பார்வைத்தட்டு வீக்கம்

மண்டையோட்டு உள் அழுத்தத்தின் இரண்டாம் கட்டமாக கண்நரம்பின் (பார்வை உணர்வை மூளைக்கு எடுத்துச் செல்லும் நரம்பு) தலைப்பில் உண்டாகும் வீக்கமே பார்வைத்திட்டு வீக்கம் என வரையறுக்கப்படுகிறது. இது எப்போதும் இருபக்கமாகவே இருக்கும். ஆனால் ஒரு பக்கமாகவும் ஏற்படக் கூடும்.

மண்டையோட்டு அழுத்தத்தால் அல்லாமல் வேறுகாரணங்களால் தட்டில் ஏற்படும் வீக்கம் தட்டு வீக்கம் என அழைக்கப்படுகிறது. தட்டு வீக்கம் உள்ளவர்கள் அனைவருக்குமே மண்டையோட்டுக்குள் கட்டி உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும்.

மண்டையோட்டுக்குள் அழுத்தம் உள்ள அனைவருக்குமே பார்வைத் தட்டு வீக்கம் ஏற்படுவதில்லை. முன்னரே பார்வைத் தட்டு வீக்கம் ஏற்பட்டவர்களுக்கு மறுபடியும் அது ஏற்படுவதில்லை. ஏனெனில் தொடர்ந்து உண்டாகும் மண்டையோட்டு அழுத்தத்தால் கண்நரம்புத் தலைப்பில் வடு ஏற்படுகிறது. மாறுதலையாக  தீங்கற்ற உள் மண்டையோட்டு மிகை அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கும் பார்வைத் திட்டு வீக்கம் காணப்படாது.

பார்வைத்திட்டு வீக்கத்தினால் கண்பார்வை கொஞ்சமும் பாதிக்கப்படுவதில்லை. மாறாகக் கண் நரம்புக் கோளாறால் ஏற்படும் பார்வைத்தட்டு வீக்கத்தால் பார்வைக் கோளாறு ஏற்படும்.

ஆக்சோப்பிளாச ஓட்டத்தடையால் பார்வைத்தட்டு வீக்கம் ஏற்படும். மூளைத்தண்டுவடப் பாய்மம் (CSF) அடங்கிய மூளையின் சிலந்திவலைச்சவ்வு இடைவெளி கண் நரம்பு உறையோடு ஒரே தொடராக உள்ளது. எனவே, (CSF) அழுத்தம் ஆக்சோபிளாஸ்மா ஓட்டத்தைத் தடை செய்வதால் பார்வைத்தட்டு வீக்கம் உண்டாகிறது.

குறிப்புகள்:

http://emedicine.medscape.com/article/1217204-overview

Kanski, Jack J. Clinical Ophthalmology, A Systematic Approach.Third Edition.UK. Butterworth Heinemann, 1994.

பார்வைத்திட்டு வீக்கம் அறிகுறி அற்று இருப்பதால் அது வழக்கமான சோதனை மூலமே கண்டறியப் படுகிறது,

பெரும்பாலான பார்வைத்தட்டு அறிகுறிகள் மண்டையோட்டுக்குள் ஏற்படும் அழுத்தத்தாலேயே உண்டாகின்றன. முக்கியமான அறிகுறிகளின் அம்சங்கள் வருமாறு:

-    குறிப்பாகக் காலையில் கண்விழிக்கும் போது ஏற்படும் கடுமையான கண்வலி. இது பொதுவாக அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும். இருமல், தலை அசைப்பு, குனிதல் அல்லது வாயையும் மூக்கையும் அடைத்துவிட்டு மூச்சை வெளியேற்ற முனைதல் ஆகியவற்றின் போது வலி அதிகரிக்கும். ஏற்கெனவே நீடித்த தலைவலி உள்ளவர்களுக்கு இம்முறையில் மாற்றம் இருக்கும். மண்டயோட்டுக்குள் அழுத்தம் உள்ள ஒரு சில நோயாளிகளுக்கு அரிதாகத் தலைவலி இல்லாமல் இருக்கும்.

-    மண்டையோட்டுக்குள் அழுத்த நிலை மாறிமாறி இருக்கும்போது குமட்டல் வாந்தி உண்டாகும்.

-    நாடி சார்ந்தத் துடிப்புள்ள காதிரைச்சல் காதில் ஒலிக்கும்.

-    கிடைமட்ட இரட்டைப்பார்வை, மண்டையோட்டு உள் மிகை அழுத்தத்தின் காரணமாக ஆறாவது மண்டையோட்டு உள்நரம்பு நீட்சி அடைவதால் உண்டாகும் போலி ஓரிட அறிகுறியாக இருக்கலாம்.

