Diabetes-Mellitus.png

நீரிழிவு (சர்க்கரை) நோய்

நீரிழிவு (சர்க்கரை) நோய் என்பது ஒரு வளர்சிதை மாற்ற நோய்த் தொகுதியாகும். இந்த நோயுள்ள ஒருவரின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகுதியாக இருக்கும். இதற்குக் காரணம் ஒன்றில் கணையநீர் (இன்சுலின்) உற்பத்திக் குறைவாக இருக்கும், அல்லது உடலில் உள்ள உயிரணுக்கள் கணையநீருக்குச் சரியான வகையில் கட்டுப்படாமல் இருக்கும். இவை இரண்டுமே கூட இருக்கலாம். இனிப்பு நீரிழிவு என்ற சொற்றொடர், பலநோய்க் காரணங்களும், மிகை இரத்தச் சர்க்கரை அளவும் கொண்டு, மாவுச்சத்து, கொழுப்பு, புரத வளர்சிதை மாற்றத்தில் இடையூறுகள் ஏற்படுத்தி கணையநீர் உற்பத்தி, அதன் செயல்பாடு அல்லது இரண்டையுமே உண்டாக்கும் வளர்சிதை மாற்றக் கோளாறை விவரிக்கிறது. முக்கிய அறிகுறிகளாவன:

  1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  2. அதிக தாகம்
  3. மிகைப் பசி

நீரிழிவு நோயின் முக்கிய வகைகளாவன:

வகை 1 நீரிழிவு நோய்: இது உடலின் தேவைக்குத் தகுந்தவாறு கணையநீரை உடலால் உற்பத்தி செய்யமுடியாமல் போவதால் உண்டாகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலினை ஊசி மூலம் செலுத்தவேண்டி இருக்கும். இவ்வகை, “கணையநீர் சார்ந்த சர்க்கரை நோய்” (IDDM) அல்லது “இளம்வயதினர் நீரிழிவு நோய்” என்று முன்னர் அழைக்கப்பட்டது. 

வகை 2 நீரிழிவு நோய்: இது இன்சுலின் எதிர்ப்பால் ஏற்படுகிறது. இதில் உயிரணுக்களால் கணையநீரைத் தகுந்தவாறு பயன்படுத்த முடிவதில்லை. சில வேளைகளில் இதனுடன் முழுமையான கணையநீர்க் குறைபாடும் இணைந்து கொள்ளும். இவ்வகை, “கணையநீர் சாராத சர்க்கரை நோய்” (NIDDM) அல்லது “பெரியவர்களுக்கு உண்டாகும் நீரிழிவு நோய்” என்று முன்னர் அழைக்கப்பட்டது.

மூன்றாவது முக்கிய வடிவமான கர்ப்பகால நீரிழிவு முன்னரே சோதனை செய்யாமல் இருந்து  சர்க்கரை அளவு அதிகமாகக் கூடுவதால் ஏற்படுகிறது. இது இரண்டாம் வகை நீரிழிவாக மாறும்.

பிற வகையான நீரிழிவுகள் உண்டாகக் காரணங்கள்:

  • கணையநீரைச் சுரக்கும் கணையத்தின் பகுதியான பீட்டா உயிரணுக்களில் உள்ள மரபணுக் கோளாறுகளால் இளம்வயதினரின் முதிர்ச்சி தொடக்க நீரிழிவு (MODY) அல்லது பிறந்த குழந்தை நீரிழிவு (NDM) ஆகியவை உண்டாகின்றன.
  • கணைய அழற்சி அல்லது சிறுநீர்ப்பை நார்த்திசுக்கட்டி போன்ற கணைய நோய்களால் அல்லது கணையம் சிதைவடைவதால்
  • கசிங்கின் நோயில் காணப்படும் கோர்ட்டிசால் போன்ற மருத்துவ ரீதியான பிரச்சினைகளால் கணைய நீரை எதிர்த்துச் செயலாற்றும் சில இயக்குநீர்கள் மிகையான அளவில் சுரப்பது.
  • கணைய நீரின் செயல்பாட்டைக் குறைக்கும் குளூக்கோகார்ட்டிகாய்ட்ஸ் போன்ற மருந்துகள் அல்லது பீட்டா உயிரணுவை அழிக்கும் சில வேதிப்பொருட்கள்.

குறிப்புகள்www.who.int
diabetes.niddk.nih.gov
www.who.int
www.nhs.uk
www.cdc.gov

நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறிகளாவன:

  • அடிக்கடி சிறுநீர் கழித்தல் (குறிப்பாக இரவில்)
  • அதிகமான தாகம்
  • அடிக்கடி ஏற்படும் மிகைப்பசி
  • பலவீனம்
  • எடை குறைவும் தசைத்திரட்சி இழப்பும்

சில வாரங்களுக்குள் அல்லது நாட்களில் கூட வகை 1 நீரிழிவு துரிதமாக உண்டாகலாம். வகை 2 நீரிழிவின் அறிகுறிகள் சாதாரணமானவையாக இருப்பதால் பலருக்குப் பல ஆண்டுகளாகக் கண்டுபிடிக்க முடியாமலேயே போகலாம்.

