கோளவடிவச் சிதைவு

கோளவடிவச் சிதைவு என்பது ஒரு மரபு நோய் அல்ல. பெறப்பட்ட கண்சிதைவு நோய் ஆகும். கோள வடிவ கம்பைக்கல் நிறத் துளிகள் ஒன்றுசேர்ந்து உயர்ந்த வெண்படல மேற்திசுவில் வரிகள் அல்லது கணுக்களை உருவாக்குகின்றன. வெண்படலத்தின் இமைசார் பகுதியில் இந்தச் சிதைவு செயல்பாட்டைக் காண முடிகிறது.

இது வரிவடிவ வெண்படல நோய் போல இருக்கும். இது கண்சவ்விலும் உருவாகலாம்.

வெண்படலத்தின் மேலடுக்கில் மஞ்சள் கோளப் படிவுடைய ஓர் அசாதாரண வெண்படலச் சிதைவை பியட்டியும் பிறரும் 1955-இல் முதன் முதலாகக் கண்டனர். பல பெயர்களில் அழைக்கப்பட்டலும் இது கோளவடிவச் சிதைவு என அழைக்கப்படுகிறது. ஃபிரான்ஃபெல்டரும் அவரது சக ஆய்வாளர்களும் இதனை மூன்று அடிப்படை வகைகளாகப் பகுத்தனர்:

 • வகை I அல்லது முதன்மை வெண்படல வகை, பிற கண் நோய்களோடு சம்பந்தப்படாத இது அதிகரிக்கும் வயதோடு தொடர்புடையது.
 • வகை II அல்லது இரண்டாம்நிலை வெண்படல வகை, முன்னரே காணப்படும் நோய் அல்லது காயத்தோடு தொடர்புடையது.
 • வகை III அல்லது கண்சவ்வு வகையில் வெண்படல பாதிப்பு இருக்கும் அல்லது இல்லாமலும் இருக்கும். இது 60 வயதுக்கு மேல் பொதுவாகக் காணப்படும். இது கண்சவ்வுக்குமிழோடு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.

பொதுவாக கோளவடிவச் சிதைவு, நிலவியலைப் பொறுத்து மாறுபடும்; வயதைப் பொறுத்து அதிகரிக்கும். அதிக சூரிய ஒளி பாதிப்பு அல்லது மணல் மற்றும் பனியால் ஒளி பிரதிபலிப்பு உள்ள இடங்களில் அதிகமாக இருக்கும். மணல் அல்லது பனியால் ஏற்படும் நுண் காயங்களாலும் சூரியக் கதிர்வீச்சாலும் இது உண்டாகிறது. அதிக அளவில் புற ஊதாக் கதிர் பாதிப்பால் ஏற்படும். பெண்களோடு ஒப்பிடும் போது வெளியில் பணி புரியும் ஆண்களுக்கே இந்நோய் அதிகமாக ஏற்படுகிறது.

குறிப்புகள்:

Basak Samar K. Jaypee Gold Standard Mini Atlas Series: Diseases of the cornea. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2011. P 178 – 182.

Nema H V, Nema Nitin. Textbook of Ophthalmology. Sixth Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2012. P 167.

Agarwal Amar. Handbook of Ophthalmology. Slack Incorporated. 2006. P 253 -254.

Khurana AK. Comprehensive Ophthalmology. Sixth Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2015. P 29.

http://fac.ksu.edu.sa/sites/default/files/ch-46.pdf

Kanski Jack J, Bowling Brad. Synopsis of Clinical Ophthalmology. Third Edition. Elsevier Saunders. 2013. P 120- 121.

Tasman William, Jaeger Edward A. The Wills Eye Hospital – Atlas of Clinical Ophthalmology. Second Edition. Lippincott Williams & Wilkins. 2001. P 56.

Yanoff Myron, Duker Jay S. Ophthalmology. Third Edition. Mosby Elsevier. 2009. P 320- 321.

