கண்சவ்வுக் குமிழ்

இமைப்பிளவுப் பகுதியில் படலசந்திப்பை அடுத்து உருவாகும் குமிழ் போன்ற கண்சவ்வுத் தடிப்பே  கண்சவ்வுக் குமிழ் (ஆங்கிலத்தில் பின்குகுலா: கொழுப்பு என்று பொருள் படும் பின்குயிஸ் என்ற இலத்தின் சொல்லில் இருந்து உருவானது) ஆகும். இவை இயல்பான கண்சவ்வை விடக் குறைந்த அளவு ஒளியூடுறுவும் படியாகவும் கொழுப்பு போன்ற தோற்றமுடனும் இருக்கும். இவை பொதுவாக இருபுறமானது;  முக்கோண வடிவில், உயர்ந்து, வெள்ளையில் இருந்து மஞ்சள் நிறமாக இருக்கும். கிடைமட்டமாகவும் பொதுவாக நெற்றிசார் கண்ணை விட மூக்கு சார் பகுதியில் காணப்படும். சிலருக்கு மூக்கு சார் மற்றும் நெற்றி சார் கண்சவ்விலும் உருவாகும். இது படலச் சந்திப்பைத் தாண்டிச் செல்வதில்லை. இது இமைமுனைத்திசு வளர்ச்சியாக மாறுவதில்லை; ஏனெனில் இவை இரண்டும்  வெவ்வேறு கோளாறுகள்.

வயதுடன் தொடர்புள்ள விழிப்புள்ளி சிதைவோடு காணப்படும் போது, கண்சவ்வுக் குமிழ் நோய் இரு மடங்கில் இருந்து மும்மடங்கு அதிகரிக்கிறது. இதற்கு ஒரு பொதுவான ஒளிப்படல விளைவே காரணம் ஆகலாம் (ஃபாம் டி.க்யூ மற்றும் பிறர்).

கண் சவ்வுச் சிதைவு என்பது ஒரு பொதுவான நிலை. பெரும்பாலான நேர்வுகளில் கண் செயல்பாடுகளுக்கோ பார்வைக்கோ பெரும் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. வயது ஆக ஆக கடந்த கால அழற்சி, சூழலால் ஏற்படும் நீடித்த நச்சு பாதிப்பு, அல்லது முதுமை ஆகியவற்றால் இந்நிலைகள் அதிகரிக்கலாம். நீடித்த உறுத்தல், உலர்வு அல்லது முன்னர் ஏற்பட்ட காயங்களால் கண் சவ்வுச் சிதைவு ஏற்படலாம்.

குறிப்பு

Sundaram Venki, Barsam Allon, Alwitry Amar, Khaw Peng T. Oxford Specialty Training: Training in Ophthalmology- the essential clinical curriculum. Oxford University Press. 2009. P 24.

Sihota Ramanjit, Tandon Radhika. Parson's Diseases of the Eye. Reed Elsevier India Private Limited. 22nd Edition. 2015. P. 184.

http://eyewiki.aao.org/Pinguecula

http://emedicine.medscape.com/article/1192527-differential

Yanoff Myron, Duker Jay S. Ophthalmology Third Edition. Mosby Elsevier 2009. P. 248.

Yanoff Myron, Sassani Joseph W. Ocular pathology. Seventh Edition. Elsevier Saunders. 2015. P. 212- 213.

Bartlett Jimmy D, Jaanus Siret D. Clinical Ocular Pharmacology. Fifth Edition. Elsevier Health Sciences. 2008. P. 476.

Friedman Neil J, Kaiser Peter K. Essentials of Ophthalmology. First Edition. Saunders Elsevier. 2007. P. 160.

Foster C Stephen, Azar Dimitri T, Dohlman Claes H. Smolin and Thoft’s The Cornea: Scientific Foundations & Clinical Practice. Fourth Edition. Lippincott Williams & Wilkins. 2005. P. 875.

Nema H V, Nema Nitin. Textbook of Ophthalmology. Sixth Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2012. P 138.

Basak Samar K. Atlas of Clinical Ophthalmology. Second Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2013. P 57.

Saxena S. Clinical Ophthalmology: Medical and Surgical Approach. Second Edition. Jaypee-Highlights Medical Publishers, Inc. 2011, New Delhi. P. 31- 32.

Bowling Brad. Kanski's Clinical Ophthalmology - A Systematic Approach. Eighth Edition. Elsevier. 2016. P. 162.

Khurana A. K. Ophthalmology. New Age International (P) Limited. Third edition. 2003. P. 105.

