போலிமாறுகண்

பார்வை அச்சின் வெளிப்படையான விலகல் உண்மையில் இல்லாத நிலையிலும் மாறுகண் போன்ற தோற்றத்தை அளிப்பதே போலி மாறுகண் ஆகும். கண்களின் இந்த மாறுபட்ட தோற்றம் முகத்தின் சில உறுப்பு அம்சங்களால் ஏற்படும் என்றாலும் சில கண் அல்லது கோள நிலைகளோடும் தொடர்புடையாதாக இருக்கலாம். போலி அகத்திரும்பல் அல்லது மூக்கு நோக்கிக் கண் திரும்பி இருக்கும் நிலையே மிகவும் பொதுவானதாகும். கண்கள்  குறுக்குத் தோற்றமாகக் காணப்படும். போலிப் புறத்திரும்பலும் காணப்படும். இதில் கண்கள் வெளிப்புறமாக விலகி இருப்பது போல் காணப்படும். கண்கள் செங்குத்தாக மாறுபட்டும் நிற்கும் போலி மேற்திரும்பலும் காணப்படும்.

போலி மாறுகண் கொண்ட நோயாளிகளை முழுமையாக பரிசோதிக்க வேண்டும். ஏனெனில்  பொதுவான மக்களிடையிலும் குறிப்பாக வளர்ச்சி தாமதம் உடையவர்களிடமும் இருப்பதை விட இவர்களிடம் மாறுகண் இருக்கும் சாத்தியக் கூறு அதிகம்.

குறிப்புகள்:

Agarwal Amar. Handbook of Ophthalmology. Slack Incorporated 2006. P 144- 145.

Basak Samar K. Atlas of Clinical Ophthalmology Second Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2013. P 430.

Coats David K, Olitsky Scott E. Strabismus Surgery and its Complications. Springer-Verlag Berlin Heidelberg 2007. P 5- 6.

Garg Ashok, Aliό Jorge L, Prost Ewa Oleszczynska, Sharma Pradeep, Pajic-Eggspuehler Brigitte, Dhull CS, Saxena Rohit. Surgical Techniques in Ophthalmology- Strabismus Surgery. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2010. P 100.

Rowe Fiona J. Clinical Orthoptics Third Edition. Wiley-Blackwell 2012. P 174- 175.

Ansons Alec M, Davis Helen. Diagnosis and Management of Ocular Motility Disorders Fourth Edition. John Wiley & Sons, Ltd 2014.

Bowling Brad, Kanski's Clinical Ophthalmology- A Systematic Approach. Eighth Edition. Elsevier, 2016. P 755- 756.

Kanski Jack J, Bowling Brad. Clinical Ophthalmology- A Systematic Approach Seventh Edition. Elsevier Saunders 2011. P 755.

http://eyewiki.aao.org/Pseudostrabismus

http://emedicine.medscape.com/article/1199610-overview

Pritchard C, Ellis GS Jr. Manifest strabismus following pseudostrabismus diagnosis. American Orthoptic Journal 2007; 57: 111- 117.

 

இளம் குழந்தைகளிடம் மாறுகண் இருப்பதைப் பொதுவாகப் பெற்றோர் கண்டு பிடிக்கிறார்கள்.  குழந்தை தலையைத் திருப்பும் போதும் கண்கள் பக்கப் பார்வையோடு இருக்கும் போதும்  குறிப்பாக வெளிவிழியுறை கண்மூலை மடிப்பில் புதைந்திருப்பது போல் தோன்றுவதால் விலகல் இன்னும் தெளிவாகக் காணப்படும்.

