பார்வைத் தெளிவின்மை

பிற வகைகளில் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு குழந்தையின் கண்களின்  ஸ்நெல்லன் அல்லது இணையான ஓர் அட்டவணையில் இரு கோடுகளின் பார்வைக் கூர்மை வேறுபாடே பார்வைத் தெளிவின்மை என்று வரையறுக்கப்படுகிறது. பார்வைக் கூர்மை குறையும் எந்த நேரத்திலும் பார்வைத் தெளிவின்மை இருக்கும். வேறுபாடு ஒரே கோட்டில் மட்டுமே இருந்தாலும் பார்வைக் கூர்மைக் குறைவை மருத்துவ சோதனைகளின் கண்டுபிடிப்புகளால் விளக்க முடியாது.

ஆம்ப்ளியோப்பியா (பார்வைத் தெளிவின்மை) பின் வரும் கிரேக்கச் சொற்களில் இருந்து உருவானது: ஆம்ப்ளிஸ்-மங்கல் மற்றும் ஆப்ஸ்கண்.  இதன் பொருள் பார்வை மங்கல் ஆகும். ’ கண் பரிசோதனையின் போது காரணம் எதுவும் கண்டறிய முடியாததும், பொருத்தமான நேர்வுகளில் சிகிச்சையால் சீர்செய்யக்கூடியதுமான, அசாதரண இருவிழி செயலெதிர்ச்செயலால் ஒரு கண்ணில் பார்வைக் கூர்மை குறைதல் அல்லது முதிர்ச்சி அடையாத நிலையில் முறையான பார்வை இழப்பால் ஒரு விழி அல்லது இருவிழிகளிலும் பார்வைக் கூர்மை குறைதல்’ என்று வான் நூர்தென் பார்வைத் தெளிவின்மையை வரையறை செய்தார்.

பார்வை வளர்ச்சியுறும் முக்கிய காலகட்டத்தில் பயன்படுத்தாமல் இருந்தால் கண்ணில் பார்வைக் கூர்மை செயல் குறைபாடே பார்வைத் தெளிவின்மை. பார்வை இழப்பின் செயல் நுட்பம் அறியப்படவில்லை.  ஆனால் அது பார்வைப் புறணியில் ஆரம்பம் ஆகிறது எனக் கருதப்படுகிறது.  பார்வைத் தெளிவின்மையால், பார்வைக் கூர்மை, இருவிழிப் பார்வை, ஆழப்பார்வை மற்றும் முரண் உணர்வு ஆகியவை குறைகின்றன. முப்பரிமாண பிம்பத்தின் மைய அமைவான இணைவும் இருவிழிப்பார்வையும் தெளிவான பிம்பங்களை ஒவ்வொரு கண்ணிலும் ஒரே நேரத்தில் காண்பதையே பொறுத்துள்ளது.

குறிப்புகள்:

Agarwal Sunita, Agarwal Athiya, Apple David J, Buratto Lucio, Aliό Jorge L, Pandey Suresh K, Agarwal Amar. Textbook of Ophthalmology Vol 1. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2002. P 447- 451.

Saxena Sandeep. Clinical Ophthalmology – Medical & Surgical Approach Second Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2010. P 777.

Nelson Leonard B, Olitsky Scott E. Harley’s Pediatric Ophthalmology Fifth Edition. Lippincott Williams & Wilkins 2005. P 123- 136.

Wright Kenneth W, Strube Yi Ning J. Pediatric Ophthalmology and Strabismus Third Edition. Oxford University Press 2012. P 231- 247.

Schwartz M William, Bell Louis M Jr, Bingham Peter M, Chung Esther K, Cohen Mitchell I, Friedman David F, Mulberg Andrew E. The 5 - Minute Pediatric Consult Third Edition. Lippincott Williams & Wilkins 2003. P 110- 111.

Scheiman Mitchell, Wick Bruce. Clinical Management of Binocular Vision – Heterophoric, Accommodative and Eye Movement Disorders Third Edition. Lippincott Williams & Wilkins, a Wolters Kluwer business 2008. P 478- 496.

Grosvenor Theodore. Primary Care Optometry Fifth Edition. Butterworth Heinemann Elsevier 2007. P 268.

Grosvenor Theodore. Primary Care Optometry Fifth Edition. Butterworth Heinemann Elsevier 2007. P 91- 94.

