தோல் தளர்ச்சி

மேல் கீழ் இமைகளில் மிகையாகத் தோல் உருவாவதை தோல்தளர்ச்சி என்ற இச்சொல் விளக்குகிறது. இமைத் தோல் மெல்லியது. நுண்மையாகச் சுருங்கக் கூடியது. மிகைத் தோலோடு, கொழுப்பிறக்கம், இமையிறக்கம் மற்றும் நடுமுக இறக்கம் ஆகியவை தொடர்புடையன. மேல் நடு, கீழ்நடு மற்றும் மத்திய பகுதிகளில் கொழுப்பிறக்கம் பரவலாகக் காணப்படும். மேலும் வயதாகும் போது இமை வீக்கத்தால் மாறும் தன்மையுள்ள உப்பலும் நரம்புக் கசிவால் நிறமிழத்தலும் (கண்ணுக்கு அடியில் கறுப்பு வளையம்) ஏற்படும். இது பொதுவாக வயது முதிர்ந்தவர்களிடம் காணப்பட்டாலும் அரிதாக இளைஞர்களுக்கும் ஏற்படுவதுண்டு. மேல் இமைகளே பாதிக்கப்படும், ஆனால் கீழ் இமைகளும் பாதிக்கப்படுவதுண்டு,

தோல் தளர்ச்சிக்கான பொதுவான காரணிகள்:

 • வயது முதிர்தல்
 • தோலில் நெகிழ்தசை இழப்பு
 • இமையின் இணைப்புத் திசு பலவீனம் அடைதல்
 • ஈர்ப்புவிசையின் விளைவு
 • சூரிய மற்றும் வயது தொடர்பான கொலாஜன் சிதைவு
 • இமை கூட்டமைவு (பின் கண் குழி சுற்றுக் கொழுப்பு- ROOF) மற்றும் கன்னக் கூட்டமைவு கீழிறங்கல் (சார் கண் குழி சுற்றுக் கொழுப்பு – SOOF)
 • வெப்பத் தாக்கம் அல்லது புகைத்தல் மற்றங்களைத் துரிதப்படுத்தும்.

குறிப்புகள்

Biswas Arnab. Ptosis Surgery. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2010. P 100- 101.

Agarwal Amar, Jacob Soosan. Color Atlas of Ophthalmology- The quick Reference Manual for Diagnosis and Treatment Second Edition. Thieme Medical Publishers, Inc. 2010. P 42- 43.

Agarwal Amar. Handbook of Ophthalmology. Slack Incorporated 2006. P 11- 13.

Mandava Suresh, Sweeney Tara, Guyer David. Color Atlas of Ophthalmology- The Manhattan Eye, Ear, & Throat Hospital Pocket Guide. Thieme Medical Publishers, Inc. 1999. P 31- 32.

Friedman Neil J, Kaiser Peter K. Essentials of Ophthalmology First Edition. Saunders Elsevier 2007. P 132.

Dutton Jonathan J, Gayre Gregg S, Proia Alan D. Diagnostic Atlas of Common Eyelid Diseases. Taylor & Francis Group, an Informa business 2007. P 68- 69.

Yanoff Myron, Sassani Joseph W. Ocular Pathology Seventh Edition. Elsevier Saunders 2015. P 155.

Ostler H Bruce, Maibach Howard I, Hoke Axel W, Schwab Ivan R. Diseases of the eye & Skin- A Color Atlas. Lippincott Williams & Wilkins 2004. P 100.

Probst Louis E, Tsai Julie H, Goodman George. Ophthalmology- Clinical and Surgical Principles. Slack Incorporated 2012. P 153- 154.

Kaiser Peter K, Friedman Neil J, Pineda Roberto. The Massachusetts Eye and Ear Infirmary- Illustrated Manual of Ophthalmology Fourth Edition. Elsevier Saunders 2014. P 86- 87.