போலி  கண் அகத்திரும்பல் அல்லது போலி வெளித்திரும்பல் கொண்ட குழந்தைகளின் நிழற்படத்தைப் பெற்றோர் கொண்டு வருவர்

I.போலி கண் அகத்திரும்பல்: போலி மாறுகண்ணில் இதுவே பொதுவாகக் காணப்படும் வடிவம். இதற்கான காரணம்:

 •  உருவவியல் அம்சங்கள்: நோக்குநிலை, விழிக்குழியின் வடிவம் மற்றும் அளவு, கோளங்களின் வடிவம் மற்றும் அளவு, பின் திருப்பு குமிழ் தசை கன அளவு ஆகிய உருவவியல் அம்சங்கள் இசைவற்ற கண்கள் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தலாம். அகலமான மூக்குப் பாலத்தோடு பெரிய கண்மூலை மடிப்போடு கூடிய குழந்தைகளில் பரவலாக இது காணப்படும்.
 • பாவை இடை தூரம் (IPD) : பாவை இடைவெளி குறைவாக இருந்தால் அகவிலகல் தோற்றத்தை அளிக்கும்.
 • எதிர்மறை கப்பா கோணம்: பார்வை அச்சிற்கும் பாவை அச்சிற்கும் இடையில் பாவையில் உருவாகும் கோணம் எதிர்மறையாக இருந்தால் அக விலகலைத் தூண்டும்.
 • கோளப்பின்விலகல்: குவி விலகல் தோற்றத்தை அளிக்கும்.

II.போலி கண்புறவிலகல்: பின் வருபவற்றால் இது நிகழும்:

 • உருவவியல் அம்சங்கள்: முகத்தின் உருவவியல் அம்சங்களால் கண் புறவிலகல் அடைந்தத் தோற்றம் ஏற்படலாம்.  விரிவிழி பெரும்பாலும் போலிக் கண்புறவிலகலாக மாறலாம்.
 • பாவை இடைத் தூரம்: பாவைகளுக்கு இடையில் அதிக இடைவெளி இருந்தால் புற விலகல் தோற்றம் ஏற்படும்.
 • நேர்மறை கப்பா கோணம்: விழித்திரை இழுபடுவதால் விழிமையம் தற்காலிகமாக நோயியல் இடப்பெயர்ச்சி அடைந்து நேர்மறை கப்பா கோணம் ஏற்படக்கூடும். இதனால் ஒளி எதிர் வினை, மூக்கு நோக்கி இடம்பெயர்ந்து புறவிலகலைத் தூண்டலாம். நேர்மறை கோணக் கப்பாவால் ஏற்படும் போலி விழிப்புறவிலகலை குறைபிரசவ விழித்திரை நோயில் காணலாம். இதன் விளைவாக நேற்றி நோக்கி விழிமையம் இழுக்கப்படும். அதி கிட்டப்பார்வை, உருண்டைப்புழு விழித்திரை வடு அல்லது பிறவி விழித்திரை மடிப்பு ஆகியவற்றால் இடம்மாறிய விழிமையம் காணப்படும்.
 • கோளப்பிதுக்கம்: இது மாறுபட்ட விலகல் தோற்றத்தை அளிக்கும்.

III.போலி விழிமேல்விலகல்: இதற்குக் காரணம்

 • முக சீரின்மை: முகம் சமமற்ற நிலையில் இருக்கும் போது விழிகள் செங்குத்தாக இசைவின்றி ஒரு கண் மேலும் ஒரு கண் கீழுமாகத் தோற்றம் அளிக்கும்.
 • விழிக்குழி கட்டிகள்: விழிக்குழித் தரையில் இருக்கும் சில கட்டிகளால் கண்கோளம் கீழ்நோக்கி பெயர்ந்து செங்குத்து இசைவின்மையை உருவாக்கும்.
 • காயம்: விழிக்குழி தரைக்காயமும் செங்குத்து கண் இசைவின்மையை உருவாக்கும்.

IV.பிற காரணங்கள்:

 • இமைத்தொய்வு செங்குத்து விலகல் தோற்றத்தை அளிக்கும்
 • முக சீரின்மை
 • இமைப்பிளவு சீரின்மை
 • தோல்தளர்ச்சி
 • இயல்பற்ற தலை நிலை
 • சரியாகப் பொருந்தாத கண்ணாடி
 • கருவிழி நிற வேறுபாடு
 • கருவிழிப் பிளவு
 • பாவை அளவு வேறுபாடு

ஆபத்துக் காரணிகள்:

·         குறைப்பிரசவம்: குறைப்பிரசவ விழித்திரை நோயால் விழிமையம் நெற்றி நோக்கி இழுக்கப்பட்டு நேர்மறை கோணக் கப்பா உருவாவவதால் போலி விழிப்புறவிலகல் ஏற்படும்.

