எட்டப்பார்வை

இது விலகல் பிழையின் ஒரு வகை. முடிவிலியில் இருந்து வரும் இணை கதிர்கள் கண் ஓய்வில் இருக்கும் போது விழித்திரையின் ஒளி உணர் அடுக்கிற்கு அப்பால் குவிவதால் ஏற்படுகிறது.

டோண்டர்ஸ் (1864) தமது வரலாற்று எட்டப்பார்வை மீள்பார்வையில் இதைப்பற்றி விவாதிக்கிறார்.  வெள்ளெழுத்து மற்றும் அண்மைபார்வையில் எட்டப்பார்வை ஆகியவற்றின் விளைவின் இடையில் காணப்படும் குழப்பமே பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணம்.

சுய கண்தக அமைவின் மூலம்  சிறு அளவிலான எட்டப்பார்வை சீர் செய்யப்படலாம். அதிக அளவிலான விலகல் பிழையும் இந்த வழியில் சரி செய்யப்படலாம். ஆனால் அறிகுறிகள் தீரவில்லை எனில் குவி ஆடிகள் தேவைப்படும்.

ஒளிவிலகல் சீர்நிலையில் விலகல் பிழை இருப்பதில்லை. எட்டப்பார்வை சீரமைப்புத் தேவையும் இல்லை. வெண்படலமும் விழிவில்லையும் போதுமான அளவுக்கு ஒளிக்கதிர்களைக் குவிக்காத போது விலகல் பிழை நேரிட்டு மங்கலான பிம்பங்கள் தோன்றுகின்றன. விலகல் பிழையை அளக்கும் அலகு டயோப்டர்  (D) ஆகும். மீட்டர் அளவையில் குவியதூரத்தின் தலைகீழ் என அது வரையறுக்கப் படுகிறது.

எட்டப்பார்வையில், வெண்படலம் தட்டையாக அல்லது அச்சு நீளம் மிகவும் குட்டையாக இருக்கும். ஆகவே, விழித்திரையை அடையும் நேரத்தில் பிம்பங்கள் குவிவதில்லை. தெளிவான பார்வைக்கு, எட்டப்பார்வையுள்ள கண், தூரப் பொருளை விழித்திரையில் குவிக்க விழிவில்லையின் ஆற்றலை அதிகரிக்கும் அளவுக்குத் தகவமைவு செய்யவேண்டும். இதற்கு பிசிர் தசைகள் சுருங்க வேண்டும்.  எனவே எட்டப்பார்வை கண் ஒருபோதும் ஓய்வில் இல்லாமல் அண்மைப் பார்வைக்காக  அதிக சிரமம் எடுக்கவேண்டியது நேரிடும். எட்டப்பார்வை சீரமைப்பு தெளிவான பார்வைக்காக கூடுதல் குவி ஆற்றலை சேர்க்கிறது.

தக அமைவு: கண்ணின் தக அமைவினால் சரிசெய்யப்படும் எட்டப்பார்வை நிலைமாறும் எட்டப்பார்வை எனப்படும்.  மீதியுள்ள சரிசெய்யப்படாத எட்டப்பார்வை  அறுதி எட்டப்பார்வை ஆகும். மொத்த எட்டப்பார்வையில் இருந்து நிலைமாறும் எட்டப்பார்வையைக் கழித்து எஞ்சி இருக்கும் எட்டப்பார்வை காணப்படும் எட்டப்பார்வை என்று அழைக்கப்படும். வயது ஆக ஆக தக அமைவால் எட்டப்பார்வையை சரிசெய்ய முடியாது. அப்போது அறுதி எட்டப்பார்வையே எஞ்சும். ஆகவே அறுதி எட்டப்பார்வைக்கும் காணப்படும் எட்டப்பார்வைக்கும் இடையில் வேறுபாடு இருக்காது.

