கிட்டப்பார்வை

கிட்டப்பார்வை ஒரு வகையான விலகல் பிழை. இதில், கண்கள் ஓய்வு நிலையில் இருக்கும் போது முடிவிலியில் இருந்து வரும் இணை ஒளிக் கதிர்கள் விழிவில்லையின் ஒளி உணர் அடுக்குகளின் முன் குவியும்.

தொலைவில் இருக்கும் பொருளைப் பார்க்கக் கிட்டப் பார்வை உள்ளவர்கள் குறுகிய பிளவு வழி நோக்குவதற்காக இமைகளைப் பாதி சுருக்கிப் பார்க்கும் இயல்பைக் கொண்டு ‘மயோப்பியா’ என்ற சொல் பயன்படுத்தப் பட்டது.

வெண்படலத் திறன், விழிவில்லைத் திறன் மற்றும் கண்கோளத்தின் அச்சு நீளம் ஆகிய மாறிகளைக் கொண்டுதான் முதன்மையில் கண்ணின் விலகல் திறன் தீர்மானிக்கப்படுகிறது. எட்டப்பார்வையில் விலகல் திறனின் இம்மூன்று கூறுகளும் இணைந்து கண்ணின் இயல்பான விலகலை உருவாக்குகின்றன.

எட்டப்பார்வையில் கண்ணில் விலகல் பிழை இருப்பதில்லை. ஆகவே தொலைவு பார்வைக்கு எந்த வித சீரமைப்பும் தேவைப்படுவதில்லை. எட்டப்பார்வை கொண்ட ஒரு கண்ணின் ஒளி அச்சிற்கு இணையான கதிர்கள் விழித்திரையில் குவிகின்றன. எட்டப்பார்வையின் தொலைப் புள்ளி ஒளியியல் முடிவிலி ஆகும். இது 6 மீட்டர் ஆகும். வெண்படலமும் விழித்திரையும் விழிவில்லையும் ஒளிக் கதிர்களை போதுமான அளவில் குவிக்க முடியாத போது விலகல் பிழை ஏற்படுகிறது. விலகல் பிழையை அளக்க உதவும் அலகு டயோப்டர் (D)ஆகும். மீட்டர் அளவையில் குவிய தூரத்தின் தலைகீழ் என்று இது அறுதியிடப்படுகிறது.

கண்ணின் ஒளி உணர் திறன் அடுக்குகளில் ஒளி சரியான வகையில் குவியாமல் மங்கல் பார்வை காணப்படுவதே விலகல் பிழையாகும். இது ஒரு பொதுவான பிரச்சினை. கிட்டப்பார்வை, எட்டப்பார்வை, சிதறல் பார்வை, வெள்ளெழுத்து ஆகியவை இதில் அடங்கும். கண்ணாடியோ தொடுவில்லையோ இன்றி பார்க்கக் கூடிய எவரும் எட்டப்பார்வைத் தெளிவு கொண்டவர் ஆகும்.

எட்டப்பார்வைத் தெளிவின் இருப்பும் பரவலும் வயதைப் பொறுத்தது. குழந்தைப் பருவத்தின் ஆரம்பக் கட்டத்தில்  பெரும்பாலான குழந்தைகளுக்கு எட்டப்பார்வை இருக்கும். பள்ளிப் பருவத்தில் கிட்டப்பார்வை கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிதறல் பார்வை வயதைப் பொறுத்து சிறிய அளவிலேயே மாறுபடும்.

குறிப்புகள்

Agarwal Sunita, Agarwal Athiya, Apple David J, Buratto Lucio, Aliό Jorge L, Pandey Suresh K, Agarwal Amar. Textbook of Ophthalmology Vol 1. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2002. P 165- 169.

Khurana AK. Comprehensive Ophthalmology Sixth Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2015. P 17- 18.

Khurana AK. Theory and Practice of Optics and Refraction Second Edition. Reed Elsevier India Private Limited 2008. P 71- 79.