 • முக உருவவியல்: ஆசிய குழந்தைகளில் பெரிய கண்மூலை மடிப்பு போலி விழிப்புற விலகலை உருவாக்கும்.
 • விழிக்குழி கட்டி: சில கட்டிகளால் ஏற்படும்
 • விழிக்குழி காயம்: இதனால் கோளம் இடப்பெயற்சி அடைந்து போலி விழிபுற விலகல் ஏற்படலாம்.
 • விழி நடுப்படல-விழித்திரை தொற்று: இதனால் வடு ஏற்பட்டு விழிமையம் நெற்றி நோக்கி இழுக்கப்பட்டு போலி புறவிழி விலகல் ஏற்படலாம்.

போலி மாறுகண்ணைக் கண்டறிய,  இடைவிட்டுக் காணப்படும் அல்லது நிரந்தர மாறுகண் இல்லை என்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும்.

போலி மாறுகண் என்று கண்டறியப் பட்டவர்களிடமும் மாறுகண் அதிக அளவில் காணப்படுவதால் போலி மாறுகண் நோயாளிகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

மருத்துவ வரலாறு, உடலியல் பரிசோதனை மற்றும் சில ஆய்வகச் சோதனைகள் நோய்கண்டறிதலுக்கு அடிப்படைகள் ஆகும்.

பிறப்பு எடை, கரு வயது, குழந்தையின் ஆரோக்கியம். குறைப்பிரசவ விழித்திரை நோய்க்கான சிகிச்சை போன்ற முழு வரலாறு நோய்கண்டறிதலுக்கான குறிப்புகளை அளிக்கும். முதன் முதலில் காணப்பட்ட விதம் குறித்த நிழற்படங்கள் தோன்றிய விதம், நிலைப்பு ஆகியவற்றை ஆவணப்படுத்தவும் நோயை உறுதிப்படுத்தவும் உதவும்.

கண் மற்றும் அதைச் சார்ந்த உருவ இயலை ஆய்வது சிறந்த உடலியல் பரிசோதனையில் அடங்கும்.

இரு கண்களின் பார்வை அச்சும் இயல்பான இசைவோடு இருந்தாலும், இமைப் பிளவின் இயல்பான மற்றும் நோயியல் வேறுபாடுகள் மாறுகண் போன்ற தோற்றத்தை அளிக்கக் கூடும். பெரிய கண்மூலை மடிப்பு கொண்ட குழந்தைகளில் போலி விழியக விலகல் காணப்படுவது இதற்கு எடுத்துக்காட்டு. நெற்றி சார் கண் பகுதியை விட மூக்கு சார் கண் பகுதியில் அதிக வெண்மை புலப்படுவதால் குடும்பத்தினர் மாறுகண் இருப்பதாக எண்ணுவர். இமைகளில் இருப்பு நிலையும் வடிவமும் மற்றும் கண் சார் அமைப்புகளும் மாறுகண் போன்ற தோற்றத்தை அளிக்கலாம் என்று கவனமான ஆய்வுக்குப் பின் பெரும்பாலான பெற்றோர்கள் உணர்ந்து கொள்வர். மூக்கும் பாலத்தைக் கிள்ளி கண்மூலை மடிப்பை இறுக்குவதன் மூலம் சந்தேகப்படும் பெற்றோரும் சமாதானம் அடைவர்.

இது போன்றே, கண் மூலையின் பக்கப் பகுதி சார் கோளாறுகளும் புறவிலகல் போன்ற தோற்றத்தை உருவாக்கும்.

நோய்கண்டறியும் சோதனைகள்

I.              பார்வைக் கூர்மை மதிப்பீடு: போலி மாறுகண் காணப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் பார்வைக் கூர்மை சோதனை செய்ய வேண்டும்.

II.            இயக்க மதிப்பீடு: இதில் கீழ்வரும் சோதனைகள் அடங்கும்

·         ஹிர்ஷ்பெர்க்கின் ஒளி எதிர்வினை சோதனை: இது மாறுகண் வெளிப்பாட்டுக் கோணத்தின் ஒரு குத்துமதிப்பான புறநிலை மதிப்பீட்டை அளிக்கும். விலகும் கண்ணின் நிலைத்தன்மை மோசமாக இருந்தால் இது குறிப்பாகப் பயனளிக்கும்.

