சிற்றக்கி

சிற்றக்கி வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இரு வைரசுகள் சிற்றக்கி வைரஸ் 1-ம் 2-ம் (HSV-1 and HSV-2) ஆகும்.

சிற்றக்கி வைரசுகள் பொதுவாக மனிதர்களையே பாதிக்கின்றன. இது மருத்துவம் இல்லாமலேயே 7-10 நாட்களில் சரியாகி விடுகிறது. வாய்ப்புண்ணுக்கு சிற்றக்கி வைரஸ்-1 காரணம்.

அபூர்வமாக சிற்றக்கி வைரஸ்-2 ம் வாய்ப்புண்ணை உண்டாக்கலாம். இதற்குக் காரணம் பிறப்புறுப்பு அக்கி உள்ளவர்களுடன் வாய்மூலம் உடலுறவு கொள்வதால் ஏற்படும் விளைவாகும். அக்கி நோய் மிகவும் பரவும் தன்மை கொண்டது. நெருங்கிய தொடர்பினால் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது. ஒருவருக்குள் வைரஸ் புகுந்து பெரும்பாலும் செயலற்றே இருக்கும். சில ஊக்கிகளால் தூண்டப்பட்டு வாய்ப்புண்ணாக வெளிப்படும். நபருக்கு நபர் ஊக்கிகள் வேறுபடும். களைப்பு, பாதிக்கப்பட்ட இடத்தில் புண் ஆகியவை இதில் அடங்கும்.

குறிப்புகள்

www.cdc.gov
www.nhs.uk
www.nlm.nih.gov
www.aad.org

குழந்தைகளில்:

 • வாய்ப்புண்கள்
 • காய்ச்சல்
 • வீங்கிய, மிருதுவான நிணநீர்ச் சுரப்பிகளே மிகவும் பொதுவான அறிகுறிகள்

புண்கள் மெதுவாக 7-14 நாட்களில் ஆறும். எனினும் பெரியவர்களுக்கு அறிகுறிகள் மிக மிக இலேசாக இருப்பதால் தொற்று ஏற்பட்டிருப்பதே யாருக்கும் தெரியாது.

பிறப்புறுப்புகள் பாதிக்கப்பட்டால்: பிறப்புறுப்புகள், கருப்பை வாய், பிட்டம் அல்லது அருகில் உள்ள பகுதிகளில் சிற்றக்கி காணப்படும்.

வாய்ப்புண்ணைப் போலவே பிறப்புறுப்பு அக்கியும் வாழ்நாளில் திரும்பத் திரும்ப வரும் வாய்ப்புண்டு. அக்கி வைரசும் மூளையழற்சியை உருவாக்கும். மூளையழற்சி உள்ள குழந்தைகளுக்குக் காய்ச்சல், தலவலி, எரிச்சல், மனக்குழப்பம் ஆகியவை இருக்கும். வலிப்பும் பரவலாக ஏற்படும். அக்கி வைரஸ்-2 இலேசான மூளைக்காய்ச்சலை உண்டாக்கும். ஆனால் இதனால் நீடித்தப் பிரச்சினைகளோ மூளைச்சிதைவோ ஏற்படாது.

தொடர்ந்துவரும் தொற்றுநோய்கள்: ஒரு தடவை தொற்று நோய் ஏற்பட்டு முடிந்தவுடன் வைரசுகள் நரம்பு உயிரணுக்களில் செயலற்ற நிலையில் இருக்கும். இத்தகைய நபர் வைரசைக் கொண்டு செல்பவராகும். குளிர், வெப்பம், களைப்பு, மனவழுத்தம், சூரியஒளி படுதல் ஆகியவற்றால் தூண்டப்பட்டு திரும்பவும் வாய்ப்புண்ணை உண்டாக்கும் (இரண்டாம் கட்டத் தொற்று). புண் வெளிப்படும் முன்னர் அவ்விடத்தில் சொறி அல்லது கூச்சம் உண்டாகும். புண் ஆறுவதற்கு முன் தோல் தடிப்பாகும்.

குறிப்பு

www.nhs.uk

சிற்றக்கி வைரஸ் வகை 1 மற்றும் வகை 2 ஆல் சிற்றக்கிநோய் ஏற்படுகிறது.

அதிகப்படுத்தும் காரணிகள்: வாய்ப்புண்ணை உண்டாக்கும் காரணிகள் என கருதப்படுபவை:

 •  உணர்ச்சிக் கோளாறு அல்லது உளவியல் அழுத்தம்
 •  களைப்பும் சோர்வும்
 •  பாதிக்கப்பட்ட இடத்தில் காயம்
 •  மாதவிடாய்
 •  கடும் சூரிய ஒளி

குறிப்புகள்

www.nhs.uk

www.aad.org
 

வைரசைக் கண்டறியும் முக்கிய சோதனை:

அக்கி வைரஸ் திசு வளர்ச்சிச் சோதனை:

எச்.எஸ்.வி. டி.என்.ஏ. சோதனை (பாலிமரேஸ் தொடர் வினை). ஆனால் இது அவ்வளவு துல்லியமானதல்ல.