Nema HV, Nema Nitin. Textbook of Ophthalmology Sixth Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2012. P 30- 32.

Sharma Yog Raj, Sudan Rajeev. Concise Textbook of Ophthalmology. Elsevier 2007. P 39- 46.

Bope Edward T, Kellerman Rick D. Conn’s Current Therapy 2016. Elsevier 2016. P 352- 358. 

Chuah Dr Gerard. A Patient's Guide to Myopia and Myopia Treatment. Effective Asset Management Pte. Ltd. 2004.

Denniston Alastair K O, Murray Philip I. Oxford Handbook of Ophthalmology. Third Edition.Oxford University Press 2014. P 548- 549.

 TokoroTakashi. Atlas of Posterior Fundus Changes in Pathologic Myopia. Springer- Verlag Tokyo 1998.

Grosvenor Theodore. Primary Care Optometry Fifth Edition. Butterworth Heinemann Elsevier 2007. P 41.

Hoyt Creig S, Taylor David. Pediatric Ophthalmology and Strabismus Fourth Edition. Elsevier Saunders 2013. P 31- 35.

Kanski Jack J, Bowling Brad. Clinical Ophthalmology- A Systematic Approach Seventh Edition. Elsevier Saunders 2011.

Lee WR. Ophthalmic Histopathology. Springer- Verlag London 1993. P 191.

Rosenfield Mark, Logan Nicola, Edwards Keith. Optometry- Science, Techniques and Clinical management Second Edition. Butterworth Heinemann Elsevier 2009. P 159- 171.

Wissinger B, Kohl S, Langenbeck U. Genetics in Ophthalmology. Karger 2003. P 34- 49.

Wright Kenneth W, Spiegel Peter H, Thompson Lisa S. Handbook of Pediatric Retinal disease. Springer 2006. P 387- 409.

https://nei.nih.gov/health/errors/myopia

http://www.aoa.org/patients-and-public/eye-and-vision-problems/glossary-of-eye-and-vision-conditions/myopia?sso=y

http://www.nhs.uk/conditions/short-sightedness/Pages/Introduction.aspx   

 

பிறவி கிட்டப்பார்வை: குழந்தைக்குக் காணப்படும் அறிகுறிகள்:

எளிய கிட்டப்பார்வை

 • தொலைபொருள் மோசமாக காட்சிதருதல்
 • கண் சோர்வு
 • உளவியல் மாற்றத்தால் அதிகமாக உள்ளரங்கச் செயல்பாடுகளில் ஈடுபடுதல்

நோயடிப்படையிலான கிட்டப்பார்வை

 • அதிக விலகல் பிழையால் குறைப் பார்வை
 • விழிப்படிக நீர்மச் சிதைவால் கரும்புள்ளிகள் பறத்தல்
 • விழிப்படிகநீர்மம்-விழித்திரை சிதைவால் அதி கிட்டப்பார்வையில் இரவுக் குருடு

 

கிட்டப்பார்வையின் நோயியல் கூறுகள் பின்வருமாறு காணப்படும்:

 • அச்சுசார் கிட்டப்பார்வை: இது முன்-பின் கண்கோள நீளம் அதிகரிப்பதால் ஏற்படுகிறது. இதுவே பொதுவான வடிவம்.
 • வளைவு கிட்டப்பார்வை: வெண்படம், விழிவில்லை அல்லது இரண்டின் வளைவு அதிகரிப்பதால்  இது உண்டாகிறது.
 • இருப்புநிலை கிட்டப்பார்வை: விழிவில்லை முன்புறமாக இருப்பதால் இது உருவாகிறது.
 • விகித கிட்டப்பார்வை: உட்கரு இறுகுவதால் விழிவில்லையின் விலகல் விகிதம் அதிகரித்து இவ்வகையான கிட்டப்பார்வை ஏற்படுகிறது.
 • அதிக தகவமைவால் கிட்டப்பார்வை: தொடர் தகவமைவுகளால் இது உண்டாகிறது.

