சொறிசிரங்கு

அனைத்து நாட்டு மக்களையும் சொறிசிரங்கு பாதிக்கிறது. வளரும் நாடுகளின் தோல் நோய்களில் இதுவே அதிகப் பகுதியை ஆக்கிரமிக்கிறது. உலக அளவில் 130 மில்லியன் மக்கள் இதனால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன் இருப்பு நிலை 0.35-ல் இருந்து 46% வரை ஆகும்.  சூடான வெப்ப மண்டல தட்ப வெப்ப நிலை கொண்ட நாடுகளில் இதன் பாதிப்பு அதிகம். இடம் சார்ந்து இது காணப்படுகிறது.  அதிக நெரிசலும் குறைந்த சமூகப் பொருளாதார நிலையும் கொண்ட சமுதாயங்கள் இதனால் மிகவும் பாதிப்பு அடைகின்றன. குழந்தைக் காப்பகங்கள், தொகுதி வீடுகள், மற்றும் சிறைகள் சொறிசிரங்கு திடீர் எழுச்சிக்கு உள்ளாகும் இடங்கள் ஆகும்.

இந்தியாவின் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் உள்ள ஓர் அனாதை இல்லத்தில் ஆய்வு மேற்கொண்ட போது அதில் உள்ளிருப்போரில் 81 %  பேருக்கு சொறிசிரங்கு இருப்பது கண்டறியப்பட்டது. ஒட்டு மொத்த சொரிசிரங்கு சிகிச்சை மற்றும் கல்வியால் வெற்றிகரமாக அது குணமாக்கப்பட்டது.  கிராமப்புற சமுதாயம் ஒன்றில் நடத்தப்பட்ட நோயியல் ஆய்வில் 13 % சொறிசிரங்கு இருப்பது கண்டறியப்பட்டது.

சொறிசிரங்கு பாதிப்பு சிக்கலாகி நுண்ணுயிர் தோல் புண் போன்ற தொற்றுகளும் உருவாகும். அதன் அடுத்த கட்டச் சிக்கலாக இரத்தம் நஞ்சாதால், இதயநோய், மற்றும் நீடித்த சிறுநீரக நோய்கள் உருவாகலாம்.  வசதியற்ற கிராமப்புறச் சமுதாய இளம் குழந்தைகளும் வயோதிகர்களும் பொதுவாக சொறிசிரங்கால் பாதிக்கப்படுகின்றனர்.  இவர்களுக்கு அடுத்தக் கட்ட சிக்கலான தொற்றுக்களும் உண்டாகும்.

உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் பல காரணங்களால் இது பொது சுகாதார நோக்கில் மிக முக்கியமானது ஆகக் கருதப்படுகின்றது. உலக அளவில் உள்ளது; கடும் அரிப்புத் துன்பம் தருவதாகும்; சமூகப் புறக்கணிப்பும்  மேலும்,  பல மறைமுகமாகச் சிக்கல்களும் உருவாகக் கூடும். இதய மற்றும் சிறு நீரக நோய்களோடும் தொடர்பு இருக்கும் சான்றுகள் இருப்பதால் சிறந்த நோய்கண்டறிதல் முறையும், சிகிச்சையும், பொது சுகாதார நடவடிக்கைகளும் சொறிசிரங்கைக் கட்டுப்படுத்த தேவைப்படுகிறது.

குறிப்புகள்:

www.who.int/lymphatic_filariasis/epidemiology/scabies/en/

globalhealth.thelancet.com/2014/07/07/scabies-joins-list-who-neglected-tropical-diseases

www.aad.org/public/diseases/contagious-skin-diseases/scabies

apps.who.int/iris/bitstream/10665/69229/1/WHO_FCH_CAH_05.12_eng.pdf

www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3862572/

சொறிசிரங்கின் அறிகுறிகள் மற்றும் நோய்க்குறிகளில் அடங்குவன:

அரிப்பு (பெரும்பாலும் இரவில்): அரிப்பே மிகவும் பொதுவான அறிகுறி. உண்ணி, தோலுக்குள் துளையிட்டுச் சென்று 2-6 வாரங்கள் கழித்து (ஏற்கெனவே  சொரிசிரங்கு வந்த ஒருவருக்கு, அரிப்பு பொதுவாக 1-4 நாட்களில் தொடங்கும்) அறிகுறி தோன்றுகிறது. அரிப்பும் சொறியும் தோன்றும் பரவலான இடங்கள்:

