இணைவுக் கண்சவ்வழற்சி

பெரியவர்களுக்கு ஏற்படும் இணைவுக் கண்சவ்வழற்சி பாராகண்ணோய் எனவும் அழைக்கப்படும். இந்நோய் கிளமீடியா டிரக்கோமேட்டிஸ் (ஊனீர்வகை  D முதல் K) என்னும் கடப்பாட்டு உட்செல் பாக்டீரியாத் தொற்றால் உண்டாகிறது. இது நீடித்த நுண்ணறைக் கண்சவ்வழற்சியை உருவாக்குகிறது (16-28 நாட்களுக்கும் மேல் நீடிக்கும் நுண்ணறைக் கண்சவ்வழற்சி). இந்த நுண்ணுயிரிகள் சளிச்சவ்வுப் பரப்பின் மேல்தோலைப் பாதிக்கின்றன. இவையே டிரகோமா – இணைவுக் கண்சவ்வழற்சி முகவர் (TRIC முகவர்) என்று இனங்காணப்பட்டுள்ளன. இந்த நுண்ணுயிரிகள் பிறப்பின் போது குழந்தையைப் பாதித்து பிறந்த குழந்தைகளில் கண்சவ்வழற்சியை உருவாக்கும்.

கிளமீடியா டிரக்கோமேட்டிசில் மரபான டிரகோமா முகவர்களும் அடங்கும் (ஊனீர் வகை A, B, Ba மற்றும் C). நிணநீர்நுண்மணி பால்வினை நோய் என்ற உடலுறவால் பரவும் நோயை கிளமீடியா டிராக்கோமேட்டிஸ் உண்டாக்குகிறது (ஊனீர் வகை L1 to L3). இது மேல்செல் உட் திசுக்களையும் பாதிக்கிறது.

இணைவுக் கண்சவ்வழற்சி பால்வினையாலும் (வாய்-இனப்பெருக்க உறுப்பு) கை - கண் தொடுதலாலும் ஏற்படும். இதனோடு தொடர்புடைய பொதுவான இணைத் தொற்று மேகவெட்டை நோயாகும். அரிதாக இந்நோய் கண் – கண் தொடர்பாலும் உண்டாகும் (உ-ம். கண் சாயத்தைப் பகிர்ந்து கொள்ளுதல்).

குறிப்புகள்:

http://reference.medscape.com/article/1203385-overview

http://reference.medscape.com/medline/abstract/24047438

http://www.reviewofophthalmology.com/content/d/therapeutic_topics/i/1229/c/23124/

http://www.healthofchildren.com/I-K/Inclusion-Conjunctivitis.html

http://chlamydiae.com/twiki/bin/view/Human_Infections/Ocular/AdultConjunctivitis

http://www.eyeupdate.com/case-studies/73-chlamydial-conjunctivitis-in-the-adult.html

http://www.opt.indiana.edu/v644/v644/adult_incl_conj.pdf

Kanski,Jack J. Clinical Ophthalmology, A Systematic Approach .Third Edition.UK. Butterworth Heinemann, 1994. 

இணைவுக் கண்சவ்வழற்சி, கண்ணை ஒரு பக்கமாக (அரிதாக இருபக்கமும்) பாதிக்கிறது.

பெரும்பாலும் அறிகுறிகள் காணப்படா. மேலும், பொதுவாக அறியா வண்ணமே பரவுகிறது.

இணைவுக் கண்சவ்வழற்சி நோயாளிகளில் பாதிப் பேருக்குக் கிளமீடியாத் தொற்று, மண்டலம் சார்ந்ததாக இருப்பதில்லை. கண்களோடு, சவ்வுச் சளி உள்ள உடலின் பாகங்களான மூச்சு மற்றும் இனப்பெருக்க சிறுநீரகப் பாதைகளில் கிளமீடியா காணப்படும். 

அறிகுறிகள் கூடிக் குறைவதாகவோ, அறிகுறிகள் அற்றோ காணப்படலாம்.