Dartt Darlene A, Besharse Joseph C, Dana Reza. Encyclopedia of the Eye. Elsevier Ltd. 2010. 

Yanoff Myron. Ophthalmic Diagnosis and Treatment Third Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2014. P 138- 141.

Stein Harold A, Stein Raymond M, Freeman Melvin I. The Ophthalmic Assistant- A Text for Allied and Associated Ophthalmic Personnel Ninth Edition. Elsevier Saunders 2013. P 406.

Gold Daniel H, Lewis Richard Alan. Clinical Eye Atlas Second Edition. Oxford University Press 2011. P 14- 15.

Denniston Alastair KO, Murray Philip I. Oxford Handbook of Ophthalmology Third Edition. Oxford University Press 2014. P 161.

http://emedicine.medscape.com/article/1212294-overview

http://eyewiki.aao.org/Dermatochalasis

http://www.nature.com/eye/journal/v18/n1/full/6700527a.html

 

தோல் தளர்ச்சி அறிகுறிகள் அற்றது. பொதுவாக இது இரு கண்களையும் பாதிக்கும்.

இதன் இயல்புகள் வருமாறு:

 • மிகை மேல் இமைத் தோல். கண்குழி கொழுப்பு கீழிறக்கத்தோடு தொடர்புடையது.
 • மிகை இமைத் தோல் மேற்புற பார்வைப் புலனை மறைக்கும்.
 • கண் அரிப்பு
 • இமையழற்சி
 • கீழிமை வெளித்துருத்தல்
 • மேலிமை உட் பிறழல்
 • தோல் அழற்சி
 • மேலிமை கனத்தல்
 • கீழிமைப் பைகள்
 • கீழிமை சுருக்கம் மற்றும் பக்க மூலைச் சுருக்கம்.

 

வயது முதிரும் போது தோலின் நெகிழ் தன்மை இழப்பாலும் இமை இணைப்பு தசை பலவீனம் அடைவதாலும் தோல் தளர்ச்சி ஏற்படுகிறது.

நோயுடல்கூறியல்

வயது முதிர்வதால் இயல்பாக இமைத்தோலில் ஏற்படும் மாற்றமே இந்நோயின் உடற்கூறியல் ஆகும்.  நெகிழ் நார் இழப்பு, மேல் தோலடுக்கு மெலிதல், தோல் மிகைப்பு ஆகியவை இதில் அடங்கும். தோல் அழற்சி இருந்தால் நாட்பட்ட ஊடுறுவிகள் காணப்படும்.

திசுவியல்: மேல் தோல் அடுக்கு மெல்லியதாகவும் மென்மையாகவும் தோன்றும். தோலில் நெகிழ்திறன் மற்றும் கொலாஜன் திசு இழப்பும் இருக்கும். தந்துகி குழல்மிகைப்பும் காணப்படும்.  கொலஜன் அடிச்சாய செல் சிதைவும் இலேசான நிணசெல் அழற்சி மறுவினையும் இருக்கும்.

மண்டல சார்பு

தோல் தளர்வுக்கு முன்னோடியான மண்டல நோய்கள்:

 • தைராயிடு கண் நோய்
 • மரபுசார்  குழல் நரம்பு வீக்கம்
 • காயம்
 • சிறுநீரக நோய்
 • தசையில் மாவேற்றம்
 • தோல் தளர்வு
 • எலர்ஸ்-டானியோஸ் நோய்த்தாக்கம்
 • மஞ்சள் திட்டு

 சில நோயாளிகளுக்கு மரபியல் காரணமும் இருக்கலாம்.

 

நோய்கண்டறிதல் மருத்துவ அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.

இதனால், கீழிமையிலும் பக்கக் கண் மூலையிலும்  சுருக்கம், கீழ் இமையில் பைகள், மேலிமை கனத்தல் போன்ற அழகியல் பிரச்சினைகள் உண்டாகின்றன.