Wright Kenneth W. Color Atlas of Strabismus Surgery –Strategies and Techniques. Springer Science+ Business Media, LLC 2007. P 3- 7.

Bartlett Jimmy D, Jaanus Siret D. Clinical Ocular Pharmacology Fifth Edition. Elsevier Inc. 2008. P 663- 669.

Ferri Fred F. 2015 Ferri’s Clinical Advisor – 5 Books in 1. Elsevier Mosby 2015. P 80 - 80.e1.

Denniston Alastair KO, Murray Philip I. Oxford Handbook of Ophthalmology Third Edition. Oxford University Press 2014. P 738.

Probst Louis E, Tsai Julie H, Goodman George. Ophthalmology Clinical and Surgical Principles. Slack Incorporated 2012. P 384- 385.

Abraham Anina, Senthil Sirisha. Clinical Ophthalmology Made Easy Second Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2013. P 197- 199.

Lee WR. Ophthalmic Histopathology. Springer- Verlag London Ltd 1993. P 201.

Kanski Jack J, Bowling Brad. Synopsis of Clinical Ophthalmology Third Edition. Elsevier Saunders 2013. P 322.

http://emedicine.medscape.com/article/1214603-overview

http://www.aravind.org/default/forpatientscontent/Amblyopia

Von Noorden GK. Amblyopia: a multidisciplinary approach. Proctor lecture. Invest Ophthalmol Vis Sci 1985; 26: 1704- 1716.

விழித்திரைப்புள்ளி பார்வைக் கூர்மை குறைவதே முக்கியமான பார்வைத் தெளிவின்மையின் அறிகுறியாகும். ஸ்நெல்லன் பார்வை அட்டவணையில் இரண்டு அல்லது மூன்று கோடுகள் பார்வைக் கூர்மையை இழப்பதே பொதுவாகப் பயன்படுத்தப்படும் கண்டறிவதற்கான அடிப்படை.

 • பார்வைத் தெளிவற்ற கண்ணில் ஓர் அசாதாரண சமவுயரக்கோட்டு செயலெதிர்வினை காணப்படும்.  தனித்தனியாகப் பார்க்கப்படும் அதே பொருட்களை வரிசையாக வைக்கும் போது  கூர்மைக் குறைவு காணப்படும் (கூடுகை நிகழ்வு).
 • மையமின்றி பொருத்துதல்
 • முரண் உணர்வு குறைதல்
 • மங்கிய பின்புல ஒளியில் பார்வை மேம்படுதல்
 • பிரகாசப் பார்வை குறைதல்
 • பார்வைத் தெளிவற்ற கண்ணில் இருவிழிப்பார்வை அழுத்தப்படல்

மீளாற்றல் கொண்ட வினைசார் பார்வைத் தெளிவின்மையையும் உறுப்புசார் பார்வைத் தெளிவின்மையையும் வேறுபடுத்திக் காண வேண்டும். பொதுவாக விழித்திரை அல்லது கண்நரம்பைப் பாதிக்கும் வெளிப்படையான அல்லது மறைமுகமான கண் நோயால் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை விளக்க உறுப்புசார் பார்வைத் தெளிவின்மை என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. கண் நரம்பு குறைவளர்ச்சி, கண் செயல் நலிவு மற்றும் விழித்திரைப் புள்ளி குறைவளர்ச்சி ஆகியவை உறுப்புசார் பார்வைத் தெளிவின்மைக்கு எடுத்துக்காட்டுகள். உறுப்புசார் பார்வைத்தெளிவின்மையோடும் வினைசார் பார்வைத் தெளிவின்மை இருக்கலாம். உடற்கூற்றின் படி இயல்பாக இருக்கும் ஒரு கண்ணில்தான் பொதுவாக வினைசார் பார்வைத் தெளிவின்மை ஏற்படுகிறது.

வடிவப்-பார்வை இழப்பு அல்லது அசாதாரண இருவிழி செயலெதிர்செயலால் வினைசார் பார்வைத் தெளிவின்மை உண்டாகிறது.