Boyd Samuel, Gutierrez Angela Maria, McCulley James P. Atlas and Text of Corneal Pathology and Surgery. Jaypee – Highlights Medical Publishers Inc. 2011. Panama. P 254 – 255.

Babizhayev Mark A, Cheng-Li David Wan, Jacobi Anne Kasus, Žorić Lepša, Alió Jorge L. Studies on the Cornea and Lens. Humana Press. Springer Science+ Business Media. New York. 2015. P 32- 33.

Naumann GOH, Apple DJ. Pathology of the eye. Springer-Verlag. 1986. P 328- 330.

Miller David. Clinical Light Damage to the Eye. Springer-Verlag. New York. 1987. P 57.

Rapuano Christopher J. Color Atlas & Synopsis of Clinical Ophthalmology Wills Eye Institute Cornea. Second Edition. Lippincott Williams & Wilkins, a Wolters Kluver business. 2012. 

Cool Steven J, Smith Earl L. Frontiers in Visual Science. Springer Science+Business Media. New York. 1978. P 22- 27.

Heegaard Steffen, Grossniklaus Hans. Eye Pathology An Illustrated Guide. Spring er-Verlag Berlin Heidelberg. 2015. P 121- 122

http://bjo.bmj.com/content/60/6/473.full.pdf

http://bjo.bmj.com/content/62/1/53.full.pdf

http://www.sankaranethralaya.org/insight/PDF%20Files/in112001.pdf

Basak Samar K. Atlas of Clinical Ophthalmology. Second Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2013. P 119- 120.

Bietti GB, Guerra PF, Ferraris de Gaspare PF. Bull. Mem. Soc. Franç. Opht. 1955; 68: 101- 129.

Fraunfelder  FT, Hanna C. Spheroidal degeneration of cornea and conjunctiva. 3: Incidence, classification and aetiology. Am J Ophthalmol 1973; 76: 41- 50.

Hida T, Akiya S, Kigasawa K, Hosoda Y. Familial band shaped degeneration of the cornea. Br J Ophthalmol 1986; 70: 347- 353.

Kaji Y, Nagai R, Amano S, et al. Advanced glycation end product deposits in climatic droplet keratopathy. Br J Ophthalmol. 2007; 91(1): 85- 88.

Menegay M, Lee D, Tabbara KF, et al. Proteomic analysis of climatic keratopathy droplets. Invest Ophthalmol Iis Sci. 2008; 49(7): 2829- 2837.

Holopainen JM, Serra HM, Sánchez MC, et al. Altered expression of matrix metalloproteinases and their tissue inhibitors as possible contributors to corneal droplet formation in climatic droplet keratopathy. Acta Ophthalmol. 2011; 89(6): 569- 574.

 

பொதுவாக கோளவடிவச்சிதைவு அறிகுறிகள் அற்றதாக இருக்கும். படிவுகள் வெண்படலத்தின் மையத்தை நோக்கி அகன்று பார்வை அச்சை மறைத்தால் பார்வைக் கூர்மை பாதிக்கப்படும்.

நோய் முற்றிய நிலையில் காணப்படும் அறிகுறிகள்:

 • உறுத்தல்
 • அசௌகரியம்
 • அயல்பொருள் உணர்வு
 • பார்வை குறைதல்

 

கோளவடிவச்சிதைவின் சரியான காரணங்கள் தெரியவில்லை. இதைப்பற்றிய கருதுகோள்கள் வருமாறு:

