இமைமயிர் உட்சுருளல்

இயல்பாக இருந்த இமைமயிர் பின்புறமாகத் தவறான  திசையில் திரும்பும் ஒரு பெறப்பட்ட நிலையே இமைமயிர் உட்சுருளல் ஆகும். இவ்வாறு தவறான திசையில் திரும்பும் இமைமயிர்கள் ஒட்டுமொத்தமாகப் பரவும் (பரவிய இமைமயிர் உட்சுருளல்) அல்லது அதன் ஒரு சிறு பகுதியில் பரவல் (எளிய இமைமயிர் உட்சுருளல்) நிகழும். பரவிய இமைமயிர் உட்சுருளலை விட எளிய இமைமயிர் உட்சுருளல் அதிகமாக காணப்படுகிறது.

இமைமயிர் உட்சுருளலைப் போலி இமைமயிர் உட்சுருளலில் இருந்து வேறுபடுத்திக் காணவேண்டும். போலி இமைமயிர் உட்சுருளல், இமை உட்பிறழலின் அடுத்த கட்டமாக நிகழ்வது. இந்த இரு நிலைகளுமே வெண்படல அழற்சிக்கு வழிகோலும். புள்ளி மேற்தோல் அழற்சிக்கும் வழிவகுக்கலாம்.  இமைமயிர் உட்சுருளலால் கருவிழி அழற்சி, படலம் உருவாதல் அல்லது வெண்படலப் புண் கூட ஏற்படலாம்.

இமைமயிர் உட்சுருளலோடு கண்ணோய்களும் அல்லது கடுமையான நீடித்த ஸ்டேபிலோகாக்கல் கண்ணிமை அழற்சியும் சேர்ந்து காணப்படும்.

குறிப்புகள்:

http://emedicine.medscape.com/article/1213321-overview

http://www.geteyesmart.org/eyesmart/diseases/trichiasis.cfm

http://vaeyecenter.com/caring-for-your-eyes/common-eye-diseases/trichiasis/

Saxena S, Clinical Ophthalmology: Medical and Surgical Approach, 2nd ed. Jaypee-Highlights, 2011, New Delhi

Basak Samar K, Atlas of Clinical Ophthalmology, 2nd ed. Jaypee Brothers Medical Publishers (P) Ltd, 2013, New Delhi, P. 6            

Kanski,Jack J. Clinical Ophthalmology, A Systematic Approach .Third Edition.UK. Butterworth Heinemann, 1994.P 13-14.

நோயாளிக்குக் கீழ்வரும் அறிகுறிகள் காணப்படலாம்:

-    கண் எரிச்சல்

-    கண்ணில் அயல் பொருள் இருக்கும் உணர்வு

-    கண்சிவப்பு

-    நீர் வடிதல்

-    கண் கசிவு

-    கண்வலி

-    அதிக ஒளிக்கூச்சம்

-    வெண்படல சிராய்ப்பு

-    வெண்படலப் புண்

-    விழிகோளத்தோடு இமை ஒட்டுதல்

-    இயல்பான இமை விளிம்பு அமைப்புகள் இழப்பு உ-ம்: இமைமயிர் இன்மை அல்லது இழப்பு.

-    கருவிழி அழற்சியால் கண் உலர்தல்

இமைமயிர் உட்சுருளலுக்குப் பல காரணங்கள் உள்ளன:

தொற்றுக் காரணங்கள்:

-    கண் நோய்

-    அக்கி அம்மை

தன்தடுப்பாற்றல் நோய்கள்:

-    விழிவடு குமிழ்தோல்நோய்

அழற்சி நோய்கள்:

-    ஸ்டீவென்ஸ்—ஜான்சன் நோய்த்தாக்கம்

-    வசந்தகால உலர் கண் நோய்

-    நீடித்த ஸ்டேபிலோகாக்கல் கண்ணிமை அழற்சி

வேதியியல்:

-    காரக்கரைசல் எரிபுண்

-    கண்புரை சொட்டுமருந்து பயன்பாடு

காயம்:

-    விழிக்குழி தள முறிவு சரிசெய்தல்

-    இமை அறுவை

-    இமை வெளித்துருத்தல் சரிசெய்தல்

-    தோண்டிநீக்கலைத் தொடர்ந்து

இமைகளில் வெப்ப எரிபுண்:

நோய் வரலாற்றையும் மருத்துவப் பரிசோதனையையும் பொறுத்து நோய் கண்டறிதல் அமைகிறது.

