Schizophrenia.png

மனச்சிதைவு

மனச்சிதைவு நோய் ஒரு நீடித்த மனநலக் கோளாறாகும். இதனால் பல்வேறு உளவியல் அறிகுறிகள் தோன்றுகின்றன.

 • மனமருட்சி – இல்லாதவற்றைக் கேட்பதும் பார்ப்பதும்
 • மாயத்தோற்றம் – சாட்சிகளோடு முரண்படும் உண்மையோடு தொடர்பற்ற அசாதாரண நம்பிக்கைகள்
 • மனமருட்சியையும், மாயத்தோற்றத்தையும் அடிப்படையாகக் கொண்ட குழப்பமான சிந்தனைகள்
 • நடத்தையில் மாற்றம்

மனச்சிதைவு கொண்டவர்கள் பெரும் அளவில் மனவழுத்தம் மற்றும் மனக்கலக்கம் போன்ற கூடுதல் மன பாதிப்புகளையும் உடையவர்களாக இருப்பர்.

குறிப்புகள்: www.who.int 
www.nhs.uk 
www.cdc.gov 
http://www.schizophrenia.com

சிந்தனையிலும் நடத்தையிலும் உண்டாகும் மாற்றங்களே மனச்சிதைவின் தனித்தன்மைகள். இவற்றில் அடங்குவன:

 • மனமருட்சி: ஒரு பொருளோ ஒரு நபரோ இல்லாதபோதும் இருப்பது போன்ற பிரமை உண்டாகும்.
 • மாயத்தோற்றம்: தவறான, அபூர்வமான அல்லது உண்மைக்குப் புறம்பான ஒன்றை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் உறுதியோடு கொள்ளப்படும் ஒரு நம்பிக்கை.
 • குழப்பமான சிந்தனைகள் (சிந்தனைக் கோளாறு): மனச்சிதைவு கொண்டவர்களால் தங்கள் எண்ணங்களையும், உரையாடல்களையும் கோர்வையாக நினைவு படுத்த முடியாது.
 • நடத்தையிலும் சிந்தனையிலும் மாற்றங்கள்: நடத்தை, ஒழுங்கற்றும் கணிக்க முடியாதவாறும் இருக்கும். தோற்றமும் உடைகளும் பிறர் பார்வையில் அசாதாரணமாகத் தோன்றும்.

குறிப்பு : www.nimh.nih.gov

மனச்சிதைவுக்கான சரியான காரணம் தெரியவில்லை. உடலியல், மரபியல், உளவியல், சூழலியல் காரணிகள் இணைந்து இந்நிலை உருவாகக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆபத்துக்காரணிகள்

மரபியல்: குடும்பங்களில் தொடர்ந்து மனச்சிதைவு நோய் காணப்படுகிறது. ஆனால் தனிப்பட்ட எந்த மரபணுவும் இதற்குக் காரணம் அல்ல.

நரம்புக்கடத்திகள்: இவை மூளையணுக்களுக்கு இடையில் செய்தி எடுத்துச் செல்லும் வேதிப்பொருட்கள் ஆகும். நரம்புக்கடத்திகளுக்கும் மனச்சிதைவுக்கும் இடையில் தொடர்பு உள்ளது. ஏனெனில் மூளையில் நரம்புக்கடத்திகளின் அளவை மாற்றும் சில மருந்துகள் மனச்சிதைவு அறிகுறிகளுக்கு பலன் அளிப்பதாக அறியப்படுகிறது.

கர்ப்பமும் பிறப்புச் சிக்கல்களும் (Pregnancy and birth complications)

 • கர்ப்ப காலத்தில் இரத்தப் போக்கு, கர்ப்பகால நீரிழிவு அல்லது முன்சூல்வலிப்பு
 • பிறப்பின்போது குறை எடை அல்லது தலை சுற்றளவு குறைதல் ஆகியவற்றை உள்ளடக்கிய கருப்பைக்குள் இருக்கும்போது குழந்தையின் அசாதாரண வளர்ச்சி.
 • கருப்பைக்குள் இருக்கும்போது வைரஸ் தாக்குதல்
 • உயிர்வளி குறைதல் அல்லது அறுவைமூலம் பிறப்பு போன்ற பேறுகாலச் சிக்கல்கள்

மனவழுத்தம்: மரணம், வேலை அல்லது வீடு இழப்பு, மணவிலக்கு, உறவுமுறிதல், அல்லது உடலியல், பாலியல், உணர்வியல் அல்லது இனவியல் தாக்குதல்கள் போன்ற மனவழுத்தம் தரும் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மனச்சிதைவைத் தூண்டுவன.

போதை மருந்துப் பழக்கம்: கஞ்சா, கொக்கைன், எல்.எஸ்.டி., ஆம்ஃபெட்டாமைன்கள் போன்ற மருந்துகள், போதை மருந்துப் பழக்கத்துக்கு எளிதாக ஆளாகக் கூடியவர்களுக்கு மனச்சிதைவைத் தூண்டக்கூடும்.

குறிப்பு : www.nhs.uk

இதற்கான சோதனைகள் எதுவும் இல்லை. பொதுவாக அறிகுறிகளை ஓர் உளவியல் நிபுணரின் துணை கொண்டு நோய்கண்டறியப்படுகிறது.

எதிர் உள நோய் மருந்துகளும், உளவியல் மற்றும் சமூகவியல் ரீதியான ஆதரவும் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மருந்துகள்: எதிர் உள நோய் மருந்துகளே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன. 7-14 நாட்களில் நோயறிகுறிகள் குறையும்.

உளசமூகவியல்: கீழ் வருவனவற்றை உள்ளடக்கிய பல உளசமூகவியல் சிகிச்சைகள் பலன் அளிப்பவை:

 • குடும்ப அளவிலான சிகிச்சை
 • உறுதியான சமூகவியல் சிகிச்சை
 • ஆதரவுடன் கூடிய வேலைவாய்ப்பு
 • புலனுணர்வு சார் சீர்திருத்தம்

குறிப்பு : www.nimh.nih.gov

 • PUBLISHED DATE : May 19, 2015
 • PUBLISHED BY : NHP CC DC
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Jun 04, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.