இமைத்தோல் தளர்ச்சி

இமைத்தோல் தளர்ச்சி ஓர் அரிய வகைக் கோளாறு ஆகும். இது மேல் இமையைப் பாதிக்கிறது. இடைவிட்டு வரும் இமை வீக்கம் இதன் இயல்பு. அடிக்கடி இந்நோய் திரும்பத் திரும்ப ஏற்படும். இதனால் இமைத்திசு தளர்ச்சி உண்டாகிறது. பின்னர் இது செயல் நலிவாக மாறும். சில நேர்வுகளில் ஒரு பக்கமானதாக இருக்கும். அடிக்கடி வீக்கம் உண்டாவதோடு இது “சிகரட் தாள்” தோல் மற்றும் தோலடி இரத்தக் கிளைக்குழல் விரிவோடும் சம்பந்தப்பட்டது.

இமைத்தோல் தளர்ச்சி என்ற சொல் 1896-ல் ஃபியூக்ஸ் என்ற அறிஞரால் உருவாக்கப்பட்டது. இது அடிக்கடி முதுமையில் உண்டாகும் தோல் தளர்ச்சியோடு தவறாகப் புரிந்துகொள்ளப்படும்.

Blepharochalasis (இமைத்தோல் தளர்ச்சி) என்ற சொல் கிரேக்கச் சொல்லான இமை எனும் பொருள் படும் blepharon மற்றும் தளர்ச்சி என்று பொருள்படும் chalasis என்பவற்றில் இருந்து உருவானது.

குறிப்புகள்:

Biswas Arnab. Ptosis Surgery. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2010. P 102.

Basak Samar K. Atlas of Clinical Ophthalmology Second edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2013. P 26.

Roy Frederick Hampton, Fraunfelder Frederick W, Fraunfelder Frederick T, Tindall Renee, Jensvold Bree. Roy and Fraunfelder’s Current Ocular Therapy Sixth Edition. Saunders Elsevier 2008. P 433.

Dutton Jonathan J, Gayre Gregg S, Proia Alan D. Diagnostic Atlas of Common Eyelid Diseases. Taylor & Francis Group, an Informa business 2007. P 57- 58.

Blodi FC, Mackensen G, Neubauer H. Surgical Ophthalmology 1. Springer- Verlag Berlin Heidelberg 1991. P 92- 93.

Ostler H Bruce, Maibach Howard I, Hoke Axel W, Schwab Ivan R. Diseases of the eye & Skin- A Color Atlas. Lippincott Williams & Wilkins 2004. P 100.

Stein Harold A, Stein Raymond M, Freeman Melvin I. The Ophthalmic Assistant- A Text for Allied and Associated Ophthalmic Personnel Ninth Edition. Elsevier Saunders 2013. P 406.

Bowling Brad, Kanski's Clinical Ophthalmology- A Systematic Approach. Eighth Edition. Elsevier, 2016. P 55.

Kanski Jack J, Bowling Brad. Clinical Ophthalmology- A Systematic Approach Seventh Edition. Elsevier Saunders 2011.

Yanoff Myron, Sassani Joseph W. Ocular Pathology Seventh Edition. Elsevier Saunders 2015. P 155.

Denniston Alastair KO, Murray Philip I. Oxford Handbook of Ophthalmology Third Edition. Oxford University Press 2014. P 161.

http://emedicine.medscape.com/article/1214014-overview

http://eyewiki.aao.org/Blepharochalasis_Syndrome

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1043545/pdf/brjopthal00212-0013.pdf

Fuchs E. Über Blepharochalasis (Erschlaffung der Lidhaut). Wien Klin Wschr 1896; 9: 109- 110.

 

இமைத்தோல் தளர்ச்சி நோயில் பின்வரும் அறிகுறிகள் காணப்படலாம்:

 • ஒருபக்கமாக அல்லது இருபக்கமாக வலியற்ற மாறும் இமைவீக்கம்.
 • ஒருபக்கமாக அல்லது இருபக்கமாகக் கண்சவ்வு வீக்கம்.
 • கண் கோளம் வெளிப் பிதுங்குதல்.
 • கண்ணீர்ச் சுரப்பி தொங்குதல்.
 • கண்கோளத் தடுப்புச்சுவரும் தோலும் செயல் நலிவுறுவதால் கொழுப்புத் திட்டுகள் காணப்படுதல்.
 • பயனற்றக் கொழுப்பால் இமைத்தோல் செயல்நலிவுற்று தோல்சுருள் போல வெண்கல நிறமடைதல்.
 • விரிவடைந்த பல மெல்லிய இரத்த கிளைக் குழல்கள்.
 • மேல் இமை உயர்த்துந் தசைநார் பிணைப்பு மெலிந்து செயல் நலிவு அடைவதால் இமை தொங்குதல்.
 • இணை இமைப் பிளவு அல்லது  பக்கவாட்டு தடைநார் வெடிப்பால் பக்கவாட்டு இமைமூலை உருளல் .
 • இமையுட்பிறட்சி
 • போலி கண்மூலை மடிப்பு

இமை மாற்றங்கள் இயல்பான வயது முதிர்வால் அதிகரிக்கும்.

