சிதறல் பார்வை

சிதறல் பார்வை என்பது ஒரு வித ஒளிவிலகல் பிழை ஆகும். இதில் ஒளிவிலகல்  வெவ்வேறு நடுக்கோட்டில் வெவ்வேறு விதமாக இருக்கும். இதன் விளைவாக கண்ணுக்குள் நுழையும் ஒளிக்கதிர்கள் ஒரு புள்ளியில் குவியாமல் குவிகோடுகளை உருவாக்கும்.

பேனான் மற்றும் வால்ஷ் விளக்குவது போல் (1945) சிதறல் பார்வை 1727-ல் சர் ஐசக் நியூட்டனால் 1727-ல் முதன் முதலில் குறிப்பிடப்பட்டது. ஆயினும், சிதறல் பார்வை குறித்த விளக்கத்தைத் தாமஸ் யங் 1800-ல் முதன் முதலில் வெளியிட்டார்.

வெண்படலத் திறன், விழிவில்லத் திறன் மற்றும் கண்கோளத்தின் அச்சு நீளம் ஆகிய மாறிகளைக் கொண்டே பெரும்பாலும் கண்ணின் விலகல் திறன் தீர்மானிக்கப்படுகிறது. எட்டப்பார்வைத் தெளிவில், விலகல் திறனின் இம்மூன்று கூறுகளும் இணைந்து கண்ணின் இயல்பான விலகலை உற்பத்தி செய்கின்றன.

எட்டப்பார்வைத் தெளிவில் கண்னில் எந்த விலகல் பிழையும் இருப்பதில்லை. இதனால் எட்டப் பார்வைக்கு எந்த சரிசெய்தலும் தேவை இல்லை. எட்டப்பார்வைத் தெளிவுக் கண்ணில் பார்வை அச்சுக்கு இணையாக உள்ள கதிர்கள் விழித்திரையில் குவிகின்றன. எட்டப்பார்வைத் தெளிவில் உச்சப் புள்ளி என்பது பார்வை முடிவிலி ஆகும் . இது 6 மீட்டர். வெண்படலமும் விழிவில்லையும் ஒளிக்கதிர்களைப் போதுமானவகையில் குவிக்காத போது விலகல் பிழை ஏற்படுகிறது. விலகல் பிழையை அளக்கும் அலகு டயோப்டர்(D). மீட்டர் அளவில் குவி நீளத்தின் தலைகீழ் என்று இது வரையறுக்கப்படுகிறது.

விலகல் பிழை என்பது கண்ணின் ஒளியுணர் பகுதியில் ஒளி சரிவர குவியாத நிலை ஆகும். இதனால் பார்வை மங்கலாக இருக்கும். இது பொதுவான கண் பிரச்சினை. இதனால், கிட்டப்பார்வை, எட்டப்பார்வை, ஒளிச்சிதறல், வெள்ளெழுத்து ஆகியவை ஏற்படலாம். கண்ணாடி அல்லது தொடுவில்லை உதவி இன்றி பார்க்கும் திறன் இருந்தால் அது எட்டப்பார்வைத் தெளிவு எனப்படும்.

வயதைப் பொறுத்து விலகல் பிழை பெரிதும் மாறுபடும். பிறப்பின் ஆரம்பக் கட்டங்களில் பெரும்பாலான சிசுக்களுக்கு மிகை எட்டப்பார்வை இருக்கும். பள்ளிப்பருவத்தில்  கிட்டப்பார்வை கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிதறல்பார்வை வயதுக்கு ஏற்பக் குறைந்த அளவே மாறும். பெரும்பாலான குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் சிறு அளவில் விதிப்படியான சிதறல் பார்வை கணப்படும். ஆனால் பிற்காலத்தில் விதிப்படி சிதறல் பார்வை எண்ணிக்கை குறைந்து விதிக்கு எதிரான சிதறல் பார்வை எண்ணிக்கை மிகும்.

சிதறல் பார்வையைப்  பின் வருமாறு வகைப்படுத்தலாம்:

 • பொதுவான சிதறல்பார்வை: உருளை அல்லது கோள உருளை கண்வில்லையால் சரிப்படுத்தலாம்.

-         விதிப்படியான சிதறல்பார்வை: செங்குத்தான வெண்படல நடுக்கோடு 90˚-க்கு நெருங்கி இருக்கும்போது.

-         விதியெதிர் சிதறல்பார்வை: செங்குத்தான வெண்படல நடுக்கோடு 180˚-க்கு நெருங்கி இருக்கும்போது.