Copeland Jr Robert A, Afshari Natalie A. Copeland and Afshari’s Principles and Practice of CORNEA Vol.1. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2013. P. 806.

Dushku N, Hatcher SL, Albert DM, Reid TW. p53 expression and relation to human papillomavirus infection in pingueculae, pterygia and limbal tumours. Arch Ophthalmol. 1999; 117: 1593- 1599.

Pham TQ, Wang JT, Rochtchina E, Mitchell P. Pterygium/pinguecula and the five-year incidence of age related maculopathy. Am J Ophthalmol. 2005; 139: 536- 537. 

கண்சவ்வுக் குமிழ் நோய் பெரும்பாலும் அறிகுறிகள் அற்றது.

அரிதாகவே அறிகுறிகள் தென்படும். குறைந்த பட்சம் தோற்றப் பாதிப்பு ஏற்படலாம்.

கண் அறிகுறிகளில் அடங்குவன:

 • அயல் பொருள் உணர்வு
 • நீரொழுகல்
 • எரிச்சல்
 • அரிப்பு
 • இலேசான வலி
 • கண் சிவப்பு

ஒப்பீட்டளவில் கண் குருதித் தேக்கம் இதில் இருப்பதில்லை. கண் அழற்சியுறும் போது குமிழ் தெளிவாகத் தெரியும். பரப்பு வெண்படல அழற்சியால் சிவப்பாகும்.  அழற்சி அடையும் போது கண்சவ்வுக் குமிழ் அழற்சி என கண்டறியப்படும்.

கண்சவ்வுக் குமிழ் நோய் உண்டாகும் காரணங்கள் சரிவரத் தெரியவில்லை.

ஆண்கள், பற்றவைப்புத் தொழிலாளர் மற்றும்  வெப்பமான தட்பவெப்ப நிலையில் வாழும் பிறருக்கு ஏற்படும் வாய்ப்புண்டு. இமைமுனைத்திசு வளர்ச்சியை விட இந்நோய் பரவலாகக் காணப்படுகிறது.

கீழ்வரும் நிலைகளுடன் இதற்கான தொடர்பைச் சான்றுகள் காட்டுகின்றன:

 • வயது முதிர்ச்சி: 70-80 வயதினருக்குப் பரவலாகக் காணப்படுகிறது.
 • புற ஊதாக்கதிர் பாதிப்பு: நீடித்த சூரிய ஒளி பாதிப்பு (புற ஊதாக்கதிர் A மற்றும் B யால் ஏற்படும் தாக்க சேதம்), வெளி வேலை அல்லது நிலநடுக்கோட்டு வாழிடத்துடன் தொடர்புடையது. ஒளி பாதிப்பு பற்றவைப்புத் தொழிலாளருக்கு இது அதிகமாக இருப்பதைக் கொண்டு நிரூபணம் ஆகிறது. மூக்கால் ஒளி எதிரொளிப்பதால் மூக்கு சார் கண் சவ்வுப் பகுதியில் இந்நோய் அதிகமாய் இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம். மரபணு p53 பிறழ்வு புற ஊதாக் கதிர் பாதிப்புக்குக் கரணமாகலாம்.
 • கவுச்சர் நோய் (மரபுவழி லிப்பிட் சேமிப்பு நோய்): கவுச்சர் நோயின் பாதிப்புக்குப் பின் இரண்டாம் பத்து ஆண்டுகளில் நிறமாற்றம் பெற்ற, பழுப்பு, முக்கோண கண்சவ்வுக் குமிழ் தோன்றலாம். புண்ணில் இருந்து எடுக்கப்பட்ட திசு ஆய்வில் கவுச்சர் செல்கள் காணப்படும். கவுச்சர் நோயாளிகளுக்கு தொடர்புடைய கண்ணியக்க செயல்திறன் குறையும் வெண் விழித்திரை ஊடுறுவிகளும் காணப்படும். திசுவலையின் பின்புற இரண்டில் மூன்று பங்கில் வெண்படல ஒளிபுகாமையும் இருக்கும். கவுச்சர் நோயின் மரபியல் குறை மரபிழை 1q21-ல் உள்ளது.

 

 

மருத்துவ ரீதியாக நோய் கண்டறியப்படுகிறது. பிளவு-விளக்கு உயிர்நுண்மாணி தேவைப்படும்.