-         நோயாளியின் கண்ணில் இருந்து ஒரு கை அளவு தூரத்தில் ஒரு பேனா கைவிளக்கு காட்டப்பட்டு அதைப் பார்க்கும் படி நோயாளி அறிவுறுத்தப்படுகிறார். இந்த ஒளியின் வெண்படல எதிரொளிப்பு ஏறத்தாழ பார்க்கும் விழியின் பாவை மையத்தில் இருக்கும். ஆனால் மாறுகண் கொண்ட கண்ணில் விலகலுக்கு எதிர்திசையில் மையம் தவறி இருக்கும்.

-         வெண்படல ஒளி எதிரொளிப்பு இருந்தால் அதன் தூரம் குறிக்கப்படும். மாறுகண் அற்ற விழியில் ஒளி எதிரொளிப்பு மையம் இழக்காது.

·         மூடித்திறக்கும் சோதனை:

மூடும் சோதனை: விழிமேல் விலகலைக் கண்டறிய இது நடத்தப்படுகிறது. ஒளியைப் பயன்படுத்தியும் பின் தகவமைவைக் கொண்டும்  முதலில் அண்மைச் சோதனையோடு தொடங்குவது நல்லது. அதன் பின் தொலைவிற்கும் சோதனை பின் வருமாறு செய்யப்படுகிறது.

-         நேர் முன்னால் இருக்கும் ஓர் இலக்கை நோயாளி பார்க்கிறார்.

-         வலப்புற விலகல் என்று சந்தேகித்தால், பரிசோதனையாளர் பார்க்கும் இடது கண்னை மறைக்கிறார். பின் நிலைத்து நோக்க வலது கண்ணில் ஏதாவது அசைவு இருக்கிறதா என்று கவனிக்கிறார்.

-         அசைவு இல்லை என்பது மாறுகண் இல்லை அல்லது இடது புறம் நோக்கிய பார்வையைக் குறிக்கும்.

-         நிலைப்பார்வைக்கு வலது கண் ஒடுங்கினால் அது வலப் புறவிலகலை குறிக்கிறது; இடக் கண் ஒடுங்கினால் அது வல அக விலகலைக் குறிக்கிறது.

-         செங்குத்து அசைவு செங்குத்து மேல் அல்லது கீழ் விலகலைக் குறிக்கிறது.

-         மறுகண்ணிலும் இந்தச் சோதனை செய்யப்படும்.

திறப்பு சோதனை: இது மறைமாறுகண்ணைக் கண்டறியும். அண்மை மற்றும் தொலைவு ஆகிய இரண்டு நிலையிலும்  இச்சோதனை நடத்தப்படும்.

பெரும்பான்மையான ஆய்வாளர்கள் தொடராக மூடித் திறக்கும் சோதனையைச் செய்வார்கள். எனவே இது மூடித்திறக்கும் சோதனை என அழைக்கப்படுகிறது.

·         ஒன்று மாற்றி ஒன்று மூடும் சோதனை: இது ஒரு விலகல் சோதனை. இணைவு நீக்கப்படும்போது மொத்த விலகலை இது வெளிப்படுத்துகிறது. மூடித்திறக்கும் சோதனைக்குப் பின் இது நடத்தப்படும்.  மறைப்பி, ஒரு கண் மாற்றி வேகமாக பலதடவை அகற்றி வைக்கப்படும். மறைப்பு அகற்றப்பட்ட பின், கண் விலகலுக்கு முன்னிருந்த நிலையை மீண்டும் அடையும் போது மீட்சியின் வேகமும் மென்மையும் குறிக்கப்படும். நன்கு ஈடுசெய்யப்பட்ட மறைமாறுகண் கொண்ட ஒரு நோயாளிக்கு  இச்சோதனை செய்யப்பட்ட பின்னரும் முன்னரும் நேர் கண்கள் இருக்கும்.  ஆனால் கட்டுப்பாடு குறைவாகக் கொண்ட நோயாளிக்கு வெளிப்படுத்தப்படும் விலகலை ஈடுகட்ட முடிவதில்லை.

