கண்ணிரும்பேற்றம்

கண்ணிரும்பேற்றம் என்பது கண்ணில் ஏற்படும் ஒரு சிதைவு மற்றும் நிறமி மாற்றம் ஆகும். இதனால் கண்ணுக்குள் இரும்பு கொண்ட அயல் பொருள் தக்கவைக்கப்படுகிறது. இரும்பின் இருப்பிடம் மற்றும் உள்ளடக்கத்தைப் பொறுத்து இதன் வளர்ச்சி மற்றும் கடுமையின் அளவு இருக்கும். பெரிய, மிகவும் பின்புறமாக அமைந்துள்ள மற்றும் இரும்பு உட்கண் அயல்பொருட்களின் நோய் முன்கணிப்பு மோசமானதாக இருக்கும். திசுவியல்படி, கண்ணிரும்பேற்றத்தில் வளர்சிதைமாற்ற அளவில் செயலூக்கம் பெற்ற உயிரணுக்களுக்குள் இரும்புத் திரட்சி காணப்படும். வெண்படல மேற்திசு உயிரணுக்கள், பாவை இறுக்குதசை, வில்லை மேற்திசு, தாங்குநார் வலைப்பின்னல், தட்டைப்பகுதி மற்றும் விழித்திரை நிறமி மேற்திசு ஆகிய அனைத்தும் பாதிக்கப்படலாம்.

வான் ஹிப்பெல் (1894) இரு வகை கண்ணிரும்பேற்றத்தை வகைப்படுத்தினார்: இரத்தமூலம் கொண்டதில் இரத்தத்தில் இருந்து இரும்பு எடுத்துக்கொள்ளப்படும்; புறமூலம் கொண்டதில் உட்கண் அயல்பொருளில் இருந்து எடுக்கப்படும். பார்வைக் கூர்மைக் குறைதல், பன்னிறக் கருவிழி, முன்வில்லையுறையின் பின்னால் பழுப்புநிறப் படிவு மற்றும் கண்புரை ஆகியவற்றிற்குக் கண்ணிரும்பேற்றம் வழிகோலும்.

சில நேர்வுகளில் நோய்முன்கணிப்பு சிறப்பாக இருக்கும். ஆனால், இரும்பு கொண்ட உட்கண் அயல்பொருளை அகற்றுவதே சிறந்தது.

குறிப்புகள்

Peyman Gholam A, Meffert Stephen A, Conway Mandi D, Chou Famin, Chiasson Trisha. Vitreoretinal Surgical Techniques. Martin Dunitz Ltd 2001. P 452- 453.

Yanoff Myron, Sassani Joseph W. Ocular Pathology Seventh Edition. Elsevier Inc. 2015. P 137.

Bowling Brad. Kanski’s Clinical Ophthalmology- A Systematic Approach Eighth Edition. Elsevier Limited 2016. P 881.

Naumann G O H, Apple D J. Pathology of the Eye. Springer- Verlag New York Inc. 1986. P 199- 201.

Yan Hua. Atlas of Ocular Trauma. Springer Nature Singapore Pte Ltd. 2019. P 53- 55.

https://webeye.ophth.uiowa.edu/eyeforum/atlas/pages/siderosis-bulbi/index.htm

https://bjo.bmj.com/content/bjophthalmol/38/12/727.full.pdf

https://www.aao.org/bcscsnippetdetail.aspx?id=caf107a4-2f06-47b5-97ed-a7ccd977742c

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4616819/

Hippel, Von E. Ibid., 40, pt.1, 1894. P 123.

 

 

அறிகுறிகளில் அடங்குவன:

 • பார்வை மங்கல்
 • பாவை விரிவு (ஆரம்பக்கட்ட அம்சம்)
 • மாலைக்கண் நோய் (ஆரம்பக்கட்ட அம்சம்)
 • பன்னிறக்கண் (பாதிக்கப்பட்ட பகுதி அடர் நிறத்துடன்)
 • மஞ்சள்-பழுப்புக் கண்புரை

 

திறந்த கண்கோளக் காயங்களில் கண்ணுக்குள் அயல்பொருள் தங்குதல் என்பது இயல்பான ஒன்றே. இவை பல பிரச்சினைகளை உருவாக்குகின்றன. இவற்றில் பல கடுமையான பார்வைக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.