 • வெண்படலம் உலர்தல்
 • திரும்பத்திரும்ப ஏற்படும் வெண்படலக் காயம்
 • காற்றால் அடித்துக் கொண்டுவரப்படும் பனியால் (ஆர்க்டிக் மற்றும் கனடாவின் லேப்ரடார்) மற்றும் மணலால் (எ-டு, பாலைவனங்கள்) வெண்படலம் சிதைவடைதல். பனி அல்லது மணலால் ஏற்படும் குறிப்பிட்ட காய வரி போன்ற கோளவடிவச்சிதைவு கிடை நடுக்கோட்டின் குறுக்காக அமைந்திருக்கும்.
 • புற ஊதாக் கதிர் பாதிப்பு  (பற்றவைப்புத் தொழிலாளர்கள்). மேலும் நீல விளக்குப் பாதிப்பாலும் ஏற்படலாம். அதிக சூரிய ஒளி உள்ள இடத்திலும் பனி அல்லது மணலால் ஒளி எதிரொளிக்கப்படுவதாலும் உருவாகும்.
 • குறைந்த ஈரப்பதம்.
 • முதியோரின் கண்சவ்வு மற்றும் வெண்படலத்தில் தானாகவே ஏற்படும்.
 • கீழ்வரும் கண் கோளாறுகளால்:
 • காயத்தால் ஏற்படும் வெண்படல வடுக்கள்
 • ஹெர்ப்வைரஸ் வெண்படல அழற்சி
 • நீடித்த வெண்படல வீக்கம்
 • வலைச்சிதைவு வெண்படல செயலிழப்பு
 • கண்ணழுத்தம்
 • கண்சவ்வுக்குமிழ்
 • இமைமுனைத்திசு வளர்ச்சி

மரபுவழியாக வருவதற்கான குறிப்பிட்ட மரபணு எதுவும் கண்டறியப்படவில்லை. எனினும் மரபியலும் சூழலியலும் பங்குவகிக்கலாம் எனக் கருதப்படுகிறது. குடும்ப ரீதியாக ஏற்படுவது மிக அரிதே.

வயது மற்றும் புற ஊறக்கதிர் பாதிப்போடு இந்நோய் தொடர்புடையது. ஆயினும் இளவயதில் அரிதாகவே ஏற்படும்.

 

 

மருத்துவ அம்சங்கள்:

கோளவடிவச்சிதைவு புற ஊதாக் கதிரோடு தொடர்புடையது. இந்த பாதிப்பால் ஏற்படும் தோல்புற்று, நிறமி மாற்றங்கள் அல்லது பிற ஒளி பாதிப்புக் கோளாறுகளின் வரலாறு நோயாளிகளுக்கு இருக்கக் கூடும்.

ஒரு கண் மருத்துவரால் பிளவு விளக்கு சோதனை நடத்தப்பட வேண்டும்.

கோளவடிவச்சிதைவின் இயல்புகள்:

 • நுண் துளி அல்லது கோளங்கள்: மஞ்சள் அல்லது பொன்னிற துளிகள் அல்லது கோளங்கள் கண் சவ்வு அல்லது வெண்படலத்தின் கீழ் இருக்கும். இவை லிப்பிட் மூலத்தைக் கொண்டவை அல்ல என்றாலும் எண்ணெய்ப் பசையுடன் இருக்கும். இவை தெளிவானவையாக இருக்கும். ஆனால் நாட்பட கலங்கியும் ஒளிபுகா இயல்புடனும் மாறும். பெரும்பாலும் பௌமன் அடுக்கில் இவை காணப்படும்.  பௌமன் அடுக்கு குலைவுற்றால் இவை மேற்திசு சார் பகுதிகளிலும் திசுவலையின் மேற்புற அடுக்கிலும் தோன்றலாம். மேற்திசு படிவுகள் வெண்படல மேற்திசுவை சிதைக்கும். வரிவடிவ அமைப்பு மையம் வரை சென்று பார்வைத்திறனைக் குறைக்கும். ஒரு சில இலேசான பொன்னிற கோளங்களில் இருந்து வெண்படலத்தின் மையத்தை ஆக்கிரமிக்கும் தொகுதி அல்லது பரவல் கோளங்கள் வரை இவை பலவகைப்பட்டன.
 • விழிவலை வரிகள்: சில நோயாளிகளில் விழிவலை வரிகள் காணப்படும். இவை குறுகியவையாகவும், நுண்ணியவையாகவும், தனியானவையாகவும் இருக்கும். இவற்றின் நீளம் 1-3 மி.மீ.இருக்கும். மருத்துவ ரீதியாக வெண்படல வலைச் செயலிழப்பு போல் தோற்றம் அளிக்கும்.  சில வரிகள் வெண்படல திசுவலையின் ஆழத்தில் காணப்படும். இந்த விழிவலை வரிகள் மையம், விளிம்பு அல்லது இருபுறத்திலும் இருக்கும். இவை வயது முதிர்ந்த நோயாளிகளில் காணப்படும். இதற்கு குடும்ப வரலாறு இருக்காது.  இவை மேலோட்டமானவையாகவும் வெண்படத்தின் ஆழத்திலும் இருக்கும். இவை கிளையடிக்காமலும் நோக்குநிலை அற்றும் காணப்படும். இவை மெல்லியவைகளாக, பளபளப்பாக மற்றும் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் காணப்படும். பொதுவாக வெண்படலத்தின் மேற்பகுதியில் இருக்கும். இவை வலியுள்ள அடிக்கடி வரும் வெண்படல எழுச்சியோடு தொடர்பற்றவை. முதன்மை வெண்படல வகை கொண்ட நோயாளிகளின் பார்வையை இவை பாதிப்பதில்லை.
 • ஒளிபுகா நுண் சாம்பல் பொட்டுகள்:   சில வேளை இவை விழிவலை வரிகளுக்கு இடையிலும்  நுண்கோளங்களின் அருகிலும் பரவி இருக்கும்.
 • அமிலாய்டுமயமாதல்: கோளவடிவச்சிதைவில் வெண்படலம் அமிலாய்டுமயமாதல் குறிப்பானதல்ல; மற்றும் சரியாகப் புரிந்துகொள்ளப்படவும் இல்லை. ஊனீரில் அமிலாய்டு சிதைவுச் செயல் குறைவதால் திசுக்களில் அமிலாய்டு சேர்வதாக நம்பப்படுகிறது. மணல், தூசி, புற ஊதா கதிர்கள் மற்றும் பிற காரணிகளால் ஏற்படும் பல நுண் காயங்களின் விளைவாகவே அமிலாய்டுமயமாக்கம் நிகழக்கூடும்.
 • கண்புரை மற்றும் போலி வில்லை உரிதல்: இது கோளவடிவச்சிதைவு நோயாளிகளில் பரவலாகக் காணப்படும்.
 • கருவிழி செயலிழப்பும் காணப்படுகிறது.
 • வெண்படல உணர்திறன் குறைவு

ஆரம்பத்தில் புண் விளிம்புக்கும் படலச்சந்திப்புக்கும் இடையில் ஒரு தெளிவான மண்டலம் காணப்படும். பின்னர் இது மறையும்.

வகை I அல்லது முதன்மை வெண்படல வகை: முதன்மை வகையில் பிற கண் அல்லது வெண்படலக் கோளாறுகள் எதுவும் இன்றி வெண்படலப் புண்கள் காணப்படுவது இயல்பு. இப்புண்கள் ஓரளவு கொண்டவைகளாக இருபக்கமும் அமைந்திருக்கும்.  விளிம்பில் ஆரம்பித்து சிதைவு இமைசார் இடைவெளியின் மையத்தை நோக்கி நகரும்.  கோளாறு அதிகரிக்கும் போது துளிவடிவங்கள் பெரிதாகவும் கணுக்கள் கொண்டதாகவும் மாறி நடு வெண்படல மேற்திசுவை உயர்த்தும். முதன்மைச் சிதைவு கொண்ட நோயாளிகளின் கண்சவ்வு, குறிப்பாக மூக்குசார் பகுதி, பாதிக்கப்படக் கூடும்.

