கண்ணீர்க்கோளவழல்

கண்ணீர்ச்சுரப்பி அழற்சியே கண்ணீர்க்கோளவழல் ஆகும். இது கடுமையானதாக அல்லது நீடித்ததாக இருக்கும்.

கண்கோளத்தின் மேல்நெற்றிப் பொட்டுப் பகுதியில் கண்ணீர்ச் சுரப்பி அமைந்துள்ளது. அது இரு பாகங்களைக் கொண்டது. ஒன்று, கண்ணிமைமடல் இமைகளை மடித்து நோக்கும்போது தென்படும். இன்னொன்று கண்கோள மடல். இச்சுரப்பியின் சுரப்புகள் கண்ணீர் படலத்தின் நீரடுக்கை உருவாக்குகின்றன. கண்ணீர்க்கோளவழல் தொற்றாலோ முறையான ஒரு நோய்க்காரணியாலோ உண்டாகலாம்.

கண்ணீர்ச்சுரப்பி நிணத்திசு மண்டலத்தைச் சார்ந்தது. இது சளிச்சவ்வு தொடர்புடைய நிணத்திசு  (MALT) என அழைக்கப்படும். இதில் இம்யுனோகுளோபுலின் A (IgA) பிளாஸ்மா செல்கள், T வடிநீர்ச்செல்கள் மற்றும் வேறு சில வடிநீர்ச்செல்கள் அடங்கியுள்ளன.

கண்ணீர்க்கோளவழலில் பெரும்பாலும் அழற்சி அறிகுறிகள் இருப்பதில்லை. வீக்கம் மட்டுமே இருக்கலாம். இந்நிலையைத் திசுமிகைப்பில் இருந்து வேறுபடுத்திக் காணவேண்டும்.

குறிப்புகள்:

http://emedicine.medscape.com/article/1210342-overview

http://www.medscape.com/viewarticle/849552

http://www.reviewofophthalmology.com/content/d/features/i/1213/c/22862/

http://www.ncbi.nlm.nih.gov/pubmed/26247137

Kanski Jack J. Clinical Ophthalmology. A Systematic Approach. 6th ed. Butterworth, Heineman, Elsevier; 2008.

நோய் கடுமையானதா அல்லது நாட்பட்டதா என்பதைப் பொறுத்தே அறிகுறிகள் அமைகின்றன.

கடும் கண்ணீர்க்கோளவழல் அறிகுறிகள்:-

—    மேல் இமையின் பக்கவாட்டில் மூன்று பகுதி வீக்கம்

—    இமையில் வலியும் தொடர்புடைய கண்ணில் அழுத்தத்தை உணர்தலும்

—    இமை சிவப்பு

—    விழியிணைப்படல வீக்கம்

—    விழியிணைப்படலச் சிவப்பு

—    கண்ணில் இருந்து சளிச்சீழ் கசிவு

—    நிணநீர்ச்சுரப்பி வீக்கம்

—    விழிக்கோளம் பிதுங்குதல்

—    விழிக்கோளம் மேலும் கீழும் இடப்பெயர்ச்சி அடைதல்

—    விழி அசைவில் சிரமம்

நோயாளிக்கு தொடர்புடைய காய்ச்சல், உடல்சோர்வு, மேல் மூச்சுக்குழல் தொற்று உண்டாதல்.

நாட்பட்டக் கண்ணீர்க்கோளவழல்: இதில் கடுமையான அறிகுறிகள் இருப்பதில்லை. வலியோ கண்களில் ஏற்படும் அறிகுறிகளோ மிகவும் குறைவாகவே இருக்கும். கீழ் வருபவை தோன்றலாம்:

—    அசையும் வீங்கிய கண்ணீர்ச் சுரப்பி

—    மென்மையில் இருந்து கடுமையான உலர்விழி அம்சங்கள்

கண்ணீர்ச்சுரப்பி அழற்சி அடைவதற்கான காரணத்தைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

—    தொற்று

—    காரணம் அறியாதது

—    தன்தடுப்பாற்றல் நோய்

—    வடிநீர்ச்செல் மிகைப்பு

தொற்றால் ஏற்படும் கண்ணீர்க்கோளவழல்:

வைரல் கண்ணீர்க்கோளவழல்: சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களிடம் பாக்டீரியல் தொற்றை விட வைரல் கண்ணீர்க்கோளவழலே பரவலாகக் காணப்படுகிறது. கண்ணீர்ச் சுரப்பியைப் பாதிக்கும் வைரசுகள் பின்வருமாறு:

–    ­எப்ஸ்டின் – பார் மற்றும் அம்மைக்கட்டு வைரஸ்

–    தொற்றுண்டாக்கும் ஒற்றை உட்கரு உயிரி

–    அடினோவைரஸ்

–    பரக்கி வைரஸ்

–    சிற்றக்கி வைரஸ்

–    ரினோவைரஸ்

–    சைட்டோமெகாலோவைரஸ்

–    காக்சாக்கிவைரஸ் ஏ

–    எக்கோவைரஸ்

பாக்டீரியா கண்ணீர்க்கோளவழல்: கடுமையான சீழழற்சி இதில் மிகக்குறைவே. கண்ணீர்ச்சுரப்பியைத் தாக்கும் பாக்டீரியாக்கள்:

—    ஸ்டேபிலோகாக்கஸ் ஆரியஸ்

—    ஸ்ட்ரெப்டோகாக்கஸ்

—    ஹீமோபிலஸ் இன்ஃப்ளுயன்சா

—    க்ளெபிசெல்லா நிமோனியே

—    சூடோமோனாஸ்

—    மொராக்ஸெல்லா

—    நெய்சீரியா கொனேரியா

—    ட்ரெப்போனிமா பலிடம்

—    காசநோய் மைக்கோபாக்டீரியம்

—    பொரிலியா பர்க்டோஃபெரி

—    டிப்தீரியாய்ட்ஸ்

—    மைக்ரோகாக்கஸ்

பூஞ்சைக் கண்ணீர்க்கோளவழல்: இது அரிதானது. கீழ்வருபவற்றால் இது உண்டாகக் கூடும்:

–    ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ்

–    பிளாஸ்ட்டோமைக்காசிஸ்

ஓரணு கண்ணீர்க்கோளவழல்: அக்காந்தமிபியா போன்ற உயிரிகளால் இது அரிதாக ஏற்படுகிறது.

காரணமறியா கண்ணீர்க்கோளவழல்:

இது காரணம் அறியப்படாத ஒன்று. கண்ணீர்ச் சுரப்பிப் புண்ணுக்கு இதுவே பெரும்பாலும் திசுநோய்க்குறியியல் ஆய்வின் கண்டறிதல் ஆகும். இது சுரப்பியில் அழற்சியையும் நார்க்கட்டியையும் உண்டாக்குகிறது. பெயர் உணர்த்துவது போல் காரணம் அறியப்படவில்லை. நோய் உண்டாக்கும் பாக்டீரியா அல்லது வைரசுகள் இனங்காணப்படவில்லை என்பது பொருள். கண்ணீர்ச் சுரப்பி நோயோடு தொடர்பற்ற  தன்நோய்த்தடுப்பு நோய்களுடன் கூடுதலான இணைப்பாதிப்பு நோயாக உள்ளது.

தன்தடுப்புநோய் கண்ணீர்க்கோளவழல்: தன்தடுப்புநோய்களால் அடிக்கடி கண்ணிர்ச்சுரப்பி  பதிக்கப்படுகிறது. இதுவே முதல் மற்றும் ஒரே வெளிப்பாடாகவும் அமையலாம். கண்ணீர்ச் சுரப்பி பின்வருமாறு பாதிக்கப்படலாம்:

—    இணைப்புத்திசுப் புற்று கண்ணீர்க்கோளவழல்

—    ஸ்ஜோக்ரென் கண்ணீர்க்கோளவழல்

—    குருணைத்திசுவுடன் பல்குழல் அழற்சி கண்ணீர்க்கோளவழல்

—    இம்யுனோகுளோபுலின் G4 தொடர்புடைய (IgG4) கண்ணீர்க்கோளவழல்

—    லிம்போபிளாஸ்மாசைட்டிக் கண்ணீர்க்கோளவழல் (அரிது)

கிரீவ்ஸ் நோய் அழற்சியும் கோள அழற்சி நோய்த்தாக்கமும் கண்ணீர்க்கோள அழற்சியை உண்டாக்கலாம்.

வடிசெல் மிகைப்பு கண்ணீர்க்கோளவழல்:

வடிசெல் மிகைப்புக் கட்டி விழிக்கோள மற்றும் கண்ணீர்சுரப்பி அழற்சியை உருவாக்கும். கீழ்வருவனவற்றில் அழற்சி காணப்படும்:

—    கண்ணீர்ச் சுரப்பி புற்று

—    எதிர்வினை நிணநீர் மிகைப்பு

வடிவம் மாறும் சுரப்பிகள் கட்டி மற்றும் மூக்குச்சதை வளர்ச்சி நீர்க்கட்டிப் புற்று போன்ற பிற புறத்தோல் அசாதாரண திசு வளர்ச்சிச் சுரப்புக் கட்டிகளில் அழற்சி காணப்படும்.