கண்ணிமையழற்சி, தோலழற்சி, மேல் இமையுட்பிறழ்ச்சி, கீழ் கண்ணிமைதுருத்தல், கண்ணரிப்பு, மேல் பார்வைக் களமறைப்பு ஆகியவை இதன் செயல்சார் பாதிப்புகளாகும்.

மதிப்பிடல்

 • இமை வீழ்ச்சி, புருவ வீழ்ச்சி, கண்ணீர் சுரப்பி தொங்கல் அல்லது இணை இமை தளர்வு போன்றவை ஏற்கெனவே இருந்ததா என்று காண வேண்டும்.
 • மேல் இமை பக்கவாட்டில் புடைத்து இருந்தால் அது கண்ணீர்ச்சுரப்பி தொங்கல் என்று இனங்கண்டு கொழுப்பு திட்டில் இருந்து பிரித்தறிய வேண்டும்.
 • புருவத்தை உயர்த்தி சோதிக்கும் போது இமைத் தோல் தளர்ச்சியோடு இணைந்து காணப்படும்  புருவ வீழ்ச்சியை அறிய முடியும்.
 • இமையிடைப்பிளவு மற்றும் உந்துந்தசை செயல்பாட்டோடு மேல்கீழ் இமைகளில் இருந்து விளிம்பு எதிர்வினைத் தொலைவும் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
 • இமை மடி மில்லி மீட்டரில் அளக்கப்பட வேண்டும்.

வகையீட்டுக் கண்டறிதல்

கீழ்க்காணும் நோய்நிலைகளில் இருந்து தோல் தளர்ச்சியை வேறுபடுத்திக் காண வேண்டும்:

 • பிறவி அல்லது பெறப்பட்ட இமை தொங்கல்
 •  புருவ வீழ்ச்சி
 • தகட்டிமை நோய்த்தாக்கம்
 • இமைவீக்கம்
 • இமைத்தோல் தளர்ச்சி
 • கண்ணீர் சுரப்பி தொங்கல்

மருத்துவக் கண்காணிப்பின் கீழ் நோய்மேலாண்மை செய்யப்பட வேண்டும்.

தோல் தளர்ச்சி பொதுவாக அறுவை சிகிச்சையால் நேர்செய்யப்படுகிறது.

மருத்துவ சிகிச்சை

 • இமையழற்சியைக் குணப்படுத்த இமை சுத்தம் மற்றும் மேல்மருந்தாக நுண்ணுயிர்க்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.
 • தோல் அழற்சிக்கு ஊக்கமருந்துகள் மேல்மருந்தாக பயன்படும்.
 • உலர் கண் இருந்தால் மசகு மேல் மருந்துகள் பலனளிக்கும்.

அறுவை சிகிச்சை

 • மிகைத் தோலையும்  கண் குழி கொழுப்பையும் அகற்ற மேல் இமை அறுவையோடு மேல் இமை மடி மாற்றமைப்பு சிகிச்சை பயன்தரும்
 • இமை தொங்கல் இருந்தால் சீரமைப்பு அறுவை தேவைப்படும்.
 • உலர் கண் நோயாளிகளுக்குத் தற்காலிக கண்ணீர் நாள அடைப்பு, நிரந்தரக் கண்ணீர் நாள அடைப்பு அல்லது கண்ணீர்நாள தீய்ப்புசிகிச்சை மேற்கொள்ளலாம்.

நோய்முன்கணிப்பு

தகுந்த நோய்கண்டறிதலோடு இமையறுவை சிகிச்சை மேற்கொண்டால் கணிப்பு சிறந்த முறையில் அமையும்.

 

 • இமைமூடவியலாமை
 • தொங்கல்
 • வெண்படலவழற்சி
 • இமை அகலல்
 • கண்சவ்வு வீக்கம்

 • PUBLISHED DATE : Mar 28, 2017
 • PUBLISHED BY : DEEPAK CHANDRA
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Mar 28, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.