பிசிர் மயிரின் உள்ளுறை வலிமையால் சிறிது எட்டப்பார்வை சரிசெய்யப்படும்  இதை உள்ளுறை எட்டப்பார்வை என்பர். இது இளையோருக்கு அதிகமாகவும் முதியோருக்குக் குறைவாகவும் இருக்கும். முழுமையான தக அமைவு வாதம் உள்ளுறை எட்டப்பார்வையை இல்லாது ஆக்கும். முழு தவமைவு வாதத்தில் மதிப்பிடப்படும் விலகல் பிழை முழு எட்டப்பார்வை எனப்படும்.

அறிகுறிகள்

Agarwal Sunita, Agarwal Athiya, Apple David J, Buratto Lucio, Aliό Jorge L, Pandey Suresh K, Agarwal Amar. Textbook of Ophthalmology Vol 1. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2002. P 160- 164.

Khurana AK. Theory and Practice of Optics and Refraction Second Edition. Reed Elsevier India Private Limited 2008. P 62- 66.

Sharma Yog Raj, Sudan Rajeev. Concise Textbook of Ophthalmology. Reed Elsevier India Private Limited 2007. P 37- 39.

Mukherjee PK. Ophthalmic Assistant. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2013. P 73- 77.

Khurana AK. Comprehensive Ophthalmology Sixth Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2015. P 17.

Sihota Ramanjit, Tandon Radhika. Parsons’ Diseases of the Eye Twenty Second Edition. Elsevier 2015. P 75- 77.

Ahmed E. Comprehensive Manual of Ophthalmology. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2011. P 97- 98.

Yanoff Myron, Duker Jay S. Ophthalmology Third Edition. Mosby Elsevier 2009. P 107- 117.

Bope, Rakel, Kellerman. Conn’s Current Therapy. Saunders Elsevier 2011. P 187- 193.

http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1771184

http://onlinelibrary.wiley.com/doi/10.1111/opo.12168/pdf

http://eyewiki.aao.org/Hyperopia

http://eyewiki.aao.org/Conductive_Keratoplasty

Donders FC. On the Anomalies of Accommodation and Refraction of the Eye. New Sydenham Society. London 1864.

 

நோயறிகுறிகள்

நோயாளியின் வயதைப் பொறுத்தும் விலகல் பிழையின் கடுமையைப் பொறுத்தும் அறிகுறிகள் வேறுபடும். அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம்.  இளம் வயதினருக்கு ஏற்படும் சிறு அளவிலான விலகல் பிழை அறிகுறிகள் இன்றியே கண் தகவமைவு மூலம் தானே சரியாகக் கூடும்.

அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு இருப்பவை:

எட்டப்பார்வை முற்றிலும் சரிசெய்யப்பட்ட பின்: சில சமயம் எட்டப்பார்வை முற்றிலுமாக சரிசெய்யப்படும் (பார்வை இயல்பு நிலைக்குத் திரும்பும்). ஆனால் கண் தகவமைவு முயற்சிகளால் நோயாளிக்குக் கண்ணிறுக்க அறிகுறிகள் தோன்றும்.

 • கண்ணிறுக்கம்
 • முன், முன்நெற்றி தலைவலி
 • நீரொழுகல்
 • இலேசான ஒளி இடர்

நேரம் செல்லச்செல்ல அறிகுறிகள் மோசமாகி தொடர்ந்து அண்மைப் பணி ஆற்றும்போது நிலை மோசம் ஆகும்.

எட்டப்பார்வை முற்றிலுமாக சரிசெய்யப்படாத போது: தன்னிச்சையாக கண் தகவமைவு முயற்சிகளால் எட்டப்பார்வை முற்றிலுமாக சரிசெய்யப்படாத போது நோயாளி தொலை பார்வையை விட அண்மைப் பார்வையில் கோளாறுகளை குறிப்பிடுவார். இதற்கு தொடர் தகவமைவு முயற்சியே காரணம். நோயாளிக்கு கீழ்வருவன காணப்படும்:

 • கண்ணிறுக்கம்
 • அண்மை நோக்கில் குறை பார்வை

எட்டப்பார்வை அதிகமாக இருக்கும்போது: எட்டப்பார்வை அதிகமாக இருக்கும்போது (4 டி-யை விட அதிகம்) கண் தக அமைவு இருக்காது. நோயாளிக்கு கீழ்வரும் நிலை காணப்படும்:

 • அண்மை மற்றும் தொலை பார்வையில் குறிப்பிடத் தக்க அளவுக்கு குறை பார்வை.
 • மேலும்  முழுமையான எட்டப்பார்வை இருக்கும்போது: முதுமையுறும் போது வெளிப்படாத மற்றும் சூழலுக்கு ஏற்ப அமையும் எட்டப்பார்வை கண்ணின் முழுமையான எட்டப்பார்வை யாக அதிக விகிதத்தில் மாறும். இது அதிகரித்துவரும் பார்வைக் குறைபாட்டுக்கு வழிநடத்தும். நோயாளிக்கு ஏற்படுவது:
 • இளம் வயதில் மங்கல் பார்வை
 • கண் தக அமைவில் விறைப்பு இருந்தால்:  கண் தக அமைவில் விறைப்பு இருந்தால் போலி கிட்டப்பார்வை உருவாகும்.  இதனை தசை இயக்கத்தைக் கட்டுப்படுத்திக் கண்டறியலாம். அது கீழ்வருமாறு காணப்படும்:
 • இடைவிட்டு பார்வை மங்கல்
 • பொதுவாக குழந்தைக்கு இமை நோய்கள் (இமையழற்சி, இமை வீக்கம்),  குவி மாறுகண்,  அல்லது பார்வைத் தெளிவின்மை.

 

எட்டப்பார்வை பின்வருமாறு இருக்கலாம்:

 • அச்சுசார் எட்டப்பார்வை: அச்சு சார் எட்டப்பார்வையே பொதுவான வடிவம்.கண்ணின் மொத்த விலகல் திறன் இயல்பாக இருக்கும். ஆனால் கண்கோளத்தின் அச்சு குறுகி இருக்கும்.  கண்ணின் முன்பிற்பகுதி நீளம் 1 மி.மீ குறையும்போது  3 டயோப்டர் எட்டப்பார்வை ஏற்படுகிறது.
 • வளைவு எட்டப்பார்வை: வளைவு எட்டப்பார்வையில் வெண்படலம் அல்லது விழிவில்லை அல்லது இரண்டின் வளைவும் இயல்பை விட அதிகரிக்கிறது (தட்டையாதல்).  இதனால் கண்ணின் விலகல் திறன் மாறுகிறது.  வளைவின் ஆரம் 1 மி.மீ. கூடும் போது எட்டப்பார்வை 6 டி ஆகிறது.
 • குறியீட்டு எட்டப்பார்வை: வயதின் காரணமாக  விழிவில்லையின் விலகல் குறியீடு மாறுவதால் குறியீட்டு எட்டப்பார்வை ஏற்படுகிறது.
 • அமைநிலை எட்டப்பார்வை: விழிவில்லை பின்பகுதியில் அமைந்திருப்பதால் அமைநிலை எட்டப்பார்வை ஏற்படுகிறது.
 • விழிவில்லை இன்மை: பிறவியிலேயே அல்லது அறுவை அல்லது பிற்பகுதியில் அமைதல் போன்ற பெறப்பட்ட காரணங்களால் விழிவில்லை இல்லாமல் இருப்பதால் விழிவில்லையின்மை என்னும் கோளாறு ஏற்படுகிறது. இக்கோளாறால் மிகை எட்டப்பார்வை ஏற்படும்.

வெள்ளெழுத்தில் காணப்படுவது போல இது ஒரு செயல்பாட்டு நிலையாகவோ அல்லது தசை செயலிழப்பு மருந்துகளால் தூண்டப்பட்டதாகவோ இருக்கலாம்.