பொதுவாகப் பார்வை சம்பந்தமான அறிகுறிகள் காணப்படுவதில்லை. ஆனாலும் நோயாளிகளுக்கு பார்வை மங்கல், பார்வைப்பலம் சுருங்கல், நிறப் பார்வை குறைதல் போன்றவை இருக்கலாம். நோய் மிகவும் அதிகரிக்காத நிலையில் பார்வைக் கூர்மையில் பாதிப்பு இருப்பதில்லை.

மண்டையோட்டு உள் அழுத்தம் கூடுவதற்கான காரணங்களாக இருக்கக்கூடியவை:

-    இடத்தை ஆகிரமிக்கும் புண்கள் அல்லது கட்டிகள்

-    அதிக CSF உற்பத்தி

-    CSF வடிதலில் தடை

-    CSF மறு உறிஞ்சல் குறைதல். உதாரணமாக, சிரை உட்புழை இரத்த உறைவு, மூளைக்காய்ச்சல், பெருமூளைக்காயம், மூளை சார் சிலந்திச்சவ்வு குருதிக்கசிவு.

-    பெருமூளை வீக்கம்

-    மூளையழற்சி

-    தீங்கற்ற/நோய்க்காரணம் அறியாத உள் மண்டையோட்டு மிகை அழுத்தம்.

-    டெட்ராசைக்ளின், நலிடிக்சிக் அமிலம், ஊக்கமருந்து போன்ற சிலவற்றைப் பயன்படுத்துதல்.

-    மண்டையோட்டு பிளவுகள் மூடல் (மண்டையோட்டு உள்வெளி சுருங்குதல்)

-    கடும் அல்லது தீய மண்டல மிகையழுத்தம்

நரம்பியல் நோய்கள், காய்ச்சல் நோய்கள் மற்றும் தீய மிகைஇரத்த அழுத்த நோய்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். தட்டு வீக்க அறிகுறிகள் இல்லை என்பதை நிறுவப் பார்வைக் கூர்மையைப் பதிவு செய்தல், நிறப்பார்வை மற்றும் கண்பாவை எதிர்வினைகளை சோதித்தல் ஆகிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஆறாவது நரம்பு வாத அறிகுறியை இல்லை என நிறுவக் கண் அசைவுகளைச் சோதித்தல் முக்கியம்.

கண்ணின் பின் உள் பரப்பை முற்றிலுமாக சோதித்து பார்வைத்தட்டு வீக்கம் மதிப்பிடப்படுகிறது.

ஆரம்ப கட்ட நோயைக் கண்டறிவது கடினம். அதன் இயல்புகள்:

-    பார்வை அறிகுறிகள் இருப்பதில்லை. பார்வைக் கூர்மை இயல்பாக இருக்கும்.

-    தட்டு மிகைக்குருதி.

-    சுற்று பார்வைத்தட்டு நார் அடுக்கில் மெல்லிய வீக்கம் அல்லது உருக்குலைவு.

-    நரம்பு நார் அடுக்குகளில் சிறு குருதிக்கசிவு

-    80% பேரிடம் இருக்கும் இயல்பான சிரைத் துடிப்பை இழந்து போதல். இயல்பான சிரைத் துடிப்பு இருந்தால் பார்வைத்தட்டு வீக்கத்தைக் கண்டறிய இயலாது.

உறுதிசெய்யப்பட்ட பார்வைத்தட்டு வீக்கத்தில் பின்வரும் அம்சங்கள் காணப்படும்.

-    சில நிமிடங்கள் நீடிக்கும் மாறும் பார்வைத் தடை. பார்வைக் கூர்மை இயல்பாக இருக்கும் அல்லது சற்றே குறையும்.

-    தெளிவற்ற தட்டு விளிம்பு அல்லது தட்டு பரப்பு உயர்தல்

-    தட்டில் உள்ள சிறு இரத்தக் குழல்கள் பகுதி மறைதல்

-    சிரை வீக்கம்

-    தட்டைச் சுற்றி பிழம்பு வடிவ குருதிக்கசிவும் காட்டன் ஊல் பகுதிகளும்.

-    பார்வை தட்டின் நெற்றிப்பொட்டுப் பக்கத்தில் சுற்று விழித்திரை மடிப்புகள்.

-    அரைகுறை நட்சத்திர, மேல்உச்சி அற்ற கடினக் கசிவுகள்.

-    குருட்டுப் புள்ளி விரிவடைந்திருப்பதை கள அட்டவணை காட்டுகிறது.