காணப்படும் அறிகுறிகளாவன:

விழி அறிகுறிகள்:

-    சிவந்த கண்

-    சளிச்சீழ் கசிவு

-    உறங்கி விழிக்கும்போது இமைமயிர் ஒட்டிக்கொள்ளுதல்

-    நீர் வழிதல்

-    அரிப்பு

-    கண் உறுத்தல்

-    கண்ணில் தூசி இருக்கும் உணர்வு

-    ஒளிக்கூச்சம்

-    வலி

-    இமை வீக்கம்

மண்டலம்சார் அறிகுறிகள்:

-    ஆண்களில் சிறுநீர்வடிகுழாய் அழற்சி

-    இனப்பெருக்க – சிறுநீர் மண்டல அறிகுறிகள், உ-ம். சிறுநீர்வடிகுழாய் அழற்சி, பெண்ணுறுப்பில் கசிவு

-    தொற்றுள்ள கண்பகுதிக் காதில் இலேசாகத் தொற்று

-    இலேசான முன் – காது நிணநீர்ச்சுரப்பி நோய்

கிளமீடியா டிரேக்கோமேட்டிஸ் கண்ணோயையும் (ஊனீர் வகை A, B, Ba மற்றும் C) பிறப்புறுப்புத் தொற்றையும் (ஊனீர்வகை D முதல் K) நிணநீர்நுண்மணி பால்வினைநோயையும் (ஊனீர்வகை L1 முதல் L3) உருவாக்கும்.

பிறப்புறுப்பு ஊனீர்வகை D முதல் K, அங்கொன்று இங்கொன்றாய்ப், பிறந்த குழந்தைகளுக்குக் கண்ணோயையும் பெரியவர்களுக்கு இணைவுக் கண்சவ்வழற்சியையும் ஏற்படுத்தலாம். பெரியவர்களைப் பாதிக்கும் இணைவுக் கண்சவ்வழற்சி நோயரும்பு காலம் 4-12 நாட்கள்.

பிறப்புறுப்பு ஊனீர்வகை பார்வையிழப்பை ஏற்படுத்தாது. ஏனெனில், இவை “நுண்ணுயிரிகள் சமுதாயத்துக்குள்” நிலையான சுழற்சி வட்டம் அமைத்துக்கொள்ளுவதில்லை. 

ஊனீர்வகை D முதல் K அரிதாக தீவிரம் குறைந்த நுண்ணறை வெண்படல அழற்சியை உருவாக்கினாலும் வெண்படல வடு மிக அரிதாகவே உண்டாகும்.

பால்வினையில் தீவிரமாக ஈடுபடும் இளம் வயதினரிடம் பொதுவாக இணைவுக் கண்சவ்வழற்சி காணப்படுகிறது. 15-35 வயதினிரிடையே பெரும்பாலும் இருக்கலாம்.

மருத்துவ ரீதியாக சோதித்தும் ஆய்வகச் சோதனைகள் மூலமும் நோய் கண்டறியப்படுகிறது.

கிளாமைடல் தொற்று உள்ள பெண்களுக்குத் தொடர்ந்து ஏற்படும் சிறுநீர்வடிகுழாய் அழற்சி அல்லது பிறப்புறுப்பு கசிவு நீடித்த பெண்ணுறுப்பு அழற்சி மற்றும்/அல்லது கருப்பைவாய் அழற்சியின் இரண்டாம் கட்டமாக இருக்கும். ஆண்களுக்கு அறிகுறியுடன் அல்லது இல்லாமல் சிறுநீர்வடிகுழாய் அழற்சி இருக்கலாம்.

இந்நிலை பல வாரங்களாக நீடிப்பதை நோய்வரலாறு காட்டுகிறது. பொதுவாக, பாக்டீரியா தொற்று குறுகிய ஒன்று அல்லது இரு வார மருத்துவ சிகிச்சையில் முடிந்துவிடும்.