பார்வை அச்சைத் தடுக்கும் கண்புரை, வெண்படல ஒளிபுகாமை, கண்நீர்ம உடைவு, இமைத்தொய்வு போன்ற கோளாறுகளால் வடிவப்-பார்வை இழப்பு ஏற்படுகிறது. கடுமையான ஒத்தப்பார்வையின்மையாலும் இது உண்டாகலாம். விழித்திரைப் புள்ளியில் தோற்றுவிக்கப்படும் பிம்பம் இருவிழிகளிலும் இணைய இயலாதவாறு ஒற்றுமை அற்று இருப்பதால், அழுத்தப்பட்டு, அதன் விளைவாக அழுத்தப்பட்ட கண்ணில் பார்வை தெளிவற்றுப் போவதே அசாதாரண இருவிழி செயலெதிர்செயல் எனப்படும் நிலையாகும். அசாதாரண இருவிழி செயலெதிர்செயலுக்கு மாறுகண்ணே மிகவும் வெளிப்படையான காரணமாக இருந்தாலும், இடைப்படலங்களின் ஒருபக்க ஒளிபுகாமையும், ஒத்தபார்வையின்மையும் இந்தச் செயல்நுட்பத்தில் பங்கேற்கலாம்.

நோயியல் வகைப்பாடு: இதுவே பரவலாகப் பயன்படுத்தப்படும் வகைப்பாடு. நோய் முன் கண்டறிதலுக்கு மிகவும் முக்கியமனதாகும். இது பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது:

 • மாறுகண் பார்வைத்தெளிவின்மை: பொதுவாகப் பார்வைத் தெளிவின்மை மாறுகண்ணோடு தொடர்புடையது. மாறுகண்ணின் விளைவாகத்தான் பார்வைத் தெளிவின்மை ஏற்படுகிறதா என்பது உறுதிப்படுத்தப் படாத ஒன்று. இடைவிட்டு நிகழும் மாறுகண் போல் அல்லாமல் நிலையான மாறுகண் பெரும்பாலும் பார்வைத் தெளிவின்மையோடு தொடர்புள்ளதாகக் காணப்படுகிறது. இத்தகையக் கோளாறு வழக்கமாக ஒரு பக்கமானது. இதன் கடுமை மாறுகண் விகிதத்தைப் பொறுத்தது அல்ல.
 • விலகல் பார்வைத்தெளிவின்மை: ஒரு பக்க அல்லது இருபக்கப் பார்வைத் தெளிவின்மைக்கு குறைப்பார்வை முக்கிய காரணங்களில் ஒன்று.

-         சமக்குறைப்பார்வைப் பார்வைத்தெளிவின்மை: இது வயதாதலோடு தொடர்புடையது. ஒருபக்க அல்லது இருபக்க அதியதிக விலகல் பிழைகள் குழந்தையின் முதலாண்டுக்கு முன்னான இருவிழிப்பார்வை மற்றும் பார்வைக்கூர்மை வளர்ச்சியைப் பாதிக்காது என்று கூறப்படுகிறது. அல்லது, ஒரு வயதுக்குப் பிறகு சரிசெய்யப்படாத விலகல் பிழைகள் அதிக விகிதத்திலான ஒரு மற்றும் இரு பக்கப் பார்வைக் குறைபாட்டுடன் தொடர்பு கொண்டது.

எட்டப்பார்வையில், விழித்திரையில் பிம்பங்களைப் போதுமான அளவுக்குக் குவிக்கப்  போதுமான அளவுக்கு இல்லாத கண்தன்னமைவு முயற்சிகளால் பார்வைத்தெளிவின்மை ஏற்படும். அதியுயர் கிட்டப்பார்வையில், நோயாளிக்கு அருகில் இருக்கும் பொருள் குவியத்தில் இருக்க  முயற்சிசெய்வதால் பார்வைத் தெளிவின்மை ஏற்படுவது அரிது.

-         ஒத்தப்பார்வையற்ற பார்வைத்தெளிவின்மை: குறைந்த எட்டப்பார்வை உள்ள கண்ணில் பிம்பத்தைக் குவிக்கத் தேவைப்படும்  கண்தன்னமைவு அளவு  பயன்படுத்தப் படுவதால் இது ஏற்படுவது போல் தெரிகிறது. ஆகவே அதிக எட்டப்பார்வையுள்ள கண் மங்கலான பிம்பத்தைப் பெறுகிறது. எட்டப்பார்வையின் வேறுபாடு 2 டயோப்டர்களைத் தாண்டும்போது பார்வைத் தெளிவின்மை அமையலாம். சில நேர்வுகளில் குறைந்த அளவு வேறுபாடே பார்வைத் தெளிவின்மையை உருவாக்கலாம்.

