மூரன் புண்

வலிதரும், அதிகரித்து வரும், நீடித்த வெண்படலப் புண்ணே மூரன் புண் ஆகும். பெரும்பாலும் இது இருபக்கமானது.  கடுமையான பார்வை இழப்பு அல்லது கண் இழப்பைக் கூட ஏற்படுத்தும். நோய்க்காரணம் அறியாத வலியுடன் கூடிய வெண்படலப் புறப்புண்ணாக இது உருவாகும்.  இந்நோய் பொதுவாக கருவெண்படல சந்திப்புக் கடும் அழற்சியாகவும் மேல்வெண்படலம் மற்றும் கண்சவ்வு வீக்கமாகவும் ஆரம்பிக்கும். படலசந்திப்பில் இருந்து 2-3 மி.மீ. தூரத்தில் வெண்படல மாற்றம் சாம்பல்நிற வீக்கமாகத் தொடங்கி பின் துரிதமாகப் பள்ளங்கள் ஏற்படுகின்றன. மேலோட்டமாக வெண்படலத்தின் மூன்றில் ஒரு பகுதியை இது பாதிக்கிறது. பின் சுற்றுவட்டமாகவும் நடுவிலும் இது முன்னேறிச் செல்லுகிறது. பொதுவாக, சுற்று வட்ட படல சந்திப்புப் புண்ணின் வளர்விளிம்பு ஊடுறுவும் மற்றும் பலவீனமாகும்.  பள்ளத்தின் படுகையில் புதுக்குழல் உருவாகி பலவீனப்பட்ட ஓரத்தின் அடியில் முன்னேறிச் செல்லும். புண்ணின் நடு விளிம்பு ஒரு தொங்கும் ஓரத்தை சந்திப்பில் இருந்து புண் படுகை வரை உருவாக்கும். இதில் ஒளிபுகா நிலையும் புதுக்குழல் உருவாதலும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். புதுக்குழல், புண்ணின் வளர் விளிம்பு வரை ஏற்படுமே தவிர அதற்கு மேல் இருப்பதில்லை. தொடக்கத்தில், வெண்படல திசுச் சிதைவும் புண்ணுறலும் விளிம்பில் மட்டுமே காணப்படும். ஆனால் சில நோயாளிகளில் இது முழு வெண்படலத்திலும் ஏற்படலாம். வெண்படலச் சிதைவு பொதுவாக திசு வலையை மட்டுமே பாதிக்கும். மேல் தோலும் உட்தோலும் பாதிப்பின்றி காணப்படும். புண் பிறை வடிவில் இருக்கும். ஒளிபுகா வீங்கிய வெண்படலத்தை அல்லது நார்க்குழல் படலத்தை இவை ஏற்படுத்தும். அடியில் உள்ள டெசமெட் படலத்தை இது பாதிப்பதில்லை. இதனோடு சேர்ந்து வெண்படல அழற்சி ஏற்படுவதில்லை.  கடும் வலி மூரன் புண்ணின் தனி இயல்பு ஆகும். இத்தகைய வலி, விளிம்பு வெண்படலப் புண்ணில் இருப்பதில்லை. தற்போது உள்ள எந்த சிகிச்சைக்கும் இந்நோய் கட்டுப்படுவதில்லை.

தற்போது நாம் மூரன் புண் என்று அழைக்கும் வெண்படலத்தில் ஏற்படும் புண்ணை பௌமன் (1849) முதன் முதலில் விளக்கிக் கூறினார் (நீடித்த அலைவிளிம்புப் புண் என்றும் கொறித்துண்ணிப் புண் என்றும் அழைக்கப்படும்). மருத்துவ ரீதியாக மூரன் இதை விளக்கினார் (1867).