மருத்துவ மனையில் நோயாளியிடம் நேரடிப் பரிசோதனையும் துணைச் சோதனைகளும் நடத்தப்படுகின்றன. நோயாளிக்குக் காணப்படுவன:

கடும் கண்ணீர்க்கோளவழல்:

—    பொதுவாக ஒருபக்கக் கடும் வலியும், கண் சிவப்பும் மேல்நெற்றிப் பொட்டுப் பகுதியில் அழுத்த உணர்வும் இருக்கும்.

—    கடுமையான வேகமான நோய் பாதிப்பு.

நீடித்த கண்ணீர்க்கோளவழல்:

–    மேல் நெற்றிப்பொட்டுக் கண்பகுதியில் ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு அல்லது இரு பக்க வலியற்ற கண்ணீர்ச் சுரப்பி வீக்கம்.

இது கடும் கண்ணீர்க்கோளவழலை விட பரவலாகக் காணப்படும்.

பரிசோதனையில் கானப்படுவன:

கடும் கண்ணீர்க்கோளவழல்:

—    மேல் இமை பக்கப்பகுதியின் மூன்று பங்கில் வீக்கம் (இமை S வடிவம் அடையும்)

—    இமை செம்மை நிறம் அடைதல்

—    விழியிணைப்படல வீக்கம்

—    விழியிணைப்படல சிவப்பு

—    கண்களில் சளிச்சீழ் கசிவு

—    நிணநீர்ச்சுரப்பி வீக்கம்

—    கண்கோளம் பிதுங்குதல்

—    கோளம் கீழ்நடுப்பகுதிக்கு இடம்பெயர்தல்

—    கண்ணசைவு குறைதல்

நோயாளிக்கு காய்ச்சல், உடல்சோர்வு, மேல்சுவாச மண்டலத் தொற்று போன்ற தொடர்புடைய அறிகுறிகள் தோன்றுதல்.

நீடித்த கண்ணீர்க்கோளவழல்:

–    வீங்கிய கண்ணீர்ச்சுரப்பி நகர்தல்

–    மிதம் அல்லது கடும் உலர்கண் அறிகுறிகள்

–    வீக்கத்தின் மேல் மென்மை இல்லாமல் இருத்தல்

–    கண் அறிகுறிகள் இருக்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும்

ஆய்வகச் சோதனைகள்:

கடும் கண்ணீர்க்கோளவழல்: கடும் நோய்க்குப் பின் வரும் சோதனைகள் செய்யப்படலாம்:

—    கண் கசிவு ஆய்வு

—    கண் கசிவில் திசு மற்றும் உணர்திறன் ஆய்வு

—    குருதித் திசு ஆய்வு

கடும் கண்ணீர்க்கோளவழல்: இதில் நீடித்த அறிகுறி நிலைகளும் காணப்படும். சோதனைகள் வருமாறு:

–    கண்ணீர்ச் சுரப்பி திசு ஆய்வு

பிம்ப ஆய்வுகள்:

—    கண்கோளத்தின் முரண் ஊடகத்துடன் கூடிய கணினி ஊடுகதிர் வரைவியிலில் கண்ணீர்ச் சுரப்பி நீள்சதுரமாகவும் பரவிய வீக்கமாகவும் காணப்படும். முரண் ஊடகத்தில் விரித்து நோக்கும்போது கடும் கண்ணீர்க்கோழவழல் குறிப்பிட்ட  பெருக்கத்தைக் காட்டும்; ஆனால் நீடித்த அழலில் பெருக்கம் காணப்படுவதில்லை. கடும் அழலைப் போல் அல்லாமல் நீடித்த அழலில் கண்ணீர்ச்சுரப்பி மாற்றம் இருபக்கமானது.

—    தொற்றுள்ள எலும்பில் அழுத்த மாற்றங்கள் கணினி ஊடுகதிர் வரைவியில் காணப்படுவதில்லை. கண்ணீர்ச் சுரப்பிக் கட்டியில் பொதுவாக அழுத்த மற்றங்கள் இருக்கும்.

கண்ணீர்ச்சுரப்பியின் திசுநோய்க்கூறியல் சோதனை:

கடும் கண்ணீர்க்கோளவழலுக்கு திசுநோய்க்கூறியல் குறிப்பிடப் படவில்லை.

