வயிற்றுவலியை நெஞ்சில் இருந்து இடுப்பு வரையில் உள்ள பகுதியில் எங்கு வேண்டுமானாலும் உணரலாம். வலி குறைவாகவாகவும், மிதமாகவும் கடுமையாகவும் இருக்கலாம். அது மந்தமாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கக்கூடும்.
ஏதாவது ஒரு கால கட்டத்தில் எல்லோருமே வயிற்றுவலியை அனுபவித்திருப்பார்கள். பெரும்பாலான வயிற்று வலிகள் கவலை தருவன அல்ல. ஆனால் கடுமையான வலிகள் கவனிக்கப்பட வேண்டியவை. வலி திடீரெனவும் எதிர்பாராத விதமாகவும் தொடங்கினால் அதை அவசரநிலையாகக் கருத வேண்டும்.
குறிப்புகள்:
www.nhs.uk
www.nlm.nih.gov
www.nlm.nih.gov
www.ncbi.nlm.nih.gov
வயிற்று வலி பல அளவுகளிலும் தன்மைகளிலும் இருக்கும். அது:
-
கூர்மையாகக் குத்தும் சுளுக்கு போன்ற வலி
-
குறைந்த கால அளவுக்கு வந்து போகும் வலி
-
வாந்தியுடன் கூடிய வலி
குறிப்பு: www.nhs.uk
வயிற்று வலியின் காரணங்கள் பலவாகும். அவற்றுள் அடங்குவன:
-
மலச்சிக்கல்
-
எரிச்சல்தரும் குடல்நோய்க் குறிகள்
-
உணவு ஒவ்வாமை
-
உணவு நஞ்சாதல்
-
மாதவிடாய் வலி
திடீர் கடும் வயிற்றுவலி:
-
வயிற்றுத் தொற்றுநோய்
-
குடல்வால் அழற்சி
-
வயிற்றுத் துளைப் புண்
-
பித்தப்பைக் கல்
-
சிறுநீரகக்கல்
-
வயிற்றுப்பை அழற்சி
பெரியவர்கள்: பொதுவான பிற காரணங்கள்:
-
எரிச்சலுள்ள குடல் நோய் அறிகுறிகள்
-
குரோகனின் நோய்
-
சிறுநீர்க்குழாய்த் தொற்று
-
நாட்பட்ட வயிற்றுப் புண்
-
மலச்சிக்கல்
-
நெஞ்செரிச்சல் மற்றும் அமில எதுக்களிப்பு
சிறுவர்கள்: பொதுவான காரணங்கள்
-
மலச்சிக்கல்
-
சிறுநீர்க்குழாய்த் தொற்று
-
மனக்கலக்கம்
-
நெஞ்செரிச்சல் மற்றும் அமில எதுக்களிப்பு
குறிப்புகள்:
www.nlm.nih.gov
www.nhs.uk
பொதுவாக நேரம் செல்லச் செல்ல வயிற்று வலி மறைந்துவிடும். குறையாவிட்டால் மருத்துவ உதவியை நாடலாம்:
-
ஒரு வாரம் அல்லது அதற்கு மேலும் நீடிக்கும் வயிற்றுப் பிரச்சினைகள்
-
24-48 மணி நேரத்தில் குறையாமலோ அல்லது மேலும் கடுமையாகவோ அடிக்கடி குமட்டல், வாந்தியுடன் ஏற்படும் வயிற்றுவலி
-
இரண்டு நாட்களுக்கு மேலாக வயிற்று வீக்கம்
-
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது அடிக்கடி சிறுநீர் போதல்
-
தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் வயிற்றுப்போக்கு
-
காய்ச்சலுடன் வலி (பெரியவர்களுக்கு 100°F, சிறுவர்களுக்கு 100.4°F)
-
தொடர்ந்து பசியின்மை
-
தொடர்ந்து பெண் பிறப்புறுப்பில் இரத்தக்கசிவு
-
விளக்க முடியாத எடை குறைவு
குறிப்பு: www.nlm.nih.gov
பொதுவாக வயிற்றுவலிக்குக் காரணத்தைப் பொறுத்தே மருத்துவம் அமைகிறது.
-
இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய் அல்லது புண்கள் ஆகியவற்றிற்கு அளிக்கும் மருந்துகள் உட்பட சிகிச்சை பலதிறப்பட்டது
-
தொற்று ஏற்பட்டால் நுண்ணுயிர்க்கொல்லிகளைப் பயன்படுத்தவும்
-
உணவு முறையை மாற்றி அமைக்கவும்
-
குடல் வால் அழற்சி அல்லது குடலிறக்கம் போன்ற சில நோய்களுக்கு அறுவை மருத்துவம் (அடிவயிறு அல்லது தொப்புள்) தேவைப்படும்.
எந்த சிகிச்சைக்கும் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
குறிப்பு: www.nlm.nih.gov