ஒளியியல்

முடிவிலியில் இருந்து வரும் இணை ஒளிக்கதிர்கள் விழித்திரை அடுக்குகளின் முன் குவிவதால், விலகல் ஒளிக்கற்றையால் உருவாகும் தொலை பொருட்களின் பிம்பம் பரவல் வளையங்களாக காணப்படும்.

கிட்டப்பார்வைக் கண்ணின் தொலைப் புள்ளி விழித்திரையின் முன் ஓர் அறுதிப்புள்ளி ஆகும். இதன் காரணமாக,  தொலைப் புள்ளியில் இருக்கும் அருகுப் பொருள் எந்தத் தகவமைவு முயற்சி இல்லாமலேயே விழித்திரையில் குவிக்கப்படுகிறது.

கிட்டப்பார்வையில் ஒருங்கிணைப்புப் புள்ளி விழித்திரையில் இருந்து மேலும் தள்ளி அமைகிறது. இவ்வாறு, உருவாகும் பிம்பம், எட்டப்பார்வைத் தெளிவு மற்றும் கண்ணாடியால் சீரமைக்கப்பட்ட கண்களை விட கணிசமாகப் பெரியதாய் இருக்கும்.

சரிசெய்யப்படாத கிட்டப்பார்வையில், தகவமைவு இயல்பாக மேம்படுத்தப் படுவதில்லை.  ஏனெனில், பக்கத்தில் இருக்கும் பொருட்களைத் தெளிவாகப் பார்க்க அவை தகவமைவு கொள்ளத் தேவை இருப்பதில்லை. இதன் விளைவாக குறையாகக் குவிதலும், புற மாறுகண்ணும் ஆரம்ப வெள்ளெழுத்தும் ஏற்படலாம்.

நோய்கண்டறிதல், மருத்துவ அம்சங்களையும் விழித்திரைமானி ஆய்வையும் பொறுத்தது.

கிட்டப்பார்வையின் மருத்துவ வகைகள்

பிறவி கிட்டப்பார்வை: பிறவி கிட்டப்பார்வை பிறப்பில் இருந்தே காணப்படும். ஆனால் 2-3 வயதிலேயே கண்டறியப்படும். இது ஒரு பக்கமானது. ஒத்தபார்வையின்மையாக வெளிப்படும். அரிதாக இருபக்கமானதாகவும் இருக்கலாம். விழிக்கோளத்தின் அச்சு நீளம் அதிகரிப்பதால் பொதுவாக இது ஏற்படுகிறது. விலகல் பிழை வழக்கமாக 8-10 D-யாக இருக்கும். கீழ் வருவனவற்றோடு இது சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்:

 • காலத்திற்கு முந்திய பிறப்பு
 • மார்ஃபன் நோய்த்தாக்கம்
 • ஹோமோஸ்டினூரியா
 • பிறவி குவி மாறுகண்
 • விழி சுருக்குத் தசை இன்மை, கண்புரை, சிறு விழிக்கோளம், பெரும் விழிவெண்படலம், பிறவி விழித்திரை விடுபடல் போன்ற பிறவிக் கோளாறுகள்.

பார்வைத் தெளிவின்மையோடும், பிறவி குவி மாறுகண்ணோடும் பிறவி கிட்டப்பார்வை தொடர்புடையதாக  இருக்கக்கூடும். இருபக்கக் கிட்டப்பார்வையில் தூரத்துப் பொருட்களைப் பார்க்கக் குழந்தை சிரமப்பட்டு  பொருட்களை கண்ணுக்கு மிக அருகில் வைத்து நோக்கும்.