 • கைகள்: விரல்களுக்கு இடையிலும் நகத்தைச் சுற்றியும்.
 • புயங்கள்: முழங்கை, மணிக்கட்டு மற்றும் அக்குள்.
 • தோல், பொதுவாகத் துணியாலும் நகையாலும் மூடப்பட்ட இடங்கள்: தொடை, இடுப்பு பட்டைச் சுற்றுப்பாதை, ஆண்குறி, முலைக்காம்பைச் சுற்றியுள்ள தோல், காப்பு, கைக்கடிகாரப் பட்டை மற்றும் மோதிரம் மறைக்கும் தோல் பகுதிகள்.
 • தலை, முகம், கழுத்து, உள்ளங்கை, பாத அடி ஆகியவையே பெரும்பாலும் குழந்தைகளுக்கும் இளம்பிள்ளைகளுக்கும் பாதிப்புக்குள்ளாகும். ஆனால் பொதுவாக பெரிய பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் இவ்விடங்கள் பாதிப்பு அடைவது இல்லை.

குழந்தைகளிலும் பிள்ளைகளிலும் சொறிசிரங்கு பெரும்பாலும் எரிச்சல் அளிக்கும்.

சொறி: சொறிசிரங்குப் படை நுண் உண்ணிகள் அல்லது பருக்கள் போல தோற்றம் அளிக்கும்.

புண்கள்: சொறி சிரங்கு அதிகமாக அரிக்கும் போது சொறிய வேண்டிய நிலை ஏற்படும். இதனால் புண் உண்டாகி இரண்டாம் கட்டநுண்னுயிர்த் தொற்று உருவாகிறது.

தோலில் கட்டியான ஓடு (நார்வே சொறிசிரங்கு): சில வேளைகளில், எச்.ஐ.வி/எய்ட்ஸ் உள்ளவர்கள் அல்லது அரிப்பு மற்றும்/அல்லது சொறிதல் தடுக்கப்பட்ட நிலை கொண்ட நபர்களை  (தண்டு வடக் காயம், வாதம், உணர்விழப்பு, மனநிலக் கோளாறு) உள்ளடக்கிய நோய்த்தடுப்புத் திறன் அழுத்தப்பட்ட நோயாளிகளில், ஒரு கடும் வகை சொறி சிரங்கு உருவாகிறது.  இது ஓட்டுச் சிரங்கு எனப்படும். நார்வே சொறிசிரங்கு என்பது இன்னொரு பெயர். கொப்புளங்கள் அல்லது கட்டியான ஓடுகள் உருவாவது இதன் இயல்பு ஆகும். இவற்றுக்குள் ஆயிரக்கணக்கான உண்ணிகள் இருக்கும். நோய்த்தடுப்புத் திறனில் ஏற்பட்ட மாற்றத்தால் அல்லது நரம்பியல் நிலைகளினால் சொறி அல்லது அரிப்பு போன்ற பொதுவான அறிகுறிகள் இதில் இருப்பதில்லை. ஆயிரக்கணக்கான உண்ணிகள் இவற்றில் இருப்பதால் இத்தகைய நோயாளிகள் தொற்று பரப்பக் கூடியவர்கள். ஆகவே சுற்றியுள்ள சமுதாயத்திற்குத் தொற்று மறு பரப்பு செய்யும் இவர்களைக் கண்டறிவது முக்கியம்.

குறிப்புகள்:

www.who.int/lymphatic_filariasis/epidemiology/scabies/en/

www.aad.org/public/diseases/contagious-skin-diseases/scabies#symptoms

www.cdc.gov/parasites/scabies/disease.html

www.ifd.org/protocols/scabies

 

மனிதர்களுக்கு சொறிசிரங்கு ஓர் உண்ணியால் ஏற்படுகிறது (மனித சொறி உண்ணி). இது சர்கோப்ட்ஸ் வார் ஹோமினிஸ் என அழைக்கப்படும் (Sarcoptes scabiei var hominis). இது கண்ணுக்குப் புலப்படாத அளவுக்கு மிகச் சிறியது.

சொறிசிரங்கு உண்ணி தோலின் மேல் அடுக்கில் துளையிட்டு உட்செல்லும். அங்கு பெண் உண்ணி முட்டை இடும். உண்ணிப் புரதமும் கழிவுப் பொருட்களும் சேர்ந்து நோயாளி உடலில் ஓர் ஒவ்வாமை எதிர்வினையைத் தூண்டுவதால் கடுமையான அரிப்பு உருவாகிறது.