இணைவுக் கண்சவ்வழற்சி பொதுவாக ஒருபக்க (அரிதாக இருபுறம்) வெண்படல சிவப்பாகச் சளிச்சீழ், கண்பாவை வீக்கம் மற்றும் துலங்கிய நுண்ணறை  கண்சவ்வழற்சியாக வெளிப்படும். சிகிச்சை அளிக்காவிட்டால் நீடித்து நிலைத்துப் பலமாதங்கள் காணப்படும்.

அறிகுறிகள் நீடிக்கும் காலம், முன்னர் எடுத்துக்கொண்ட சிகிச்சை விவரம், சமீப அல்லது முந்திய பால்வினை பற்றிய விவரங்கள் ஆகியவை நோய்கண்டறிதலுக்கு முக்கியம்.

மருத்துவ அம்சங்கள்:

முன்காது நிணநீர்ச்சுரப்பி மென்வீக்கம் நோயாளிக்குக் காணப்படலாம்.

ஒரு கண்மருத்துவரால் பிளவு-விளக்கு பரிசோதனை தேவைப்படும்.

கண் மருத்துவ அம்சங்களில் அடங்குவன:

-    கீழ் கண்ணிமைவிளிம்புத் தட்டு கண்சவ்வழற்சி நுண்ணறைகள்.

-    பாவை வீக்கமும் மேல் கண்ணிமை விளிம்புத் தட்டு கண்சவ்வழற்சி ஊடுறுவல்

-    கரும்படல அழற்சி (நோய் தொடங்கி இரண்டாவது வாரத்தில் ஏற்படலாம்).

வெண்படலப் பாதிப்பில் அடங்குவன:

-    மேலோட்டமான புள்ளிகள் கொண்ட வெண்படல அழற்சி

-    சிறு, விளிம்பு அல்லது மைய ஊடுறுவல்கள்

-    மேல் தோல் சார் ஊடுறுவல்கள் (வெளிப்பட முனைதல்)

-    வெண் – வெளிப் படல விளிம்பில் அசாதாரண மேல் படலம்

-    வெண் – வெளிப் படல விளிம்பு வீக்கம்

-    கரும்படல அழற்சி (நோயின் பிற்கட்டத்தில் உருவாகலாம்)

ஆய்வகக் கண்டறிதல்:

-    அணுக்கரு அமிலப் பெருக்கு சோதனைகள் (NAATs): இது ஒரு ஆய்வக உத்தி ஆகும். பாலிமரேஸ் தொடர் வினை (PCR) இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இவற்றிற்கு அதிக உணர்திறனும் தனிச்சிறப்பும் உண்டு. ஆனால் இவை செலவு பிடிப்பவையும் பரவலாக கிடைக்கக் கூடியவையும் அல்ல.

-    கியூம்சா உயிரணுவியல்: இது ஒரு நுண்ணோக்கியல் சோதனை. அடைப்படைச் சாயம் ஏற்கும் கண்ணறைக் கணியத்தின் உள் உள்ள மேற்புற செல் இணைவுப் பொருட்களைக் (ஹால்பெர்ஸ்டேட்டர்-புரோவசாக் பொருட்கள்) கண்டறிய கண்சவ்வழற்சி மாதிரிகளை இது சோதனை செய்யும். இது தனித்தன்மை வாய்ந்தது என்றாலும் குறைந்த உனர்திறன் கொண்டது ஆகும்.

-    கிளமைடல் வளர்ப்பு: கண்சவ்வில் இருந்து இவை கிடைக்கும்.

-    நேரடி ஒளிர்வு எதிர்பொருள் (DFA)  மதிப்பீடு: கண்சவ்வு மாதிரிகளில் இருந்து செய்யப்படும் இம் மதிப்பீடு, நேட்சை (NAATs) விட உணர்திறன் குறைந்தது.

-    நொதி நோய்த்தடுப்பு மதிப்பீடு  (EIA): இதுவும் நேட்சை விட உணர்திறன் குறைந்ததே.