-         இரு-சாய்வு சிதறல் பார்வை: இரு முக்கிய நடுக்கோடுகளும் ஒன்றுகொன்று செங்குத்தாக இல்லாதபோது.

 • வழக்கமற்ற சிதறல்பார்வை: உருளை மற்றும் கோள-உருளை விழிவில்லையால் சீரமைக்க இயலாதது.  பார்வைக் கூர்மை குறையும். பார்வைத் திறன் மோசமாக இருக்கும். வெண்படல நோயால் ஏற்படும். உ-ம்: வெண்படலக்கூம்பல்

-         அக்கித் தொற்றுக்குப் பின் காயம் அல்லது வடுவுறல், கண்புரை அறுவை, ஊடுறுவும் வெண்படல அறுவை அல்லது தேர்வு வெண்படல விலகல் அறுவை ஆகியவற்றாலும் இது ஏற்படும்,

குறிப்பிட்ட ஒரு கண்னின் கோள குறைப்பார்வையைப் பொறுத்து சிதறல் பார்வையை எளியது அல்லது கூட்டமைவு கொண்டது என வகைப்படுத்தலாம்.  ஒன்று அல்லது இரு நடுக்கோடுகளுமே முறையே விழித்திரைக்கு வெளியே குவிகிறதா என்னும் அடிப்படையில் இது அமையும். ஒரு நடுக்கோடு விழித்திரைக்கு முன்னும், இன்னொன்று விழித்திரைக்குப் பின்னும் குவிந்தால் இத்தகைய சிதறல் பார்வை கலவை சிதறல் பார்வை என அழைக்கப்படும்.

சிதறல் பார்வையில், வெவ்வேறு நடுக்கோடுகளை ஒட்டி கண்ணுக்கு வெவ்வேறு விலகல் திறன் காணப்படும். செங்குத்துத் திசையில் நுழையும் ஒளியும் இணைத்திசையில் நுழையும் ஒளியும் வெவ்வேறு விதங்களில் குவியும். செங்குத்து வளைவு கொண்ட நடுக்கோட்டிற்கு அதிக விலகல் திறன் இருக்கும். சிதறல் பார்வை கொண்ட கண் மங்கலான பிம்பத்தை உருவாக்குகிறது. இரு குவி கோடுகள் உற்பத்தியாவதால் இது நடைபெறுகிறது.  விழித்திரையில் ஒரு குவிய பிம்பம் ஏற்பட வேண்டுமானால் இரு நடுக்கோடுகளிலும் இரு வெவ்வேறு சீரமைப்பு தேவைப்படும்.

குறிப்புகள்:

Sihota Ramanjit, Tandon Radhika. Parsons’ Diseases of the Eye Twenty Second Edition. Elsevier 2015. P 76.

Wang Ming, Swartz Tracy Schroeder. Irregular Astigmatism- Diagnosis and Treatment. Slack Incorporated 2008.

Yanoff Myron, Duker Jay S. Ophthalmology Third Edition. Mosby Elsevier 2009. P 107- 117.

Grosvenor Theodore. Primary Care Optometry Fifth Edition. Butterworth Heinemann Elsevier 2007. P 17- 19.

Khurana AK. Theory and Practice of Optics and Refraction Second Edition. Reed Elsevier India Private Limited 2008. P 79- 83.

Khurana AK. Comprehensive Ophthalmology Sixth Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2015. P 18.

Agarwal Sunita, Agarwal Athiya, Apple David J, Buratto Lucio, Aliό Jorge L, Pandey Suresh K, Agarwal Amar. Textbook of Ophthalmology Vol 1. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2002. P 174- 177.

Selser Richard E Jr. Proceedings of the 42nd Annual Symposium on Medical Cornea- Corneal and Refractive Surgery, New Orleans, LA, USA, February 26- 28, 1993 organised by New Orleans Academy of Ophthalmology. Kugler Publications 1994. P 87- 99.

Bope Edward T, Kellerman Rick D. Conn’s Current Therapy 2016. Elsevier 2016. P 352- 358. 

http://emedicine.medscape.com/article/1220489-overview

http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1442-9071.2009.02005.x/pdf

Bannon RE, Walsh R. On Astigmatism, Parts 1 and 2. Amer. J. Optom., 1945; Vol. 22: 101-111, 162- 179.