இரும்பு அயனிமயமாகி கண்ணுக்குள் எல்லாம் பரவக் கூடும். பின்னர் இது பல கண் உறுப்புகளில் பெரும்பாலும் பெரிடின்னாகவும் சில வேளைகளில் சைட்டோபிளாசம் சார் கண்ணிரும்பேற்றமாகவும் படியும்.

இரும்பு அயனியாகி அனைத்துக் கண் திசுக்களிலும் பரவுகிறது. பொதுவாக இது மேற்திசு உயிரணு (வெண்படலம், கருவிழி, பிசிர்ப்பொருள், வில்லை மற்றும் விழித்திரை நிறமி மேற்திசு),  கருவிழி விரிப்பி மற்றும் சுழல்தசை, தாங்குதசை வலைப்பின்னல் மற்றும் நரம்புசார் விழித்திரை ஆகியவற்றில் அடர்த்தியாகக் காணப்படும்.

உயிரணுக்களுக்குள் காணப்படும் மிகையான கட்டற்ற இரும்பு முக்கிய நொதி செயலாக்கங்களில் உண்டாக்கும் நச்சால் தாங்குதசை வலைப்பின்னல் வடுவுறல், இரண்டாம் கட்ட நீடித்த திறந்த கோண கண்ணழுத்தம், முன் உறைசார் கண்புரை மற்றும் நரம்பு விழித்திரை சிதைவு ஆகியவை ஏற்படுகின்றன.

 

நோய்கண்டறிதல் மருத்துவ வரலாற்றையும் பரிசோதனையையும் அடிப்படையாகக் கொண்டது.

மருத்துவரீதியாக, கண்ணிரும்பேற்றத்தின் செயலாக்கம் மூன்று கட்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது:

 • உள்ளுறை நிலை: மருத்துவ அறிகுறிகள் தோன்றும் முன்,
 • இரும்பு பரவல்: கண் திசுக்கள் வழியாக இரும்பு பரவுதல்.
 • சிதைவு: இரும்பின் நச்சு விளைவால் திசுக்கள் குறிப்பாக விழித்திரை சிதைவுறல்.

மருத்துவரீதியாக மற்றும் பார்வைக்கு, கண் உறுப்புகளான கருவிழி, வில்லை மற்றும் விழித்திரை துரு பிடித்தது போல் தோன்றுதல்,

கருவிழியில் கருமை படர்வதால் பன்னிறம் விளையும் (இரும்பேற்றம் கொண்ட கண்கள் அடர் நிறமாக இருத்தல்). இதற்குக் காரணம் கருவிழியில் படரும் செம்பழுப்புக் கறையே.

முன்னறை கோணத்தில் இருக்கும் இரும்பு சிதறல் கரும்புள்ளிகளாகக் காணப்படும். இது தீய கருங்கட்டி போல் தோன்றும். படிவால் தாங்குதசை அடையும் சிதைவின் காரணமாகக் கண்ணழுத்தம் உருவாகலாம்.

வில்லை அடிக்கடி பழுப்பு மஞ்சளாக இருக்கும். முன் உறை சார் பகுதியில் வில்லை அடிக்கடி பழுப்பு மஞ்சளாகவும் துருப் பொருட்கள் அதில் கொத்தாகவும் காணப்படும்.

நிறமி விழித்திரை நோயோடு விழித்திரை செயலிழப்பும் விழித்திரை நிறமி மேற்திசுவும் காணப்படும். இதனால் பார்வையிழப்பு நேரலாம்.

மருத்துவ குறிகளில், பார்வைக் கூர்மை குறைவு, பாவைவிரிவு, பன்னிறமாதல், முன் வில்லை உறையின் கீழ் பழுப்புப் படிவு,  மற்றும் கண்புரை உருவாதல் ஆகியவை அடங்கும். அசாதாரண மின்விழிமானி மற்றும் இருள்-தழுவல் ஆய்வுகளை உள்ளடக்கிய மின்னுடலியல் மாற்றங்கள் காணப்படும்.