அரிதாக, காய்ச்சல், விம்மி அழுதல், மேல் சுவாச மண்டலத் தொற்று ஆகியவற்றால் தாக்கம் அதிகமாகலாம்.

இமைத்தோல் தளர்ச்சி என்பது ஒரு வகையான குருதிக்குழல் வீக்கமாக இருக்கலாம். ஒரு பகுதியில் உள்ள இரத்தக்குழல்கள் விரிவடைந்து புரதத்தன்மையுள்ள திரவங்கள் குழல்களில் கசியலாம். கண்பகுதிக் கொழுப்பு குழல் வெளித் தெரிதலையும் தந்துகி விரிவடைதலையும் அதிகரித்திருக்கலாம்.

தூண்டிகள்:

இதற்கான காரணிகளில் பன் தூண்டிகள் இருக்கக்கூடும்:

 • தன் தடுப்பு எதிர்வினை
 • சூழல் காரணிகள்

நோய்த்தோற்றவியல்

நோய்த்தோற்றவியல் உறுதியாய்த் தெரியவில்லை. ஆனால் நோயெதிர்ப்பாற்றல் இதற்கு மூலமாக இருக்கக் கூடும். நெகிழ்நார்களைச் சுற்றி அதிக அளவில் ஐஜிஏ படிவு காணப்படுகிறது.  அரிதாகக் குடும்பத்தில் மரபாகத் தோன்றலாம்.

இணைந்துகாணப்படுபவை

 கீழ்க்காணும் மண்டலம்சார் நோய்களுடன் இமைத்தோல் தளர்ச்சி இணைந்து சிலசமயம் காணப்படுகிறது:

 • தசையில் மாவுப்பொருள் ஏற்றம்
 • தோல்தசை அழற்சி
 • குருதிப்புற்று
 • லேஃபர்-அசர் நோய்த்தாக்கம்: உதடு வீக்கமும் தைராயிடு பெரிதாதலும்.
 • மெல்கர்சன்-ரோசன்தால் நோய்த்தாக்கத்துடன் (உதட்டுத்தசை வீக்கம், மீண்டும் வரும் முக வாதம் மற்றும் நாக்குப் பிளவு ஆகிய முக்குறைபாடு) காரணம் புலனாகா இமை வீக்கம்.

அரிதாக இமைத்தோல் தளர்ச்சியுடன் சிறுநீரக வளர்ச்சிக் குறை, முதுகெலும்புக் கோளாறு மற்றும் பிறவி இதயக் குறைபாடுகளும் காணப்படும்.

நோயியல்

நெகிழ்நார் இழப்பு, நிணநீர்த்தேக்கம் மற்றும் புறத்திசு நலிவு ஆகியவற்றை நோயியல் காட்டுகிறது. குறைந்த அளவு அழற்சியின் காரணமாக மேல் இமை உயர்த்துந்தசை நார் பிணைப்பு நீட்சி அடைவதால் இமையின் தசைநார் பிணைப்பு தொய்வடைகிறது.

நோய்கண்டறிதல்

நோய்வரலாறு மற்றும் மருத்துவ சோதனையின் மூலம் நோய் கண்டறியப்படுகிறது. குறிப்பிட்ட ஆய்வகச் சோதனை எதுவும் இல்லை.

I.              நோய்வரலாறு:

நோயாளிக்குத் திரும்பத் திரும்ப வலியற்ற வீக்கம், ஒரு அல்லது இரு இமைகளிலும் ஏற்படும். தொடர்ந்து தோல் மெல்லியதாகும். பொதுவாக இந்நோய் 10-20 வயதினரைப் பாதிக்கிறது. முதலில் வீக்கம் மேல் இமையில் காணப்படும். மறுபடியும் மறுபடியும் உருவாகும் நோய்த்தாக்கத்தின் கால அளவு வேறுபடும். நோய் தாக்கத்திற்கு முன் உடல் அல்லது உணர்வுபூர்வமான அழுத்தம் உண்டாகும். ஒவ்வாமை இருப்பதற்கான சாத்தியக் கூறும் உண்டு.

II.            மருத்துவ அம்சம்:

இமை அல்லது கண்சவ்வு வீக்கம், கண் பிதுக்கம், இமைத் தொய்வு, இரத்தக் கிளை நாளம் விரிதல், கண்ணிமை துருத்தல், இமையுட்பிறட்சி, காகிதத் தோல், போலி கண்மூலை மடிப்புகள் போன்ற மருத்துவ அம்சங்கள் நோயாளிக்குக் காணப்படும். மேல் இமைக்கு மேலாகத் தோல் கீழே தொங்கும்.