குறிப்புகள் : www.nhs.uk
www.cdc.gov

வகை 1 நீரிழிவு: கணையநீரை உண்டாக்கும் உயிரணுக்களை உடலின் நோய்த்தடுப்பு மண்டலம் தாக்குகிறது. கணையநீர் சுரக்காததால் சர்க்கரையின் அளவு மேலும் அதிகரித்து உடல் பாகங்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. வகை 1 பொதுவாகக் கணையநீர் சார்ந்த நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இளவயதில் 40 வயதுக்கு முன்னர் உண்டாவதால் இது இளம்வயதினர் அல்லது ஆரம்பகட்ட நீரிழிவுநோய் என்று சில வேளைகளில் கூறப்படுகிறது. இது வகை 1-ஐ விட அரிதாகவே காணப்படுகிறது.

வகை 2 நீரிழிவு: இவ்வகையில் உடல் போதுமான அளவுக்குக் கணையநீரை உண்டாக்குவதில்லை அல்லது உயிரணுக்கள் கணையநீருக்குக் கட்டுப்படுவதில்லை. இது கணையநீர் எதிர்ப்பு நீரிழிவு எனப்படும். இது வகை 1-ஐ விடப் பரவலாகக் காணப்படுகிறது.

கர்ப்பகால நீரிழிவு: கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதை முற்றிலுமாக உறிஞ்சும் அளவுக்குக் கணையநீரை உடலால் உண்டாக்க முடியாமல் போகும்.

குறிப்புகள்www.nhs.uk
www.cdc.gov

 

கீழ்வரும் அறிகுறிகள் காணப்படும்போது ஆய்வகச் சோதனை நடத்தப்படுகிறது:

அதிகமாக சிறுநீர் அல்லது தாகம்

அடிக்கடி ஏற்படும் தொற்றுக்கள்

நீரிழிவைக் கண்டறிய கிளைகேட்டட் இரத்தப்புரதத்தைப் பயன்படுத்தலாம் (வசதிகள் எளிதாகக் கிடைத்தால்).

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கொண்டு நீரிழிவுநோய் கண்டறியப்படுகிறது:

நீரிழிவு நோய்கண்டறிதல் அளவீடு
நிலை
உணவுக்குப் பின் (2 மணிநேர சர்க்கரை)
உண்ணாநிலை சர்க்கரை
HbA1c/div>
 
mmol/l(mg/dl)
mmol/l(mg/dl)
%
இயல்புநிலை
<7.8 (<140)
<6.1 (<110)
<6.0
முன் நீரிழிவு நிலை
<7.8 (<140)
≥ 6.1(≥110) & <7.0(<126)
6.0–6.4
பலவீன சர்க்கரை ஏற்புநிலை
≥7.8 (≥140)
<7.0 (<126)
6.0–6.4
நீரிழிவு – இனிப்பு
≥11.1 (≥200)
≥7.0 (≥126)
≥6.5
 
குறிப்புகள்www.who.int

நீரிழிவு நாட்பட நீடித்திருக்கும் ஒரு நோய். எனவே அதைக் கட்டுப்படுத்தி வைக்க முடியுமே தவிர, அறிந்தவரையில் குணப்படுத்தும் சிகிச்சை எதுவும் இல்லை. சர்க்கரையின் அளவு மிகாமல் அளவாக வைத்திருக்க வேண்டும். உணவு, உடல் பயிற்சியோடு சரியான மருந்துகளாலும் நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. (வகை 1-க்கு இன்சுலினும், வகை-2-க்கு வாய்வழி மருந்துகளும், தேவைப்பட்டால் இன்சுலினும்)

மருந்துகள்:

  • வாய்வழி பைகுயானைடுகள்: இவ்வகையைச் சார்ந்த வாய்வழி நீரிழிவு மருந்து மெட்ஃபார்மின் ஆகும். இதுவே வகை-2 நீரிழிவுக்கு முன்னணி மருந்தாகும். அதிக எடையும் பருமனும் கொண்ட இயல்பான சிறுநீரக செயல்பாடு உடையவர்களுக்கு குறிப்பாக இம்மருந்து ஏற்றது.
  • இன்சுலின்: வகை-1 நீரிழிவுக்கு வழக்கமான மற்றும் NPH (neutral protamine Hegedorn) இன்சுலின் சேர்க்கை அல்லது ஒத்த செயற்கை இன்சுலின்களாலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வகை-2 நீரிழிவுக்கு இன்சுலின் பயன்படுத்தப்படும்போது வாய்வழி மருந்துகளைத் தொடர்வதோடு ஒரு நீண்டகாலத்துக்கான நடைமுறை வகுக்கப்படுகிறது.