அறிகுறிகள் மற்றும் மருத்துவக் நோய்க்குறிகளின் அடிப்படையில் நோய் கண்டறியப் படுகிறது.

மருத்துவ நோய்க்குறிகள்:

 • பார்வைக் கூர்மை: எட்டப்பார்வையின் விகிதம் மற்றும் கண்ணின் தகவமைவுத் திறன் ஆகியவற்றைப் பொறுத்து பார்வைக் கூர்மை அமைகிறது. விலகல் பிழை குறைந்த விகிதத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு இயல்பான பார்வைக் கூர்மை இருக்கும். இருப்பினும், அருகில் இருக்கும் பொருட்களைப் பார்க்கும் போது பார்வைக் கூர்மை குறையும்.
 • மூடல் சோதனை: மூடல் சோதனை, ஒரு தகவமைவு குவிதல் மாறுகண்ணை வெளிப்படுத்துகிறது.  தகவமைவு குவிதல் (AC) மற்றும் தகவமைவு (A) சமநிலை (AC/A விகிதம்) அடையும் மாற்றத்தால் இருவிழிப்பார்வையைப் பேணுதல் கடினமாகிறது.  தெளிவான பார்வையால் கிடைக்கும் வெளிப்படையான நன்மைகளுக்காக  இருவிழிப்பார்வையின் நன்மைகள் பலிகொடுக்கப் படுகின்றன.  சிறந்த கண் பார்வை ஆதிக்கம் பெறுகிறது. அடுத்த கண்ணில் தகவமைவு குவிதல் மாறுகண் உருவாகிறது.
 • இமைகள்: ஒருவருக்கு இமையழற்சி, இமைக் கட்டி அல்லது இமை வீக்கம் ஏற்படலாம். இமை நிலை மற்றும் எட்டப்பார்வை ஆகிய இரண்டுக்கும் இடையில் இருக்கும் இணையுறவு தெளிவாகத் தெரியவில்லை.
 • கண்கோளம்: கண் கோளத்தின் அளவு இயல்பாக அல்லது சிறியதாக இருக்கலாம்.
 • வெண்படலம்: வெண்படலமும் சற்றே அளவில் சிறியதாக இருக்கும். இதனுடன் தட்டையான வெண்படலுமும் அமைய வாய்ப்புண்டு.
 • முன் அறை: அதிக எட்டப்பார்வையில் கண் முன் அறை ஆழமற்றதாக இருக்கும்.
 • கண்ணழுத்தம்: அதிக எட்டப்பார்வைக் கண் சிறிதாகவும், வெண்படலம் சிறிய அளவிலும் முன் அறை ஆழமற்றதாகவும் இருக்கும். வயதின் காரணமாக விழிவில்லை அளவில் அதிகரிக்கும்.  இதனால் குறுகிய கோண மூடல் கண்ணழுத்தத்தால் கண் பாதிக்கப்படலாம்.
 • விழிவில்லை:  விழிவில்லை பின்புறமாக இடப்பெயர்ச்சி அடையலாம்.
 • விழியடிப்பகுதி: விழியடிப்பகுதி சோதனை சிறு கண் தகட்டைக் காட்டுகிறது. இரத்தக் குழல்கல் செறிந்தும் தெளிவான விளிம்புகள் அற்றும் காணப்படுகிறது.  இதனால் நுண்காம்பழற்சி உருவாகலாம். தகட்டில் வீக்கம் இல்லாததால் இதனை போலி நுண்காம்பழற்சி எனலாம்.  ஒளியின் பிரதிபலிப்பால் விழித்திரை மினுங்கும். இதனை மாறும் பட்டுத் தோற்றம் என்று அழைப்பர். விழித்திரைக் குருதிக்குழல்களின் அனிச்சைசெயல் தூக்கலாகி குழல்கடினமாகும் மாற்றங்களைத் தூண்டும். குழல்கள் கடினமாகி அசாதாரணமான கிளைகளை உருவாக்கும்.
 • கேளா ஒலியியல் அல்லது உயிரளவியல்: ஒரு கேளா ஒலியியல் அலகிடுதல் அல்லது உயிரளவியல் கண் கோளத்தின் முன் – பிற்பகுதி நீளத்தைக் காட்டும்.

