இமைமயிர் உட்திரும்பல்

கீழ் இமையின் தோலிலும் கண்குழி வட்டத் தசையிலும் இருக்கும் ஒரு தோல் மடிப்பால் இமைமயிர்கள் வெண்படலத்தை உரசும் நிலையே (இமைமயிர் உட்சுருளல்) இமைமயிர் உட்திரும்பல் எனப்படுகிறது. இமை மயிர்களின் நோக்குநிலை செங்குத்தாக இருக்கும். விழிசுழற்சி கீழ்தசையின் பலவீனத்தோடு இது சம்பந்தப்பட்டிருக்கலாம். பொதுவாக இது மூக்கு சார் கீழ் இமையின் மூன்றில் ஒரு பகுதியைப் பாதிக்கிறது. இது ஓர் இருபக்க நோய். இதனோடு இமையுட்பிறட்சியும் இருக்கக் கூடும். இந்நோய் மேல் இமையையும் பாதிக்கலாம். இக்கோளாறு தன்நிறமி ஆதிக்கக் கோளாறாக அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படும். ஆசிய மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. பல நோயாளிகளில் இது தானாகவே சரியாகி விடுகிறது. முகம் வளர்ச்சி அடைய அடைய குறைந்து மறைகிறது. இமைமயிர் உட்திரும்பல், எப்பிபிளிஃபேரான் ( Epiblepharon) என்று அழைக்கப்படுகிறது. இச்சொல்லில் எப்பி என்றால் மேல் மற்றும் பிளிஃபேரஸ் என்றால் இமை.

இமைமயிர் உட்திரும்பல் ஒரு இளம்பிள்ளைக் கோளாறு. வளர்ந்தவர்களிடத்திலும் காணப்படலாம். பெறப்படும் இமைமயிர் உட்திரும்பல், தைராயிடு கண் நோய் மற்றும் பிற தொங்கல் கோளாறுகளிலும் கண்டறிவிக்கப் பட்டுள்ளது.

கீழிமையில் இருக்கும் மிகைத் தோல் இருப்பால் இமைமயிர் உட்திரும்பல் கண்டறியப்படும்.  கீழிமையில் இருந்து மடிப்பின் அழுத்தம் அகற்றப்படும்போது  கோளாறு சரியாகும்.

குறிப்புகள்:

Garg Ashok, Rosen Emanuel, Mortensen Jes, Toukhy Essam El, Dhaliwal Ranjit S. Instant Clinical Diagnosis in Ophthalmology- Oculoplasty and Reconstructive Surgery. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2008. P 14.

Sundaram Venki, Barsam Allon, Alwitry Amar, Khaw Peng T. Oxford Speciality Training-Training in Ophthalmology. Oxford University Press 2009. P 96.

Agarwal Amar, Jacob Soosan. Color Atlas of Ophthalmology- The Quick-Reference Manual for Diagnosis and Treatment Second Edition. Thieme Medical Publishers, Inc. 2010. P 48- 49.

Katowitz James A. Pediatric Oculoplastic Surgery. Springer Science+Business Media New York 2002. P 197- 198.

Wright Kenneth W, Spiegel Peter H. Pediatric Ophthalmology and Strabismus Second Edition. Springer Science+ Business Media New York 2003. P 300- 301.

Nelson Leonard B, Olitsky Scott E. Harley’s Pediatric Ophthalmology Fifth Edition. Lippincott Williams & Wilkins 2005. P 371.

Yanoff Myron, Duker Jay S. Ophthalmology Third Edition. Mosby Elsevier Inc. 2009. P 1405.

Hoyt Creig S, Taylor David. Pediatric Ophthalmology and Strabismus Fourth Edition. Elsevier Saunders 2013. P 157.

Gold Daniel H, Lewis Richard Alan. Clinical Eye Atlas Second Edition. Oxford University Press 2011. P 18.

Fay Aaron, Dolman Peter J. Diseases and Disorders of the Orbit and Ocular Adnexa. Elsevier Inc. 2017. P 143- 144.

Nerad Jeffrey A, Carter Keith D, Alford Mark, Duker Jay S, Macsai Marian S, Schwartz Gary S. Rapid Diagnosis in Ophthalmology- Oculoplastic and Reconstructive Surgery. Mosby Elsevier Inc. 2008.

Bowling Brad. Kanski’s Clinical Ophthalmology- A Systematic Approach Eighth Edition. Elsevier Limited 2016. P 59.

Denniston Alastair KO, Murray Philip I. Oxford Handbook of Ophthalmology Third Edition. Oxford University Press 2014. P 164.