வாழ்க்கைமுறை

  • தொடர் உடல்பயிற்சி
  • தகுந்த உணவு
  • புகைபிடிக்கக் கூடாது
  • மது கூடாது

இக் கட்டுப்பாடுகள் குறுகிய நீண்ட கால இரத்த சர்க்கரை அளவை வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் நிறுத்தும்

குறிப்புகள்diabets.niddk.nih.gov
guidance.nice.org.uk

தங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிகுந்த கட்டுப்பட்டில் வைத்துக் கொள்பவர்களுக்கு நீரிழிவு நோயின் சிக்கல்கள் அரிதாகவும் கடுமை குறைந்ததாகவும் இருக்கும். சிக்கல்கள் வருமாறு:

கடுமையானது:

  1. கீட்டோஅசிடோசிஸ் நீரிழிவு (Diabetic ketoacidosis): இது கடுமையானதும் அபாயகரமானதுமான சிக்கல் ஆகும். இது மருத்துவ ரீதியில் எப்போதும் ஓர் அவசரகால நிலைமைக்கே கொண்டு செல்லும். குறிப்பிட்ட ஒரு வளர்சிதை மாற்ற வரிசையில் கீட்டோன் இடைப்பட்ட அடிப்படை மூலக்கூறாக இருப்பதால் கணையநீர் அளவு குறைவின் காரணத்தால் கல்லீரல் எரிபொருளுக்காகக் கொழுப்பு அமிலத்தை கீட்டோனாக மாற்றுவது பொதுவாகக் காணப்படுகிறது. இது அவ்வப்போது நடைபெற்றால் இயல்பான நிலையாகும். ஆனால் தொடர்ந்தால் ஒரு சிக்கலான பிரச்சினையாக மாறும். இரத்தத்தில் கீட்டோன் பொருட்களின் அளவு மிகுந்தால் இரத்தத்தின் pH குறைந்து DKA-வுக்கு (Diabetic ketoacidosis ) கொண்டு செல்லும். DKA கொண்ட நோயாளிக்குப் பொதுவாக நீர்ச்சத்துக் குறையும்; வேகமாகவும் ஆழ்ந்தும் மூச்சு விடுவார்; வழக்கமாக வயிற்றுவலி இருக்கும்; அது கடுமையாகவும் இருக்கலாம்.
  2. இரத்த சர்க்கரை மிகைப்பு (Hyper glycemia): இரத்தசர்க்கரை மிகைப்பு இன்னொரு கடுமையான சிக்கலாகும். ஒருவருக்கு மிக அதிகமாக (பொதுவாக 300 மி.கி/டெ.லி (16 மிமோல்/லி எனக் கருதப்படுகிறது) இரத்தச் சர்க்கரை அளவு இருந்தால் சவ்வூடுபரவல் மூலமாக நீர், உயிரணுக்களில் இருந்து இரத்தத்துக்குள் ஈர்க்கப்படும். விளைவாகச் சிறுநீரகம் சர்கரையைச் சிறுநீருக்குள் கொட்டும். இதனால் நீரிழப்பு ஏற்பட்டு இரத்தத்தின் ஆஸ்மொலாரிட்டி அதிகரிக்கும். நீர்மம் பதிலீடு செய்யப்படாவிட்டால் (வாய் வழி அல்லது நரம்பு வழி) மிகைச் சர்க்கரை அளவின் சவ்வூடுபரவும் தாக்கம் நீரிழப்புடன் இணைந்து நீர்ச்சத்திழப்புக்கு வழிகோலும். உடலின் உயிரணுக்களில் இருந்து நீர்ச்சத்து எடுக்கப்பட்டு சிறுநீர் வழியாக கழிந்துபோவதால் அவை படிப்படியாக நீர்ச்சத்தை இழந்து போகும். மின்பகுபொருள் சமநிலை இழப்பும் வழக்கமானதே. இது ஆபத்தானதாகும்.
  3. இரத்த சர்க்கரை குறைவுறுதல் (Hypo glycemia): அளவுக்கு மீறி இரத்த சர்க்கரை அளவு குறைதல் பல நீரிழிவு நோய் சிகிச்சைகளின் கடுமையான சிக்கலாகும். மற்றப்படி இது நீரிழிவு மற்றும் நீரிழிவு இல்லாத நோயாளிகளில் மிக அரிதாகவே காணப்படும். நோயாளிக்கு மனக்குழப்பம், வியர்வை, தன்னாட்சி நரம்பு மண்டலப் பரிவுணர்வுத் தூண்டப்படுவதால் ஏற்படும் பல அறிகுறிகள் ஆகியவை உண்டாவதால் அச்சம் மற்றும் உறையவைக்கும் பீதி போன்ற உணர்ச்சிகள் தோன்றும்.
