Tuberculosis.png

காசநோய்

மைக்கோ பாக்டீரியாக்களின் பல விகாரவகைகளால் (பொதுவாக மைக்கோ பாக்டீரியம் ட்யூபர்குலோசிஸ்) உண்டாவதே காசநோய். காசநோய் குறிப்பாக நுரையீரலில் பரவும். ஆனால் உடலின் பிறபகுதிகளையும் தாக்கக் கூடும். காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள், இறுமும்போதோ, தும்மும்போதோ, அல்லது மூச்சுமண்டல கசிவுகளைக் காற்றில் சிந்தவிடும் போதோ காற்று வழியாகக் காசநோய் பரவுகிறது. இது ஒரு கடுமையான நோயே. ஆனாலும் தகுந்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். இந்தியா காசநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாகும். உலக சுகாதார நிறுவனத்தின் 2011 அறிக்கையின் படி உலக அளவில் உள்ள 87 இலட்சம் காச நோயாளிகளில் 22 இலட்சம் பேர் இந்தியாவில் இருக்கின்றனர்.

மீளமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் (RNTCP)

குறிப்புகள்:

www.tbcindia.nic.in
www.cdc.gov

www.who.int
www.who.int
www.youtube.com

சிகிச்சையில் உள்ள தீவிர காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்தளித்தல் (Nutrinal supplements for people being treated for active tuberculosis)

காச நோய்க்கும் ஊட்டச்சத்து அற்ற உணவுக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. வளர்சிதை மாற்றத்தால் உடலின் உணவுத் தேவை அதிகரிக்கிறது. ஆனால் நோயின் காரணமாக உணவிறக்கம் குறைகிறது. இதனால் காச நோய் ஊட்டச்சத்தின்மைக்கு வழிவகுக்கிறது.

ஆய்வு முறை, செண்ட்ரல் (கோச்ரேன் நூலகம்), மெட்லைன், எம்பேஸ், லிலாக்ஸ், எம்மார்சிடி மற்றும் இந்திய காசநோய் இதழ் (ஜூலை2011) ஆகியவற்றின் ஆய்வுகளை உள்ளடக்கியது.

சிகிச்சையில் உள்ள தீவிர காசநோயாளிகளிடம் மட்டும் நோக்கற்ற கட்டுப்படுத்தப்பட்ட  சோதனைகள் நடத்தப்பட்டன (Randomized Controlled Trials—RCTS). இவர்களது சத்துணவு முறையில் குறுக்கீடோ, மருந்துப் போலிகளோ, உணவு ஆலோசனைகளோ இன்றி நான்கு வாரங்களுக்கு மருந்துடன் கூடுதலாக ஊட்டச்சத்தும் வழங்கப்பட்டது. 6842 பேரை உள்ளடக்கிய 23 சோதனைகள் நடத்தப்பட்டன.

வழக்கமாக வழங்கப்படும் இலவச உணவோ அல்லது கூடுதல் ஊக்க உணவோ, காசநோய் சிகிச்சையில் சிறந்த விளைவுகளையோ அல்லது வாழ்க்கைத் தரத்தில் மேம்பாட்டையோ அளித்தது என்பதை அறிவதற்கு இயலாதவாறு அரைகுறையான ஆய்வே நடத்தப்பட்டுள்ளது என்ற முடிவிற்கே  ஆய்வாளர் வந்தார். மருத்துவத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த நன்மைகளை இனம்காண அல்லது தேவையற்றவைகளை ஒதுக்கப் போதுமான மாதிரி அளவுகளைக் கொண்ட மேலும் அதிகமான சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.

http://onlinelibrary.wiley.com/doi/10.1002/14651858.CD006086.pub3/abstract

 

 

 

காசநோய் பேரும்பாலும் நுரையீரலையே பாதிக்கிறது. இதன் பல்வேறு அறிகுறிகளாவன:

 • இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடித்திருக்கும் இறுமலும் தொடர்ந்து வெளிப்படும் கபமும்
 • மெதுவாக ஆரம்பித்துப் பின் படிப்படியாக மிகவும் மோசமாகும் மூச்சுத்திணறல்
 • பசியின்மையும் எடை குறைதலும்
 • மிக அதிகமான காய்ச்சலான 38ºC (100.4ºF) யும் அதற்கும் மேலும்
 • மிக அதிகமான சோர்வும் களைப்பும்
 • மூன்று வாரத்திற்குப் பின் விவரிக்க இயலாத வலியுடன் காசநோய் பிற உறுப்புகளுக்கும் பரவும். அவையாவன:
 • நிணநீர் முடிச்சு (நிணநீர் முடிச்சு காசநோய்)
 • எலும்புகளும் மூட்டுகளும் (எலும்பு காசநோய்)
 • உணவுமண்டலம் (இரப்பைக் காசநோய்)
 • நரம்பு மண்டலம் ( நடு நரம்பு மண்டல காசநோய்)

குறிப்பு:

www.nhs.uk

 

காச நோய்க்கு முக்கியக் காரணம் உயிர்வளியில் வாழும் ஓர் அசையா நீள் நுண்ணுயிரியான மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குலோசிஸ் ஆகும். நுரையீரலில் தொற்றுள்ள ஒரு கடும் காச நோயாளி இறுமும்போதோ, தும்மும்போதோ வெளிப்படும் காசநோய் பாக்டீரியாக்கள் கலந்துள்ள துளிகளை ஒருவர் சுவாசிக்கும்போது காசநோய் பரவுகிறது.

ஆபத்தை விளைவிக்கும் காரணிகள்: உலகளாவிய அளவில் காச நோயோடு இணைந்துள்ள  பொதுவான ஆபத்தை விளைவிக்கும் காரணி எச்.ஐ.வி. ஆகும்.

பிற காரணிகள்:      

 • புகையிலைப் பழக்கம்
 • ஊட்டச்சத்தின்மை

குடிப்பழக்கம்

அறிகுறிகளைக் கொண்டு நோய்காணல்: இரண்டு வார தொடர் இறுமல், எடை இழப்பு, பசியின்மை, காய்ச்சலும் இரவு நேர வியர்வையும், சோர்வு ஆகியவையே காச நோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும். இவற்றில் மூன்று அறிகுறிகள் ஒருவரிடம் காணப்பட்டால் அவர் மருத்துவர் ஆலோசனையைப் பெற்று அது காச நோயா அல்லவா என்று உறுதி செய்ய வேண்டும்.

 • சளி சோதனை-நுண்ணுயிரிகள் இருக்கின்றனவா என்று கண்டறிய சளி பரிசோதனை செய்ய வேண்டும்.
 • மார்பு X-ரே: இது கதிர்வீச்சு மூலம் நுரையீரலின் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது. ஒருவருக்கு காச நோய் இருந்தால் நுரையீரலில் ஏற்படும் வடுக்கள் போன்ற மாற்றங்கள் X -ரேயில் புலப்படும்.
 • மருந்து ஏற்பறிதல் சோதனை: இதன் மூலம் மருந்து எதிர்ப்பு காச நோயைக் கண்டறியலாம்.

பிற நுரையீரல் சார்ந்த பகுதிகளுக்கு கீழ்வரும் சோதனைகளும் அடங்கும்:

 • கணினி வரைவி கதிர்ப்படம் (Computerized tomography (CT) scan): வெவ்வேறு குறைந்த கோணங்களில் எடுக்கப்பட்ட உடலின் X-ரே படங்களை ஒரு கணினி தொகுத்து உடலின் உட்பகுதியின் தெளிவான படத்தை ஒரே பிம்பமாகத் தருகிறது.
 • காந்த ஒத்ததிர்வு பிம்ப கதிர்ப்படம் (Magnetic Resonance Imaging (MRI) Scan): உடலின் உட்பகுதியின் தெளிவான பிம்பத்தை உருவாக்க ஒரு காந்தப்புலமும் வானொலி அலைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
 • ஊடொலி கதிர்ப்படம் (Ultrasound Scan): உடலின் உட்புறத்தின் ஒரு பகுதியின் பிம்பத்தை மிகு அதிர்வெண் ஒலியலைகள் உருவாக்கித் தருகின்றன.
 • சிறுநீர்ச் சோதனை
 • திசு ஆய்வு: பாதிக்கப் பட்ட பகுதியின் ஒரு சிறு திசு மாதிரி எடுக்கப்பட்டு நோய் இருக்கிறதா என்று சோதிக்கப்படுகிறது.