எட்டப்பார்வையின் கடுமை:

 கடுமையைப் பொறுத்து எட்டப்பார்வையைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

 • குறைவானது: + 2 D வரை.
 • மிதமானது: + 2.25 லிருந்து 5 D வரை
 • அதிகமானது: + 5 D –க்கு மேல் மற்றும் அரிதாக 6 – 7 D யை விட மேல் இருக்கும். இது பார்வை அச்சின் 2 மி.மீ குறுகலுக்கு இணையானது. அதிக விகிதத்திலான (உ-ம். 24 D வரை) தனிப்பட்ட நேர்வுகளும் பதிவாகி உள்ளன. இதனோடு வேறு எந்தக்கோளாறுகளும் காணப்படவில்லை.

எட்டப்பார்வையின் மருத்துவ வகைகள்:

I.எளிய எட்டப்பார்வை:  எளிய எட்டப்பார்வையே பொதுவான வகை. கண்ணின் வளர்ச்சியில் ஏற்படும் உயிரியல் வேறுபாட்டால் அச்சு மற்றும் வளைவு எட்டப்பார்வை இதில் அடங்குகிறது. இது மரபு சார்ந்ததாக இருக்கும்.

II.நோயியல் எட்டப்பார்வை:  இயல்பான உயிரியல் வேறுபாடு காரணத்துக்கு அப்பாற்பட்டு பிறவி அல்லது ஏற்படும் எட்டப்பார்வையாக நோயியல் எட்டப்பார்வை உருவாகிறது. அவை வருமாறு:

 • முதுமைசார் அல்லது ஏற்பட்ட எட்டப்பார்வை: இது பின் வரும் காரணங்களால் முதுமையில் உருவாகிறது.

-         வளைவு எட்டப்பார்வை: முதுமையால் விழிவில்லையின் வெளிப்புற நார்கள் வளைவு குறைவதால் இது ஏற்படுகிறது.

-         குறியீட்டு எட்டப்பார்வை: விழிவில்லையின் வெளிப் பகுதி கடினமாவதால் உருவாகிறது. இளமையில் விழிவில்லையின் வெளிப்பகுதி விலகல் மையப்பகுதியை விட குறைவாக இருக்கும். இந்த சமமற்றத் தன்மையால் இரு குவியும் மேற்பரப்பு கொண்ட மைய வில்லை உருவாகிறது. இது வில்லையின் விலகல் திறனை அதிகரிக்கிறது. வயதாகும் போது இந்த வேறுபாடு குறைகிறது. இதனால் வில்லை ஒருபடித்தானதாக மறுகிறது. குவி திறனும் குறைகிறது.

 • இருப்புநிலை எட்டப்பார்வை: வில்லை பின்னோக்கி இடம்பெயர்வதால் இது உருவாகலாம்.
 • விழிவில்லையின்மை எட்டப்பார்வை: விழிவில்லையின்மை என்பது வில்லை தனது இயல்பான பாவை இருக்கும் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து இருப்பது ஆகும். இது பிறவியிலேயே அமையலாம்; அல்லது பின் ஏற்பட்டதாகவும் இருக்கலாம். கண் அண்மை மற்றும் தொலைவு நோக்குகளில் எட்டப்பார்வை கொண்டதாக இருக்கும். இதை சரிசெய்வதற்கு  சராசரியாக + 10 அல்லது + 11 D  வில்லை தேவைப்படும்.
 • தொடர் எட்டப்பார்வை: கிட்டப்பார்வையை அறுவை மூலம் அதிகமாக சரிசெய்வதாலோ  குறைவாக சரிசெய்த போலி விழிவில்லை இன்மையாலோ இது நிகழலாம்.