-    ஊனீர் இம்யுனோகுளோபுலின் G (IgG) முறிமதிப்பு: கிளமைடியா சிற்றினங்களுக்கு எதிராக முறிமதிப்பு பெறலாம்.

கீழ்க்காணும் நிலைகளில் இருந்து இணைவுக் கண்சவ்வழற்சியை வேறுபடுத்திக் காணவேண்டும்:

-    கண்ணோய்

-    கண்சவ்வழற்சிப் பரவல்

-    ஒவ்வாமை கண்சவ்வழற்சி

-    பாக்டீரியா கண்சவ்வழற்சி

-    வைரல் கண்சவ்வழற்சி

-    பால் உண்ணி

-    விழிவில்லைச் சிக்கல்கள்

மருத்துவ கண்காணிப்பின் கீழேயே நோய்மேலாண்மை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இணைவுக் கண்சவ்வழற்சி தானே குணமாகக் கூடியது.

மறு தொற்றைத் தடுக்க அனைத்து உடலுறவு இணையர்களும் ஒரே நேரத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மேகவெட்டை, மேகநோய் மற்றும் எச்.ஐ.வி. வைரஸ் சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள அனைவருக்கும் நுண்ணுயிர்க்கொல்லிகள் அளிப்பது அறிவுடைய செயலாகும். சிகிச்சை முடியும் வரை பால்வினைகளை நிறுத்த வேண்டும்.

நோயையும் சிக்கல்களையும் குறைப்பதே மருந்தியல் சிகிச்சையின் நோக்கம் ஆகும்.

கண்காணிப்பு மற்றும் பரிசோதனையின் அடிப்படையிலான எதிர் நுண்ணுயிரி சிகிச்சை விரிவானதாகவும் இருக்கக் கூடிய எல்லா உயிரிகளையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்.

பொதுவாக விழியில் வெளிப்படும் பால்வினையால் பரப்பப்பட்ட சிறுநீர் – பிறப்புறுப்புத் தொற்றே கண்சவ்வழற்சியாகும். ஆகவே, வெளிப்புற நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளுக்கு இந்நோய் பலன் அளிப்பதில்லை.

ஆரம்பக் கட்ட அறிகுறிகளின் கடுமைக்கு ஏற்ப சிகிச்சையை ஆரம்பித்து 2-6 வாரங்கள் வரை நோயாளியைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

சிகிச்சையில் அடங்கியுள்ளவை:

-    மண்டலம்சார் நுண்ணுயிர்க்கொல்லிகள்: 3-6 வாரங்களுக்குப் பரிந்துரைக்கப்படும். எரித்ரோமைசின், அசித்திரோமைசின், டெட்ராசைக்கிளின், அல்லது டாக்சிசைக்கிளின் பயன்படுத்தப்படலாம்.

’இணைவுக் கண்சவ்வழற்சிக்கு, நீண்ட கால பிற மருந்துகளை அளிப்பதை விட ஒரு செல்வேளை அசித்திரோமைசின், இணையானதும் நம்பிக்கையானதுமான சிகிச்சை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பிடத்தக்க வகையில் நோய் கட்டுப்படத் தொடங்கியுள்ளதற்கான அறிகுறிக்கு நோயாளிகள் ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டும். முழுமையாகக் குணமடைய  ஒரு மாதம் வரை ஆகலாம். சிகிச்சை வெற்றிக்கு நுண்ணறைகளை மருத்துவ ரீதியாக நம்பிக்கையாக சார்ந்திருக்கலாம்.’ (http://reference.medscape.com/medline/abstract/24047438 ).

7 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்களுக்கும் டெட்ராசைக்கிளின் தவிர்க்கப்படுகிறது.

-    வெளிப்பூச்சு நுண்ணுயிர்க்கொல்லிகள்: அவ்வளவாகப் பலன் அளிப்பதில்லை.

