இமைக்கொழுப்பிறக்கம்

கண்கோளச் சுவர் பலவீனம் அடைவதால் இமையின் கொழுப்புத் திண்டு முன்புறமாகத் தொங்குவதே இமைக்கொழுப்பிறக்கம்  எனப்படுகிறது. இதனால் கண் உப்பியது போல் தோற்றம் அளிக்கும். இமை எல்லைக் கோட்டைப் பேணுவதில் இமைக் கொழுப்புத் திண்டுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.  இமைக் கொழுப்பு மேல் கீழ்  இமைகளுக்கு முழுமையும் மென்மையும் அளிக்கிறது. தொங்குவதற்குப் பதிலாக, இமைக் கொழுப்பு செயலிழந்தால் இமை, பின்புறமாக அழுந்தும். இதனால் உள் உருளல் அழுந்துகண் ஏற்படும்.

மேல் இமை இரு கொழுப்புத் திண்டுகளைக் கொண்டுள்ளது. இவை இடை மற்றும் நடு அறைகளில் அமைந்துள்ளன. கீழ் இமையில் மூன்று கொழுப்புத் திண்டுகள் காணப்படும்.  இவை இடை, நடு மற்றும் பக்க அறைகளில் அமைந்திருக்கும்.

இளம் வயதினரில் இமைக்கொழுப்பிறக்கம் ஒரு குடும்பக் கோளாறாகக் காணப்படும். ஆனால் பெரும்பான்மையான நேர்வுகளில், இது ஓர் உள் உருளல் நிகழ்வாக அமைகிறது. இமைத் தளர்ச்சி அல்லது தோல்தளர்ச்சியோடு இது தொடர்புடையதாக இருக்கும்.

குறிப்புகள்

 Dutton Jonathan J, Gayre Gregg S, Proia Alan D. Diagnostic Atlas of Common Eyelid Diseases. Informa Healthcare, Taylor & Francis Group, LLC 2007. P 94- 95.

Gladstone Geoffrey J, Black Evan H, Myint Shoib, Nesi Frank A. Oculoplastic Surgery Atlas- Eyelid disorders. Springer-Verlag Berlin Heidelberg 2002.

Dutton Jonathan J. Atlas of Clinical and Surgical Orbital Anatomy Second Edition. Elsevier Saunders 2011. P 111- 112.

https://www.centrallakesclinic.biz/eyelid-diseases/steatoblepharon.html

 

அழகியல் நோக்கில் நோயாளிகள் அணுகுவர்.

கண்கோளக் கொழுப்பு தொங்குவதால் இமைகள் வீங்கியது போல் காணப்படும்.

 

 

இளம் வயதினரில் இமைக்கொழுப்பிறக்கம் குடும்பக் கோளாறாக இருக்கலாம். இது முதுமை அடைதலின் ஒர் அறிகுறி அல்ல.

பெரும்பான்மை நேர்வுகளில், இமைத் தளர்வு அல்லது தோல் தளர்வுடன் தொடர்புடைய உள் உருளும் செயல் முறையின் காரணமாக இது நிகழ்கிறது.

கொழுப்பு அளவு மிகுதல் மற்றும்  திசுவீக்கத்தால் உண்டாகும் கிரேவ் கண்நோய் போன்ற மண்டலம் சார் நோயுடன் கடும் இமைக்கொழுப்பிறக்கம்  தொடர்புடையதாக இருக்கலாம்.

மேல் இமையில் இடை கொழுப்புத் திண்டு மிக நன்றாகப் புலப்படும். மேல் இமை, பக்க வாட்டில் பிதுங்குதல் பொதுவாகக் கண்ணீர் சுரப்பி தொங்குதலால் ஆகும்.

தோல் தளர்ச்சியுடன் இமைக்கொழுப்பிறக்கம் தொடர்புடையதாக இருக்கும். மேல் இமையின் தொங்கும் தோல் இதை மறைத்திருக்கும்.

கீழ் இமையில் மூன்று  அறைகளில் எந்த ஒன்றிலும் கொழுப்பு கீழிறங்கித் தொங்கலாம். இரு கொழுப்புத் திண்டுகள் இருக்கலாம் அல்லது ஒரே தொடர் திண்டும் காணப்படலாம். பக்கவாட்டுத் திண்டு வெளிப்படையாகப் புலன் ஆகும்.  ஆனால் கொழுப்பு தொங்குவது நடு அல்லது இடைத் திண்டுகளோடு சம்பந்தப்ப்ட்டிருக்கும். கீழ் இமையின் முழுப் பகுதியும் பிதுங்கிக் காணப்படும்.

நோய் மேலாண்மை பொதுவாக அறுவை சிகிச்சையே. பொதுவாக இது இமைவெட்டலுடன் இணைத்துச் செய்யப்படும்.

இலேசான கொழுப்பு தொங்கலுக்கு கோளச் சுவர் இறுக்கப்படும்.

கொழுப்பு அதிக அளவில் தொங்கினால், கோளச் சுவர் திறக்கப்பட்டு, கொழுப்புத் திண்டு தீய்க்கப்பட்டு வெட்டப்படும்.

தோல் தளர்ச்சி அற்ற குறைந்த அளவிலான இமைக்கொழுப்பிறக்கத்துக்கு, கோளச் சுவரைத் தொடாமல், ஒரு வெண்படலக் குறுக்கு வெட்டால் கொழுப்புத் திண்டுகள் அகற்றப்படுகின்றன.

கீழ் இமையில் அதிகப்படியான தோல் இருந்தால், தோல் குறுக்கு வெட்டு செய்யப்பட்டு  பக்கவாட்டில் தோல் இறுக்கப்படும்.

கீழிறங்கிய கன்னப்பகுதி கொழுப்புத் திண்டில் மறுபடியும் இடத்தில் நிலை நிறுத்தலும் செய்யப்படும்.

  • PUBLISHED DATE : Jan 18, 2018
  • PUBLISHED BY : NHP Admin
  • CREATED / VALIDATED BY : R. Davidson
  • LAST UPDATED ON : Jan 18, 2018

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.