பொதுவான சிதறல் பார்வையின் அளவு மற்றும் வகையைப் பொறுத்து அறிகுறிகள் காணப்படும். அவற்றில் அடங்குவன:

 • பார்வை மங்குதல்: குறைவான சிதறல் பார்வை நோயாளிகளின் பார்வை மாறும் மங்கல் தன்மை கொண்டதாக இருக்கும். கண்னை மூடுதல் அல்லது தேய்த்தலால் தெளிவு உண்டாகும்.
 • கண்நலிவின் அறிகுறிகள்: கண் களைப்படைதல், தலைவலி, அரிப்பு, மயக்கம் மற்றும் சோர்வு.
 • கண் ஒடுங்குதல்: அதிக அளவு சிதறல் பார்வை கொண்டவர்களுக்குத் தெளிவான பார்வைக்காக கண் ஒடுக்கத்தை சரிசெய்ய வேண்டும். ஒடுங்குதல் பிளவு விளைவை ஏற்படுத்துவதால் ஒரு நடுக்கோட்டில் ஒளிக்கதிர்கள் வெட்டப்படுகின்றன.
 • தலை சாய்வு: அதிக ஒளி மறைப்பு சிதறல் பார்வை கொண்டவர்கள்  பிம்பச் சிதைவைத் தவிர்க்க  தலையை ஒருபுறமாக சாய்த்து நோக்குவார்கள்.
 • புத்தகத்தைக் கண்களுக்கு அருகில் பிடித்தல்: பிம்பம் தெளிவாகத் தெரிய அதிக சிதறல் பார்வை நோயாளிகள் புத்தகத்தைக் கண்ணுக்கு அருகில் வைத்து வாசிப்பார்கள்.
 • எரிச்சல்
 • அரிப்பு

முறையற்ற சிதறல் பார்வை நோயாளிகளுக்கு ஏற்படும் அறிகுறிகள்:

 • குறைப்பார்வை
 • சிதைவுப் பார்வை
 • பல பிம்பப் பார்வை

சிதறல் பார்வை இயற்கையாகவும் அமையும்.  அல்லது கண்புரை அறுவை போன்ற சிகிச்சைகளினால் அல்லது வேறு காயங்களாலும் ஏற்படலாம். அறுவைக்குப் பின் இடப்படும் இறுக்கமான தையல் சிதறல் பார்வையை இன்னும் அதிகம் ஆக்கக் கூடும்.

I. பொதுவான சிதறல் பார்வை:

 • வெண்படல சிதறல் பார்வை: வெண்படல வளைவின் கோளாறுகளால் இது ஏற்படுகிறது. இதுவே பரவலான வகை. பொதுவாகப் பிறவிக் கோளாறாக இருக்கும். பெறப்பட்ட சிதறல் பார்வையும் அரிதல்ல. ஆனால் பொதுவாக அது முறையற்ற சிதறல் பார்வையாக மாறும்.
 • வில்லைவளைவு சிதறல் பார்வை: இது பொதுவாக அரிதாகவே ஏற்படும். இதன் வகைகளாவன:

-         வளைவு சிதறல் பார்வை: விழிவில்லையின் வளைவில் காணப்படும் பிறவிக் கோளாறுகளால் சிறிய அளவில் வளைவு சிதறல் பார்வை உண்டாகும். கூம்பு விழிவில்லை போன்ற கோளாறுகள் இருந்தால் குறிப்பிட்டுக் கூறும் அளவில் வில்லை வளைவு சிதறல் பார்வை இருப்பதைக் காணலாம்.

-         வில்லைநிலை சிதறல் பார்வை: பிறவியில் கண்வில்லை சரிவோ ஒளிபுகா நிலையோ அடைந்தால் சிறிதளவு சிதறல் பார்வை ஏற்படும். பிறவி அல்லது காயத்தால்  வில்லை  பகுதி இடம் பிறழல் அடைந்தாலும் வெவ்வேறு விகிதத்தில் சிதறல் பார்வையை உருவாக்கும்.

-         குறியீட்டு சிதறல்பார்வை: நீரிழிவு அல்லது வில்லைமைய இறுகலால் துன்புறும் நோயாளிகளின் கண் வில்லையின் விலகல் குறியீடு வெவ்வேறு விகிதத்தில் மாற்றம் அடைந்தால் இது நேரலாம்.

 • விழித்திரை சிதறல் பார்வை: விழிப்புள்ளி ஒளிபுகாமையால் அரிதாக விழித்திரை சிதறல் பார்வை உருவாகலாம்.