கடுமையான அக்கித் தொற்றைக் காண எச்.எஸ்.வி. எதிர்பொருள் சோதனை பயன்படுகிறது. இது இரத்த மாதிரியைக் கொண்டு செய்யப்படும். நோய்க்கடுமையின் போதும் நலம்பெற்று வரும்போதும் பல வாரங்களுக்கு இரத்த மாதிரி சேகரிக்கப்படும். ஒப்பீடு செய்து எச்.எஸ்.வி IgG எதிர் பொருள் அளவு இயல்புக்கு மாறாக உயர்ந்துள்ளதா என்று சோதிக்கப்படும். இது தற்போதுள்ள தொற்றைக் காட்டும்.

ஆரோக்கியத்தைப் பற்றி புரிந்து கொள்ள தேசிய சுகாதார இணையதளம் குறிப்பான தகவல்களையே தருகிறது. நோய்கண்டறியவும் மருத்துவத்துக்கும் உங்கள் மருத்துவரையே நீங்கள் அணுக வேண்டும்.

குறிப்பு

labtestsonline
 

உடலில் இருந்து அக்கி வைரசை அறவே ஒழிக்க முடியாது. ஆனால் நுண்ணுயிர்க்கொல்லிகள் மூலம் நோய் வெளிப்பாட்டின் காலம், அளவு, கடுமை முதலியவற்றைக் குறைக்கமுடியும்.

 • இபுபுரூபன் போன்ற வலிநிவாரணிகள் மூலம் வலியையும் காய்ச்சலையும் குறைக்க முடியும்.
 • அசைக்ளோவிர் (acyclovir), வேலசைக்ளோவிர் (valacyclovir), ஃபேம்சைக்ளோவிர் (famciclovir), பென்சைக்ளோவிர் (penciclovir) போன்ற நுண்ணுயிர்க்கொல்லிகள். சரியான முறையில் பயன்படுத்தினால் தொடர்ந்து வரும் தொற்று ஆறுவதை வேகப்படுத்தும்.
 • நுண்ணுயிர்க்கொல்லி களிம்புகள் புண்களை ஆற்றும். அவை வைரசை அழிக்கவோ அல்லது வரப்போகும் புண்களைத் தடுக்கவோ செய்யாது.

ஆரோக்கியத்தைப் பற்றி புரிந்து கொள்ள தேசிய சுகாதார இணையதளம் குறிப்பான தகவல்களையே தருகிறது. நோய்கண்டறியவும் மருத்துவத்துக்கும் உங்கள் மருத்துவரையே நீங்கள் அணுக வேண்டும்.

குறிப்புகள்

www.cdc.gov(link is external)
www.nhs.uk(link is external)
 

அக்கி வைரஸ் உண்டாக்கும் வாய்ப்புண்கள் இலேசானதும் சிகிச்சை இல்லாமலேயே மறையக் கூடியதும் ஆகும். ஆனால் சில வேளைகளில் அவை சிக்கல்களையும் உண்டாக்கும்.

நீர்ச்சத்திழத்தல்: உடலில் போதுமான அளவுக்கு நீர்ச்சத்து இல்லாமல் இருப்பதே நீர்ச்சத்திழப்பு எனப்படும். சிலசமயம் புண் உண்டாக்கும் வலியினாலும் இது நிகழ்வதுண்டு. வாயில் வலி இருக்கும் போது போதுமான அளவுக்கு நீர் அருந்துவது இயலாத ஒன்று. குறிப்பாக வாய்ப்புண் உள்ள இளம் வயதினருக்கு நீர்ச்சத்திழக்கும் அபாயம் அதிகம் உண்டு.

நகச்சுற்று: சில வேளைகளில் வைரஸ் உடலின் பிற பாகங்களுக்கும் பரவும். இதனை இரண்டாம் கட்டத் தொற்று என்பர். நகச்சுற்றும் ஓர் இரண்டாம் கட்ட தொற்றாகும். அது நகத்தைச் சுற்றி விரலில் வலிதரும் புண்ணை உண்டாக்கும். ஒரு வெட்டுக்காயமோ கீறலோ கையில் இருந்தால் தோலில் அக்கி வைரஸ் ஏறி இதனை ஏற்படுத்தும். இதற்கு நுண்ணுயிர்க்கொல்லி மருந்தால் எளிதாக சிகிச்சை அளிக்க முடியும்.

விழிவெண்படல அழற்சி: அக்கி வைரசால் கண்களில் ஏற்படும் ஒரு இரண்டாம் கட்ட தொற்றே இது. கண் பகுதியிலும் கண்ணிமைகளிலும் அழற்சி உண்டாகும் (வீக்கமும் அரிப்பும்). இதை நுண்ணுயிர்க்கொல்லி கண் மருந்துகளால் எளிதாகக் குண்படுத்த முடியும். சிகிச்சை அளிக்காவிட்டல் விழிவெண்படலத்தை இது பாதித்துப் பார்வையிழப்பு ஏற்படலாம்.

மூளையழற்சி: மூளையில் அழற்சி ஏற்பட்டு வீங்குவதே மூளையழற்சி எனப்படும். இது கடுமையானது. இதனால் மூளைச்சிதைவும் மரணமும் உண்டாகலாம். அபூர்வமாக வைரஸ் மூளைக்குள் பரவுவதால் மூளையழற்சி உருவாகலாம். அசைக்ளோவிர் போன்ற மருந்துகளை நரம்புவழி செலுத்தி இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குறிப்பு

www.nhs.uk

 • PUBLISHED DATE : Feb 24, 2016
 • PUBLISHED BY : Zahid
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Feb 24, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.