நீண்ட காலப் பார்வைத்தட்டு வீக்கத்தில் காணப்படுபவை:

-    வேறுபடும் பார்வைக் கூர்மையும் சுருங்கிய பார்வைக் களமும்

-    கடினக்கசிவும் குருதிக்கசிவும் இல்லாமை

-    தட்டில் சிறு வெண் ஒளிபுகா இடங்கள்.

செயலிழந்த பார்வைத்திட்டு வீக்கத்தில் காணப்படும் அம்சங்கள்:

-    பார்வைக் கூர்மையில் தெளிவான கோளாறு

-    பார்வைத் தட்டுகள் வெண்மையாகவும் தெளிவான விளிம்பும் அற்று காணப்படுதல்.

கீழ்வரும் நிலைகளில் இருந்து பார்வைத்திட்டு வீக்கம் வேறுகாணப்பட வேண்டும்:

-    கண்நரம்புத் தளர்ச்சி

-    முன் குருதியூட்டக்குறை கண்நரம்புக் கோளாறு

-    அழுத்தக் கண்நரம்புக் கோளாறு

-    போலி பார்வைத்தகட்டு வீக்கம் (தூரப்பார்வை, தகடுசரிதல், கொழுப்பேறிய நரம்புநார்கள் அல்லது செல்மிகைப்புகள் போன்றவற்றால் இருக்கலாம்)

-    நடு விழித்திரை நரம்புக் கோளாறு

-    இரத்தமிகை அழுத்தம்

ஆய்வுகள்:

-    மூளையின் முரணோடு கூடிய கணினி அச்சு ஊடுகதிர் (CAT) வரைவி மற்றும் காந்த அதிர்வு பிம்ப  (MRI) ஆய்வுகள்.

-    சிரை உட்புழை குருதியுறைவு இல்லை என்பதை நிறுவக் காந்த அதிர்வு சிரைவரைவியல்.

-    புதை செல்மிகைப்பு இல்லை என்பதை நிறுவ  B ஊடுகதிர் மீவொலியியல்

-    பிந்திய கட்டத்தில் சாயக் கசிவோடு சுற்றுப் பார்வைத் தகட்டு தந்துகிகள் விரிவடைந்திருப்பதை ஒளிர் குழல்வரைவியல் காட்டலாம்.

-    குருட்டுப் புள்ளி விரிவையும் பார்வைப்புலச் சுருக்கத்தையும் சுற்றுவரைவியல் காட்டலாம்.

-    பார்வைத் தகட்டு மாற்றங்களைப் படம்பிடிக்க ஸ்டீரியோ நிறப் புகைப்படம் உதவும்.

-    CSF –ன் தொடக்க அழுத்தத்தை அளக்கவும், ஆய்வுக்காக CSF-ஐ வடிக்கவும் இடுப்புத் துளையிடல்.

அடிப்படை நோயியல் முறைகளைப் பொறுத்து இது அமைகிறது. இதில் அடங்கக் கூடியவை:

-    தீங்கற்ற உள் மண்டையோட்டு மிகை அழுத்தத்திற்கு கார்பானிக் அன்ஹைட்ரேஸ் தடுப்பிகளும் எடைகுறைப்பும் உதவி செய்யும்.

-    அழற்சியினால் மண்டையோட்டு உள்ளழுத்தம் அதிகரித்தால் கோஸ்ட்டிகோஸ்டிராய்டுகள் பயன்படும்.

-    மண்டையோட்டு உள்ளழுத்தத்தைக் கூட்டும் மருந்துகளைத் தவிர்த்தல்.

-    இடத்தை ஆகிரமிக்கும் புண்ணை அறுவை மூலம் அகற்றுதல்

-    CSF-ஐக் கடக்க இடுப்பு வயிற்றுள்ளுறை அல்லது கீழ்வயிற்று இடுப்பு தடமாற்று.

-    தீமையற்ற மண்டையோட்டு உள்மிகை அழுத்த நேர்வுகளில் கண்சார் நோயறிகுறிகளைப் போக்க கண் நரம்பு உறை அழுத்த நீக்கம்.

மண்டையோட்டு உள்ளழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டால் பார்வைநோய் முன்கணிப்புகள் சிறப்பாக இருக்கும். பார்வைத் தட்டு வீக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் பார்வையிழப்புக்கு அது வழிகோலும்.

மருத்துவ கண்காணிப்பின் கீழேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

 

  • PUBLISHED DATE : Feb 01, 2016
  • PUBLISHED BY : Zahid
  • CREATED / VALIDATED BY : R. Davidson
  • LAST UPDATED ON : Feb 01, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.