சொறிவதால் தோலில் நுண்ணுயிரித் தொற்று ஏற்படுகிறது (குறிப்பாக ஸ்டேப்பிலோகாக்கஸ் ஆரியஸ் மற்றும் ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் பயோஜென்ஸ்). இதனால் தோல் புண்கள் உண்டாகின்றன. இந்தப் புண்கள் ஆழமான தோல் தொற்றாக மாறும்.  கட்டி மற்றும் நோய்த்தடுப்பு நடுநின்று உருவாக்கும் பின் – ஸ்ட்ரெப்ட்டோகாக்கல் சிறுநீர்க நோய் மற்றும் வாத இதய நோய் போன்ற  சிக்கல்கள் இதனால் ஏற்படும். வறுமையான இடங்களில் சொறி சிரங்கால் பாதிக்கப்பட்ட 10% குழந்தைகளுக்கு சிறுநீரக நோய் காணப்படுகிறது. பல நேர்வுகளில் இது பல காலம் நீடித்து நிரந்தர சிறுநீரகச் சிதைவாக மாறுகிறது. தொடர் தொற்றும் பொதுவாகக் காணப்படும்.

சொறிசிரங்கு பரவல்:

சொறிசிரங்கு கொண்ட ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குத் தோல் தொடர்பால் பொதுவாக இந்நோய் பரவும். குழந்தையைத் தூக்குதல், உடலுறவு, படுக்கையைப் பகிர்தல், கைகளைப் பிடித்துக்கொள்ளும் பள்ளி சிறுவர்கள் போன்றோருக்கு இவ்விதம் பரவுகிறது.  நெருங்கிய ஒருவருக்கு ஒருவர் கொண்ட தொடர்பே முக்கியமான பரவல் வழி. படுக்கைத் துணி போன்ற உண்ணி உள்ளபொருட்களின் மூலமாகவும் இது பரவலாம். மனிதத் தொடர்பு இல்லாமல் இந்த உண்ணிகள் 48-72 மணி நேரம் வரை உயிரோடிருக்கும்.

நோய் ஆபத்தில் இருப்போர்:

 • வெப்ப மண்டல நாட்டில் வாழ்வோர்
 • படுக்கையைப் பகிரும் குடும்ப உறுப்பினர்கள்
 • சிறை போன்ற நிறுவன அமைப்பில் வாழ்வோர்
 • எச்.ஐ.வி. போன்ற அழுத்தப்பட்ட நோய்த்தடுப்பு மண்டலம் கொண்டவர்கள்.

குறிப்புகள்:

www.aad.org/public/diseases/contagious-skin-diseases/scabies

www.cdc.gov/parasites/scabies/disease.html

www.ifd.org/protocols/scabies

www.who.int/lymphatic_filariasis/epidemiology/scabies/en/

apps.who.int/iris/bitstream/10665/69229/1/WHO_FCH_CAH_05.12_eng.pdf

 

தோலின் தோற்றம், சொறிசிரங்குகள் இருப்பு, மணிக்கட்டைச் சுற்றி  குழிகள் மற்றும் கொப்புளங்கள், பெரியவர்களின் விரல்களுக்கு இடையில் தோல் வலை மடிப்பில், சிறுவர்களின் கால் விரல்கள், முழங்கால் கை மற்றும் தலையில் தோல் மடிப்பு வலைகளில் இருப்பதைக் கொண்டு சொறிசிரங்கைக் கண்டறியலாம்.

ஒரு மருத்துவர் உண்ணி நுழைந்த குழிகள் மற்றும் சொறிசிரங்குகள் உள்ளனவா என்று தலை முதல் கால் வரை பரிசோதிக்கிறார். தொடர் அரிப்புகளால் பெரியவர்களுக்கு சொறிசிரங்கு கணுக்கள் உருவாகும். பெரும்பாலும் இனப்பெருக்க உறுப்புப் பகுதிகள், ஆண்குறி, விதைப்பை மற்றும் மார்பைச் சுற்றி காணப்படலாம்.

மேலும், அறிகுறிகள் அற்ற குடும்ப உறுப்பினர்களின் விரலிடை வலையில் குழிகள் காணப்படும். குடும்ப உறுப்பினர்களில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு ஒரே போன்ற அறிகுறிகள் இருந்தால் சொறிசிரங்கு இருப்பதற்கான சாத்தியக் கூற்றை உணர்த்தும்.

சொறிசிரங்கை உறுதிப்படுத்த: பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து (கையின் விரலிடை மற்றும் மணிக்கட்டு மடிப்பு) தோல் மாதிரி எடுக்கப்பட்டு, சொறிசிரங்கு உண்ணி, முட்டை அல்லது எச்சம்  இருக்கிறதா என்று நுண்காட்டியின் அடியில் சோதிக்கப்படும்.

