Measles(Khasra).png

தட்டம்மை (மணல்வாரி)

வைரசால் உண்டாகும் தட்டம்மை மிகவும் பரவக் கூடியது ஆகும். இது மணல்வாரி என்றும் அழைக்கப்படும். பாதுகாப்பான, பலனளிக்கக்கூடிய தடுப்பு மருந்து இருந்தும், குழந்தைச் சாவுக்கு இது ஒரு முக்கியக் காரணமாக விளங்குகிறது. இது வைரசால் (குறிப்பாக பாரோமைக்சோ வைரஸ்) உண்டாகும் ஒரு மூச்சு மண்டலத் தொற்று நோயாகும். நோயுள்ள ஒருவரின் மூக்கு, வாய், தொண்டைச் சளியின் மூலமாக இது பரவுகிறது.

குறிப்புகள்: www.cdc.gov
                        www.who.int
                        www.who.int
                        www.vaccineindia.org

பொதுவாக தட்டம்மையின் அறிகுறிகளில், நான்கு நாள் காய்ச்சலும் (4 D's) மூன்று  C-க்களும் அடங்கும். அவையாவன:

  • இருமல்
  • விழிவெண்படல அழற்சி
  • சளி
  • மூக்கு ஒழுகுதல், கண்ணில் நீர், விழிமடல் வீக்கம், தும்மல் போன்ற சளி அறிகுறிகள்
  • கண் சிவத்தலும் ஒளிக் கூச்சமும்
  • குறைந்த அளவு காய்ச்சலில் இருந்து அதிகக் காய்ச்சல் வரை   (உச்சம் 40.6C (105F) பல நாட்கள் தொடரும். பின் குறைந்து, கொப்புளம் தோன்றும்போது மீண்டும் வரும்.
  • களைப்பு, எரிச்சல் மற்றும் பொதுவான ஆற்றல் இழப்பு
  • வலி
  • பசியின்மை
  • வாயிலும் தொண்டையிலும் நுண்ணிய சாம்பல் வெள்ளைப் புள்ளிகள் (கோப்லிக்கின் புள்ளிகள்)

குறிப்பு  : www.nhs.uk

இது வைரசால் (குறிப்பாக பாரோமைக்சோ வைரஸ்)  ஏற்படும் மூச்சு மண்டல தொற்று நோயாகும். இந்த வைரஸ், ஒற்றை இழையும், எதிர்-உணர்வும், ஆர்.என்.ஏ. பொதிந்த வைரசுமாகும். பாரோமைக்சோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த மார்பிலிவைரஸ் இனத்தைச் சார்ந்தது. இந்த வைரசின் இயற்கையான ஓம்புயிரி (host) மனிதர்களே.

குறைந்தபட்சம் மூன்று C-களுடன் (இருமல், சளி, விழிவெண்படல அழற்சி) மூன்று நாள் காய்ச்சல் மூலமாக தட்டம்மைக் கண்டறியப்படுகிறது.

  • கோப்லிக்கின் புள்ளிகள் மூலமாகவும் கண்டறியப்படும்.

Reference: www.vaccineindia.org

MMR (தட்டம்மை, அம்மைக்கட்டு, ரூபெல்லா) என்ற தடுப்பூசி மூலம் தட்டம்மையைத் தடுக்கலாம். வழக்கமான தடுப்பு மருந்து தட்டம்மையை வெற்றிகரமாகத் தடுக்கிறது.

12-15 மாதத்தில் முதல் முறையாகவும், 4 வாரங்கள் கழித்து அடுத்த தவணை மருந்தும் அளிக்க வேண்டும். 4-6 வயது வரை தடுப்பு மருந்து அளிக்கலாம்.

எனினும், இந்திய தேசிய தடுப்புமருந்து அட்டவணை, “முதலில் 9-15 மாதங்களிலும், இரண்டாவது தவணை 16-24 மாதங்களில் DPT-யுடன் (டிப்தீரியா, பெர்ட்டியூசிஸ், டெட்டானஸ்) இணைத்தும் (ஊக்க அளவு) கொடுக்க வேண்டும்” என்று கூறுகிறது. இது 5 வயது வரை கொடுக்கப்படலாம்.

குறிப்பு : www.cdc.gov
                 www.vaccineindia.org

தட்டம்மைக்கு எனத் தனியாக எந்த சிகிச்சையும் இல்லை. சிக்கலில்லாத தட்டம்மை நோய், ஓய்வு மற்றும் ஆதரவு சிகிச்சை மூலம் குணமடையும்.

பின்வருவன நோய்க்கடுமையைக் குறைக்கும்:

  • அசெட்டாமினோஃபென் (டைலினால்)
  • படுக்கையில் ஓய்வு
  • ஈரப்பதமான காற்று

எனினும், நோய்க்கடுமை கடுமையாகி சிக்கல்கள் ஏற்படும் என்று தோன்றினால் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது முக்கியம்.

குறிப்பு : www.nlm.nih.gov

  • PUBLISHED DATE : May 18, 2015
  • PUBLISHED BY : NHP CC DC
  • CREATED / VALIDATED BY : NHP Admin
  • LAST UPDATED ON : Jun 04, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.