இது வெய்லின் நோய் (Weil's disease)என்றும், 7-நாள் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. லெப்டோஸ்பைரோசிஸ் என்ற வகையைச் சார்ந்த பாக்டீரியாக்களால் இந்தத் தொற்று நோய் உண்டாகிறது. இது மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கிறது.
விலங்குகளால் மனிதர்களுக்குப் பரப்பப்படும் மிகவும் பரவலான நோயாகும். பொதுவாக இந்தத் தொற்று விலங்குகளின் சிறு நீரால் அசுத்தமான தண்ணீர் மூலமாகவே மனிதர்களுக்குப் பரவுகிறது. தோலில் உள்ள ஆறாத புண்கள், கண்கள், சளிசவ்வுகளில் அசுத்த நீர் படும்போது தொற்று உண்டாகிறது.
பெரும்பான்மையான நோயாளிகளுக்குத் தலைவலி, குளிர், தசை வலி போன்ற சளி காய்ச்சல் அறிகுறிகளே தோன்றும். ஆனால் சில சமயம் அறிகுறிகள் மிகவும் கடுமையாகி, உறுப்புகள் செயலிழப்பு, இரத்த உட்கசிவு போன்ற உயிருக்கு ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தும். கடுமையான காமாலை வெய்லின் நோய் (Weil's disease) எனப்படும்.
குறிப்புகள்: www.who.int
www.nlm.nih.gov
www.ncbi.nlm.nih.gov
www.nhs.uk
இலேசான அறிகுறிகளாவன:
கடுமையான அறிகுறிகள்:
சிறுநீரக இடைத்திசுக் குழாய் நசிவினால் சிறுநீரகச் செயல் இழப்பும், சில வேளைகளில் கல்லீரல் அழற்சியும் இந்நோயின் கடுமையான வகையாகும். இதனை வெய்லின் நோய் அல்லது வெய்ல் அறிகுறி என்றும் அழைப்பர்.
குறிப்பு : www.nhs.uk
விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் லெப்டோஸ்பைரோசிஸ் என்ற ஒரு வகை பாக்டீரியாக்களால் இது உண்டாகிறது.
நீர் விளையாட்டுகளின் போது பாக்டீரியாக்களால் நீர் அசுத்தமடைந்திருந்தாலும் இந்நோய் ஏற்படும். வெள்ளப் பெருக்கு போன்ற பேரிடர்களாலும் நோய் ஏற்பட வாய்ப்புண்டு.
குறிப்பு : www.nhs.uk
பாக்டீரியாவுக்கு எதிர்பொருள் உள்ளதா என்று கண்டறிய இரத்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
பிற சோதனைகள் வருமாறு:
குறிப்பு : www.ncbi.nlm.nih.gov
மனிதர்களுக்கு அளிக்கும் தடுப்பூசி எதுவும் இல்லை.
காமாலைக்குக் கீழ்வரும் மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்படுகிறது:
குறிப்பு : www.nlm.nih.gov