உட்கண் இரத்தக்கசிவும் இத்தகைய திசுவியல் மாற்றங்களை உருவாக்கும். உட்கண் இரத்தக்கசிவில் இரும்புப் படிவு இரத்தக்கசிவு கண்ணீரும்பேற்றம் எனப்படும். நீடித்த நேர்வுகளில் தாங்குதிசை வலைப்பின்னல் சிதைவும் வடுவுறலும் உருவாகலாம்.

திசுநோயியல்:

வளர்சிதைமாற்ற செயலூக்கம் கொண்ட உயிரணுக்களில் இரும்பு சேர்தலே திசுவியல்படி இந்நோயின் இயல்பாகும். வெண்படல மேற்திசு, பாவை இறுக்கு தசை. வில்லை மேற்திசு, தாங்குதசை வலைப்பின்னல், தட்டைப்பகுதி, விழித்திறை நிறமி மேற்திசு ஆகிய அனைத்திலும் உள்ள உயிரணுக்கள் பாதிக்கப்படும்.

 • ஹீமாட்டாக்சிலின் மற்றும் ஈயோசின் (H&E) மற்றும் பெரையோடிக் அமில-ஸ்கிஃப் (PAS) சாயமேற்றல்: H&E மற்றும் PAS சாயமேறிய பகுதிகளில் இரும்பு கருங்கட்டி பரல்கள் போல தோற்றம் அளிக்கும். இருப்பினும் இவை கொஞ்சம் வெளிறிய நிறத்திலும், மிகவும் ஒழுங்கற்ற அமைப்பிலும், கொஞ்சம் பெரிதாகவும் இருக்கும்.
 • புருசியன் நீலச்சாயமேற்றல்: இச்சாயத்தில் இரும்புத் துகள்கள் சிறப்பாகத் தெரியும். இரும்பு கட்டி நீலமாக சாயமேற்கும். இது கருங்கட்டிக்கு முரண். அது சாயம் ஏற்பதில்லை.

 

உட்கண் அயல்பொருள் அகற்றல் மேலாண்மையில் அடங்கும். இதை அகற்றும் போது கண்ணிரும்பேற்றத்தின் வளர்ச்சி தடைபடும்.

ஆரம்பத்திலேயே அறுவை மூலம் உட்கண் அயல்பொருள் அகற்றல் பார்வை தெளிவாவதற்காகப் பரிந்துரைக்கப்படுகிறது. படலச்சந்திப்பு வெட்டு அல்லது தட்டைப்பகுதி கண்ணீர்ம அறுவை செய்து இடுக்கிமூலம் அயல்பொருள் அகற்றப்படும். கண்புரையும் அறுவை மூலம் அகற்றப்படும்.

நோய்முன்கணிப்பு

 சில நேர்வுகளில் பார்வை முன்கணிப்பு சிறப்பாக இருக்கும். இருப்பினும் முடிந்த அளவிற்கு அயல்பொருள் அகற்றப்பட வேண்டும். அகற்ற முடியாதபோது தொடர் மின்விழித்திரைமானி சோதனை செய்து விழித்திரை சிதைவு கண்காணிக்க்ப்பட வேண்டும். நிலை மோசமானால் அயல்பொருள் அகற்றப்பட்டே ஆக வேண்டும்.

 

பின்வரும் சிக்கல்கள் எழலாம்:

 • கண்புரை
 • விழித்திரை நிறமிச் சிதைவு
 • கருவிழிப் பன்னிறம்
 • பாவைவிரிவு
 • இரண்டாம்நிலை கண்ணழுத்தம்
 • மார்கஸ் கன் பாவை
 • விழித்திரை விடுபடல்
 • தாழ் மின்விழித்திரைவரைவு

 

தடுத்தலால் பார்வை இழப்பு ஆபத்து குறைக்கப்படும்.

ஆபத்துள்ள பணி இடங்களில் கண் காயத்தைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கண்ணைப் பாதுகாக்கத் தகுந்த நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

 

 

 • PUBLISHED DATE : Jan 31, 2019
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Jan 31, 2019

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.