ஒத்த கிட்டப்பார்வை இன்மையில், அதிகக் கிட்டப் பார்வையுள்ள கண் அருகில் பார்க்கவும், குறைந்த கிட்டப் பார்வையுள்ள கண் தொலைவில் நோக்கவும் பயன்படுத்தப் படுகின்றன. இது ஒரு கூர்மையான பிம்பத்தை இரு கண்ணிலும் ஏற்படுத்துகிறது.  கிட்டப்பார்வை 5 டயோப்டர்களைத் தாண்டாத போது பார்வைத் தெளிவினமை அசாதாரணமானதாகும்.

-         நடுவரைப் பார்வைத்தெளிவின்மை: நடுவரைப் பார்வைத் தெளிவின்மை சிதறல்பார்வை காரணமாக உண்டாகிறது. குவியல் அடையாத பிம்பங்களைக் குறிப்பிட்ட நோக்குநிலையில் உற்பத்தி செய்கிறது.  முதல் ஆண்டில் பார்வைத் தெளிவின்மைக்கு சிதறல் பார்வை ஒரு முக்கியக் காரணியாகத் தோன்றுகிறது.

 • தூண்டுதல் இழப்புப் பார்வைத்தெளிவின்மை: இது கடுமையான பார்வைத் தெளிவின்மையை உருவாக்கும். முதல் மூன்று மாதங்களில் பார்வைத் தெளிவின்மையோடு  வழக்கமாக விழிநடுக்கம் காணப்படும். இமைத்தொய்வு, பிறவிக் கண்புரை, வெண்படல ஒளிபுகாமை மற்றும் கண் இடையூறு ஆகியவையும் தூண்டுதல் இழப்புப் பார்வைத் தெளிவின்மையை உருவாக்கும்.  ஒரு பக்க நேர்வுகள் மிகவும் பார்வைத் தெளிவின்மை கொண்டவை. பொதுவாக  ஆரம்ப சிகிச்சையால் சிறந்த பலன்கள் கிடைக்கும். பிறவி கண்புரையே இழப்பு பார்வைத் தெளிவின்மையின் முக்கியக் காரணம். இதற்கு விரைவான கண்டறிதல் தேவை.
 • நோய்க்காரணம் அறியா பார்வைத்தெளிவின்மை: சில நோயாளிகளில் பார்வைத் தெளிவின்மைக்கான காரணிகளைக் கண்டறிய முடியாது. கடந்துசெல்லும் ஒத்தப்பார்வையின்மை பிறந்த நிலையில் இருந்து பின் மறைந்து போவது போன்று ஒரு பார்வைத் தெளிவின்மை காரணி இருந்திருக்கலாம் என்று கொள்கை அளவில் கூறப்படுகிறது.
 • இடையூறு அளிக்கும் பார்வைத்தெளிவின்மை:  கண்ணுக்கு இயல்பு பார்வை அளிக்கும் மருத்துவ சிகிச்சையால் ஏற்படும் நிலை இது.  மறு கண்ணுக்கு பார்வைத் தெளிவின்மைகான சிகிச்சையின் காரணமாக இது நல்ல நிலையில் இருக்கும் கண்ணில் ஏற்படுகிறது.  ஆனால் வெண்படல செதுக்கல் போன்ற இடையூறு அகற்றும் சிகிச்சைக்குப் பின் இது இளம் குழந்தைகளில் அரிதாகவே காணப்படும். 

பார்வைத் தெளிவின்மையைக் கண்டறிதல் பார்வைக் கூர்மையை அளப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

முழு கண் பரிசோதனை இன்றியமையாதது.  உறுப்பு சார் காரணம் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். தசைத்தொய்வின் கீழ் சரியான விலகல் பிழை சரிசெய்யப்பட வேண்டும்.  பார்வை குறைந்த அளவே மேம்பட்டால் உறுப்பு மற்றும் செயல் சர் காரணங்கள் சந்தேகிக்கப்படும்.  மூளைக்கு உணர்வை எடுத்துச் செல்லும் மண்டலத்தில் ஏற்படும் குறைபாடுகளாலும் பார்வைத் தெளிவின்மை போலியாக உண்டாகலாம். கண் நரம்புப் புற்றே மிகவும் சந்தேகத்துக்கு உள்ளாகும் நோய்க்கூறியல்.