பொதுவான சிதறல் பார்வையின் ஒளியியல்:

பொதுவான சிதறல் பார்வையில் ஒளியின் இணை கதிர்கள் ஒரு புள்ளியில் குவியாமல் இரு குவி கோடுகளை உருவாக்கும். துருத்தல் பரப்பின் ஊடாக உருவாகும் இந்த விலகல் கதிர்களின் கட்டமைவு  ஸ்ட்ரூமின் கூம்பு எனப்படும். இரு குவி கோடுகளுக்கும் இடைப்பட்ட தூரம் ஸ்ட்ரூமின் குவிதல் இடைவெளி ஆகும். குவிதல் இடைவெளியின் நீளம் சிதறல் பார்வை அளவு விகிதம் ஆகும்.

II. வழக்கமற்ற சிதறல் பார்வை:

 • வழக்கமற்ற வெண்படல சிதறல் பார்வை: பெரும் அளவிலான வெண்படல வடுக்கள் அல்லது  கூம்புவெண்படலம் போன்ற  துருத்தல்கள் இதனை உருவாக்கலாம்.
 • வில்லைவளைவு வழக்கமற்ற சிதறல் பார்வை: விழிவில்லையின் பல்வேறு பாகங்களில் மாறும் விலகல் குறியீடு அல்லது அரிதாக கண்புரை முதிரும்போது இது உருவாகும்.
 • விழித்திரை வழக்கமற்ற சிதறல் பார்வை: விழித்திரை வடு அல்லது கட்டியால் மற்றும் விழிநடுப்படலம் விழிப்புள்ளிப் பகுதியை தள்ளுவதால் விழிப்புள்ளி பகுதி வடிவு மாறி இது உண்டாகிறது.

 

அறிகுறிகள் மற்றும் மருத்துவ அம்சங்களைக் கொண்டு நோய் கண்டறியப்படுகிறது.

விலகல் பிழைகளைத் தீர்மானிப்பன:

 • விழித்திரைமானி: இரு வெவ்வேறு அச்சுகளில் திறன் இதனால் தீர்மானிக்கப்படும்.
 • சிதறல் பார்வை விசிறிச் சோதனை: சிதறல் பார்வையைக் கண்டறியும் உணர்திறன் சோதனை.
 • ஜேக்சன் குறுக்கு-உருளைச் சோதனை: உருளை வில்லைகளின் திறன் மற்றும் அச்சை உறுதிப்படுத்த இச்சோதனை உதவுகிறது.
 • வெண்படல அளவியல்: இரு தனித்தனி நடுகோடுகளின் வெவ்வேறு வெண்படல வளைவுகளை இது வெளிப்படுத்துகிறது. வழக்கமற்ற சிதறல் பார்வை சிதைந்த அளவீட்டைக் காட்டும்.
 • வெண்படல வரைவியல்: வெண்படல வளைவு மற்றும் வடிவத்தைப் புரிந்து கொள்ள இது இன்றியமையாதது ஆகும். நோய்கண்டறிதலுக்கு இது துணைபுரிகிறது. வழக்கமற்ற சிதறல் பார்வை நோயாளிகளின் வெண்படல வரைவில் ஒழுங்கின்மை காணப்படும்.
 • மிகு அதி அதிர்வெண் (VHF) எண்ணிம கேளா ஒலி வருடி: 10 மி.மீ. மைய வெண்படலத்தின் குறுக்காக முப்பரிமாண அடுக்குப் படத்தைப் பெறும் திறன் கொண்டது இது. பன் மையக்கோட்டு அலகிடலின் காரணமாக புறத்திசு அல்லது திசுவலை போன்ற ஒவ்வொரு வெண்படல அடுக்குகளையும் முப்பரிமாணப் படமாக இதன் மூலம் பெற முடியும்.
 • அலைமுகப்புப் பிறழ்ச்சியளவியல்: வழக்கமற்ற சிதறல் பார்வையை அளக்க இது உதவுகிறது. கண் பார்வைத் தரத்தை இதன் மூலம் மதிப்பிடலாம். வழக்கமற்ற சிதறல் பார்வையின் சில அறிகுறிகளைப் புரிந்துகொள்ள விழித்திரை பிம்பத்தை உருவகப்படுத்துதல் உதவுகிறது. வெண்படல வரைவியல் மதிப்பீட்டின் மூலம் வழக்கமற்ற சிதறல் பார்வையின்  தோற்றம் வெண்படலத்திலா அல்லது உள்ளிருந்தா அல்லது இரண்டுமா என பிறழ்ச்சி அளவியல் மூலம் குறிப்பாக அறியலாம். அலைமுகப்பு – வழிகாட்டும் விலகல் அறுவையே மருத்துவ ரீதியான பிறழ்ச்சி அளவியலின் பயன்பாடு.