எளிய அல்லது வளர் கிட்டப்பார்வை: இதுவே பரவலான வடிவம். இது உடலியல் அல்லது பள்ளி கிட்டப்பார்வை எனப்படும். இது வேறு கண் நோயோடு சம்பந்தப்பட்டதல்ல. கண் வளர்ச்சியின் போது ஏற்படும் உடலியல் வேறுபாட்டின் விளைவு இது. இது தன்னினக்கீற்று மேலாதிக்க அல்லது ஒடுங்கிய நிலையாக இருக்கலாம். அச்சுசார் வகை கண்கோள நீளத்தில் ஒரு உடலியல் வேறுபாடாகவே இருக்கலாம். வளைவு வகை விழிக்கோள வளர்ச்சிக் குறைபாட்டால் உருவாகலாம்.

பெரும்பாலான நோயாளிகள் எட்டப்பார்வையோடு பிறக்கிறார்கள். ஆனால் வயது அதிகரிக்கும்போது கிட்டப்பார்வையாளர்கள் ஆகின்றனர். இது பொதுவாக 7-10 வயதில் ஆரம்பித்து பின் அதிகரிக்கிறது. பார்வைசார் அறிகுறிகளோடு குழந்தைக்கு வேறு அறிகுறிகளும் காணப்படும்:

 • பெரிய விழிக்கோளம்
 • சற்று ஆழமான முன்னறை
 • சிறிது விரிவடைந்த பாவை
 • விழிக்கோள அடிப்பகுதி

நோயியல் அல்லது சிதைவு எட்டப்பார்வை: வேகமாக வளரும்  விலகல் பிழையான இது அதிக அளவிலான கிட்டப்பார்வையாக வளர்ச்சி அடைந்த பருவத்தில் உருவாகும். இதனோடு சிதைவு மாற்றங்கள் காணப்படும். விழிக்கோளத்தில் துரிதமான அச்சு வளர்ச்சியால் இது ஏற்படுகிறது. இது மரபியல் அல்லது பொதுவான வளர்ச்சியோடு தொடர்புடையதாக இருக்கலாம்.

நோயியல்சார் கிட்டப்பார்வை விழிக்கோளத்தின் துரித அச்சு வளர்ச்சியால் ஏற்படுகிறது. இது இயல்பான உயிரியல் வளர்ச்சி வேறுபாடுகளுக்குள் அடங்காது. அறிகுறிகள் தவிர பின் வரும் நோய்க்குறிகளும் காணப்படும்:

 • கண்ணின் பின் துருவம் நீட்சி அடைவதால் பெரிய கண்கள்
 • பெரிய வெண்படலம்
 • ஆழமான முன்னறை
 • ஒளிக்கு மந்தமான எதிர்வினை காட்டும் சற்று பெரிய பாவை
 • கன்னப்பொட்டு பக்கத்தில் கிட்டப்பார்வை பிறையுடன் கூடிய பெரிய மற்றும் வெளிறிய ஒளித்தகடு.
 • ஒளித்தகட்டின் மூக்குசார் பகுதியில் மேலிழுவை பிறை.
 • விழிநடுப்படம் மற்றும் விழித்திரை சிதைவு.
 • விழித்திரை சார் புதுக்குழல் தோன்றுதல் மற்றும் விழிநடுப்படல சிதைவால் கட்டிச் சிவப்பு வட்டத் திட்டாக ஃபாஸ்டர்-ஃபியூக் புள்ளிகள் காணப்படலாம்.
 • விழித்திரை விளிம்பில் தொடர்புடைய பின்னல் சிதைவு விழித்திரை விளிம்புப் பகுதியில் காணப்படலாம்.
 • விழித்திரை கிழிதல், சிதைவு அல்லது விடுபடல் நிகழலாம்.
 • பின் துருவத்தில் ஏற்படும் வெண்படல நீட்சியால் பின்புற கண்பாவைப் பிதுக்கம்.
 • விழிப்படிகச் சிதைவு
 • வெய்ஸ் எதிர்வினையாகக் காணப்படும் பின் விழிப்படிக விடுபடல்
 • பார்வைக் களச்சுருக்கமும் வளைய குருட்டுப்புள்ளியும்
 • விழிநடுப்படலம்-விழித்திரை செயல் இழப்பால் மின்விழித்திரை மானியில் இயல்புக்கும் குறைவான மின்விழித்திரைவரைவு வெளிப்படும்.