  4. நீரிழிவு ஆழ்மயக்கம்: கீழ் காணப்படும் நீரிழிவின்  கடும்சிக்கல்களில் ஒன்றின் விளைவாக நீரிழிவு நோயாளி மருத்துவ அவசர நிலையான ஆழ்மயக்கத்தில் செல்லலாம்:
  • இரத்தச் சர்க்கரை குறைவுறலெனும் கடுமையான நீரிழிவு
  • கீட்டோஅசிடோசிஸ் நீரிழிவின் முன்னேற்றத்தால், கடுமையான இரத்த சர்க்கரை மிகைப்பு, நீர்ச்சத்திழப்பு, அதிர்ச்சி, முழுச்சோர்வு ஆகியவை இணைந்து அதன் விளைவாக ஆழ்மயக்கம் ஏற்படுதல்
  • இரத்தச் சர்க்கரை மிகைப்புடன் நீர்ச்சத்திழப்பு மட்டுமே இணைவதால் கூட ஹைப்பராஸ்மோலார் நான்கீட்டோடிக் ஆழ்நிலைமயக்கம் உண்டாகலாம்.
நீரிழிவு (சர்க்கரை) நோயின் நீடித்த சிக்கல்கள்
(அ) நுண்குழல் நோய்கள் (சிறு இரத்தக் குழாய்களில் சிதைவு ஏற்படுவதால்):
1. கண் நோய்கள்:
  • விழித்திரை நோய் (வளர்ச்சியுறாதது/வளர்வது)
  • விழித்திரைப்புள்ளி வீக்கம்
இப்பிரச்சினைகளால் பார்வைக்குறைவும் பார்வையிழப்பும் ஏற்படலாம்.
2. நரம்புநோய்:
  • உணர்வு மற்றும் இயக்க நரம்புநோய்கள்: கூச்சம், எரிச்சல், குத்தும்வலி அல்லது பிற அசாதாரண உணர்வுகள் போன்ற உணர்வுசார் அறிகுறிகளும், உணர்திறன் இழப்பு, பலவீனம், காலில் ஆரம்பித்து விரல் மற்றும் கைகளுக்குப் பரவும் உணர்ச்சியின்மை போன்ற இயக்க அறிகுறிகளும்.
  • செரிமான மண்டலம், இரத்தக்குழாய்கள், சிறுநீர் கழிவமைப்பு மற்றும் பாலியல் உறுப்புகளைப் பாதிக்கும் அனிச்சை நரம்புநோய்கள்.
3. சிறுநீரக நோய்: சிறுநீரகச் சிதைவினால் நீடித்த சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படலாம்.
(ஆ) பெருங்குழல் நோய்கள்:
இதயத் தமனி நோய்கள்
  • புறத் தமனி நோய்கள்
  • மூளைக்குழல் நோய்
(இ) பிற நோய்கள்:
இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவால் கண்புரை, கண்ணழுத்தநோய்.
  • தோல் சிக்கல்கள் – பாக்டீரியா தொற்று, காளான் தொற்று மற்றும் பிற தோல் நோய்கள் நீரிழிவு நோயாளிகளுக்குப் பொதுவாகக் காணப்படும்.
  • நீரிழிவு (சர்க்கரை) நோயாளிகளுக்குத் தொற்று நோய்கள் அடிக்கடியும் கடுமையாகவும் ஏற்படும்.
  • பல் நோய்கள்: நீரிழிவு நோய் சரியான வகையில் கட்டுப்படுத்தப்படா விட்டால் வாயில் உள்ள பாய்மங்களில் சர்க்கரை அளவு அதிகரித்து கிருமிகள் உருவாகி பல்லைச் சுற்றி நோய்கள் உண்டாகும்.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு மூட்டியக்கம் குறையும். தோல் தடிப்பாகி விரல்கள் இறுக்கம் அடையும்.
  • இயல்புக்கு அதிகமான லிப்பிடுகள்: மிகை ஊனீர் டிரைகிளிசரைட் செறிவு, குறைவான மிகை அடர்த்தி லிப்போபுரோட்டின் (HDL) செறிவு மற்றும் குறை அடர்த்தி லிப்போபுரோட்டின்களின் (LDL).அதிகச் செறிவு ஆகியவை இதன் இயல்புகள். 

குறிப்புகள்www.diabetes.co.uk

  • PUBLISHED DATE : Jun 29, 2015
  • PUBLISHED BY : NHP CC DC
  • CREATED / VALIDATED BY : NHP Admin
  • LAST UPDATED ON : Aug 01, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.