சூரியஒளி விழித்திரைநோய்

சூரியஒளி விழித்திரைநோய் (ஒளி-விழித்திரை அழற்சி, விழிப்பள்ளப்புள்ளி திரையழற்சி, ஒளிவிழிப்பள்ளநோய் அல்லது கிரகணவிழித்திரைநோய்) என்பது நேரடியாக அல்லது மறைமுகமாக ஒளி பாதிப்பதால் உண்டாகும் விழித்திரைக் காயம்.  சூரியனை நேரடியாகப் பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் அறிந்ததே.  சூரியகிரகணத்தை தொலைநோக்கி கொண்டு அல்லது இல்லாமல் பார்ப்பது, சூரியக்குளியல், மதம்சார் சூரியநோக்கல், மற்றும் உளவியல் மருந்து பயன்படுத்துதால் ஆகியவற்றின் மூலம் சூரியஒளி விழித்திரைநோய் உருவாகலாம். கிரகண குருட்டைப் பற்றிய விளாக்கம் தரும் பிளேட்டோ காலத்தில் இருந்து  ஒளியால் விழித்திரையில் உண்டாகும் பாதிப்பு அறியப்பட்டுள்ளது.

ஒளி விழித்திரை நோய் என்பது ஒளியால் விழித்திரைக்கு ஏற்படும் பாதிப்பைச் சுட்ட பயன்படுத்தப்படும் பொதுவான சொல். இது சூரியனைப் பார்ப்பது மட்டுமல்லாமல் நுண்காட்டியைப் பயன்படுத்துவதாலும் கூட ஏற்படலாம்.

ஒளிவேதியல் விளைவுகளாலும், வெப்பத்தாலும் ஒளி விழித்திரை நோய்  விழித்திரையை சிதைக்கிறது.  நெருக்கப்பட்ட கண்பாவை மூலம் சூரியனை 90 வினாடிகள் தொடர்ந்து பார்ப்பதால் விழித்திரைத் திசுக்கள் பாதிப்படைகின்றன.

குறிப்புகள்

Nema HV, Nema Nitin. Textbook of Ophthalmology Sixth Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2012. P 313.

Sihota Ramanjit, Tandon Radhika. Parson’s Diseases of the Eye Twenty-Second Edition. Reed Elsevier India Private Limited 2015. P 326.

Chaudhuri Zia, Vanathi Murugesan. Postgraduate Ophthalmology Volume 2. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2012. P 2115- 2117.

Agarwal Amar. Fundus Fluorescein and Indocyanine Green Angiography- A Textbook and Atlas. Slack Incorporated 2008. P 150-151.

Rishi Pukhraj, Rishi Ekta, Sharma Tarun, Bhende Muna, Sen Parveen, Ratra Dhanashree, Gopal Lingam. The Sankara Nethralaya Atlas of Fundus Fluorescein Angiography Second Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2013. P 254- 257. 

Stellman Jeanne Mager. Encyclopaedia of Occupational Health and Safety Fourth Edition Volume II. International Labour Organisation 1998. P 49.13- 49.16.

Yanoff Myron, Duker Jay S. Ophthalmology Fourth Edition. Elsevier Saunders 2014. P 461- 466.

Baxter Peter J, Aw Tar-Ching, Cockcroft Anne, Durrington Paul, Harrington J Malcolm. Hunter’s Diseases of Occupations Tenth Edition. Taylor & Francis Group, LLC 2010. P 651.

Roy Hampton, Fraunfelder Frederick W, Fraunfelder Frederick T, Tindall Renee, Jensvold Bree. Roy and Fraunfelder’s Current Ocular Therapy Sixth Edition. Saunders Elsevier Inc. 2008. P 571- 572.

Ryan Stephen J, Sadda SriniVas, Hinton David. Retina Volume 1 Fifth Edition. Elsevier Saunders 2013. P 1557- 1558.

Denniston Alastair KO, Murray Philip I. Oxford Handbook of Ophthalmology Third Edition. Oxford University Press 2014. P 592.

http://eyewiki.aao.org/Solar_Retinopathy

https://www.researchgate.net/publication/11283314_Photoretinitis_An_underestimated_occupational_injury

இலேசான  ஒளிவேதியல் விளைவால் ஏற்படும் சிதைவு அறிகுறி அற்று இருக்கும்.