குறிப்புகள்:

www.tbdots.com
www.nhs.uk

 

 

காசநோய் சிகிச்சையால் குணமாகக் கூடியநோய். உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நேரடி கண்காணிப்பு சிகிச்சை, குறுகியகால மருந்தளிப்பு (DOTS) உத்தி, இந்தியாவில் மாற்றியமைக்கப்பட்ட தேசிய காசநோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் (RNTCP) தொடங்கப்பட்டது. நீண்டகால நுண்ணுயிர்க்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டாலும், எந்த வகையைச் சார்ந்த நோயாளி (வகை I,II,III) அடங்கியுள்ளார் என்பதைப் பொறுத்தே காசநோய் மருத்துவம் அமைகிறது.

நேரடி கண்காணிப்பு மருத்துவத்தில், உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி மருந்து உட்கொள்பவரை மருத்துவர் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும். தொடர் கட்டத்தில், ஒரு வார மருந்து ஒரு பல்குமிழிணைதொகுப்பாக நோயாளிக்கு வழங்கப்படுகிறது. தொடர்கட்டத்தில் நோயாளி மருந்து உட்கொள்ளுவதை சுகாதாரப் பணியாளர் கண்காணிக்கிறார். முறையாக நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை உட்கொள்ளாதவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க உலக சுகாதார நிறுவனம் இம்முறையைப் பரிந்துரைக்கிறது. 2010-ல் பரிந்துரைக்கப்பட்ட ஆரம்பக் கட்ட நுரையீரல் காசநோய்க்கான ஆறு மாத கால மருந்து பின்வருமாறு: ரிஃபாம்பிசின், ஐசோநியாசிட், பைராசினமைட், எதாம்பியூட்டால் ஆகிய நுண்ணுயிர்க்கொல்லிகள் கொண்ட மருந்து முதல் இரண்டு மாதங்களுக்கும், ரிஃபாம்பிசினும் ஐசோநியாசிட்டும் மட்டும் கொண்ட மருந்து பின்வரும் நான்கு மாதங்களுக்கும். ஐசோநியாசிட்டுக்கு மருந்தெதிர்ப்பு அதிகமாக இருந்தால் இறுதி நான்கு மாதங்களுக்குப் பதிலியாக எதாம்பியூட்டாலை இணைத்துக் கொள்ளலாம். பன்மருந்து எதிர்ப்பு காச நோய் கண்டுபிடிக்கப்பட்டால் (MDR-TB) குறைந்தபட்சம் நான்கு பயன்தரும் நுண்ணுயிர்கொல்லிகள் அடங்கிய மருந்து 18-ல் இருந்து 24 மாதங்கள் வரை பரிந்துரைக்கப்படுகிறது.

குறிப்புகள்:

www.nhs.uk
www.cdc.gov
www.who.int
www.tbcindia.nic.in

தடுப்பூசியால் காச நோய் தடுக்கப்படுகிறது. 2011 நிலவரப்படி இருக்கக்கூடிய ஒரே தடுப்பு மருந்து பெசில்லஸ் கால்மெட்டே-குரின் (BCG—bacillus Calmette- Guérin). இது குழந்தைப் பருவத்தில் பரவிய நோய்த் தடுப்புக்கு பயனுள்ளதாக இருந்தாலும் தொற்றும் நுரையீரல் காச நோய்க்கு எதிராக நிலையான பாதுகாப்பைத் தருவதில்லை.

குறிப்பு: (Reference)

www.nhs.uk

 

 • PUBLISHED DATE : Sep 11, 2018
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Sep 11, 2018

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.