ஏற்படும் கிட்டப்பார்வை: கீழ் வருவனவற்றால் இது உருவாகலாம்.

 • விகிதக் கிட்டப்பார்வை: விலகல் விகித மாற்றத்தால் ஏற்படுகிறது.
 • வளைவு கிட்டப்பார்வை:  வெண்படலம் அல்லது விழிவில்லையின் வளைவு அதிகரிப்பதால்.
 • இருப்புநிலை கிட்டப்பார்வை: விழிவில்லை  முன்புறமாக நழுவுவதால்.
 • தொடர் கிட்டப்பார்வை: எட்டப்பார்வையை மிகையாக சரிசெய்தல் அல்லது போலிவில்லை யில் உட்கண் வில்லை பொருத்துவதில் மிகையாக சரிசெய்தல்.
 • போலி அல்லது செயற்கைக் கிட்டப்பார்வை: மிகைத் தகவமைவு அல்லது அவ்வப்போது ஏற்படும் தகவமைவால் இது ஏற்படலாம். குழந்தைகளில் முழு எட்டப்பார்வை சரிசெய்தலாலும் உருவாகலாம்.
 • மருந்துத் தூண்டல் கிட்டப்பார்வை: பைலோகார்ப்பைன், ஸ்டிராய்டுகள் அல்லது சல்பனோமைடுகள் போன்ற சில மருந்துகளாலும் கிட்டப்பார்வை ஏற்படலாம்.

 

மருத்துவ கண்காணிப்பின் கீழேயே நோய் மேலாண்மை செய்யப்பட வேண்டும்.

மருத்துவ சிகிச்சை

பார்வை நலவியல்: கண் சோர்வைத் தவிர்க்க இது அவசியம். அண்மைப் பணியின் போது சரியான நிலை மற்றும் போதுமான வெளிச்சம் இன்றியமையாதது.

ஒளியியல் சிகிச்சை:

தெளிவான விழித்திரை பிம்பத்தைப் பெற தகுந்த கண்ணாடிகள்/ தொடுவில்லைகள் பயன்படுத்தப் படுகின்றன.

அதிக அளவு பார்வையைக் கொடுக்கும் குறைந்த அளவு திறன் கொடுக்கப்படுகிறது.

குழந்தைகள்: 6 டி வரை கிட்டப்பார்வை கொண்ட குழந்தைகளுக்கு, குறிப்பாக 8 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, கண்டிப்பாக சரிசெய்யப்பட வேண்டும். மேலும் தொடர்ந்து கண்ணாடி அணியும் படி ஆலோசனை வழங்க வேண்டும். இது இயல்பான தகவமைவை மேம்படுத்த உதவும். குவி எதிர்வினை கிட்டப்பார்வையை ஒருபோதும் மிகையாக சரி செய்யக் கூடாது.

பெரியவர்கள்: 30 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு முழு அளவிலான சரிசெய்தல் கூடும். 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழு சீரமைப்பு இயலுவதில்லை. சற்றே திறன் குறைந்த கண்ணாடிகள் பரிந்துரைக்கப்படும்.

அதி கிட்டப்பார்வை: சிறந்த பார்வைக்கான  சிறிய அளவிலான சரிசெய்தல் உகந்தது. சிறிய அளவிலான பிம்பம் உருவாவதை குறைந்த சரியமைப்பு தவிர்க்கிறது.