Kaiser Peter K, Friedman Neil J, Pineda Roberto. The Massachusetts Eye and Ear Infirmary- Illustrated Manual of Ophthalmology Fourth Edition. Elsevier Saunders 2014. P 99.

http://eyewiki.aao.org/Epiblepharon

Khwarg SI, Lee YJ. Epiblepharon of the lower eyelid: classification and association with astigmatism. Korean J Ophthalmol 1997; 1: 111- 117.

Wladis EJ. Transconjunctival epiblepharon repair. Ophthal Plast Reconstr Surg 2014; 30: 271- 272.

 

இமைமயிர் உட்திரும்பல் கொண்ட 80% குழந்தைகளுக்கு பிற கண் பிரச்சினைகள் எதுவும் இருப்பதில்லை.

சில நோயாளிகளுக்கு அறிகுறிகள் எப்போதும் இருக்கும். சிலருக்கு கீழ் நோக்கி பார்க்கும் போதே அறிகுறிகள் தென்படும்.

இமைமயிர் உட்திரும்பல் நோயின் அறிகுறிகள் வருமாறு:

 • நீரொழுகல் அல்லது மிகைக்கண்ணீர்
 • கசிவு
 • அயல்பொருள் உறுத்தல் உணர்வு
 • கண் செம்மை
 • வெண்படல மேற்திசு குறைபாடு
 • ஒளிக்கூச்சம்
 • அரிப்பு
 • கண்களைத் தேய்த்தல்
 • அடிக்கடி இமைத்தல்

இமைமயிர் உட்திரும்பல் பல்வேறு காரணங்களோடு தொடர்புடையது:

 • இமைமீள் திருப்பிகள் சரியாக உருவாகாமை.
 • மீள்திருப்பிகள் தோலோடு அணுக இயலாமை.
 • கண்குழி சுற்றுத்தசை மிகை வளர்ச்சி
 • அடியிலுள்ள இமைத்தகட்டுடன்  கண்குழி சுற்றுத்தசையும் தோலும் பலவீனமாக இணைந்து கண்குழி சுற்றுத்தசையின் முன் – இமைத்தகட்டுப் பகுதி இமை விளிம்புக்கு மிக அருகில் நுழைதல்

இந்த அடித்தள நடைமுறையால் கண்குழி சுற்றுத்தசை மற்றும் இமைத் தசை  முன் – இமைத்தகட்டுப் பகுதி இமை விளிம்புக்கு மிக அருகில் நுழைதல் மற்றும் இமை விளிம்புக்கு மேல் பரவலால் பிசிர்மயிர்கள் உள்நோக்கி சுழற்சி அடைகின்றன.

தைராயிடு சம்பந்தப்பட்ட தொங்கலால்  இமைமயிர் உட்திரும்பல் ஏற்படும்போது உட்குழி அழுத்தம் அதிகரித்து இமையின் முன் மடல் மேல்பரவல் நிகழக்கூடும்.

மருத்துவ அம்சங்களைக் கொண்டு நோய் கண்டறியப்படுகிறது.

இமைமயிர் உட்திரும்பல் இருபக்கம் ஏற்படும். பொதுவாக கீழிமையின் நடுப்பகுதியைப் பாதிக்கும்.

அறிகுறிகள் இல்லாமல் இருக்கும்.  அல்லது அரிப்பு போன்ற பல அம்சங்களைக் கொண்டிருக்கும். கண்ணை உறுத்தும் மயிரின் எண்ணிக்கையைப் பொறுத்து அறிகுறிகள் அமையும்.  நுண்மையான சில மயிர்கள் குறைந்த அறிகுறிகளைக் காட்டும். தடித்த அதிக மயிரால் அறிகுறிகள் அதிகமாகும். இதன் காரணமாக வயதைப் பொறுத்து அறிகுறிகள் மாறும். பார்வைச் சிதறல் தூண்டப்படுவதால் குழந்தைகளுக்கு பார்வைக் கூர்மை குறையும்.

வகைப்படுத்தல்

தோல்மடிப்பின் உயரம், பிசிர் மயிர்கள் வெண்படலத்தைத் தொடும்  பரப்பு மற்றும் வெண்படல அரிப்பின் பரப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கீழிமை மயிர் உட்திரும்பலின் கடுமைக்கு குவார்க் மற்றும் லீ (1997) ஒரு தர அளவைக் கூறினர்.

