ஈரிமைமயிர்த்தொடர்

இயல்பாக இருக்கும் இமைமயிர்த் தொடருக்கு இணையாக அதற்குப் பின்னால் இன்னொரு மயிர்த்தொடர் இருப்பதே ஈரிமைமயிர்த்தொடர் என்று அழைக்கப்படும். இது பிறவியிலும் அமையலாம். அல்லது பின்னர் ஏற்பட்டதாகவும் இருக்கலாம். ஆதிக்க இயல்நிறமி மரபுவழி வந்தடைவதால் உண்டாகும் குடும்ப வரலாறாகவும் இருக்கலாம். அல்லது காயம் மற்றும் கடுமையான அழற்சியின் காரணமாக ஏற்பட்டதாகவும் இருக்கலாம். மெய்போமியன் அல்லது இமைவிளிம்புத்தகட்டுச் சுரப்பி உருவாக்கத்துக்காக ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்ட மேற்தோல் கருவணுக்கள் வகைப்படுத்தல் காரணமாக இவ்வாறு உருவாகலாம் என்று கருதப்படுகிறது. இமைவிளிம்புத்தகட்டில் மாற்றமைவு பெற்றுள்ள தோல்மெழுகுச் சுரப்பிகளே மெய்போமியன் சுரப்பிகள்.  தோலில்  மயிர்மெழுகு அமைப்பு என்பதில் மெழுகுச் சுரப்பிகளும், மயிர்க்கால்களும், வியர்வைச் சுரப்பிகளும் அடங்கும். மெய்போமியன் சுரப்பி வேறுபாடுற்று முந்திய மயிர்-மெழுகு அமைப்பாக மாறி ஈரிமைமயிர்த்தொடரை உருவாக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இமைமயிர்க்கால்கள் இமைவிளிம்புத் தகட்டின் முன் பரப்புக்கு எதிராக அமைந்துள்ளது. மயிரிழை முன் இமை விளிம்புத் தோலில் இருந்து வெளிவந்து கண்கோளத்தில் இருந்து விலகி வளைகிறது. இமை விளிம்பின் முன் இருந்து பின் வரை கீழ்க்காண்பவை காணப்படும்:

 • இமைமயிர்
 • சாம்பல் கோடு மற்றும் பின்மடல்
 • மெய்போமியன் சுரப்பி மயிர்க்கால்
 • சளித்தோல் சந்தி
 • கண்சவ்வு

ஒரு சில இமை மயிர்களாகவும் ஒரு இரண்டாம் இமை மயிர் வரிசையாகவும் ஈரிமைமயிர்த்தொடர் காணப்படலாம். இது பொதுவாக வெண்படலத்தோடு உராய்ந்து கண் அரிப்பை ஏற்படுத்தலாம். ஈரிமைமயிர்த்தொடர்போல சில வேளைகளில் மூன்று அல்லது நான்கு வரிசைகளும் உருவாகலாம்.

குறிப்புகள்

Dutton Jonathan J, Gayre Gregg S, Proia Alan D. Diagnostic Atlas of Common Eyelid Diseases. Taylor & Francis Group, an Informa business 2007. P 70.

Wright Kenneth W, Spiegel Peter H. Pediatric Ophthalmology and Strabismus Second Edition. Springer Science+ Business Media New York 2003.

Roy Frederick Hampton, Fraunfelder Frederick W, Fraunfelder Frederick T, Tindall Renee, Jensvold Bree. Roy and Fraunfelder’s Current Ocular Therapy Sixth Edition. Saunders Elsevier 2008. P 435- 437.

Kanski Jack J. Clinical Ophthalmology- A synopsis Second Edition. Butterworth Heinemann Elsevier 2009. P 68- 69.

Bowling Brad. Kanski’s Clinical Ophthalmology- A Systematic Approach Eighth Edition. Elsevier Limited 2016. P 26- 27.

Fay Aaron, Dolman Peter J. Diseases and Disorders of the Orbit and Ocular Adnexa. Elsevier Inc. 2017. P 142- 143.

Krachmer Jay H, Mannis Mark J, Holland Edward J. Cornea- Fundamentals, Diagnosis and Management Volume One Third Edition. Mosby Elsevier 2011. P 355- 356.

Yanoff Myron, Sassani Joseph W. Ocular Pathology Seventh Edition. Elsevier Saunders 2015. P 152.

