கசிவைத் துரிதமாகக் குணமாக்கக் கூடிய ஏற்றுக்கொள்ளப்பட்ட  சிகிச்சை எதுவும் இல்லை. இரண்டு அல்லது மூன்று வாரத்துக்குள் இரத்தம் சிவப்பில் இருந்து மஞ்சளாக மாறி பின் உறிஞ்சப்படும் என்று நோயாளிக்கு உறுதி அளிக்கலாம்.

நிலைத்த அல்லது திரும்பத்திரும்ப ஏற்படும் குருதிக் கசிவு ஆராயத் தக்கது. தீவிரமான கோளாறுகளுடன் தொடர்பற்றதாக இருந்தால் சிகிச்சை எதுவும் தேவை இல்லை.

 

 • PUBLISHED DATE : Sep 11, 2018
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Sep 11, 2018

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.