சூரிய ஒளியால் பாதிக்கப்பட்டு 1-4 மணி நேரத்துக்குப் பின் அறிகுறிகள் தென்படும்.

 • விழிக்கோளத்தைச் சுற்றி வலி
 • பார்வை குன்றல் (ஒரு/இரு விழி)
 • நடு அல்லது நடுசார் பார்வைக் களக் குறைபாடு
 • ஒளிக்கூச்சம்
 • பார்வை மங்கல்
 • பொருள் நிறம் பெற்றுத் தோன்றல்
 • தூண்டல் நிறைவுற்ற பின்னும் பிம்பம் தெரிதல்

உள்ளார்ந்த காப்பு நுட்பம் உடைவதால் மற்றும்/அல்லது  புற அதி அபாயகரமான நிலைகளால், ஒளியின் பாதிப்பால் விழித்திரைக்கு சிதைவு ஏற்படுகிறது.

சிதைவு ஏற்படுதலும் அதன் கடுமையும் கீழ் உள்ளவைகளைப் பொறுத்திருக்கும்:

 • கண்ணின் உடல்கூறு காப்பு நுட்பம்
 • பாதிக்கப்பட்ட திசுப் பகுதி
 • ஒளியின் அலை நீளம்
 • ஒளி பாதிப்பின் கால அளவு
 • ·பாதித்த ஒளியின் மொத்த ஆற்றல்

செயல்நுட்பம்

சிதைவின் செயல்நுட்பம்  முதன்மையாக ஒளிவேதியல் சார்ந்தது.  திசு வெப்பம் அதிகரிப்பதால் இது ஆற்றல்படுத்தப் படுகிறது. கரும்படலவிழித்திரை  நிறமேறல்  (chorioretinal pigmentation ) அதிகரிப்பு ஒளி உறிஞ்சலுக்கு ஏதுவாக இருப்பதால் விழித்திரையின் பின்னணி வெப்பம் அதிகரிக்கிறது.  இயல்புக்கு மாறான அளவுக்கு ஒளி படுதலால் விழித்திரை காப்பு உடைகிறது.  விழித்திரை ஒளிநச்சு முதலில் நிரந்தரச் சிதைவாக நம்பப்பட்டது. ஆனால் சிறிதளவு பார்வை மீட்சி காணப்படுகிறது.

கீழ் வரும் காரணிகளைப் பொறுத்து விழித்திரை காயமும் சாத்தியமான மீட்சியும் அமையும்.

 • பாதிப்படைந்த விழித்திரை பாகம்
 •  சிதைவு காணப்படும் இடம்
 • ஒளி படுதலின் நிறமாலை, செறிவு மற்றும் கால அளவு
 • பாதிக்கப்பட்டவரின் தாங்குதிறன்
 • விழித்திரை மேல் ஒளி குவியும் தீவிரத்தினால் எட்டப்பார்வை மற்றும் கிட்டப்பார்வைத் தெளிவு
 • ·டெட்ரா சைக்கிளின் மற்றும் ப்சொராலென் போன்ற  மண்டலம்சார் ஒளிஉணர் மருந்துகள் ஒளியால் ஏற்பட்ட சிதைவை ஆற்றக்கூடும்

 

மருத்துவ வரலாறு/அறிகுறிகள், வெளிப்படும் நோய்க்குறிகள் மற்றும் ஆய்வைப் பொறுத்து நோய்கண்டறிதல் அமையும்.

மருத்துவக் குறிகள்

பாதிப்பு ஏற்பட்டவுடன் விழிப்பள்ளம் அல்லது அதைச் சார்ந்த பகுதிகளில் சாம்பல் நிற விளிம்புடன் ஒரு சிறிய மஞ்சள் பொட்டு தோன்றும்.  இந்தத் தட்டு வடிவப் புண்ணின் விட்டம் 200μm ஆக இருக்கும்.  இது விழித்திரையில் விழுந்த சூரியனின் பிம்பத்தை ஒத்திருக்கும்.  இலேசான நேர்வுகளில் புண் எதுவும் காணப்படாது.

திசுவியல்

கடும் சூரியப் புண்

கடும் சூரியப் புண்ணில், விழித்திரை நிறமி மேல்திசுக் காயத்துடன் (RPE), முறையற்ற நிறமேறல் மற்றும் விடுபடல் காணப்படும். ஒளிஏற்பிகள் சிறிதளவு மாற்றத்தையே காட்டும்.