III. செயல்நிலை எட்டப்பார்வை: மூன்றாவது மண்டையோட்டு உள்நரம்பு அறுவை அல்லது கண்நரம்பு வாதத்தால்  பாதிக்கப்படும் நோயாளிகளிடம் காணப்படுவது போல இது கண் தகவமைவு செயலிழப்பால் விளைகிறது.

 

மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே நோய்மேலாண்மை செய்யப்பட வேண்டும்.

மருத்துவக் கண் சிகிச்சை:

பார்வை மதிப்பீடு:

பார்வைக் கூர்மை மூலமாக மையப் பார்வையைச் சோதிப்பதே மிகவும் பொதுவான பார்வை செயல்பாடு மதிப்பீட்டுக் கூறாகும்.  பல்வேறு அளவிலான குறியீடுகளை ஒரு நிர்ணயமான சோதனைத் தொலைவில் இருந்து வாசிக்கும் திறன் பார்வைக் கூர்மையைத் தீர்மானிக்கிறது. இந்த வரையறைத் தொலைவு பார்வை முடிவிலியை ஏறத்தாழ ஒத்துள்ளது. இது பொதுவாக 6 மீட்டர்கள் ஆகும். ஸ்டெல்லன் வடிவமைத்த கண் தர அட்டவணையில் ஒரு 6/6 எழுத்து இயல்பான பார்வைக் கூர்மை என கருதப்படுகிறது. சரிசெய்யப்படாத பார்வைக் கூர்மையில் விலகல் பிழைகள்  ஏற்படும். இது 6/6 க்குக் கீழ் இருக்கும். வேறு நோய்கள் இல்லாதபோது எட்டப்பார்வையை இயல்பான பார்வை செயல்ப்பாடுகளை மீட்டு சரிசெய்யலாம். இதற்குக் கண்ணாடி அல்லது தொடுவில்லைகளை பயன்படுத்தலாம்.

குவி (கூட்டல்) ஆடி மூலம் ஒளிக்கதிர்களைக் ஒடுக்கிக் விழித்திரையில் குவிப்பதே இந்த சிகிச்சையின் அடிப்படைக் கொள்கை.

எட்டப்பார்வைக்கு ஆடிகளைப் பரிந்துரை செய்யும் விதிகள்:

·         கண்தசை செயலிழப்பு: முழு கண்தசை செயலிழப்பின் கீழ் ஆடித்திறனை சோதித்து மொத்த எட்டப்பார்வை தீர்மானிக்கப்படுகிறது.

 • சிறு மொத்த வெளிப்படையான எட்டப்பார்வை: சிறு மொத்த வெளிப்படையான எட்டப்பார்வைக்கு (-ம். 1 D அல்லது குறைவு) நோயாளிக்கு அறிகுறிகள் இருந்தால் மட்டுமே சரியமைப்பு தேவைப்படும்.
 • கோளத் திறன்: நோயாளிக்குத் தகுந்த ஏற்பு இருந்தால் மட்டுமே கோள திறன் பரிந்துரைக்கப்படும்.
 • பார்வைச்சிதறல்முழுமையாக சரிசெய்யப்பட வேண்டும்.
 • 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள்: 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எட்டப்பார்வை சீரமைப்பு தேவைப்பட்டால் முழு தசை செயலிழப்பை ஏற்க வேண்டும். வயதான குழந்தைகளுக்கு இதைக் குறைக்கலாம்.  
 • வயதான குழந்தைகள்: தொலைவு மங்கல் காரமாக வளர்ந்த குழ்ந்தைகள் முழு தசைசெயலிழப்பு சீரமைப்பை ஏற்க மாட்டார்கள். வெளிப்படை எட்டப்பார்வையை குழந்தை ஏற்கும் வரை அதை படிப்படியாக அதிகரித்து வரலாம்.
 • விழிபுறவிலகல்: விழி புறவிலகல் இருந்தால் எட்டப்பார்வையை 1-2 டி அளவுக்கு குறை-சரியமைப்பு செய்ய வேண்டும்.
 • கண் தகவமைவு குவி மாறுகண்: முழு தசை செயலிழப்பு சீரமைப்பு செய்யப்பட வேண்டும்.
 • சோம்பல் கண்: ஒரு கண்ணில் சோம்பல் கண் இணைந்து இருந்தால் மறைப்பு சிகிச்சை மூலம் முழு சீரமைப்பு செய்ய வேண்டும்.
 • குழந்தையின் வளர்ச்சி: குழந்தை வளர வளர எட்டப்பார்வை குறைகிறது. அவ்வப்போது விலகல் நடத்தி சீரமைப்பை ஏற்றவாறு குறைத்து வர வேண்டும்.