Denniston Alastair KO, Murray Philip I. Oxford Handbook of Ophthalmology Third Edition. Oxford University Press 2014. P 138.

Wright Kenneth W, Strube Yi Ning J. Pediatric Ophthalmology and Strabismus Third Edition. Oxford University Press 2012. P 590- 591.

http://emedicine.medscape.com/article/1212908-overview  

 

நோயறிகுறிகளில் அடங்குவன:

 •  பார்வை குறைதல்
 • கண் வலி
 • கண் சிவப்பு
 • கண் அரிப்பு
 • அயல்பொருள் உணர்வு
 • நீரொழுகல்
 • வீக்கம்
 • வெண்படல வடு
 • வெண்படலப் புண்

 

 

ஈரிமைமயிர்த்தொடர் பிறவியில் உருவானதாக அல்லது  வேறு காரணங்களால் ஏற்பட்டதாக இருக்கலாம்.

பிறவி ஈரிமைமயிர்த்தொடர்:

பிறவி ஈரிமைமயிர்த்தொடர் பெரும்பாலும் எப்போதும் நிணநீர்வீக்க ஈரிமைமயிர்த்தொடர் நோய்த்தாக்கத்தோடு (LDS) தொடர்புடையாதாகவே இருக்கும். இது ஓர் இயல்நிறமி ஆதிக்க நிலை ஆகும். இமை விளிம்பில் இரு இணை வரிசை பிசிர்மயிரும் ஓரத்தில் நிணநீர் தேக்க வீக்கமும் காணப்படும்.  ஈரிமைமயிர்த்தொடர் தென்படும் போது நிணநீர்வீக்கம் இருக்காது. பத்து வயதுக்கு மேல் தோன்றும்.  இமையுட்பிறழல், தொங்கல், உதடு மற்றும் அண்ணப் பிளவு, தோல் கழுத்து, முதுகெலும்புக் கோளாறு, பிறவி இதயக் கோளாறு போன்றவை இதனுடன் தொடர்புடைய கோளாறுகள். தனி ஈரிமைமயிர்த்தொடர் மிக அரிதாகவே காணப்படும்.

பெறப்பட்ட ஈரிமைமயிர்த்தொடர்: இதுவே பரவலாகக் காணப்படுகிறது. கண்ணிமையழற்சி, ஸ்டெபிலோகாக்கல் அதியுணர்திறன், மெய்போமியன் சுரப்பி செயலிழப்பு, கண்வேதியற்காயம், ஸ்டீவென்ஸ்-ஜாண்சன் நோய்த்தாக்கம் மற்றும்  குமிழ்வடுத்தோல் போன்ற நீடித்த அழற்சிக் கோளாறுகளுடன் இது காணப்படும்.

 

ஒரு கண் மருத்துவர் பிளவு விளக்கின் உதவியால் நோயைக் கண்டறிகிறார்.

பிறவி ஈரிமைமயிர்த்தொடர்: இயல்பான இமை மயிர் வரிசைக்குப் பின் இமை மயிர்கள் காணப்படுகின்றன. மெய்போமியன் சுரப்பி துவரங்களுக்கு சிறிது பின்னாக இந்த இமைமயிர்கள் எழுகின்றன. இயல்புக்கு மாறான இந்த மயிர்கள் மெல்லியதாகவும் இயல்பு இமைமயிரை விட குட்டையாகவும் பெரும்பாலும்  பின்புறமாக நோக்கியும் காணப்படும். சிசுப் பருவத்தில் இந்த முடியால் பிரச்சினை எதுவும் இருக்காது. ஐந்து வயது வரை அறிகுறிகளும் காணப்படுவதில்லை.

பெறப்பட்ட ஈரிமைமயிர்த்தொடர்: மயிர்க்காம்புகளில் மெய்போமியன் சுரப்பிகள் இடம்மாறி இருப்பதால் மெய்போமியன் சுரப்பித் துவாரங்களில் இருந்து பல்வேறு எண்ணிக்கையில் மயிர் வளர்ச்சி ஏற்படுகிறது. பிறவி ஈரிமைமயிர்த்தொடர் போல் அல்லாமல் இந்த மயிர்கள் நிறமி அற்றனவாகவும், வளர்ச்சி குன்றியும், பொதுவாக  இந்நோய் அறிகுறி காட்டுவதாகவும் இருக்கும்.

கண் சவ்வு வீக்கம், செம்மை, வெண்படலப் புறத்திசு உடைவு, வடு மற்றும் படல உருவாதல் காணப்படும்.