பார்வைக் கூர்மையை அளத்தல்

பார்வைக் கூர்மையை அளக்க அக மற்றும் புற நிலை முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

 • ஒளியியல் உராய்வு: வெவ்வேறு தூண்டல்களில், தொடர்  உராய்வுகளின் எதிர்பார்க்கப்படும், துல்லியமான ஒளிர்தல் மாறுபாடுகள் அடங்கி இருக்கும்.
 • ஒளியியக்க விழிநடுக்கம்: பார்வை மண்டலத்தின் முழு ஒருமைக்கான ஒரு விரைவுத் திரையே ஒளியியக்க விழிநடுக்கத்தின் முக்கிய பயன்பாடு. வெவ்வேறு அளவிலான பட்டைகளைப் பயன்படுத்தும்போது ஒரு புலனாகும் ஒளியியக்க விழிநடுக்கத்தைச் சிமிட்டும் நுண் உராய்வாகப்  பார்வைக் கூர்மை அளக்கப்படுகிறது.
 • விருப்பிற்கேற்பப் பார்க்கும் சோதனை: குழந்தைகள் ஒரே களத்தை நோக்காமல் ஒரு வடிவத் தூண்டலை நிலைத்து நோக்கும் தன்மை கொண்டன என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்ட சோதனை இது. இதன் மூலம் ஓர் ஆண்டுக்குட்பட்ட குழந்தைகளின் உட்கண் செயல்பாடுகளைக் கண்டறியலாம். குறிப்பிட்ட வயதுடைய 75 % குழந்தைகளின் பட்டை இட வெளியை தேர்வு செய்து கூர்மை மதிப்பிடப்படுகிறது.
 • பார்வையால் தூண்டப்படும் ஆற்றல்: ஒரு பார்வைத் தூண்டலின் சில இயல்புகளில் ஏற்படும் மாற்றத்தால் விளையும் புறணி பதில்வினையின் தொகுப்பே பார்வையால் தூண்டப்படும் ஆற்றல் ஆகும்.  இந்தப் பார்வைத் தூண்டல்  ஒன்றில் எளிய ஒளிவீச்சாகவோ அல்லது அதிக இணை வடிவமாகவோ இருக்கும். கூர்மை அறியும் சோதனைகளை முடிக்க இயலாத குழந்தைகளுக்கு இந்த உத்திகள் யாவும் கூடுதல் சோதனையாக அமையும்.
 • பார்வைமானி: இது ஒரு வகையான நேரடி கண் அக நோக்கி ஆகும். இது ஒரு பிம்பத்தை விழித்திரையில் குவிக்கிறது. ஆய்வாளரால் இந்தப் பிம்பத்தைப் பார்க்க இயலும். முதலில் இந்த பிம்பம் விழிப்புள்ளிக்கு அருகில் குவிக்கப்படும். பின் நோயாளி பிம்பத்தைப் பார்க்கும் படி அறிவுறுத்தப்படுவார். மையப் பொருத்துதல் கொண்ட நோயாளி பிம்பத்தை விழிப்புள்ளியில் மறுபடியும் பொருத்துகிறார். இருப்பினும் மையமற்ற பொருத்துதல் இருந்தால், நோயாளியால் விழிப்புள்ளிக்கு அருகுள்ள விழித்திரை பகுதியில் பார்த்து நிலையற்ற அலைபாயும் பொருத்துதலைக் காட்டுகிறார்.

சிறந்த பார்வைக் கூர்மைக்கு ஆரம்பக் கட்ட நோய் மேலாண்மை முக்கியமானது.  முதலில் ஒரு தெளிவான விழித்திரை பிம்பத்தை அளிப்பதும், ஒரு கண் ஆதிக்கம் இருந்தால் அதை சரிசெய்வதும் பிறப்பில் இருந்து எட்டு ஆண்டுக்குள் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை ஆகும்.

I.தெளிவான விழித்திரை பிம்பம்:

பார்வைத் தெளிவற்ற கண்களில் முழு கண்தன்னமைவு  இல்லாது இருப்பதால், இருபக்க எட்டப்பார்வை கொண்ட  நோயாளிகளுக்கு ((> + 5.00 D) முழு எட்டப்பார்வை சீரமைப்பு அளிக்கப்பட வேண்டும். குறைவாக எட்டப்பார்வை சீரமைப்பு செய்யப்பட்டவர்களுக்கு பார்வைத் தெளிவின்மைக் குறைபாடு ஒன்றில் சீராகாது அல்லது மிகமெதுவாக சீராகும்.  விழித்திரை பிம்பம் தெளிவாகக் கிடைக்க முழு சிதறல்பார்வை சீரமைப்பு பரிந்துரைக்கப்பட வேண்டும்.

