ஒளிக்கண்ணழற்சி

குறுகிய அலைநீள கேளாஒளி (குறிப்பாக அலை நீள அளவுஎல்லை 311-290 நானோமீட்டர்) பாதிப்பால் ஒளிக்கண்ணழற்சி உண்டாகிறது. வெண்படலம் புற ஊதாக் கதிரை உறிஞ்சுகிறது. கீழ் காணுபவற்றால் இது நிகழலாம்:

 • வெறும் கண்ணில் ஆர ஒளி பாதிப்பு: தொழிற்சாலைப் பற்றவைப்பு மற்றும் திரையரங்குப் படம் ஓட்டுநர்.
 • பனிக் குருடு: பனி சமதளங்களால் புற ஊதாக் கதிர் மறுபிரதிபலிப்பு அடைவதால் உருவாகிறது.
 • குறுக்கோட்டம்: மின் குறுக்கோட்டத்தால் ஏற்படும் பிரகாசமான ஒளியால் ஏற்படுவது.

வெண்படல புறத்திசுவில் மேல்தோல் உதிர்தலே முக்கிய மாற்றம். இதனால் பல அடுக்கு அரிப்பு நிகழ்கிறது.

குறிப்புகள்

Nema HV, Nema Nitin. Textbook of Ophthalmology Sixth Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2012. P 157.

Sihota Ramanjit, Tandon Radhika. Parson’s Diseases of the Eye Twenty-second Edition. Reed Elsevier India Private Limited 2015. P 220.

Kunnamo Ilkka. Evidence-Based Medicine Guidelines. John Wiley & Sons Ltd 2005. P 1211.

Ahmed E. Comprehensive Manual of Ophthalmology. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2011. P 326.

Khurana AK. Comprehensive Ophthalmology Sixth Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2015. P 28.

 

புற ஊதாக் கதிர் பாதிப்பு ஏற்பட்டு 4-5 மணி நேரத்துக்குப் பின் ஒளிக்கண்ணழற்சியின் அறிகுறிகள் தென்படும். அவற்றில் அடங்குவன:

 • அதிக எரிச்சலோடு கூடிய வலி
 • அதிக அயல் பொருள் உணர்வு
 • நீரொழுகல்
 • செம்மை
 • ஒளிக்கூச்சம்
 • இமைத் தசைகளின் இயல்பற்ற முறையிலான சுருக்கம்
 • இமைசார் கண்சவ்வு வீக்கம்

மேல்தோல் உதிர்வு குணம் அடைந்த உடன் 1-2 நாட்களில் அறிகுறிகள் மறையும்.

குறுகிய அலைநீளக் கதிர் பாதிப்பால் ஒளிக்கண்ணழற்சி ஏற்படலாம்:

 • ஆர ஒளியால் வெறுங்கண் பாதிப்பு: தொழிற்சாலைப் பற்றவைப்பால் இப்பாதிப்பு நிகழலாம்.  திரையரங்குகளிலும் நிகழக் கூடும்.  மூடப்பட்ட ஆர ஒளியால் அரிதாகவே பாதிப்பு நிகழும். ஏனெனில் தீங்குவிளைவிக்கும் ஒளிக்கதிர்களில் பெரும்பாலானவற்றைக் கண்ணாடிக் கோளம் உறிஞ்சிவிடும்.
 • பனிக்குருடு: பனித் தளங்கள் புற ஊதாக் கதிர்களை எதிரொளிப்பதால் இது உண்டாகிறது. பனிக் குருட்டிற்குக் காரணம் இதுவே. பனி 85% புற ஊதாக் கதிர்களை எதிரொளிக்கிறது. இதனால் வெண்படலத்திற்குக் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பு அதிகரிக்கிறது.  உயரம் அதிகமாக இருந்தால் அதிக புற ஊதாக் கதிர் வீச்சு உறிஞ்சப்படும். ஏனெனில் மெல்லிய காற்றை கதிர் வீச்சு எளிதில் ஊடுறுவும்.
 • குறுக்கோட்டம்: மின் குறுக்கோட்டத்தினால் அதிகப் பிரகாசமான ஒளி உண்டாக்கப்படுவதனால் இது நிகழ்கிறது.

வெண்படல மேற்திசுத் தோல் உதிர்வதால் பன்கட்ட அரிப்பு ஏற்படுவதே இதில் அடங்கியுள்ள முக்கிய நோயியல்.

பரிசோதனையின் போது அறியப்படும் மருத்துவ ரீதியான வரலாறு மற்றும் அறிகுறிகளை நோய் கண்டறிதல் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

புற ஊதாக் கதிர் பாதிப்பு ஏற்பட்டு 4-5 மணி நேரங்களுக்குப் பின்னரே அறிகுறிகள் தென்படுகின்றன. அதிக வலி, அயல் பொருள் உணர்வு, நீரொழுகல் கானப்படும். இதனுடன் ஒளிக்கூச்சமும் இமைச்சுருக்கமும் இருக்கும்.

ஒளிர் சோடியச் சாயத்தை ஏற்கும் மேற்திசுவில் தொடர்ச்சி அறுபடுவதை வெண்படல மேற்திசுப் பிளவு-விளக்கு ஆய்வில் காட்டுகிறது. கடும்  நேர்வுகளில் வெண்படல மேற்திசு விடுபட்டு வெண்படல அரிப்பிற்குக் கொண்டு செல்லும். கண்சவ்வு செந்நிறமாகும். இமைத்தகட்டுப் பின் மடிப்பும் காணப்படலாம்.

நோய்மேலாண்மை மருத்துவக் கண்காணிப்பின் கீழ் செய்யப்பட வேண்டும்.

பொதுவான முற்காப்பு சிகிச்சை

பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளதெனில் கருப்புக் கண்ணாடி அணிந்து கொள்வது ஒரு முற்காப்பு நடவடிக்கை ஆகும். அனைத்துப் புற ஊதாக் கதிர்களையும் அகச்சிவப்பு கதிர்களையும் தடுக்கும் திறன் கொண்ட குரூக் கண்ணாடி பயன்படுத்துவது நலம்.

மருத்துவ சிகிச்சை

இதில் அடங்குவன:

 • குளிர் ஒற்றடம்
 • மசகு கண் சொட்டு
 • கட்டுதல்: நுண்கொல்லி களிம்புகளும் செயலிறுக்கிகளும் இட்டு கண்ணை 24 மணி நேரம் கட்டி வைக்கும் போது வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அரிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மேற்திசு மறுபடி வளர உதவும்.

பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்பூச்சுகளால் மரப்பு உருவாக்குதலைத் தவிர்க்க வேண்டும்.

 

 • PUBLISHED DATE : Sep 12, 2017
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Sep 12, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.