தியோன் மாறுகண் நோய்த்தாக்கம்

சம்பந்தப்பட்ட கண்ணின் நடு மற்றும் பக்க நேர்த் தசைகளின் இணை இறுக்கத்தால் ஏற்படும் உள்ளிழுப்பு முயற்சியால் விழிக்கோளம் பின்னிழுக்கப்படும் தன்மையே தியோன் மாறுகண் நோய்த்தாக்கம்.

இது நோய்முன்னேற்றம் அற்ற பிறவிக் கண்நகர்ச்சிக் கோளாறாகும். இது தனியாகவோ அல்லது பிற பிறவிக் கோளாறுகளுடன் இணைந்த நோய்த்தாக்கமாகவோ காணப்படும். இவற்றில் பொதுவாகக் காணப்படுவது உணர்நரம்புச் செவிட்டுத் தன்மையும் தொடர்புடைய பேச்சுக் கோளாறும் ஆகும். முதன்மை நோக்கில் இது மாறுகண்ணோடு தொடர்புடையது.

கிடைநிலை கண் அசைவுகளை பக்க நேர்த்தசை கட்டுப்படுத்துகிறது. அது கண்ணை வெளிப்புறமாகவும், நடு நேர்த்தசையின் உதவியால் உட்புறமும் இழுக்கிறது. பக்க நேர்த்தசை சுருங்கி கண்கோளத்தை வெளியே இழுக்கும் போது நடுநேர்த்தசை ஓய்வுகொள்கிறது. எதிர்-பக்க நடு நேர்த்தசை சுருங்குகிறது மற்றும் பக்க நேர்த்தசை அதே அளவுக்கு ஓய்வுகொண்டு கண்கோளங்களின் இதமான அசைவுகளுக்கு வழிகோலுகிறது.

வகைப்பாடு:

மூன்று முக்கிய வகைகள் உண்டு (ஹ்யூபர் வகைப்பாடு):

-    வகை 1: இயல்பான அல்லது இலேசான கட்டுப்படுத்தப்பட்ட உள்ளிழுப்பின் போது வெளிப்புற நகர்ச்சி இருக்காது அல்லது குறைந்த அளவில் இருக்கும். இதுவே மிகவும் பரவலான வகை.

-    வகை 2:  இயல்பான அல்லது இலேசான கட்டுப்படுத்தப்பட்ட உள்ளிழுப்பின் போது குறைவான வெளிப்புற நகர்ச்சி. இது மிகவும் அரிய வகை.

-    வகை 3: உள்ளிழுப்பிலும் வெளிநகர்ச்சியிலும் கட்டுப்பாட்டைக் காட்டும்.

குறிப்புகள்:

http://emedicine.medscape.com/article/1198559-overview

http://eyewiki.org/Duane_Retraction_Syndrome

Kanski,Jack J. Clinical Ophthalmology, A Systematic Approach .Third Edition.UK. Butterworth Heinemann, 1994.

தியோன் மாறுகண் நோய்த்தாக்கம் கீழ்வருபவைகளில் சில அல்லது அனைத்து அம்சங்களோடும் தொடர்புடையாதாக இருக்கலாம்:

-    ஒடுக்கும் போது விழிக்கோளம் உள்ளிழுக்கப்படுதல்

-    வெளிநகர்வு முழுமையும் அல்லது பகுதி கட்டுப்படுத்தப்படுதல்

-    ஒடுக்கும்போது கண்ணிமைப் பிளவு குறுகுதல்

-    ஒடுக்க முனையும் போது கண்ணிமைப் பிளவு அகல்தல்

-    ஒடுக்கத்துக்கு பகுதி கட்டுப்பாடு

-    குவிதல் குறைபாடு

-    ஒடுக்க முனையும் போது விழிக்கோளத்தின் பார்வையற்ற நகர்வு

-    ஒடுக்கும் போது விழிக்கோளம் மேல் அல்லது கீழ் செல்லுதல் (லீஷ் அல்லது பிரிடில் நிகழ்வு)

நடு மற்றும் பக்க நேர்த்தசையில் நரம்பூக்கப் பிறழ்ச்சி ஏற்படுவதால் தியோன் மாறுகண் நோய்த்தாக்கம் உண்டாவதாக நம்பப்படுகிறது. மேலும், தசை வடிவ மாறுபாடுகள் அல்லது மூளைத் தண்டின் முதன்மை முரண்பாடு நோய்க்காரணிகளாக இருக்கலாம். பிறவி மற்றும் சூழலியல் காரணிகள் இந்நோய்த்தாக்கம் ஏற்பட பங்கு வகிக்கின்றன என்பது பெரும்பாலும் நம்பப்படுகிறது.

தியோன் மாறுகண் நோய்த்தாக்கம் தனி நிகழ்வாகவோ அல்லது ஒரு நோய்த்தாக்கமாகவோ ஏற்படலாம்.