நோய்முன்னறிதல்:

ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை தொடங்கப்பட்டு முழு நுண்ணுயிர்க்கொல்லி மருந்தின் முழு செல்வேளையும் நிறைவு செய்யப்பட்டால் நோய்முன்னறிதல் பொதுவாகச் சிறந்தது ஆகும். பாதிக்கப்பட்ட உடலுறவு இணையருக்கு சிகிச்சை அளிக்காவிட்டாலும், புதிய இணையரிடம் இருந்து தொற்றைப் பெற்றுக் கொண்டாலும் மறுதொற்று பொதுவாக ஏற்படும். ஆகவே உடலுறவு இணையர்கள் அனைவருக்கும் மருத்துவம் அளிக்க வேண்டும்.

கிளமைடியால் தொற்றுக்கு மருத்துவம் அளிக்காவிட்டால் இடுப்பு அழற்சி நோயும், பெண்களுக்குக் கருமுட்டைக் குழாய் வடுவும் உண்டாகலாம் (இதனால், மலட்டுத்தன்மை அல்லது இடமாறிய கருவுறல் உருவாகலாம்). கிளமைடியல் கருமுட்டைக் குழல் அழற்சி மற்றும் கருப்பைக் குழல் கட்டி உடைந்து உதரப்பை அழற்சிக்கு வழிகோலும். இடமகல் கருவுறலால் ஏற்படும் மரணத்திற்குக் கிளமைடியா ஒரு மறைமுகக் காரணமாகும்.

இணைவு கண்சவ்வழற்சிச் சிக்கல்கள்:

மண்டலம் சார் சிக்கல்கள்:

-    பெண்களுக்கு சிறுநீர்வடிகுழல் அழற்சி, பெண்ணுறுப்பு அழற்சி, கருவாய் சளிச்சீழ் அழற்சி.

-    இடுப்பு அழற்சி நோய்.

-    கல்லீரல் உறை அழற்சி (ஃபிட்ஸ்-ஹியூக்-கர்ட்டிஸ் நோய்த்தாக்கம்)

-    ஆண்களுக்கு சிறுநீர்வடிகுழல் அழற்சி

-    ஆண்களுக்கு விரை மேல் நாள அழற்சி.

-    மேகவெட்டை போன்ற இன்னொரு பால்வினை நோயுடன் இணைத்தொற்று.

-    ரீட்டர் நோய்த்தாக்கம் (சிறுநீர்க்குழல், கண்சவ்வழற்சிகள் மற்றும் எதிர்வினைக் கீல்வாதம்) கிளமைடியல் தொற்றோடு தொடர்புடையதாக இருக்கலாம்.

கண் சிக்கல்கள்:

பிறப்புறுப்புப் பாதைத் தொற்றுக்கு அடுத்தக் கட்டமாக உருவாகும் இணைவுக் கண்சவ்வழற்சியில் மறுதொற்று ஏற்பட அதே அளவு வாய்ப்பில்லை. ஆகவே, இணைவுக் கண்சவ்வழற்சியில், கண்சவ்வு வடு அரிதான ஒரு சிக்கலே. எனினும், வெண்படலத்தில் புள்ளியழற்சியைத் தொடர்ந்து நுண் படலமும் நுண் புண்களும் அரிதாக உருவாகலாம்.

விழித்தசை நார் அழற்சி நோயின் பிற்கட்டத்தில் உருவாகலாம்.

இணைவுக் கண்சவ்வழற்சியைத் தவிர்க்கப் பாதுகாப்பான பால்வினை முறைகளைக் கையாள வேண்டும்.

பால்வினையால் பரவும் நோய்களைப் பற்றி நோயாளிகளுக்கு அறிவு புகட்ட வேண்டும்.

  • PUBLISHED DATE : Mar 09, 2016
  • PUBLISHED BY : Zahid
  • CREATED / VALIDATED BY : R. Davidson
  • LAST UPDATED ON : Mar 09, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.