வழக்கமன சிதறல் பார்வையின் வகைகள்:

இரு முக்கிய நடுக்கோடுகளின் இடையில் இருக்கும் அச்சு மற்றும் கோணத்தின் அடிப்படையில் வழக்கமன சிதறல் பார்வையை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

 • விதிப்படியான சிதறல் பார்வை: இரு முக்கிய நடு அச்சுகளும் ஒன்றொக்கொன்று செங்கோணத்தில் இருக்கும். இணை அச்சை விட செங்குத்து நடு அச்சு மிகவும் செங்குத்து அல்லது மிக வளைவாக இருக்கும். வெண்படலத்தில் இமை அழுத்தத்தினாலும் இது போன்ற சிதறல் பார்வை ஏற்படுவதால் இது விதிப்படியான சிதறல் பார்வை எனப் படுகிறது.
 • விதிக்கு எதிரான சிதறல் பார்வை:  இரு முக்கிய நடு அச்சுக்களும் ஒன்றுக்கு ஒன்று செங்குத்தாக உள்ளன. இணை அச்சு  செங்குத்து அச்சை விட செங்குத்தாக அல்லது மிக வளைந்தும் காணப்படும்.
 • சாய்வு சிதறல் பார்வை: இது வழக்கமான வகைகளில் ஒன்று. இரு முக்கிய அச்சுக்கள் செங்குத்தாக இருந்தாலும்  அவை செங்குத்து மற்றும் இணை தளத்தில் இல்லை. சாய்வு சிதறல் பார்வை பெரும்பாலும்  சமச்சீராக இருக்கும் (உ-ம். உருளை வில்லை இரு கண்களிலும் 30˚ தேவைப்படும்) அல்லது ஈடுசெய்வதாக இருக்கும் (உ-ம். உருளை வில்லை ஒரு கண்ணில்  30˚  யும் இன்னொரு கண்ணில்  150˚ யும் தேவைப்படும்).
 • இரு சாய்வு சிதறல் பார்வை: இவ்வகையில் இரு முக்கிய அச்சுக்களும் ஒன்றுக்கு ஒன்று செங்குத்தாக இருப்பதில்லை.

வழக்கமான சிதறல் பார்வையில் விலகல் வகைகள்: விழித்திரையைப் பொறுத்து இரு குவி கோடுகளும் இருக்கும் நிலையைக் கணக்கில் கொண்டு வழக்கமான சிதறல் பார்வையைப் பின் வருமாறு பிரிக்கலாம்:

 • எளியவகை சிதறல் பார்வை: விழித்திரையின் ஒரு நடு அச்சில் மட்டும் ஒளிக் கதிர்கள் குவிகின்றன. அடுத்த நடு அச்சில் ஒளிக் கதிர்கள் விழித்திரையின் முன் அல்லது பின் குவிகின்றன. இவ்வகையில் இது பின்வருமாறு அழைக்கப்படும்:

-         எளிய அண்மை சிதறல் பார்வை: அடுத்த நடு அச்சின் ஒளிக் கதிர்கள் விழித்திரையின் முன் குவிதல்.

-         எளிய தூர சிதறல் பார்வை: அடுத்த நடு அச்சின் ஒளிக் கதிர்கள் விழித்திரையின் பின் குவிதல்.

 • கூட்டு சிதறல் பார்வை: இரு நடு அச்சுகளிலும் ஒளிக்கதிர்கள் விழித்திரையின் முன்னோ பின்னோ குவிதல். அவ்வகையில் பின்வருமாறு அழைக்கப்படும்:

-         கூட்டு அண்மை சிதறல் பார்வை: இரு நடு அச்சுகளிலும் ஒளிக் கதிர்கள் விழித்திரையின் முன் குவிதல்.

-         கூட்டு தூர சிதறல் பார்வை: இரு நடு அச்சுகளிலும் ஒளிக் கதிர்கள் விழித்திரையின் பின் குவிதல்.

 • கலவை சிதறல் பார்வை: ஒளிக் கதிர்கள் ஒரு நடு அச்சின் முன்னும் மற்றொன்றின் பின்னும் விழித்திரையில் குவிதல். இவ்வாறு கண் ஒரு நடு அச்சில் கிட்டப் பார்வையாகவும் மற்றொன்றில் தூரப்பார்வையும் கொண்டதாக இருக்கும். விழித்திரையில் ‘மிகக்குறைந்த சிதறல் வளையம்’ உருவாவதால் நோயாளிக்கு பொதுவாக குறைந்த அறிகுறிகளே காணப்படும். மெல்லிய பென்சில் கதிர்கள் ‘மிகக்குறைந்த சிதறல் வளையம்’ என்னும் நுண்ணிய தெளிவான பார்வை வளையத்தை உருவாக்குகிறது என உய்த்துணரலாம். ‘மிகக்குறைந்த சிதறல் வளையம்’ பெரிதாக இருந்தால் பார்வை மோசமாக இருக்கும்.

மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே நோய்மேலாண்மை செய்யப்பட வேண்டும்.

மருத்துவக் கண் சிகிச்சை:

பொருத்தமான உருளை வில்லைகளைப் பரிந்துரைப்பதே வழக்கமான சிதறல் பார்வைக்கான கண் சிகிச்சை. அவற்றின் வடிவங்களாவன:

 • கண்ணாடிகள்: நடு அச்சு செங்குத்தாக இல்லாத போது கோள உருளை வில்லைகளால் வழக்கமான சிதறல் பார்வையை சரி செய்யலாம். கோள உருளை வில்லைகளின் மேல் விழும் இணை கதிர்கள் பல வகைகளில் பாதிப்படைகின்றன. அதன் அச்சுத் திசையில் அது இணை பக்கங்கள் கொண்ட ஒரு எளிய சமமான மென்தகடு ஆகும். இதனால்  கதிர்கள் அதன் மூலம்  பாதிப்படைவதில்லை. அதன் அச்சுக்கு செங்குத்துத் திசையில் அது ஒருபக்கம் உருளையாகவும் இன்னொரு பக்கம்  சமமாகவும் இருக்கும். ஆகவே அது சமக்குழி அல்லது சமக்குவி ஆடியாக செயல்படும்.
 • தொடுவில்லைகள்:

கண்பார்வை சீர்செய்தலுக்கான வழிகாட்டுதல்கள்:

 • சிறு சிதறல் பார்வை: சிறு சிதறல் பார்வையை (ஏறத்தாழ 0.5 டயோப்டர்கள் அல்லது குறைவு) புறக்கணிக்கலாம் அல்லது கண்சோர்வு அல்லது பார்வைக் குறைவு அறிகுறிகள் இருந்தால் மட்டும் சரிசெய்யலாம்.
 • உயர் சிதறல் பார்வை: உருளைப் பிழையை முடிந்த வரையில் முற்றிலுமாகச் சரி செய்ய வேண்டும். முழு சீரமைப்பு நோயாளிக்கு அசௌகரியம் அளிப்பதாக இருந்தால் முதலில் ஒரு அடிப்படை சீரமைப்பைப் பரிந்துரைக்கலாம். சிதறல் பார்வை சோர்வு அளிப்பதாக இருந்தால் தொடர் பயன்பாட்டுக்கு முழு கண் சீரமைப்பைப் பரிந்துரைக்க வேண்டும் (கிட்ட மற்றும் எட்டப் பார்வை).
 • சிதறல் பார்வை சீரமைப்பில் மாற்றம்: பார்வைக் கூர்மையில் முன்னேற்றம் இருந்தாலும் மாற்றத்தைக் குறிப்பாகத் தவிர்க்க வேண்டும். பார்வைக் கூர்மையில் முன்னேற்றம் குறிப்பிடப்படும்படியாக இருந்தால் மட்டுமே மாற்றம் அளிக்கலாம். அதை அனுசரிக்க சற்று கால அவகாசம் தேவைப்படலாம்.

தொடு வில்லை மூலம் சரிவு, அதி, கலவை சிதறல் பார்வைகளுக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கலாம்.

வழக்கமற்ற சிதறல் பார்வை நோயாளிகளுக்குப் பார்வைக் கூர்மையும் பார்வைத் தரமும் குறைவு படும். கண்ணாடிகளை விட  ஊசித்துளை அடைப்பிகள் பார்வை மேம்பாடு அளிக்கும்.

வழக்கமற்ற சிதறல் பார்வைக்கு பாதிக்கப்பட்ட முன் வெண்படல பரப்பில் விலகலுக்குத் தொடுவில்லைகள் பொருத்துவது கண் சிகிச்சை  முறையாகும். மென் ஹைடிரோஜெல் வில்லைகளை விட வாயு அனுமதிக்கும் வில்லைகள் பார்வையை சிறப்பாக அளிக்கும்.