மருத்துவ அம்சங்கள்:

 • படலசந்திப்பை அடுத்து முன் குமிழ் கண்சவ்வில் கண்சவ்வுக் குமிழ் அமைகிறது.
 • இவை இமைப்பிளவுக்கு இடைப் பகுதியில் மேல் நோக்கி இருப்பதை விட மூக்கை நோக்கி அமையும்.
 • வெண்படலம் பொதுவாகப் பாதிக்கப்படுவதில்லை. இருப்பினும் புள்ளி மேற்திசு அரிப்பு அல்லது உலர்தல் காரணமாக வெண்படலத்தின் அடுத்திருக்கும் விளிம்புப் பகுதி மெலிதல் அடையலாம்.
 • மூக்குப்புற அளவையும் மேல்புற அளவையும் ஒப்பிடும்போது கணிசமான வித்தியாசம் இல்லை என்று ஒரு தரக்கணிப்பு காட்டுகிறது.
 • கண்சவ்வுக் குமிழ் மஞ்சள்வெள்ளை புறத்திசு படிவு; சுண்ணாம்பு சேர்தலும் இருக்கலாம்.
 • மேற்புறம் உலர்வதால் அரிதாக கண்சவ்வுக் குமிழ் அழற்சி அடையலாம். புண், அதிக இரத்தக்குழாயுடன் உட்புகுந்து இருக்கும்.

திசுநோயியல்

கோலஜன் எலாஸ்டிக் சிதைவுடன், கண்சவ்வு திசுவலை ஹையாலினைசேஷன் அடைவதும், அடிச்சாயசெல் எலாஸ்டிக் நார் சேர்வதும் குருணைப் படிவு ஏற்படுவதும் காணப்படும்.

 • சார்-மேற்திசு, நாட்பட்ட அடிச்சாய செல் சிதைவைக் காட்டுகிறது. மேலும், ஒழுங்கற்ற, அடர் சார்-மேற்திசு கட்டிப்படுதலும் காணப்படும். எலாஸ்டினுக்கு இந்த நெகிழ்வுப்பொருட்கள் நேர்மறை முடிவைக் காட்டும். ஆனால் எலஸ்டாட்டிக் சிதைவுக்கு உணர்திறன் காட்டுவதில்லை.
 • இந்த எலாஸ்டோட்டிக் பொருட்கள் எலாஸ்டின், நுண்நார் புரதம் மற்றும் அமிலாய்ட் P-க்கு நேர்மறை முடிவைக் காட்டும். இந்தக் கூறுகள் ஒருபோதும் பொதுவாக கோ-லோக்கலைஸ் ஆவதில்லை.

எலாஸ்டோஜெனிசிஸ் கட்டுப்பாடு கடுமையான குறைபாடுடையது. உயிர் வேதியல் அமைப்பில் எலாஸ்டிக் நார்கள் அசாதரணமானவைகளாகக் காணப்படுகின்றன. எலாஸ்டிக் நுண்நாரிழைகள் குறிப்பிடும் அளவுக்குக் குறைவதால் எலாஸ்டிக் நார்களின் இயல்பான  சேர்க்கை தடுக்கப்படுகிறது. கண்சவ்வுக் குமிழின் ஆரம்ப வளர்ச்சிக் கட்டத்தில், மரபணு  p53-யில் படலச்சந்திப்பு மேற்திசு செல் பிறழ்ச்சி அடைவது பெரும்பாலும் புற ஊதாக் கதிர் படுவதால் இருக்கலாம். சார் புறத்திசு அடர் கட்டி, லைசோசைமுக்கு நேர்மறை சாயம் ஏற்கும். நாட்பட கண்சவ்வுக் குமிழில் சுண்ணாம்புப் படிவு நிகழலாம்.

மின் நுண்மாணியியல்

மின்நுண்காட்டியில், இந்த குருணைப் பொருட்கள்,  மையத்தில் வெற்றிடம் கொண்ட நுண்நாரிழைகளாகக் காணப்படும். இவை, தொய்வு நார் முன்னோடிகள் ஆகும். சூரிய ஒளி படுதலால் ஊக்குவிக்கப்பட்டு பல இணைப்புத்திசு நார்செல்களால் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றவை.

நோய்த்தடுப்பு மதிப்பீடு

Pax6, K19 கெராட்டின், மற்றும்  MUC5AC (ஒரு புரதக் குறியீட்டு மரபணு) ஆகியவற்றின் வெளிப்பாட்டில் வீழ்ச்சியும், ஆனால், K10 மற்றும் K14 கெராட்டின் அதிகரிப்பும் ஏற்படுவதால் ஓர் இயல்பற்ற மேல்தோல் வகையீட்டை  நோய்த்தடுப்பு மதிப்பீடு காட்டுகிறது. செதிள் செல்களின் தீவிரப் பெருக்கமும் காணப்படுகிறது. இதை, Ki67, P63, மற்றும் K16 கெராட்டின்கள் வெளிப்படுத்துகின்றன.