வகைப்படுத்தும் நோய்கண்டறிதலில் அடங்குவன:

 • மைமயிர் உட்சுருளல்
 • இமையுட்பிறட்சி
 • இமைத்தோல்மடி: பெரும்பாலும் குழந்தைகளில் காணப்படும். இதில் இமைமுடி திசை மாறி இருப்பதில்லை. ஆனால் தோல் மடியால் கண் கோளத்துக்கு எதிராகத் தள்ளப்படும்.
 • நீடித்த இமைக் கண்சவ்வு அழற்சி
 • வடுவுறு கண்சவ்வழற்சி

மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே நோய்மேலாண்மை செய்ய வேண்டும்.

மருத்துவ சிகிச்சை

அறிகுறிகள் அற்ற நோயாளிகளுக்கும் வெண்படல நோய் கொண்டவர்களுக்கும் எந்த சிகிச்சையும் தேவையில்லை.

 • மசகு கண் சொட்டுகளும் களிம்புகளும், வெண்படல மேற்திசு உடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு அறிகுறிகள் நீக்கி பலன் அளிக்கும் .
 • மென் தொடு வில்லை: வெண்படல மேற்திசு உடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு வெண்படலத்தைப் பாதுகாக்க மருத்துவ ரீதியான தொடுவில்லையைப் பயன்படுத்தலாம்.
 • அறுவை சிகிச்சை :
 •  ஈரிமைமயிர்த்தொடருக்கு பலவிதமான அறுவை சிகிச்சை முறைகள் பயன்படுத்தப் படுகின்றன.
 • மின்னாற்பகுப்பு முடிபிடுங்கல்: சிறிய எண்ணிக்கையில் ஆங்காங்கே காணப்படும் அல்லது குவிந்திருக்கும் இடங்களில் சிகிச்சை மேற்கொள்ள இது பயனுள்ளது. பகுதி மரப்பு மருந்தின் மூலம் செய்யப்படுகிறது. ஆனால் குழந்தைகளுக்கு முழு மயக்க மருந்து அளிக்க வேண்டும்.
 • குளிர் அறுவை: அதிகப் பரப்பில் ஈரிமைமயிர்த்தொடர் இருக்குமானால் இம்முறை பின்பற்றப்படும். மயிர்கால் உறையவைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. ஆனால் இம்முறையில் தேர்வு செய்ய இயலாததால் முழுப்பகுதியும் அழிக்கப்பட்டு இமைமயிர் முற்றிலுமாக  இல்லாத நிலை ஏற்படக்கூடும். கண் குமிழ்வடு இருக்குமானால் இம்முறையைத் தவிர்க்க வேண்டும்.
 • லேசர் வெப்ப அகற்றல்: இமை மயிர்க்காலை அழிக்க பயன்படுத்தப் படுகிறது.
 • ரேடியோஅதிர்வு அகற்றல்: சிறு வலை மயிர்க்கால் வரை வைக்கப்பட்டு பின் ரேடியோ அதிவால் அழிக்கப்படுகிறது.
 • இமை பிளப்பு முறை: ஈரிமை மயிருக்கு முன் இமை விளிம்பில் வெட்டி இம்முறை செயலாக்கப் படுகிறது.  மின்பகுப்பு, வெட்டு அல்லது குளிர்சிகிச்சை இமைக்காலில் நேரடியாக பிரயோகப்படுத்தப்பட்டு பின் வெட்டு மூடப்படுகிறது.

நோய்முன்கணிப்பு

வெண்படலத்துக்கு நிரந்தர சிதைவு ஏற்படும் முன் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டால் முன்கணிப்பு சரியாக இருக்கும்.

அறுவைக்குப் பின்னும் ஈரிமைமயிர்தொடர் வரலாம்.

சிகிச்சை அளிக்காவிட்டால் ஏற்படும் சிக்கல்கள்:

 • வெண்படல வடு
 • வெண்படல மெலிவு
 • வெண்படலப் புண்

இமையழற்சி, கண்குமிழ்வடு ஆகிய நோய்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டால் பெறப்பட்ட ஈரிமைமயிர்த்தொடர் தாமதப்படுத்தப்படலாம்.

 

 • PUBLISHED DATE : Mar 28, 2017
 • PUBLISHED BY : DEEPAK CHANDRA
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Mar 28, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.