முதன்மை வடிவத்தின் கடுமை மூன்று தரவகைப்படும்:

 • தரவகை 1:  படலச்சந்திப்பின் அருகில் இலேசான நுண்கோளப்படிவு. விளிம்பில் மட்டும் பளபளப்பான நுண் துளிவடிவங்கள் காணப்படும். அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை.
 • தரவகை 2: புகைமண்டலமான வரிவடிவத்துடன் கூடிய மிதமான நுண்கோளப்படிவு. வெண்படலத்தின் மையப்பகுதி பாதிப்படையும். சற்றே பார்வைக் குறைவும் இருக்கும்.
 • தரவகை 3: வெண்படலத்தின் மையப்பகுதியில்  பெரிய திரளான மஞ்சள் மேற்திசு சார் நுண்கோள துளிகள் காணப்படும். பெரும் வெண்படல முடிச்சுகள் இருக்கும். ஸ்நெல்லன் பார்வைப் பரிசோதனை வகைகளில் 6/60 க்கு மேல் பார்வைத்திறன் இருப்பதில்லை. நோய் வேகமாக அதிகரிக்கும். பாதிக்கப்பட்ட வெண்படலத்தில் புண் ஏற்படும். தொடர்ந்து இரண்டாம்கட்ட நுண்ணுயிரி தொற்றும் ஏற்படும்.

கடுமையின் அடிப்படையில் மாற்றுத் தரவகை:

 • சாயை (Trace): குறைந்த எண்ணிக்கையில் படிவுகள் இருக்கும். அல்லது (இரு கண்களிலும் இருந்தால்) இமையிடை பகுதியின் ஓரத்தில் அமைந்திருக்கும்.
 • தரவகை 1: இமையிடைப் பகுதியின் நடு மற்றும் பக்கம் பாதிக்கப்படும். மைய வெண்படலப் பாதிப்பு இருக்காது.
 • தரவகை 2: மைய வெண்படலப் பாதிப்பு இருக்கும். ஆனால் பார்வை பாதிப்பு இருப்பதில்லை.
 • தரவகை 3: மைய வெண்படலம் பாதிப்படையும். பார்வையும் குறையும்.
 • தரவகை 4: தரவகை 3 இன் கண்டறிதலோடு மேலுழும்பிய கணுக்களும் இருக்கும்.

வகை II அல்லது இரண்டாம் நிலை வெண்படல வகை: இது பிற கண் கோளாறுகள், வெண்படலக் குழல்தோன்றல் மற்றும் வடுவுறலுடன் தொடர்புடையது. வெண்படல வடுக்களின் ஓரத்தில் இது ஏற்படலாம்.

குழலரும்பல் மற்றும் வடுக்களுடன், மேற்திசு, அடிப்படலம், பௌமன் அடுக்கு மற்றும் மேல்திசுவலை ஆகியவற்றை ஊடுறுவி சிறு மஞ்சள் நுண்கோளங்கள் உருவாகும். வெண்படலத்தின் அடுத்தடுத்த அடுக்குகளில் வடுக்கள் இருக்கலாம். பௌமன் அடுக்கு பாதிப்பு விகிதம் மற்றும் வெண்படல வடுக்களின் இருப்பிடம் ஆகியவற்றைப் பொறுத்து நுண்கோளங்கள் ஏற்படும். வெண்படலத்தின் அடுத்த அடுக்குகளுக்குள் வடுக்கள் இருக்கலாம். பௌமன் அடுக்குச் சிதைவு விகிதம் மற்றும் வெண்படல அடுக்குகள் இருக்கும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து நுண்கோளங்களின் இருப்பிடம்  அமையும். வடுக்கள் விளிம்பில் அல்லது மையத்தில் காணப்படும். படிவு எப்போதும் வரிகளாக இருக்காது. வெண்படல வடுப்பகுதியிலும் அமையலாம். இந்நோய் ஒரு பக்க அல்லது இருபக்கமாக இருக்கும். ஒரு கண்ணில் குழலரும்பலோடு கூடிய வெண்படல வடுக்கள் இருந்தால் சிதைவு அக்கண்ணில் ஏற்படுமே ஒழிய தெளிவான கண்ணில் உண்டாகாது.