குவி திறன் பரிந்துரைப்பு

 • கண்ணாடிகள்: குவி ஆடிகள் பரிந்துரைக்கப்படலாம்.
 • தொடுவில்லைகள்: கண்ணின் விலகல் திறன் நிலைபட்ட பின்னர் அழகியல் காரணத்திற்காக தொடு வில்லைகள் பரிந்துரைக்கப் படலாம். ஒருபக்க எட்டப் பார்வைக்கும் தொடு வில்லை பரிந்துரைக்கப் படலாம்.
 • அறுவை சிகிச்சை:
 • தொடர்பிலா ஹோல்மியம்: யாக் லேசர் வெப்ப வெண்படல அறுவை: எட்டப்பார்வையின் அளவு ஏறக்குறைய + 1 D யில் இருந்து + 2.5 D வரை இருப்பவர்களுக்கு   தொடர்பிலா ஹோல்மியம்: யாக் லேசர் வெப்ப வெண்படல அறுவை பொருத்தமானது. இதனால் நடு வெண்படலத்தைத் தொட்டு பல சுற்றாக பரப்பப்பட்டப் புள்ளிகள் உருவாக்கப் படுகின்றன. இதன் விளைவாக நடு புற திசுவலையில் இணைப்புப் புரதம் சுருங்குகிறது.  ஆகவே நடு வெண்படலம் ஆழமாகிறது.
 • எட்டப்பார்வை ஒளிவிலகல் வெண்படல அறுவை  (H- PRK): இந்த முறையின் கொள்கை முன் வெண்படல வளைவை ஆழப்படுத்துவது ஆகும். வெண்படலப் புறப்பகுதியில் பள்ளம் போன்ற ஒரு வளைய மண்டலத்தை உருவாக்கி ஒரு குவி ஆடி போல வெண்படலம் செதுக்கப்படுகிறது.
 • ஆற்றல்கடத்தல் வெண்படல அறுவை: ஆற்றல்கடத்தல் வெண்படல அறுவை ஒரு ஊடுறுவல் அற்ற சிகிச்சை முறையாகும். பார்வைச் சிதறல் கொண்ட அல்லது இல்லாத குறைந்த அளவு எட்டப்பார்வையை நேர்செய்ய இந்த சிகிச்சை முறையில் வானொலி அதிர்வெண் பயன்படுத்தப்படுகிறது. கண்புரை அறுவை அல்லது லேசர் உதவியுடன் உரிய இடத்தில் வெண்படலம் பொருத்தும் சிகிச்சைக்குப் பின் விடுபடும் விலகல் பிழையை நேர்செய்யவும் இது பயன்படுத்தப்படலாம்.
 • லேசர் பயன்பாட்டு எட்டப்பார்வை வெண்படலத் தகவிட திருத்தம் (லாசிக்):  + 1 D யிலிருந்து + 4 D வரை வேறுபடும் மிதமான எட்டப்பார்வையை சரிசெய்ய  இது பயன்படுத்தப்படுகிறது.
 • போலி உட்கண் வில்லை  (IOL)  பொருத்தல்: + 4 D யிலிருந்து + 10 D வரையில் வேறுபடும் எட்டப்பார்வை விகிதத்தைச் சரிசெய்ய போலி உட்கண் வில்லைகள் பொருத்தப்படுகின்றன. போலி உட்கண் வில்லைகள் என்பவை சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, மடக்கக் கூடிய, குவி, மென் வில்லைகள் ஆகும். இவை பின் கண் அறையில் கருவிழிக்குப் பின் இயல்பான விழிவில்லைக்கு முன் பொருத்தப்படும்.
 • விலகல் வில்லை மாற்று: விழிவில்லையை அகற்றிவிட்டு உட்கண் வில்லை மாற்றுதல்மடக்கக் கூடிய அல்லது பைவில்லை சிறந்தது. உயிர் அளவியல்  + 40 D அல்லது மேல் இருந்தாலும் மாற்றுவதற்கு அதற்கு மேல் திறன் கொண்ட வில்லை இல்லாத போதும்  இது செய்யப்படும். மேலும் தடிமனான வில்லைகளால் கோளப் பிறழ்ச்சி அதிக அளவில் ஏற்படும்.