கடும் சிதைவைத் தொடரும் வாரங்கள்

இந்த மஞ்சள் புண் இருந்த இடத்தில் நிரந்தர குவிதல் பள்ளம் உருவாகும். விழித்திரை நிறமி மேல்திசுவில் ஒழுங்கற்ற  நிறப் புள்ளிகள் தோன்றலாம். மேலும் விழிப்புள்ளி ஓட்டைகளும் ஏற்படக் கூடும். பார்வையில் கொஞ்சம் மீட்சி ஏற்படலாம். ஆனால் விழித்திரை நோயும், உருமாற்றத் தோற்றமும் நீடிக்கும். பழைய சூரிய நோக்கல் நேர்வுகளில் விழித்திரை நிறமி மேல்திசுவின் பல இடங்களில் ஒழுங்கற்ற நிறத்திட்டுகள் காணப்படும்.

ஒளிர்குழல்வரைவியல்  (Fluorescein angiography) இயல்பாகத் தோன்றலாம்  அல்லது சில கடத்தல் குறைபாட்டைக் காட்டலாம். கடும் நேர்வுகளில் ஒளிர்சாயக் கசிவு காணப்படும்.

ஒளியியல் ஒத்திசைவு வெட்டுவரைவு (Optical coherence tomography (OCT), புற விழித்திரையில் பிரதிபலிப்பு இடையூறு காணப்படும் அல்லது அதி பிரதிபலிப்புப் புற விழித்திரையில்  துகளாக்கம் (fragmentation) காணப்படும்

ஆம்ஸ்லர் வலைக்கட்டச்  சோதனை  சிறு நடு அல்லது சார்நடு  இருண்மையை சித்திரித்துக் காட்டும்.

பன்குவிய மின் விழித்திரை வரைவியல் (ERG)  அலைவீச்சு குறைதலோடு பதிவின் இயல்பு சுணக்கத்தைக் காட்டும்.

வேறுபடுத்திக் கண்டறிதல்

 • பற்றவைப்பு ஆரவிளக்கு விழிப்புள்ளி நோய்
 • அதி மின்னோட்ட மின் குறுக்கோட்டத்தால் ஒளி வீச்சு அல்லது ஆர ஒளி
 • மடல் அழுத்தப் பிற காரணங்கள் அல்லது பின் விழித்திரவ விடுபடல் அல்லது காயம் போன்ற ஓட்டைகள்
 • அறுவைக்குப் பின்னான ஒளி விழித்திரை நோய்
 • லேசர் கதிர் விபத்தால் பாதிப்பு

 

நோய்மாலாண்மையில் சூரிய விழித்திரை நோய்க்கு எந்தவித குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லை.

கடும் புண்களுக்கு வாய்வழி கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள் பயன்படுத்தப் படுகின்றன.  ஆனால் முடிவான எந்தப் பலனும் கிட்டியதாக உறுதிப்படுத்தப் படவில்லை.

மீண்டும் சூரியனை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். சரியான பாதுகாப்பு இன்றி கிரகணங்களையும் நோக்கக் கூடாது. இதற்காக முழுமையாகத் தெரியும்  புற ஊதா மற்றும் அகச்சிவப்புக் கதிர்களை வடிகட்டும் சூரிய வடிகட்டிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

நோய்முன்னறிதல்

நோய் முன்னறிதல் வெளிப்படையானது அல்ல. ஒரு சில முன்னேற்றம் இருக்கக் கூடும். குறைபாட்டின் ஒரு பகுதி நிலைக்கும். பார்வை இருண்மை நிரந்தரமாக இருக்கும்.

 

பல நோயாளிகளுக்குச் சிக்கல்கள் ஏற்படுவதில்லை. ஒரு சில வாரம் அல்லது மாதம் கழித்து இயல்பான பார்வை திரும்பும். ஒரு சில நோயாளிகளுக்குப் பின் வரும் சிக்கல்கள் காணப்படலாம்:

 • நிரந்தரப் பார்வைக் குன்றல்
 • நிரந்தர உருமாற்றத் தோற்றம்
 • இருண்மை

 • PUBLISHED DATE : Jan 24, 2018
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Jan 24, 2018

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.