ஊடுறுவல் வெண்படல அறுவை செய்யப்பட்ட நோயாளிகளில் சிதைவு மறுபடியும் எழலாம். வெண்படல ஒட்டில், குறிப்பாக மையத்தில், கோளத் திரட்சி ஏற்படலாம்.

வகை III அல்லது வெண்படல வகை: வெண்படல வகை போன்ற இந்தக் கண்சவ்வு வகையிலும் படிவுகள் அமையும். கண்சவ்வுப் புண்கள் வீங்கிய இரத்த நாளங்களே.

திசுவாய்வியல் மற்றும் மின் நுண்காட்டியியல்:

சாயமேறல் தன்மைகள்:                        

முதன்மை கோளவடிவ சிதைவு:

 • சாயமேறா பகுதிகள்: புற ஊதாக்கதிர் ஒளியூட்டலில் சாயமேறா பகுதிகள் தன் – ஒளிர்வை மேலோட்டமான திசுவலைய படிவுகளில் வெளிப்படுத்தும்.
 • ஹீமேட்டாக்சிலின் மற்றும் ஈயோசின் (H&E) சாயமேறிய பகுதிகள்: சாயம் ஏறிய பகுதிகள், வெண்படல வடு, மற்றும் குழலரும்பலோடு பல்வேறு அளவிலான மேற்திசு சார் நுண்கோள படிவுகளுக்கான சான்றுகளைக் காட்டுகிறது. நுண்கோளங்கள் பொதுவாக பௌமன் அடுக்கை ஒட்டியே காணப்படுகிறது. கோளப்படிவால் அடைந்த சிதைவை இது காட்டலாம். நுண்கோளங்கள் மேற்திசுசார் இடைவெளியிலும் காணப்படும். அடிப்படலத்தையும்  மேல்திசுவலையையும் இது பாதிக்கும். இந்த நுண்கோளங்களின் திரட்சி வெண்படல மேற்திசுவை உயர்த்தவும் மெலிதாக்கவும் கூடும்.
 • மேசன் முந்நிறச் சாயம்: இது செம்மைச் சாம்பல் நிற நுண்கோளங்களைக் காட்டும்.
 • வெர்கோஃப் வான் கீசன் சாயம்: இழுவைத் திசுவுக்கான வெர்கோஃப் வான் கீசன் சாயத்துக்குப் பெரும்பாலான நுண்கோளத் திரட்சி நேர்மறையாகச்ச் சாயமேறுகிறது.
 • காங்கோ சிவப்புச் சாயம்: அமிலாய்டு படிவுகள் இருக்கும் பகுதிகளில் காங்கோ சிவப்புச் சாயம் நேர்மறையாக இருக்கும். இது சிதைவு கொண்ட சில மாதிரிகளில் துருவப்படும் ஒளியோடு இருபுறவிலகலைக் காட்டுகிறது.

கொழுப்பிற்கு எண்ணெய்ச் சிவப்பு O - வாலும் கால்சியத்துக்கு வான் கோசா சாயம் கொண்டும் சாயமேற்றுவது பொதுவாக எதிர்மறையாக இருக்கிறது. தொடர்புடைய ஏதாவது சுண்ணாம்புப் படிவிற்கு வான் கோசா சாயம் நேர்மறையைக் காட்டலாம். ஆனால் இது மிகவும் அரிதே.

இரண்டாம்நிலை கோளவடிவச் சிதைவு:

வெண்படலத்தின் ஹீமேட்டாக்சிலின் மற்றும் ஈயோசின் (H&E) சாயமேறிய பகுதிகள்: இது வடுவுறலையும் குழரும்பலையும் பல அளவிலான மேற்திசு நுண்கோள ஒரு தன்மையான படிவுகளைக் காட்டுகிறது. நுண்கோளங்கள் திசுவலையின் மேல் மற்றும் ஆழ் அடுக்குகளை அடையக் கூடும்.