தனி வடிவம்:

இதுவே 90% ஏற்படுகிறது. இங்குமங்கோ அல்லது ஒரு பகுதியையோ இது பாதிக்கும். மீதி 10 %, பிறவியிலும், இருபக்கமாகவும், செங்குத்து நகர்வுக் கோளாறுகளுடனும் இருக்கலாம். இவை மேலாதிக்க தன்னினகீற்றாகவோ ஒடுங்கிய தன்னினக் கீற்றாகவோ இருக்கலாம்.

நோய்த்தாக்கங்களோடு தொடர்பு:

-    கோல்டன்ஹர் நோய்த்தாக்கம்: முகத்தின் ஒருபுறத்தில் உள்ள தாடை, கன்னம் மற்றும் காது குறைபாடு.

-    காலை ஒளி நோய்த்தாக்கம்: கண் தகட்டுக் கோளாறு.

-    மோபியஸ் நோய்த்தாக்கம்: முக (VIIth) மற்றும் சுற்றுவழி (VIth)  மண்டையோட்டு நரம்புகளின் பிறவி வாதத்தை இது காட்டலாம்.

நோயாளிகளுக்குக் கீழ்வருபவை காணப்படும்:

-    வெளிப்படையான மாறுகண்

-    பாதிக்கப்பட்ட கண்ணில் குறை உள்ளிழுப்பு

-    இருகண் பார்வை இழப்பு

-    இணைவைப் பராமரிக்க தலை திரும்புதல்

-    பன்னிறத்தன்மை, கண்மணிக் கோளாறுகள், கண்புரை அல்லது குறும்விழிக்கோளம் போன்ற தொடர்புடைய கண்நிலைகள்.

நோயாளிக்கு மாறுகண் தோற்றம் தரும்.

பல வகைகளின் மருத்துவ அம்சங்கள்:

- வகை 1: கண்ணை வெளிப்புறமாக அசைக்கும் திறன் குறைவாக இருக்கும். ஆனால் உட்புறமாக அசைக்கும் ஆற்றல் இயல்பாக அல்லது ஏறத்தாழ இருக்கும். ஒடுக்கும் போது கண்ணிமைப் பள்ளம் குறுகுவதோடு விழிக்கோளம் உள்ளிழுக்கப்படும். வெளிப்புறம் அசைக்க முனையும் போது விழிக்கோளம் இயல்பு நிலையை அடைவதோடு இமைப்பள்ளம் மீண்டும் விரிவடையும்.

- வகை 2: இவ்வகையில், பாதிக்கப்பட்ட கண் குறைவான ஒடுக்கத்தையும் இயல்பான அல்லது அதற்கொப்ப வெளிப்புற நகர்ச்சியையும் காட்டும். ஒடுக்க முனையும் போது விழிக்கோளம் உள்வாங்கி இமைப்பள்ளம் குறுகும்.

வகை 3: ஒடுக்கமும் வெளிப்புற நகர்ச்சியும் குறைவாக இருக்கும்.  ஒடுக்க முனையும் போது விழிக்கோளம் உள்வாங்கி இமைப்பள்ளம் குறுகும். 

அறுவையற்ற சிகிச்சை:

முதன்மை நிலையில் நேர் கண்கள் கொண்ட நோயாளிகளுக்கு மரபு ரீதியாகவே சிகிச்சை அளிக்க வேண்டும்:

-    தொடர்புடைய விலகல் பிழை தகுந்த கண்ணாடி அல்லது விழிவில்லை மூலமாகச் சரி செய்யப்பட வேண்டும்.

-    இதுபோலவே, தெளிவற்ற பார்வைக்கும் சிகிச்சை அளிக்கப் படுகிறது.

அறுவை மருத்துவம்:

ஏதோ ஒருவகை இருவிழிப் பார்வை நோயாளிக்கு இருந்தால் அறுவை தவிர்க்கப்பட வேண்டும்.

கீழ்வரும் அம்சங்கள் நோயாளிக்கு இருந்தால் அறுவை கருதப்படலாம்:

-    முதன்மை நிலையில் குறிப்பிடத்தக்க கண் மாறுபாடு

-    குறிப்பிடத் தக்க அளவில் தலை சாய்வு

-    ஒடுக்கும் போது இமைப்பள்ளம் கடுமையாக இடுங்குதல்

-    பொருந்தாத விழி மேல்கீழ் பாய்வு

வகையைப் பொறுத்து அறுவை முறை மாறுபடும்:

-    நடு நேர்த்தசை மற்றும்/அல்லது பக்க நேர்த்தசையை, சாத்தியமான  Y பிளவோடு இடுக்குதல்.

-    பின் பொருத்தல் தையல்   

  • PUBLISHED DATE : Jan 25, 2016
  • PUBLISHED BY : Zahid
  • CREATED / VALIDATED BY : R. Davidson
  • LAST UPDATED ON : Jan 25, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.