வரலாறு:

-    கண் நோய், அக்கி அம்மை போன்ற கண் தொற்று நோய்கள்

-    இமை அறுவை அல்லது புண்

-    வேதியியல் அல்லது வெப்ப எரிபுண்

-    கண் புரை சொட்டு பயன்பாடு

-    ஸ்டீவன் — ஜான்சன் நோய்த்தாக்கம் அல்லது நீடித்தக் கண்ணிமையழற்சி போன்ற அழற்சி நோய்கள்

-    விழிவடு குமிழ்தோல்நோய்

மருத்துவ அம்சங்கள்:

இமைமயிர் உட்சுருளலுக்கான காரணங்களை அறிய மருத்துவப் பரிசோதனை உதவுகிறது.

ஒரு தேர்ந்த கண் மருத்துவரால் செய்யப்படும் பிளவுவிளக்கு சோதனை.

-    கண் நோய்: பின் மடிப்பு (இமைத்தகடு மற்றும் வெண்படலம்) வடுவை கண் நோய் ஏற்படுத்தலாம். வடுவால் இமையை வெளித்திருப்ப சிரமம் உண்டாகும்.

-    ஸ்டீவன்ஸ்-ஜான்சன் நோய்த்தாக்கம் மற்றும்  விழிவடு குமிழ்தோல் நோய்: இந்நிலைகள், இணையிமை மற்றும் இமையும் விழிக்கோள வெண்படலமும் இணையும் இடத்தில் வடுக்கள் உருவாக வழிகோலும்.

-    கிடைக்கோட்டு இமைத் தளர்ச்சியுடன் கூடிய சுருங்கும் இமையுட் பிறழ்ச்சி: கிடைக்கோட்டு இமைத் தளர்ச்சியை மீள்வரல் சோதனையால் கண்டறியலாம். பரிசோதனையாளர், நோயாளியை இமைக்க அனுமதிக்காமல், கீழ் இமையைக் கீழே இழுத்து விட்டு அது தன் இயல்பு நிலையை அடைவதைக் கவனிக்கிறார். பொதுவாக இமைப்பு தேவை இல்லாமலேயே இமை தன் இயல்பு நிலையை அடைகிறது. ஆனால் அதிகத் தொய்வு இருந்தால் இமைப்பதன் மூலமாகவே இமை தன் இயல்பு நிலையை அடையும். பரிசோதனையாளர் கீழ் இமையை விழிகோளத்தில் இருந்து விலகும்படி முன்பக்கமும் இழுக்கிறார். உள்ளுருள்வு இமை உட்பிறழல் இருந்தால் அது 6-15 மி.மீ அளவுக்கு விழிக்கோளத்தில் இருந்து இழுபடும். இயல்பான நிலையில் 2-3 மி.மீ இழுபடும்.

இமைமயிர் உட்சுருளலைப் பின்வரும் பிரச்சினைகளில் இருந்து வேறுபடுத்திக் காணவேண்டும்:

-    பிறவி ஈரிமை: மெய்போமியன் சுரப்பித் துளைகளில் அல்லது சிறிது பின்னாகப் பகுதி அல்லது முழு இரண்டாவது வரிசை இமைமயிர் காணப்படுதல். இவை இயல்பான இமை மயிரை விட  மெல்லியதும், குட்டையானதும் குறைவான நிறமியுடனும் இருக்கும்.