அறுவை சிகிச்சை:

பார்வை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டு இருந்தால் அறுவையின் மூலம் சரிசெய்யப்படும்.  பார்வையைப் பாதிக்கும் சிதறல் பார்வை  விகிதம் 1 டயோப்ட்ரசிற்கு மேல் இருக்கும். இருப்பினும் குறைந்த அளவில் சிதறல் பார்வை இருக்கும் நோயாளிகளுக்கும் அறிகுறிகள் காணப்படும். தற்போது மேம்பட்ட அறுவை நுட்பங்கள் வளர்ந்துள்ளன. லேசர் அறுவையால் மிகக் குறைந்த அளவிலான சிதறல் பார்வையும் அறுவை மூலம் குணப்படுத்தப்படுகிறது. பொதுவாகக் கீழ்க்கண்டவற்றிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது:

 • வழக்கமற்ற சிதறல் பார்வை
 • கண்ணாடி மற்றும் தொடுவில்லை பயன்பாட்டை விட்டுவிட விரும்பும் நோயாளிகள்
 • கண்ணாடி மற்றும் தொடுவில்லை அணிவதில் சிரமம்
 • கண் அறுவையைத் தொடர்ந்து பார்வையைப் பாதிக்கும் சிதறல் பார்வை.

அறுவை மருத்துவத்தில் அடங்குவன:

 • லாசிக் (LASIK): வெண்படல அறுவையில் வெண்படலம் செதுக்கப்படுகிறது. நடு மற்றும் விளிம்பு அளவிலான சிகிச்சைகளை ஒன்றிணைத்து சிதறல் பார்வை சரிசெய்யப்படுகிறது.  தட்டையான வெண்படல நடு அச்சை செங்குத்தாக்கியும் செங்குத்து நடு அச்சைத் தட்டையாக்கியும் இது நிகழ்த்தப்படுகிறது. இதழ் போன்ற அல்லது அரைத் தடிப்பு வெண்படல தகட்டைப் பயன்படுத்தி வெண்படல திசுவலையின் மேல் வெட்டும் லேசர் நீக்கி அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது. அகற்றிய பின் முன் இருந்த இடத்தில் தகடு பொருத்தப்படும்ஒரு சில நாட்களில் பார்வை திரும்பும். சிலருக்கு ஒரு சில வாரங்கள் ஆகும்.
 • அலைமுகப்பு வழிகாட்டும் லாசிக்இது ஒரு புதிய தொழில் நுட்பம். இதில் அகற்றல் துல்லியமாக ருக்கும்.

·         இடைப்பட்ட லாசிக்: ஃபெம்டோசெகண்ட லேசரை இது பயன்படுத்துகிறது. கத்தியை விட இது கூர்மையானது. துல்லியத்திலும் பதுகாப்பிலும் பெரும் சாதகத்தை அளிக்கிறது. முன் திட்டமிட்ட  ஆழத்திலும் நிலையிலும் ஒரு வெண்படல மடலை ஃபெம்டோசெகண்ட லேசர் அளிக்கிறது.