சில நோய்களில் கண்ணீர்க்கோளவழலின் திசுநோய்க்குறியியல் அம்சங்கள் வருமாறு:

–    இணைப்புத்திசுப் புற்று: வடிசெல் ஊடுறுவலும் சுரப்பிநுண்ணறை நார்த்திசுவும் கொண்ட திசு இறப்பு சீழ் அழற்சி அற்ற குருணைத்திசுக்கட்டி.

–    கிரீவ் நோய்: வடிசெல் ஊடுறுவல், நார்த்திசு வீக்கம் மற்றும் சுரப்பிச் சிதைவு ஆகியவற்றை இது காட்டுகிறது.

–    ஸ்ஜோக்ரன் நோய்த்தாக்கம்: இது வடிசெல் மற்றும் பிளாஸ்மா செல் ஊடுறுவலைக் காட்டுகிறது.

–    பலகுழல் அழற்சியுடன் குருணைத்திசுக்கட்டி உருவாதல். அரக்க செல்லுடன் அல்லது இல்லாமல் குருணைத்திசுக்கட்டி அழற்சி, கொலாஜன் நசிவு,  மற்றும் இரத்தக் குழல் அழற்சி.

–    IgG4- தொடர்புடைய கண்ணீர்க்கோளவழல்: எதிர்வினை உற்பத்தி மையங்கள், சுரப்பிநுண்ணறை இழப்பு, நாளத்தைச் சுற்றி மற்றும் மடலிடை நார்த்திசு ஆகியவைகளைப் பெரும்பாலும் கொண்ட நிணநீர் புடைப்புடைய பி-செல் புற்று. இதில் IgG4 நேர்மறை பிளாஸ்மா செல்கள் இருக்கின்றன.

கீழ்வருவனவற்றில் இருந்து கண்ணீர்க் கோளவழல் பிரித்தறியப்பட வேண்டும்:

—    உலர்கண் நோய்த்தாக்கம்

—    கண்கோள அசாதாரணப் பிதுக்கம்

—    கண்ணிமை வீக்கம்

—    இமைக்கட்டி

—    தோலடி இணைப்புத்திசு அழற்சி

—    கோள   தோல்கட்டி

—    கண்ணீர்ச்சுரப்பிக் கட்டி

மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே சிகிச்சை பெற வேண்டும்.

நோய் வந்த விதம் மற்றும் அதன் நோய்க்கரணவியலைப் பொறுத்து மருத்துவம் அமையும்.

கடும் கண்ணீர்க்கோளவழல்:

—    வைரல் கண்ணீர்க்கோளவழல்: இது தானாகவே குணமாகி விடுவதால் சிகிச்சை தேவை இல்லை. ஊக்க மருந்தல்லாத எதிர்-அழற்சி மருந்துகள் போன்ற ஆதரவு சிகிச்சைகள் போதுமானவை.

—    பாக்டீரியா கண்ணீர்க்கோளவழல்: திசு ஆய்வு செய்யப்படும்போதே அகல் ஸ்பெட்ரம் நுண்ணுயிர்க்கொல்லிகளை (செஃபலோ ஸ்போரின்கள்) ஆரம்பிக்கலாம்.

—    பூஞ்சை கண்ணீர்க்கோளவழல்: பூஞ்சைக் கொல்லிகள் அளிக்கப்பட வேண்டியிருக்கும்.

—    ஓரணு கண்ணீர்க்கோளவழல்: குறிப்பிட்ட அமீபாக் கொல்லிகள் பரிந்துரைக்கப்படலாம்.

மண்டல நோய்களுக்கு, அழற்சியுள்ள தொற்றற்ற கண்ணீர்க்கோளவழல் கண்டறியப்பட்டு அதற்கேற்ற வாறு சிகிச்சை அளிக்கப்படும்.

நீடித்தக் கண்ணீர்க்கோளவழல்:

நீடித்தக் கண்ணீர்க்கோளவழலில் அதன் அடிப்படையில் இருக்கும் மண்டல நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்குக் கண்ணீர்ச்சுரப்பி திசு ஆய்வு வழிகாட்டுகிறது.

நோய்முன்னறிதல்:

கடும்  கண்ணீர்க்கோளவழல்: பெரும்பாலும் தன்னையே கட்டுப்படுத்தும் நோயாதலால் நோய்முன்னறிதலை அதுவே கொண்டுள்ளது.

நீடித்த கண்ணீர்க்கோளவழல்: அடிப்படையான நோயிலும் அதைக் கட்டுப்படுத்துவதிலும் முன்னறிதல் சார்ந்துள்ளது.

  • PUBLISHED DATE : Dec 15, 2015
  • PUBLISHED BY : Zahid
  • CREATED / VALIDATED BY : R. Davidson
  • LAST UPDATED ON : Dec 15, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.