மின்நுண்காட்டியியல் ஆய்வு:

மின்நுண்காட்டியியல் ஆய்வில், மேற்புற திசுவலையின் கோலெஜென் நுண்நார்களுக்கு இடையில் கோள வடிவத்தில் இருந்து முட்டை வடிவமான புற உயிரணு மின்னடர்த்தித் திரள் காணப்படுகிறது. இந்த நுண்கோளங்கள் பல்வேறு அளவுடையன. மேலும் பௌமன் அடுக்கிலும் மேற்திசுவின் அடிப்படலத்திலும்  இடையூறுகளைச் செய்யும்.

புரதவியல் ஆய்வும் நோய்தோற்றவியலும்:

புரதவியல் ஆய்வைப் பயன்படுத்தி ஏறத்தாழ 105 வெவ்வேறு வகையான புரதங்கள் இனம்காணப்பட்டுள்ளன. அசாதாரண நாரணுக்களில் இருந்து முறையற்ற கோலஜென்னை முதன்மைச் சிதைவு காட்டுகிறது. புற ஊதாக் கதிர் ஊடாட்டத்தால்  புரதப்படிவையும் ஊனீர்புரதத்தையும் இரண்டாம்நிலை சிதைவு காட்டுகிறது.

அதிகரித்த சர்க்கரையாக்கத்தின் இறுதிப் பொருள் திரட்சியாலும் புற ஊதா கதிர்வீச்சு மற்றும் வயது முதிர்ச்சியின் விளைவால் ஏற்படும் மாற்றமடையும் புரதங்களாலும் கோளவடிவ சிதைவு உருவாகலாம்.

டிரிப்டோபான், டைரோசின், சிஸ்டரின் மற்றும் சிஸ்டின் போன்ற அமினோ அமிலங்களைக் கொண்ட புரதப்படிவுகளை வெண்படல கோளப் படிவுகள் காட்டுகின்றன. இவைப் பொதுவாக வெண்படல திசுவலையில் காணப்படுவதில்லை.

மேட்ரிக்ஸ் மெட்டலோபுரோட்டினேசஸ் (MMPs) மற்றும் மெட்டலோபுரோட்டினேசசின் திசுத்தடுப்பிகள் (TIMPs):  கோளவடிவ சிதைவுடைய நோயாளிகளின் கண்ணீர் திரவத்தில் MMP-9 மற்றும் MMP-2 அளவில் மேல்முறைப்படுத்தலும் அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளதை ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது. TIMP-1 இல் கூட்டுப்பொருள் பகுதிகளாக காணப்படும்போது TIMPs (MMP-இன் தடுப்பிகள்) நோயாளிகளில் குறைவாகவே உள்ளன. கண்ணீரில் MMP-2 மற்றும் MMP-9 இன் அளவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து இருப்பதை ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. வெண்படல மேற்திசு மறுவுறுவாக்கம் மற்றும் வடுவுறலில் ஏற்படும் தாமத்தால் இது நிகழலாம். கோளவடிவச் சிதைவில் குறைபாடான எதிர்-புரதஉடைப்பு கவசம் போன்ற  TIMP-1-இன் குறை வெளிப்பாடு, நோயாளிகளின் வெண்படலத்தை MMP செயல்பாடு அதிகரிப்பு ஆபத்துக்குள்ளாக்கும்.

அனெக்சின் மற்றும் கிளிசெரால்டிஹைட் 3-பாஸ்பேட் டிஹைடிரோஜெனேஸ் (GAPDH): மோனோகுளோனல் எதிர்பொருளை பயன்படுத்தி கோளவடிவ சிதைவு நோயாளிகளில் இந்தப் புரதம் இனம்காணப்பட்டுள்ளது. வெண்படலத்தின்  விளிம்பில் அனெக்சின் காணப்படுகிறது, நடுவில் அல்ல. ஆனால் கோளவடிவ சிதைவு நோயாளிகளில் இது நடுப்பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. படல இணைவு மற்றும் உயிரணுக்கள் கோல்ஜென்னுடன் ஒட்டிக்கொள்ள அனெக்சினும் GAPDH-உம் காரணமானவை.