 • மேல் லாசிக்: புறத்திசுவில் ஒரு மெல்லிய மடலை உருவாக்க இது உருவாக்கப்பட்டுள்ளது. மெல்லிய மற்றும் செங்குத்து அல்லது தட்டை வெண்படலம் கொண்டவர்களுக்கு இது ஒரு சிறந்த மாற்றை அளிக்கிறது. வெட்டும் லேசரைக் கொண்டு வெண்படலம் மறு அமைப்பு செய்யப்பட்ட பின் இம்மடல் அகற்றப்படும்.
 • ஒளிவிலகல் வெண்படல அறுவை: இதுவும் வெட்டும் லேசரை வெண்படல சீரமைப்புக்குப் பயன்படுத்துகிறது. ஆனால் இம்முறையில்  மடிப்பு மடல் தேவையில்லை. பரப்புப் புறத்திசுவை அகற்றிய பின் நேரடியாகத் திசுவலைப் பரப்பில் லேசர் பிரயோகிக்கப் படுகிறது.  லேசர் சிகிச்சைக்குப் பின் ஒரு மென் தொடுவில்லை பரிந்துரைக்கப்படுகிறது.  வெண்படலப் புறத்திசு 4-7 நாட்களில் குணமடையும். பார்வை மேம்பாட்டுக்கு சில வாரங்களில் இருந்து பல மாதங்கள் வரை ஆகலாம்.
 • லேசர் கீழ்புறத்திசு வெண்படல சீரமைப்பு (லேசெக்): இதில், நீர்த்த ஆல்ககால் கொண்டு அடிப்படலத்தில் புறத்திசு அடுக்கு கிழிக்கப்படுகிறது.  மரபான ஒளிவிலகல் வெண்படல அறுவை போல  லேசர் பிரயோகிக்கப்படும். அதற்குப் பின் புறத்திசு நிலையில் மறுபடியும் பொருத்தப்படும்.
 • ஒளிச் சிதறல் பார்வை விலகல் வெண்படல அறுவை (பார்க்):  இது சிதறல் பார்வையைக் குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது.
 • ரேடியல் வெண்படல அறுவை: முன்னர் சிதறல் பார்வையைக் குறைக்க ரேடியல் வெண்படல அறுவை பயன்படுத்தப்பட்டது. மைய வெண்படலத்தில் இருந்து ஆரம் போன்ற 90% ஆழ வெட்டுகள் அளிக்கப்பட்டு விளிம்பு வெண்படலம் பலூன் போன்று ஆக்கப்படும். இந்த அறுவை பலன் தருவதாய் இருந்தாலும் விளைவுகள் கணிக்க முடியாததாக இருக்கும்.  மேலும் மிகைச் சிரமைப்பாகவும் அமையும். தூரப்பார்வையாகவும் மாறலாம். இந்த அறுவை சிகிச்சைக்குப் பதிலாக லேசர் பார்வை சீரமைப்பு, அறுவை ஒளிவிலகல் வெண்படல அறுவை மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 • சிதறல் பார்வை வெண்படல அறுவை: இது ரேடியல் வெண்படல அறுவையின் மேம்பட்ட சிகிச்சை.  வெண்படல சிதறல் பார்வையைக் குறைக்க இச்சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரு வகையான வெண்படல அறுவை முறைகள் உள்ளன: சிதறல் பார்வை வெண்படல அறுவை மற்றும் லிம்பல் தளர்த்தல் கீறல் அல்லது இன்னும் துல்லியமாக வெண்படல விளிம்பு தளர்த்தல் கீறல். நிகழிடத்தை பொறுத்து இவை இவ்வாறு அழைக்கப்படுகின்றன.  இந்த இரு முறைகளிலும் வெண்படலத்தின் 90% ஆழத்துக்குக் கீறி செங்குத்து நடு அச்சு தட்டையாக்கப்படும். இருப்புநிலை விளிம்பாக இருப்பதால் வெண்படல விளிம்புத் தளர்த்தல் கீறல் செய்வதற்கு எளிதாகவும் விளைவுபலவீனமானதாகவும் உள்ளது.  சிதறல் பார்வைக் குறைப்புக்கு தளர்வுக் கீறல்கள், குறிப்பாக வளைவு வெண்படல அறுவை பொதுவாக செய்யப்படுபவை ஆகும். துல்லியமான கீறலோடு மேம்பட்ட  நுட்பமும் பாதுகாப்பும் கிடைப்பதால் கைநுட்ப உத்திகளை விட ஃபெம்டோசெகண்ட் லேசர் ஊக்கிய வெண்படல அறுவை தெரிந்துகொள்ளப் படுகிறது.
 • விலகல் வில்லை மாற்று: தோரிக் உட்கண் வில்லைகளைக் கொண்டு கண் வில்லையை மற்றி கருவிழிக்குப் பின் அமைத்தல்.  வெண்படல அறுவைக்கு இது மாற்றாகும். தோரிக் ஃபேக்கிக் ஐ.ஓ.எல்லை மாற்றி வைக்கும் போது கண் வில்லை உட்பட எந்தக் கண் உறுப்பும் பாதிப்படைவதில்லை.
 • போலி உட்கண் வில்லைகள் பொருத்துதல்: கருவிழிக்கு முன் அதனோடு இணைத்து அல்லது அதற்கு நேர் பின் இவற்றைப் பொருத்தலாம். வெண்படல அறுவை மூலம் லேசர் பார்வை சீரக்குதலுக்கு மாற்று இச்சிகிச்சை.  விழிவில்லை முதற்கொண்டு கண்ணின் எப்பகுதியும் இதனால் பாதிப்படைவதில்லை.
 • ஊடுறுவும் வெண்படல அறுவை: வெண்படலப் பாதிப்பால் வழக்கமற்ற சிதறல்பார்வை பாதிப்பு கொண்டவர்களுக்கு இச்சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அறுவையின் பின்விளைவுகள்:

 • வெண்படல அழற்சி, கண்சவ்வழற்சி அல்லது வெண்படலப் புண் போன்ற வெண்படல அல்லது முன் பகுதி நோய்கள் உருவாகலாம்.

 

 

 

 

 

 • PUBLISHED DATE : Dec 14, 2016
 • PUBLISHED BY : DEEPAK CHANDRA
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Dec 19, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.