குறிப்புகள்

www.nhs.uk/Conditions/scabies/Pages/diagnosis.aspx

www.who.int/lymphatic_filariasis/epidemiology/scabies/en/

http://controlscabies.org/about-scabies/

நோயினால் ஏற்படும் நலிவைக் குறைப்பதும், இரண்டாம் கட்ட ஆபத்தையும் அதன் சிக்கல்களையும் (இதய மற்றும் சிறுநீரக நோய்கள்) குறைப்பதும், குடும்பத்திலும் சமுதாயத்திலும் மேலும்  பரவாமல் தடுப்பதும் நோய்மேலாண்மையின் நோக்கமாகும். 

சிரங்குச்சொறி கொல்லிகளே இதன் சிகிச்சைக்குப் பயன்படும் மருந்து. இவை சிரங்கு உண்ணியையும் முட்டைகளையும் கொல்லும். வெப்ப மண்டலத்திற்கு ஏற்ற பல உண்ணிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன: பெர்மித்ரின் 5% (6 மாதத்துக்குக் குறைந்த குழந்தைகள் கவனம்), நீர் அடிப்படை 5% மாலத்தியான்,  10–25% பென்சைல் பென்சோயேட் எமல்சன்  அல்லது 5–10% சல்பர் களிம்பு.

வாய்வழி இவர்மேக்டின் பயன்பாடு : முதியோர் இல்லம் போன்ற அடைபட்ட சமுதாயத்தில் இதை பயன் படுத்தலாம். அந்தச் சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று தற்போது பரிந்துரைக்கப்படுகிறது.

இரண்டாம் கட்ட மேலாண்மை: இதில் தகுந்த நுண்கொல்லிகளையும் கிருமிநாசினிகளையும் பயன்படுத்தி சொரிசிரங்கின் சிக்கலான புண்களுக்கு சிகிச்சை அழிப்பது அடங்கி உள்ளது.

முக்கிய குறிப்புகள்:

 • அறிகுறி மற்றும் தொடர்புகள் உடையவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் (குடும்ப உறுப்பினர் களுக்கு இடையில் மற்றும் உடல் உறவு). தொற்றுப் பரவலைத் தடுக்கக்  குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் சிகிச்சை தரப்பட வேண்டும் (அறிகுறி அற்றவரால் பரவலாம்).
 • சுத்தமான, குளிர் உலர் தோல்  மேல்  களிம்புகளைத் தடவ வேண்டும். மருந்து இடும் முன்னர் வெந்நீர் குளியலைத் தவிர்க்க வேண்டும்.
 • சிரங்கு லோஷனை படுக்கப் போகும் முன்னர் கழுத்து  முதல் கால் வரை உடல் முழுவதும் தடவ வேண்டும். குழந்தைகள் மற்றும் இளம் பிள்ளைகளுக்குக் களிம்பைக் கழுத்து மற்றும் தலையில் இட வேண்டும். ஏனெனில், சொறிசிரங்கு அவர் முகம்,மண்டை ஓடு மற்றும் உடல் முழுவதும் பரவலாம்.  மடக்கிநீட்டும் பகுதிகள், இனப்பெருக்க உறுப்புகள், விரல் இடை, நகத்துக்கு அடி, மற்றும் காதுக்குப் பின்புறம் ஆகிய இடங்களில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
 • அடுத்த நாள் காலையில் உண்ணிக் கொல்லி கழுவப்பட வேண்டும்.
 • சிகிச்சைக்குப் பின் சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.
 • உண்ணிக் கொல்லி லோஷன்/களிம்பு தடவிய பின் குழந்தைகள் தங்கள் கைகளை வாயில் வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • தொற்றுள்ளோர் அல்லது அவரது குடும்பத்தார் அல்லது நெருங்கியவர்கள்  பயன்படுத்திய படுக்கை, துணிகள், துவலைகள் போன்றவற்றை (குறைந்த பட்சம் சிகிச்சைக்கு மூன்று நாட்கள் முன்னர்) வெந்நீரில் துவைத்துச் சூடான உலர்த்தியில் காயவைக்கவேண்டும். உலர் சலவையும் செய்யலாம். அல்லது குறைந்த பட்சம் 72 மணி நேரத்துக்கு ஒரு நெகிழிப் பையில் அடைத்து வைக்கலாம் (மனிதத் தோல் தொடர்பு இல்லாமல் சொறிசிரங்கு உண்ணிகள் உயிர்வாழ முடியாது. எனவே துவைத்தல் அல்லது சில நாட்கள் சேமித்து வைத்தலே போதுமானது).
 • சிகிச்சைக்குப் பின் அனைத்து உண்ணிகளும் முட்டைகளும் கொல்லப்பட்டிருந்தாலும் பல வாரங்கள் அரிப்பு தொடர்ந்து இருக்கும். ஏனெனில், அறிகுறிகள் உண்ணிகள் மற்றும் அவற்றின் கழிவுப்பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமையாலேயே உண்டாகிறது.
 • அரிப்பு 2-4 வாரங்களுக்கு மேல் தொடர்ந்தால், புதுக் குழிகள் அல்லது பரு போன்ற சொறிப் புண்கள் காணப்பட்டால் மறு சிகிச்சை அவசியம்.
 • ஏற்பட்டுள்ள தோல் புண்களுக்கு மருத்துவர் ஆலோசனைப்படி தகுந்த நுண்ணுயிர்க்கொல்லி பயன்படுத்த வேண்டும்.