கண்ணின் ஒளியியல் சீரமைப்பில் அடங்குவன:

 • கண்ணாடியால் சரிசெய்தல்: கண்ணாடி மூலம் சரிசெய்யக்கூடும். ஆனால், அது பிம்ப அளவைக் குறைப்பதோடு அதிக அளவிலான கிட்டப்பார்வை இருக்கும்போது வெளிப்புற பிம்பத்தைச் சிதைக்கக்கூடும்.
 • தொடுவில்லைகள்: அதிக அளவிலான கிட்டப்பார்வைக்கு இது குறிப்பாக பயன்படும். இது புற பிம்பச் சிதைவையும் சிறுத்தலையும் தவிர்க்க உதவும்.
 • பார்வைக் குறைவும் பார்வைக் கருவிகளும்
 • கண்ணாடி அல்லது தொடுவில்லையால் பயனுள்ள பார்வை கிட்டாத விழித்திரை சிதைவு கொண்ட அதிகரித்து வரும் கிட்டப்பார்வை கொண்ட நோயாளிகளுக்குப் பார்வைக் கருவிகள் பரிந்துரைக்கப்படும்.
 • அறுவை சிகிச்சையில் அடங்குவன:
 • லாசிக்: இது வெண்படல செதுக்கலைக் குறிக்கிறது. ஒரு பகுதி தடிமன் வெண்படல மடலை அகற்றியபின் வெண்படல திசுவலையில் வெட்டும் லேசர் தீய்ப்பு செய்யப்படும். தீய்ப்பு முழுமை அடைந்த பின் அந்த மடல் தன்னிடத்தில் மறுபடியும் வைக்கப்படும். ஓரிரு நாட்களில் அல்லது சிலருக்கு ஒரு சில வாரங்களில் பார்வை திரும்பும்.
 • அலைமுனை வழிகாட்டும் லாசிக்: இது மரபான லாசிக் முறையைவிட துல்லியமான அலைமுனை நுட்பத்தைக் கொண்டது.
 •  உட்புற லாசிக்: இது ஃபெம்டோ நொடி லேசரை பயன்படுத்துகிறது. இது கத்தியை விட மிகவும் துல்லியமானது. துல்லியத்திலும் பாதுகாப்பிலும் அதிக  துல்லியத்தைக் கொடுக்கிறது. திட்டமிட்ட ஆழம் மற்றும் இடத்தில் இது வெண்படல மடலை அளிக்கிறது.
 • மேற்புற லாசிக்: புறத்திசுவில் ஒரு மென் மடலத்தை உருவாக்க இது வடிவமைக்கப்படுகிறது. மெல்லிய, ஆழ அல்லது தட்டையான வெண்படலம் கொண்ட நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த மாற்று. வெட்டு லேசரைக் கொண்டு வடிவமைப்பு செய்தபின் திரும்பவும் பொருத்தப்படுவதற்காக இந்த மடலம் பாதுகாத்து வைக்கப்படும்.
 • ஒளிவிலகல் வெண்படல அறுவை: இம்முறையிலும் வெண்படலத்தை வடிவமைக்க லேசர் வெட்டி பயன்படுத்தப் படுகிறது. ஆனால் இதில் மடிப்புத் மடல் தேவையில்லை. பரப்பு மேற்தோலை அகற்றிய பின் முன் திசுவலையில் நேரடியாக லேசர் பயன்படுத்தப்படுகிறது. லேசர் சிகிச்சைக்குப் பின் மின் தொடுவில்லை பரிந்துரைக்கப்படுகிறது. வெண்படல மேற்திசு 4-7 நாட்களில் குணமடையும். பார்வை சீரடைய சில வாரங்களில் இருந்து பல மாதங்கள் வரை ஆகும்.
 • லேசர் சார்மேற்திசு வெண்படல செதுக்கல்: நீர்ம எரிசாராயத்தைப் பயன்படுத்தி  மேற்திசு படலத்தைக் கிழித்து மரபுமுறை  ஒளிவிலகல் வெண்படல அறுவை போன்று லேசர் பிரயோகித்துப் பின்னர் மேற்திசுவை மறுபடியும் நிலை இருத்துதல்.
 • ஆர வெண்படல அறுவை: நடு வெண்படலத்தில் இருந்து 90% வெண்படல ஆழத்தில் ஆர வடிவ வெட்டுக்கள் அளிக்கப்பட்டு வெண்படல விளிம்பு ஊதவைக்கப்படுகிறது. இந்த அறுவை பலன் அளித்தாலும் விளைவு எதிர்பார்க்கும் படி அமைவதில்லை. மேலும் மிகை சீரமைப்புக்கும் அதிகரிக்கும் எட்டப்பார்வைக்கும் வழிகோலும். ஒளிவிலகல் வெண்படல அறுவை புகுத்தப்பட்ட பின்னர் ஆர வெண்படல் அறுவைக்கு மாற்றாக லேசர் பார்வை சீரமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
 • விலகல் வில்லை மாற்று: விழிவில்லைக்குப் பதிலாக உட்கண் வில்லைகளைப் பொருத்தும் அறுவையே விலகல் வில்லை மாற்று. லேசர் பார்வை சீரமைப்புக்கு இடமற்ற நிலையில் அதி விலகல் பிழை சீர் செய்தலுக்கு இது வழியாகும்.
 • போலி உட்கண் வில்லை பொருத்தல்:  கருவிழிக்கு முன் அதனோடு இணைந்து அல்லது கருவிழிக்கு சற்று பின்னர் போலி உட்கண் வில்லை பொருத்தப்படுகிறது. வெண்படல விலகல் அறுவையோடு கூடிய லேசர் பார்வை சீரமைப்புக்கு மாற்றாக இது அமைகிறது.