வேறுபடுத்திக் காண வேண்டியவை:

 • வரிவடிவ வெண்படலநோய்: ‘ஸ்விஸ் பாலாடைக்கட்டி’ தோற்றத்துடன் சுண்ணாம்புப் படிவு காணப்படும்.
 • கண்களிம்பு போலிப்பிடிபடல்: வெண்படலத்தின் திசுவலையில் அழுத்தத்தினால் அறுவைக்குப்பின் நிகழும். இந்தத் துளிகள் தாமாகவே ஒளிர்வதில்லை. பிளவு விளக்கால் எளிதாகக் கண்டறிய முடியும். அழுத்தப் புண்கட்டுதல் நின்றவுடன் இது மறையும்.
 • கண்சவ்வு மாற்றம்: கட்டி, நிணநீர்க்குழல் விரிதல், மஞ்சள்படிவு அல்லது விழிக்குழி கொழுப்பு திட்டுகளில் இருந்து கொழுப்பு அணுக்கள் விழிவெளிப்படல மேலுறைக்கு முன்ன்கர்தல் ஆகிய கண்சவ்வு மாற்றங்கள் இந்நோயில் இருந்து வேறுபட்டவை.

 

 

மேலாண்மை மருத்துவக் கண்காணிப்பின் கீழ் செய்யப்பட வேண்டும்.

பெரும்பாலான நோயாளிகளுக்கு அறிகுறிகள் இருப்பதில்லை. குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை.

பொதுவாக சிதைவு மூக்குசார் அல்லது நெற்றிசார் பகுதியில் இருப்பதால் கவனிப்பு மட்டுமே போதுமானதாகும்.

பொதுவான மருத்துவ சிகிச்சை:

 • புற ஊதா ஒளி பாதுகாப்பு: கண் கண்ணாடி அணிந்து மேலும் சிதைவடைவதை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
 • செயற்கைக் கண்னீர் மேல்மருந்து: இதன் மூலம் மசகு உருவாக்கலாம்.

அறுவை சிகிச்சை:

வெண்படல வடுவும் பார்வையைப் பாதிக்கும் முன் மைய வெண்படலப் பகுதி கோளங்களும், வலியும் இருந்தால் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

 • வெட்டும் லேசர் உதவியுடனான ஒளிசிகிச்சை வெண்படல அறுவை (PTK): இதன் மூலம் பயனுள்ள பார்வை மீட்பு அடையலாம். பார்வை சரிசெய்வதற்கான கண்புரை அறுவை தேவைப்படும் நோயாளிகளுக்கும் இச்சிகிச்சை தேவைப்படலாம்.
 • மடல் அல்லது ஊடுறுவல் வெண்படல அறுவை: சமமற்ற வெண்படலப் பரப்பு அற்றவர்களுக்கு இச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

கண்சவ்வு அறுவைக்குப் பின் கோளவடிவச் சிதைவு மீண்டும் ஏற்படுகிறது.

 


தடுப்பு முறைகளாவன:

 • புற ஊதாக் கதிர் தடுப்பு கண்கண்ணாடிகள்: மணலும் தூசியும் உள்ள இடங்களில் புற ஊதாக்கதிர் தடுப்பு கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம். சூழல் உறுத்திகளைத் தடுக்க கண்ணாடியில் பக்க பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தலாம்.
 • சூரிய கதிர்வீச்சைத் தவிர்த்தல்: சூரிய கதிர்வீச்சையும் வெண்படல நுண் காயங்களையும் தவிர்த்தால் கோளவடிவ சிதைவைத் தடுக்க முடியும்.

 

 

 

 


 • PUBLISHED DATE : Mar 05, 2019
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Mar 05, 2019

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.