வேறுபடுத்தும் கண்டறிதல்

பின் வருவனவற்றில் இருந்து இமைமயிர் உட்திரும்பலை வேறுபடுத்திக் காணவும்

 • பிறவி இமையுட்பிறட்சி:  இதில் இமை விளிம்பு உட்பிறழ்ந்து இருக்கும். இது தானாகவே சீராகாது. எனவே அறுவை சிகிச்சை பொதுவாகத் தேவைப்படும்.
 • இமைமயிர் உட்சுருளல்: இது ஏற்பட்ட ஒரு கோளாறு. முதலில் இயல்பாக இருந்த இமைமயிர் பின்புற திசைமாறல் அடையும். இந்தத்  திசை மாறிய இமை மயிர்கள் இமை முழுவதும் பரவும் அல்லது  ஒரு பகுதியைப் பாதிக்கும்.
 • ஈரிமைமயிர்த்தொடர்:  மெய்போமியன் சுரப்பித் துளைகளில் இருந்து ஒரு கூடுதல் இமைமயிர் தொடர் வளரும். இமைமயிர் உட்திரும்பலில் காணப்படுவது போலவே இமை விளிம்பு அதன் இயல்பான நிலையிலேயே இருக்கும்.
 • கண்மூலை மடிப்பு: இமை விளிம்பில் தோல் மடிப்பு உருவாகும். அரைவட்ட கண்மூலை மடிப்பால் கூடுதல் நடு கண்மூலை இழுவிசை ஏற்பட்டு இமைமயிர் உட்திரும்பல் கோளாறை இன்னும் மோசமாக்கும்.
 • பிறவி மூக்குசார் கண்ணீர் நாள அடைப்பு: இமைமயிர் உட்திரும்பல் சிகிச்சைக்குப் பின் கண்ணீர்ப் பெருக்கு தொடர்ந்தால் பிறவி மூக்குசார் கண்ணீர் நாள அடைப்பு சோதனை செய்ய வேண்டும்.
 • ஒவ்வாமை கண்சவ்வழற்சி: நீடித்த இருபக்க கண் அரிப்பு, நீரொழுகல் மற்றும் கண் செம்மை இருந்தால் ஒவ்வாமை கண்சவ்வழற்சியா என சோதிக்க வேண்டும்.

 

மருத்துவ கண்காணிப்பின் கீழ் நோய்மேலாண்மை செய்யவேண்டும்.

மருத்துவ சிகிச்சை

கண் பரப்போடு இமைமயிர் தொடவில்லை என்றாலோ அல்லது விலகல் பார்வைத்தெளிவின்மை இல்லை என்றாலோ இமைமயிர் உட்திரும்பலைப் பாதுகாப்பாக மேலாண்மை செய்ய முடியும்.

 • மசகு செயற்கைக் கண்ணீர்:  இதம் அளிக்கும் மருந்தாக இவற்றைப் பயன்படுத்தலாம். வெண்படல அரிப்பு இருந்தாலும் சில குழந்தைகளுக்குப் பிரச்சினை இருப்பதில்லை.
 • ஹையலூரோனிக் அமிலம்: ஹையலூரோனிக் அமிலத்தை சார்-கண்குழி சுற்றுத்தசையில் செலுத்துவது,  தானாகவே சரியாகும் காலம் வரை ஒரு சமரச ஏற்பாடாக அமையும்.
 • அறுவை சிகிச்சை
 •  வெண்படல அழற்சி இருந்தால் அறுவை சிகிச்சை அவசியம்:
 • இமை திருப்பும் தையல்: அடிக்கடி திரும்பி வரும் நேர்வுகளுக்கு வெட்டுதல் இல்லாத இமை திருப்பும் தையல் அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது.
 • கண்குழி சுற்றுத்தசை மற்றும் தோல் அகற்றல்: மிகைத் தோலும் கண்குழி சுற்றுத் தசையும் சுழல் வடிவாக அகற்றப்படும். இந்த முறையால் வடு ஏற்படும்.
 • மாறுபக்கக் கண்சவ்வு அணுகுமுறை: திரும்பவும் உருவாகாத  மற்றும் வடு ஏற்படுத்தாத பலன் தரும் அணுகுமுறை விவரிக்கப்பட்டுள்ளது (வ்லாடிஸ், 2014).

திறந்த பரப்புகளை மூட பின் இமைத்தகடு மற்றும் இமை விளிம்பில் சளிச்சவ்வு ஒட்டு அரிதாகத் தேவைப்படலாம்.

நோய்முன்கணிப்பு:

பொதுவாக சிறப்பானதாக இருக்கும். மீண்டும் ஏற்படாது.

 

 

 

 • PUBLISHED DATE : Mar 30, 2017
 • PUBLISHED BY : DEEPAK CHANDRA
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Mar 30, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.