-    பெறப்பட்ட மெட்டாபிளாஸ்டிக் இமைமயிர்: ஸ்டீவென்ஸ் ஜாண்சன் நோய்த்தாக்கம், கண்நோய் மற்றும் வேதிப் புண்களின் பின் நிலைகளில் பெறப்பட்ட மெட்டாபிளாஸ்டிக் இமைமயிர் உருவாகலாம். இதில், இமை மயிர்கள் மெய்போமியன் சுரப்பி துளை அருகில் வெளியேறும். மேலும், விழியிமைப் படலக் கெரோட்டினாக்கம் போன்ற மாற்றங்களில் தொடர்புடையதாக இருக்கும்.

-     பிறவி இமைத்தோல் மடிப்பு: இமைத்தோல் மடிப்பில் ஒரு கூடுதல் கிடைக்கோட்டு தோல் மடிப்பு இமை விளிம்பு முழுவதும் காணப்படும். இமை மயிர்கள் மேல் நோக்கித் திரும்பி இருக்கும், குறிப்பாக உட்புறமாக. இவை வெண்படலத்தைத் தொட்டாலும் அரிதாகவே கண்ணுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இமையைக் கீழ் நோக்கி இழுக்கும் போது இமைத்தோல் மடிப்பில், இமை மயிர் வெளிப்புறமாகத் திரும்பி இருக்கும். இமை விளிம்பின் இயல்பு நிலை புலனாகும்.

-    இமையுட்பிறழல்: இமையுட்பிறழ்ச்சியில் இமை உட்திரும்பியும் போலி இமைமயிர் உட்சுருளலும் இருக்கும். விழிக்கோளத்தில் படும் இடங்களில் இமைமயிர் உறுத்தலை உண்டாக்கும். பிறவி இமையுட்பிறழலில், இமையைக் கீழ்நோக்கி இழுக்கும் போது, பிறவி இமைத்தோல் மடிப்பு போல் அல்லாமல், முழு இமையும் விழிக்கோளத்திலிருந்து வெளிப்புறமாக இழுக்கப்படும்.

மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே மருத்துவம் அளிக்க வேண்டும்.

இமைமயிர் உட்சுருளலுக்கு அறுவையே முக்கியமான சிகிச்சை.

மருத்துவம்:

-    செயற்கைக் கண்ணீரும் களிம்புகளும்: இமை மயிர் விழிக்கோளத்தோடு உரசுவதால் ஏற்படும் உறுத்தலைக் குறைக்க உராய்வு நீக்கிகளான செயற்கைக் கண்ணீரையும் களிம்புகளையும் பயன்படுத்தலாம்.

இமைமயிர் உட்சுருளலுக்கு அளிக்கப்படும் மருத்துவத்தோடு விழிவடு குமிழ்தோல் நோய் மற்றும் ஸ்டீவென்ஸ்ஜான்சன் நோய்த்தாக்கம் போன்ற நோய்களுக்கும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.

அறுவை சிகிச்சை:  

-    மயிர்பிடுங்கல்: இமை மயிரை இடுக்கி கொண்டு பிடுங்குதல்.

-    மின்னாற்பகுப்பு: மயிர்க்கால்களில் செருகப்படும் ஊசி மூலம் மின்சாரத்தைப் பாய்ச்சும் போது இமைமயிர் கால்கள் அழிக்கப்படுகின்றன.

-    குளிர்மருத்துவம்: மயிர்க்கால்கள் உறையவைக்கப்படும்போது அவை அழிகின்றன. விழிவடு குமிழ்தோல் அழற்சி இருந்தால் இதைத் தவிர்க்க வேண்டும்.

-    லேசர் வெப்ப அகற்றல்: இதன் மூலம் இமை மயிர்க்கால்கள் அழிக்கப்படுகின்றன.

-    வானொலி அதிர்வெண் அகற்றல்: இமை மயிர்களுக்கு இணையாக வைக்கப்படும் மிகச்சிறு கம்பி வலை மூலமாக வானொலி அதிர்வெண் செலுத்தப்பட்டு இமை மயிர்க்கால்கள் அழிக்கப்படுகின்றன.

 

  • PUBLISHED DATE : Feb 09, 2016
  • PUBLISHED BY : Zahid
  • CREATED / VALIDATED BY : R. Davidson
  • LAST UPDATED ON : Feb 09, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.