II.ஒருகண் ஆதிக்கம் சீரமைப்பு

பட்டையிடுதல் மூலம் பார்வைத்தெளிவற்ற கண்ணை வலிந்து பொருத்துதல் அல்லது நல்ல விழியின் பார்வையை மங்கலாக்குதல் மூலம் ஒரு கண் ஆதிக்கம் சரிசெய்யப்படுகிறது:

 • மறைத்தல்: நல்ல விழியை மறைப்பதன் மூலம் பார்வைத் தெளிவற்ற கண்ணைப் பார்வைக்குத் தூண்டும் விதியை அடிப்படையாகக் கொண்டது பட்டையிடல் அல்லது மறைப்பு சிகிச்சை. இணைவை பாதுகாப்பாதால் பகுதி நேர மறைப்பே தெர்ந்துகொள்ளப் படுகிறது.
 • ஒறுத்தல்: பார்வைத் தெளிவற்ற கண்ணை வலிந்து பொறுத்த நல்ல விழியை மங்கச் செய்யும் முறையை இது அடிப்படையாகக் கொண்டது. நல்ல விழியில் இருந்து பொருத்தல் பார்வைத் தெளிவற்ற கண்ணுக்கு மாறி விட்டால் ஒறுத்தல் முறை செயல்படுகிறது எனப் பொருள்.
 • மறைப்புத் தொடுவில்லை: இதை இறுதியாகவே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பல நோயாளிகள் கண் சிக்கல்களால் அவதியுறுகின்றனர்.
 • இருபக்க ஒளி மறைப்பு: இது ஒரு தடுப்பு முறை.  இது பார்வை வளர்ச்சியின் உணர் கால அளவை நீடிக்கிறது.
 • லெவோடோப்பா/கார்பிடோப்பா: லெவோடோப்பா கேட்டிகோலமைன் டோப்போமைனுக்கு ஒரு முன்னோடி ஆகும். இது கள ஏற்பிகள் மேல் ஆதிக்கம் செலுத்தும் நரம்பு-கடத்தி/மட்டுப்படுத்தியாக அறியப்படுகிறது.
 • பார்வை நடத்தைப் பயிற்சி: அடர் பார்வைத் தெளிவின்மையோடு தொடர்புடைய மையமற்ற பொருந்துதலுக்கு சிகிச்சை அளிக்க இம்முறை பயன்படுத்தப் படுகிறது.  விழிப்புள்ளியைச் சுற்றியுள்ள ஒளி ஏற்பிகள் ஒரு பிரகாசமான ஒளியால் தற்காலிகமாக நிறைவடையச் செய்யப்படுகின்றன. இதனால் மையமற்ற பொருந்தல் புள்ளியில் இருந்து வரும் பார்வையை அகற்றுகிறது. இதனால் விழிப்புள்ளியில் பொருந்துதல் நேர்கிறது.
 • முழுத்தூண்டல்: பார்வைத் தெளிவற்ற கண்ணை முழுமையாகத் தூண்டுவதன் மூலம்  பார்வை மேம்படுவதாகக் கருதப்படுகிறது.

நோய்முன்கணிப்பு

நோயாளியின் வயது, பார்வைத் தெளிவின்மையின் வகை மற்றும் கடுமையைப் பொறுத்து இது அமைகிறது. விரைவில் தொடங்கி நீடித்து இருக்கும் பார்வைத் தெளிவின்மையின் முன்கணிப்பு மோசமாக அமையும். ஒருபக்க பார்வைத் தெளிவின்மையை விட  இருபக்க நோய் எளிதில் குணமாகலாம். எட்டப்பார்வை ஒத்தப்பார்வையின்மை பார்வைத்தெளிவின்மையை விட கிட்டப்பார்வை ஒத்தப்பார்வையின்மை பார்வைத்தெளிவின்மை எளிதில் குணமாகும்.

 

 • PUBLISHED DATE : Mar 03, 2017
 • PUBLISHED BY : Zahid
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Mar 03, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.