நோய்முன்கணிப்பு

அறிகுறிகள் அற்ற, 10 வய்துக்கு உட்பட்ட, குறைந்த அல்லது மிதமான எட்டப்பார்வை உள்ள குழந்தைகளுக்குப் பொதுவாக கண்ணாடிகள் தேவைப்படுவது இல்லை. கண் தகவமைப்பை இழப்பதால் குழந்தை வளர்ந்து வரும்போது பார்வைக் கூர்மை குறைகிறது.

வாழ்க்கைத் தரத்தை எட்டப்பார்வை குறைக்கிறது. மோசமான பார்வையால் கல்வி மற்றும் வளர்ச்சி திறன்கள் பாதிக்கப்படுகின்றன. தகவமைவால் முழுமையாக பதிலீடு செய்யப்படாத எட்டப்பார்வையால் சிக்கல்கல் விளைகின்றன.

சரிசெய்யப்படாத எட்டப்பார்வையால் பின்வரும் சிக்கல்கள் ஏற்படக் கூடும்:

 • தகவமைவு குவி மாறுகண்: தகவமைவை அதிகமாக பயன்படுத்தும்போது 2-3 வயதில்  பொதுவாக தகவமைவு குவி மாறுகண் ஏற்படலாம்.
 • பார்வைத் தெளிவின்மை: பின் வரும் வகையில் பார்வைத் தெளிவின்மை ஏற்படலாம்:

-         குவிதல் சமமற்ற பார்வைத் தெளிவின்மையில் சம்மற்ற அல்லது ஒரு பக்க எட்டப்பார்வை இருக்கும்.

-         மாறுகண் பார்வத்தெளிவின்மையில் குழந்தைக்கு தகவமைவு மாறுகண் ஏற்படும்.

-         பார்வைக் கூர்மை குறைபாட்டு பார்வைத் தெளிவின்மை: குழந்தைகளுக்கு அதிக அளவிலான இருபக்க எட்டப்பார்வை  சரிசெய்யப்படாத போது இது காணப்படும்.

 • இமை நோய்கள்: மங்கலான எட்டப்பார்வையில் அடிக்கடி கண்ணைக் கசக்கும்போது இமையழற்சி, இமைக்கட்டி, இமைவீக்கம் உருவாகலாம்.
 • முதன்மை குறுகிய கோண கண்ணழுத்தம்: எட்டப்பார்வைக் கண் விகித அளவில் சிறியதாக இருக்கும். வில்லையின் அளவு வயதாக ஆக அதிகரிக்கும். ஏற்கெனவே சிறிதாக இருக்கும் கண்ணில் முதன்மை குறுகிய கோண கண்ணழுத்தம் உருவாவதை இது முன் கணிக்கிறது.

 

 

 

 

 

 • PUBLISHED DATE : Apr 20, 2017
 • PUBLISHED BY : DEEPAK CHANDRA
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Apr 20, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.