அறுவைக்குப் பின்னான பொருந்தாக்குறிகள்:

 • வெண்படல அழற்சி, கண்சவ்வழற்சி அல்லது வெண்படல புண்கள் போன்ற வெண்படல அல்லது முன் பகுதி நோய்கள்.

நோய்முன்கணிப்பு:

எளிய கிட்டப்பார்வை  முன்கணிப்பு சிறந்த முறையில் இருக்கும். 21 வயதில் விலகல் பிழைகள் பொதுவாக நிலைக்கும்.

நோய் சார் கிட்டப்பார்வையில் முன்கணிப்பு எப்போதும் கூற இயலாததாகவே அமையும். சிதைவின் காரணமாக பார்வையிழப்பு அதிகரித்து வருவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. விழித்திரை இழுபட்டு மெல்லியதாக இருப்பதால் விழித்திரை விடுபடலுக்கு வழிகோலும்.

 

கிட்டப்பார்வையின் சிக்கல்களில் அடங்குவன:

 • சிக்கலான கண்புரை: விழிவில்லையின் இயல்பற்ற வளர்சிதை மாற்றத்தால் இது ஏற்படுவது தெளிவு.
 • குருதிக்கசிவு:  விழிப்படிகம் மற்றும் விழித்திரையில் ஏற்படும் சிதைவு மாற்றத்தோடு தொடர்புடையது.
 • விழித்திரை கண்ணீர்: விழித்திரை உடைவு ஏற்பட்டு விழித்திரை விடுபடலுக்கு வழிகோலுகிறது.
 • விழிப்படிக சிதைவு:  விழித்திரை கண்ணீரோடு இது பொதுவாக உண்டாகும். கருவிழிப்படல சிதைவு விழிப்படிகப் பொருள் கசிவுக்கு வழிவகுக்கும்.
 • கருவிழிப்படல சிதைவும் இரத்தவுறைவும்: இவை கடுமையான பார்வை இழப்புக்கு வழிகோலும். பரவலாக இது காணப்படுகிறது.

 

கீழ்வருவதற்கு தடுப்புமுறை தேவைப்படும்:

 • நோய்சார் கிட்டப்பார்வை: நோய்சார் கிட்டப்பார்வை கொண்ட இருவர் தங்களுக்குள் திருமணத்தைத் தவிர்ப்பதால் குழந்தைகளுக்கு இது ஏற்படாமல் தவிர்க்கலாம்.

எளிய கிட்டப்பார்வை கொண்டவர்கள் திருமணம் செய்து கொள்வதால் அது குழந்தைகளுக்கு ஏற்படுவதில்லை.

 • PUBLISHED DATE : Jun 05, 2017
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Jun 05, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.