Food-poisoning.png

நச்சுணவு நோய்

இது நோயுண்டாக்கும் பாக்டீரியாக்கள், வைரசுகள், ஒட்டுண்ணிகள் ஆகிய கிருமிகளைக் கொண்ட அசுத்தமான உணவை உண்பதால் உண்டாகும் உடல்நலக் கோளாறாகும். பெரும்பாலோனார் எந்தவித மருத்துவமும் இன்றியே நலம் பெறுவர். சல்மோநெல்லா அல்லது ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களும், நோரோவைரஸ் போன்ற வைரசுகளும் உள்ள உணவாலேயே பொதுவாக இந்நோய் உண்டாகிறது. வளர்ச்சி, பதப்படுத்துதல், எடுத்துச்செல்லுதல் ஆகிய எந்நிலையிலும் உணவில் கிருமி கலக்கலாம். தகுந்த முறையில் உணவை சமைக்காததும் ஒரு காரணம். நோய்க்கிருமிகள் ஒரு பரப்பில் இருந்து இன்னொரு பரப்புக்குப் பரவுவதும் இன்னொரு காரணம். உதாரணமாக சமைத்து வைத்த அல்லது சமைக்காது உண்ணும் உணவு போன்றவை. உண்ணுவதற்கு முன் சமைக்காததால் கிருமிகள் கொல்லப்படாமல் உள்ளெடுக்கப்பட்டு உணவு நச்சு நோயை உண்டாக்குகின்றன. இதனை அசுத்தக் கலப்பு எனலாம்.

குறிப்புகள்s: www.cdc.gov
www.nhs.uk 
www.foodsafety.gov 
www.who.int

அசுத்த உணவை உண்டு ஒன்றில் இருந்து மூன்று நாட்களுக்குப் பின் அறிகுறிகள் தோன்றுகின்றன. அவையாவன:

 • சுகவீன உணர்வு
 • வாந்தி
 • வயிற்றுப்போக்கு
 • வயிற்றுப்பிடிப்பு

பிற அறிகுறிகள்:

 • வயிற்று வலி
 • பசியின்மை
 • அதிகக் காய்ச்சல் 38C (100.4F) அல்லது மேலும்
 • தசை வலி
 • குளிர்

குறிப்பு: www.nhs.uk

உணவை தகுந்த முறையில் தயாரித்து, கையாண்டு, சேமிக்காதபோது உணவால் ஏற்படும் நோய்கள் உண்டாகின்றன. குறிப்பாக தயாரித்து வைக்கப்பட்ட அல்லது சமைக்காத உணவுகள் போன்றவற்றில் நுண்ணுயிர்கள் ஒன்றிலிருந்து இருந்து இன்னொன்றிற்கு மாற்றப்படுகின்றன.

அசுத்தக் கலப்பு: சமைத்த உணவையே திரும்பத்திரும்ப சமைக்கும் போது பெரும்பாலும் அசுத்தக் கலப்பு ஏற்படுகிறது. உணவு, இடம், கருவி ஆகிய ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு ஆபத்தான பாக்டீரியாக்கள் பரவுகின்றன. பொதுவாக நோய் நச்சை ஏற்படுத்தும் உயிரிகள் வருமாறு:

 • கேம்பிலோபேக்டர் ஜெஜுனி
 • கிளாஸ்ட்ரிடியம் பெர்ஃப்ரிஞ்சென்ஸ்
 • சல்மோநெல்லா எஸ்பிபி.- எஸ்.டைஃபிமுரியம் தொற்று
 • எஸ்செரிக்கியா கோலி (ஈ-கோலி)
 • வைரஸ் (நோரோ வைரஸ்)
 • ஒட்டுண்ணிகள் (டாக்சோபிளாஸ்மோசிஸ்)
 • காளான்கள்: பல காளான் வகைகளில் மஸ்காரின் நஞ்சு காணப்படுகிறது. இது நடு நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்குப் பகுதி அல்லது முழு பக்கவாதம் ஏற்படலாம்.
 • மீன்: ஊதுமீன் (பஃபர்) போன்ற சிலமீன் வகைகள் இயற்கையாகவே நச்சுத்தன்மை உள்ளவை. இது போன்ற நஞ்சு காரிபியன் மற்றும் பசிபிக் கடலில் உள்ள உண்ணும் மீன் வகைகளிலும் உள்ளன. இவ்வகை சிகுயேட்டரா நஞ்சு என அழைக்கப்படுகிறது. அடினோஃபிளாகுலேட் எனப்படும் கடல் ஒட்டுண்ணிகளால் இது உண்டாக்கப்படுகிறது. இந் நஞ்சு நரம்புமண்டலத்தைத் தாக்குகிறது.
 • பூச்சிக்கொல்லிகள்: பூச்சிக்கொல்லிகளில் பல வகையான நச்சுப்பொருட்கள் உள்ளன. ஆனால் பூச்சிகளின் நரம்பு வாயுவான ஆர்கனோஃபாஸ்ஃபேட்டுகள் மிகவும் ஆபத்தான வகையாகும். இவ்வகை பூச்சுகொல்லிகள், பூச்சிகளை விட மனிதர்களுக்கு குறைவான அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டாலும் தகுந்த முறையில் அவற்றைக் கையாளவில்லையானால் அவை மனிதர்களுக்கும் ஆபத்தனவையே.
 • உணவு நஞ்சாவதற்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. நச்சுக் கொட்டைகள், இலைகள், பூக்கள், பழங்கள், முற்றாத கிழங்குகள், பாட்சுலிசம் பாரசைட், கொள்கலன்களில் உள்ள காட்மியம், அமிலங்கள், பானைகளில் உள்ள காரீயம் போன்றவை இதில் அடங்கும்.