·         கண் அசைவு: ஒருகண் மற்றும் இருகண் பார்வையைச் சோதித்து கூடுதல்-கண் தசை ஒவ்வொன்றின் செயல்பாட்டையும் சோதிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

III.           உணர்வியல் மதிப்பீடு: முழு உணர்வியல் மதிப்பீடு, உணர்வியல் வளர்ச்சி குறித்தக் குறிப்பை அளிக்கும். செங்குத்து படிக சோதனை மூலம் ஒரு கண் பார்வை முன்னுரிமை கண்டறியப்படலாம்.

வேறுபடுத்திக் கண்டறிதல்:

போலி மாறுகண் என்பதை உறுதிப்படுத்த முதலில் பல்வேறு சோதனைகள் மூலம் மாறுகண் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

போலி மாறுகண் கொண்டவர்களுக்கு மாறுகண் உருவாகும் வாய்ப்பு இருப்பதால் ஆறு மாதத்துக்கு ஒருமுறை மறு மதிப்பீடு செய்து வர வேண்டும்.

மாறுகண் கொண்டவர்களுக்கு போலி மாறுகண் உருவாக்கும் காரணிகள் இருந்து மாறுகண்ணை மறைக்கும் அல்லது அதற்குப் புத்துயிர்ப்பு அளிக்கும். சந்தேகமுள்ள நேர்வுகளை தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும். மாறுகண் இருப்பதற்கு உறுதியான சான்றுகள் இல்லாத குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்பதற்கு சில கண்டு பிடிப்புகள் உறுதியான சுட்டிகளாக உள்ளன. இவற்றில் அடங்குவன:

-         மாறுகண் அல்லது விலகல் பிழை குடும்பத்தில் தொடர்ந்து வரும் வரலாறு.

-         குறிப்பிடத்தக்க அளவிலான மறைமாறுகண் இருப்பது. சிறு அளவிலான அகவிழிவிலகலும் குறிப்பிடத்தக்கது.

-         சூரிய ஒளியில் கண் கசக்கும்  போக்கு இடைவிட்டு வரும் குழந்தைப்பருவ புறமாறுகண் சாத்தியக்கூறை காட்டுகிறது.

போலி மாறுகண் கண்டறியப்பட்ட உடன், விலகலுக்கு உரிய தெளிவான காரணத்தைப் பெற்றோருக்கு விளக்கிக் கூறி தைரியமூட்ட வேண்டும்.

 

போலிமாறுகண் நேர்வுகளில் இருவிழி ஒற்றைப்பார்வையும் இணைவுக் கட்டுப்பாடும் இருப்பதைப் பார்வையியல் ஆய்வுகள் நிறுவுகின்றன.

பொதுவான போலிவிழி அகவிலகலுக்கு, மூக்கு சார் வெளிவிழியுறை கண்மூலை மடிப்பால் மறைக்கப்பட்டிருப்பதால், மூக்கு பாலத்தைக் சற்றே கிள்ளி மூக்குசார் வெளிவிழிப்படலத்தை வெளிப்படுத்துவதன் மூலம் பார்வையியல் தோற்றத்தை காட்ட முடியும். தட்டையான மூக்குப் பாலம் உருவாகும் போது மிகையான கண்மூலை மடிப்புத் தோல் எழுந்து இந்நிலை தானாகவே சரியாகி விடும். போலி மாறுகண் மறைகிறதா என்று தொடர்ந்து கவனிப்பத்தைத் தவிர இதற்கு வேறு சிகிச்சை தேவையில்லை.

இருப்பினும், போலி மாறுகண்ணோடு, உண்மையான மாறுகண் இருந்தால் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

நோய்முன்கணிப்பு

போலி மாறுகண்ணின் இயற்கை செல்வழி மாறுபடும். மூக்குப் பாலம் பெரிதாவதால் பெரும்பாலான நேர்வுகளில் 2-3 வயதில் இது தானாகவே சரியாகிவிடும்.

நேர்மறை அல்லது எதிர்மறை கோணக் கப்பாவோடு இணைந்து காணப்படும் போலி மறைமாறுக

 • PUBLISHED DATE : Sep 12, 2017
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Sep 12, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.