இந்நோயைக் கீழ்வருமாறு பிரிக்கலாம்:

. ஆரம்பக் கட்டம்

இதை மேலும் இரு வகையாகப் பிரிக்கலாம்:

 • மிகைப்பெருக்க வடிவம்
 • நலிவு வடிவம்

. பிந்திய கட்டம்

வகையீட்டுமுறை நோய்கண்டறிதல்:

·         குருதிக்குழல் வீக்கம்: முதுமை தொடங்கும் போது வீக்கம் என்பது பரவலானது; மேல் இமையில் மட்டுமே வீக்கம் இருப்பதில்லை. நிரப்பி 1-எஸ்ட்டரேஸ் தடுப்பிக் குறைபாடு மற்றும் தன் – விளைவியம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

 • தோல் தளர்ச்சி: இது இயற்கையான ஒரு முதுமை இயல்பு. மிகைத் தோலும் கொழுப்புப் பிதுக்கமும் காணப்படும்.
 • மென்வட்டு இமை நோய்த்தாக்கம்: உடல் பருத்த முதிர் வயாதானவர்களுக்குக் குறிப்பாகக் காணப்படும். இது காம்புக்கட்டி கண்சவ்வழற்சியோடு தொடர்புடையது.
 • நோய்க்காரணமறியா நிணநீர்த்தேக்கம்: பொதுவாக வயதானவர்களில் காணப்படும் குறையாவன் திரவக்கோர்வை.
 • கட்டி: வளரும் விரிவடையும் கட்டியாகக் காணப்படும். கண்டறியத்,  திசு ஆய்வு தேவைப்படும்.
 • மருந்தால் தூண்டப்படும்  தடிப்புச்சொறி

இமைத்தோல் தளர்வை அதன் கடும் கட்டத்தில் சீர்ப்படுத்த ஒன்றும் செய்ய இயலாது. தூண்டிகளைத் தவிர்த்தால் இது அடிக்கடி நிகழாமல் தடுக்கலாம்.

மருத்துவ சிகிச்சை

நோயின் கடும் மற்றும் செயல்திறன் மிக்க கட்டத்தில் ஆதரவு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

இமைத்தோல் தளர்ச்சி சிகிச்சையில் பலன் அளிக்கும் மருந்துகள் எதுவும் இல்லை. கடும் தாக்கத்தின் போது அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் எதிர்ஹிஸ்ட்டமின்கள், ஊக்கமருந்துகள், ஊட்டசெல் நிலைப்படுத்திகள் மற்றும் குளிர் ஒத்தடம் போன்றவற்றின் திறன் தீர்மானிக்கப்படவில்லை.

அறுவை சிகிச்சை:

நோயின் இறுதி, செயலற்ற கட்டத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

நோய் செயலற்றுப்போய் குறைந்தது ஆறு மாதம் கழித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். தொடர்ந்து ஏற்பட்ட இமை வீக்கத்தால் நிகழ்ந்த உடலியல் குறைபாட்டை நீக்க இது செய்யப்படுகிறது.

சீரமைப்பு முறையில் அடங்குவன

 • மேல் இமை உந்துந்தசை வெடிப்பை சீரமைக்க.
 • இமை இறுக்கம்.
 • இமைச்சீரமைப்பு
 • கண்மூலை தசைநாணை மறுபடியும் இணைப்பதற்கு.
 • கொழுப்பு நலிவுக்கு கொழுப்பு ஒட்டல்.
 • இடம் மாறிய மற்றும் நழுவிய கண்ணீர்ச் சுரப்பியை மறுபடியும் கோள விளிம்பில் பொருத்துதல்.

நோய் முன்கணிப்பு

நோயின் முதல் தாக்குதல் 20 வயதுக்கு முன் நிகழும். ஒரு பக்க அல்லது இருபக்க இமை மற்றும் கண்சவ்வு வீக்கம் ஏற்படும். இது சில மணி நேரத்தில் இருந்து பல நாட்கள் வரை நீடிக்கும்.

கண் பிதுக்கம் கோள பதிப்பை சுட்டிக்காட்டுகிறது. தொடர்ச்சியும் கடுமையும் வயது ஆக ஆகக் குறையும்.

பலகாலம் செயலற்று இருந்து பின் எதிர்பாரத விதமாகத் தாக்கம் ஏற்படலாம்.

சிக்கல்கள் மற்றும் நோயின் பின் விளைவுகள் வருமாறு:

 • கண்சவ்வு வீக்கம்
 • இமையுட்பிறட்சி
 • கண்ணிமை துருத்தல்
 • கண்சவ்வு சிவப்பு
 • இமை தொய்வு
 • இமைவீழ்ச்சி
 • அதிமென்தோல்

 • PUBLISHED DATE : Mar 28, 2017
 • PUBLISHED BY : DEEPAK CHANDRA
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Mar 28, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.