குறிப்புகள்:

www.who.int/lymphatic_filariasis/epidemiology/scabies/en/

www.cdc.gov/parasites/scabies/treatment.html

www.aad.org/public/diseases/contagious-skin-diseases/scabies#tips

indianpediatrics.net/sept2001/sept-995-1008.htm

apps.who.int/iris/bitstream/10665/69229/1/WHO_FCH_CAH_05.12_eng.pdf

பெரும்பாலும் வெப்பமண்டலப் பகுதிகளில், சொறிசிரங்குத் தொற்றில், நுண்ணுயிர்களால் புண் உருவாகிறது.

புண்கள் மேலும் சிக்கலாகி ஆழமான தோல் தொற்றாகிக் கட்டிகள் உண்டாகி ஊடுறுவும் கடும் நோய்களாக மாறும். குழந்தைகளில் இரத்த நச்சு ஏற்படலாம்.

வெப்பமண்டலப் பகுதிகளில் சொறிசிரங்குத் தொடர்பான தொற்று நோய்த்தடுப்பு மண்டலம் சம்பந்தப்படும் சிக்கல்களான கடும் பின் ஸ்ரெப்ட்டோக்காக்கல் சிறுநீரக நோய் அல்லது வாத இதய நோயாக மாறக் கூடும்.

குறிப்பு:

www.who.int/lymphatic_filariasis/epidemiology/scabies/en/

 

அறிகுறிகள் காணப்படுவோருக்கும் அவர்களது தொடர்பில் இருப்போருக்கும் ஒரே நேரத்தில் ஆரம்பக் கட்ட சிகிச்சை அளித்தலே முக்கியமான தடுப்பு உத்தியாகும்.

சொறிசிரங்கைக் கட்டுப்படுத்தி ஒழிப்பதற்கு சொறிசிரங்கால் பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கும் அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிப்பது மட்டும் போதாது. மக்கள்திரளுக்கு  மருந்து அளிக்கும் உத்தி குறித்து தற்போது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

மேற்பூச்சு மருந்துகளுக்குப் பதிலாக வாய்வழி இவர்மெக்டின் மருந்தை மக்கள் திரளுக்கு அளிப்பது பற்றிய பெரும் ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஒரு தொற்றுள்ள நிறுவன அமைப்பில் வாய்வழி இவர்மெக்டினை 7 நாள் இடைவெளியில் திரும்ப அளித்து சொறிசிரங்கு சிகிச்சைக்கும் தடுப்புக்கும் நல்ல பலன் கிடைத்துள்ளதாக அறியப்பட்டுள்ளது.

தற்போதுள்ள மருத்துவ மற்றும் பொது சுகாதார அமைப்பில் சொறிசிரங்கு தடுப்பு மற்றும் சிகிச்சைத் திட்டத்தை இனைப்பதே முக்கியமான அம்சம் ஆகும்.

சொறிசிரங்குக் கட்டுப்பாட்டுக்கான உலக இணைப்பு  (IACS)  இந்த இலக்கை அடைய  உலக வலைப்பின்னலாக செயல்பட்டு வருகிறது.

குறிப்புகள்:

http://www.who.int/lymphatic_filariasis/epidemiology/scabies/en/

http://www.controlscabies.org/news/landmark-scabies-mda-trial/

http://indianpediatrics.net/sept2001/sept-995-1008.htm

http://controlscabies.org/about-scabies/

http://www.who.int/lymphatic_filariasis/epidemiology/treatment_prevention/en/

 

 • PUBLISHED DATE : Sep 27, 2017
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Sep 27, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.