குறிப்பு:  www.nhs.uk

உணவு நச்சு நோயைக் கண்டறிய அறிகுறிகள் உதவுகின்றன. இதில் வலி அல்லது நீர்ச்சத்துக் குறைவு அறிகுறிகள் அடங்கும்.

மலச்சோதனை: பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணிகள் உள்ளனவா என அறிய சில வேளைகளில் சோதனை செய்யப்படுகிறது.

மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் வீட்டிலேயே பொதுவாக இதற்குத் தீர்வு காணப்படுகிறது.

வாய்வழி நீர்ச்சத்தேற்றும் உப்பு:  வயிற்றுப்போக்கு நீடித்தால் நீர்ச்சத்திழப்பை ஈடுகட்ட நீர்ச்சத்து உப்புகள் அளிக்கப்படுகின்றன.

ஏராளமாக நீர் அருந்தவும்: நீர்ச்சத்திழப்பை இது ஈடுகட்டும்

நிலைமை நீடித்தால் மருத்துவரை அணுகவும்.

குறிப்பு: www.nhs.uk

வீட்டில் உணவு நச்சு ஏற்படாமல் தடுப்பதற்குச் செய்ய வேண்டியவையும் வேண்டாதவையும்:

 • உணவைச் சமைக்கும் அல்லது உண்ணும் முன் இதமான சோப்பு நீரால் கைகளை 15 நொடிகள் கழுவவும்.
 • பாத்திரங்களையும் வெட்டும் கட்டைகளையும் இளம் வெந்நீராலும் பூச்சிக்கொல்லிகளாலும் கழுவவும்.
 • கிருமிகளைத் தவிர்க்கப், பச்சை உணவுகளையும் (கறி, மீன்), சமைத்த உணவுகளையும் தனித்தனியே வைக்கவும்.
 • உணவுகளைப் போதுமான அளவுக்கு வேக வைக்கவும். உணவின் அனைத்து பகுதிகளையும்  75 டிகிரி C வரை மறுபடியும் சூடேற்றவும். மீனையும் கறியையும் 145 - 165 டிகிரி F வெப்பத்தில் சமைக்கவும்.
 • உணவின் தரமோ தூய்மையோ திருப்தி அளிக்காவிட்டல் அதைக் களைந்துவிடவும்.

உணவு நச்சால் துன்பப்பட்டால்:

 • வயிற்றுப் போக்கை அதிகரிக்கும் பால் பொருட்களைத் தவிர்க்கவும்
 • கட்டியான பொருட்களை உண்ண வேண்டாம்
 • மது, புகை, கொழுப்பு உணவுகளைத் தவிர்க்கவும்
 • வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீர்ச்சத்திழப்பை ஈடுகட்ட பால், கொக்கைன் உள்ளவற்றைத் தவிர்த்துப் பிற நீராகாரங்களை உட்கொள்ளவும்.
 • மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் நுண்ணுயிர்க்கொல்லிகள் அல்லது வயிற்றுப்போக்கு மருந்துகளை எடுக்கவேண்டாம். சில வகையான உணவு நச்சு நோய்களுக்கு (உ-ம். லிஸ்டீரியோசிஸ்) நரம்புவழி நுண்ணுயிர்க்கொல்லிகளால் மருத்துவம் அளிக்கப்படுகிறது.
 • வயிற்றுப்போக்கு ஐந்து நாட்களில் (சிறுவர் 3 நாட்கள்) நிற்கவில்லை எனில் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

குறிப்பு : www.nhs.uk

 • PUBLISHED DATE : Apr 22, 2015
 • PUBLISHED BY : NHP CC DC
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Jun 04, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.