கண்சவ்வும் குமிழ்கள் உலர்வு மற்றும் அரிப்பால் அழற்சி உறலாம். இதற்கான பொதுவான முக்கிய காரன்ங்கள்:

 • இயந்திர ரீதியிலான உறுத்தல்: பெரும்பாலும் தொடுவில்லையால்.
 • கண் பரப்பு நோய்:

கண்சவ்வுக் குமிழைப் பொதிந்திருக்கும் மேற்திசு சிதைந்தும் மெலிவுற்றும் இருப்பதில் இருந்து மிகைநெகிழ் தன்மையோடும் தடித்தும் இருக்கலாம். கண்சவ்வுக் குமிழ் தீங்கு பயப்பதாக மாறுவதில்லை. ஆனால் இத்தகையப் புண் ஆராயப்பட வேண்டியவையே. ஆக்டினிக் வெண்படல நோய், டிஸ்பிளாஸ்டிக் மாற்றங்கள் மற்றும் புற்றும் கூட கண்சவ்வுக் குமிழைச் சுற்றியுள்ள மேற்திசுவில் இருந்து புறப்படலாம்.

பின்வருவனவற்றில் இருந்து கண்சவ்வுக் குமிழை வேறுபடுத்திக் காண வேண்டும்:

 • படலச்சந்திப்புத் தோல்கட்டி
 • வெண்படல புறத்திசுக்களுக்கு இடையிலான புதுத்திசு வளர்ச்சி
 • மச்சம், தோல்புற்று அல்லது காம்புக்கட்டி போன்ற கண்சவ்வுக் கட்டிகள்

மருத்துவக் கண்கணிப்பின் கீழ் நோய் மேலாண்மை செய்ய வேண்டும்.

மேலாண்மையில் அடங்குவன:

மருத்துவ சிகிச்சை:

 • நோய்க்காரணியை ஒழித்தல்
 • செயற்கைக் கண்ணீர்: மசகு அளிப்பதற்காக
 • மேற்பூச்சுக் கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள்: அழற்சி அதிகமாக இருந்தால் குறுகிய காலத்திற்கு அளிக்கலாம்.
 • ஊக்கமருந்தற்ற எதிர்-அழற்சி மருந்துகள்: அழற்சியோடு கூடிய நேர்வுகளில்.

அறுவை மருத்துவம்:

 • எளிய அகற்றல்: நீடித்த அழற்சி அல்லது தோற்றத்தைக் கெடுக்கும் கண்சவ்வுக்கட்டியை அறுவை மூலம் அகற்றலாம்.
 • லேசர் ஒளிகூழுறைவு: இம்முறையில் கண்சவ்வுக் குமிழை அகற்றலாம்.

நீடித்த உறுத்தலோ அல்லது தொடுவில்லை அணிவதில் சிரமமோ இருந்தால் மட்டுமே ஊக்கமருந்துகள் அல்லது அறுவையை பயன்படுத்தலாம்.

நோய்முன்கணிப்பு

கண்சவ்வுக் குமிழ் மெதுவாக வளர்ச்சி அடையும். இலேசான கண் நோயை உருவாக்கும்.

 

கண்சவ்வுக் குமிழால் ஏற்படும் சிக்கல்கள்:

 • கண்சவ்வுக் குமிழ் மெதுவாகப் பெரிதாகி அழற்சியுற்று உறுத்தல் அளிக்கும் .
 • கண் நகர்ச்சியை மட்டுப்படுத்தும்
 • சிதறல் பார்வை
 • வெண்படலக் குழிவு
 • கண் சவ்வும் குமிழின் மேல் தோலில் செல் இயல்பு மாற்றம் மற்றும் புற்றும் எழலாம்.
 • நீடித்த ஆக்டினிக் வெண்படல நோயாக வளரலாம்.

புற ஊதாக் கதிர் பாதிப்பையும் புற ஊதாக் கதிர் தடுப்பு கண்ணாடிகளையும் தவிர்த்தல் தடுப்பு முறையில் அடங்கும்.

 

 • PUBLISHED DATE : Aug 17, 2017
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Aug 17, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.