வுட் மற்றும் கௌஃப்மன் (1971), இதன் இரு மருத்துவ வகையை விளக்கினர்:

 • வகை I: ஒருபக்கமானது; அதிக வலி இருப்பதில்லை; வயதானவர்களுக்கு ஏற்படும் (40 க்கு மேல்). மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பலன் தரும்.
 • வகை II: ஆறாத, அதிகரிக்கும், மருந்துகளுக்கு கட்டுப்படாத வகை. வலிதரும், இருபக்க நோய். வெண்படலத்தைத் தொடர்ந்து சிதைக்கும். பொதுவாக இளம் வயதினரை (30-க்கு கீழ்) பாதிக்கும். பெரும்பாலானோர் ஆப்பிரிக்க வம்சாவழியினர். இது வெண்படல ஓட்டைக்கு வ்ழிகோலும்.

ஆனால் இந்த வகைப்பாட்டை லீஆலன் எஸ் மற்றும் கோர்ட்ரைட் பி மறுத்துள்ளனர் (1990).

குறிப்புகள்:

Agarwal Sunita, Agarwal Athiya, Apple David J, Buratto Lucio, Alio Jorge L, Pandey Suresh K and Agarwal Amar. Textbook of Ophthalmology Volume 1. First Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2002. New Delhi. P. 1030.

Basak Samar K. Jaypee Gold Standard Mini Atlas Series: Diseases of the cornea. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2011. P 171- 174.

Saxena Sandeep. Clinical Ophthalmology: Medical and Surgical Approach, Second Edition. Jaypee - Highlights Medical Publishers Inc. 2011. P 61- 62.

Khurana A K. Comprehensive Ophthalmology. Sixth Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2015. P 28.

Agarwal Amar. Handbook of Ophthalmology. Slack Incorporated 2006. P 251- 252.

Prajna N Venkatesh. Aravind FAQs in Ophthalmology. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2013. P 82- 87.

Garg Sunir J. Color Atlas & Synopsis of Clinical Ophthalmology Wills Eye Institute – Uveitis. Lippincott Williams & Wilkins, a Wolters Kluwer business 2012.

Sundaram Venki, Barsam Allon, Barker Lucy, Khaw Peng Tee. Training in Ophthalmology – the essential clinical curriculum. Second Edition. Oxford University Press 2016. 

Nema HV, Nema Nitin. Textbook of Ophthalmology. Sixth Edition. Jaypee-Highlights Medical Publishers (P) Ltd. 2012. P 154.

Roy Frederick Hampton, Fraunfelder Frederick W, Fraunfelder Frederick T. Roy and Fraunfelder’s Current Ocular Therapy. Sixth Edition.Saunders Elsevier. 2008. P 382- 383.

Chicago Eye and Emergency Manual. Jaypee- Highlights Medical Publishers, Inc. 2011. P 58- 59.

Foster C Stephen, Azar Dimitri T, Dohlman Claes H. Smolin and Thoft’s The CORNEA-Scientific Foundations & Clinical Practice. Lippincot Williams & Wilkins. Fourth Edition. 2005. P. 551- 557.

Pleyer U, Foster CS. Uveitis and Immunological Disorders. Springer- Verlag Berlin Heidelberg 2007. P 84- 85.

Copeland Jr Robert A, Afshari Natalie A. Copeland and Afshari’s Principles and Practice of CORNEA Vol.1. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2013. P 409- 416.

Heegaard Steffen, Grossniklaus Hans. Eye Pathology An Illustrated Guide. Springer-Verlag Berlin Heidelberg. 2015. P 92.

Denniston Alastair K O, Murray Philip I. Oxford Handbook of Ophthalmology. Third Ed ition. Oxford University Press 2014. P 263- 265.

Lee WR. Ophthalmic Histopathology. Springer- Verlag London Ltd. 1993. P 301. 

Kaiser Peter K, Friedman Neil J, Roberto Pineda. The Massachusetts Eye and Ear Infirmary Illustrated Manual of Ophthalmology. Fourth Edition. Elsevier Saunders 2014. P 178-181.

Probst Louis E, Tsai Julie H, Goodman George. Ophthalmology Clinical and Surgical Principles. Slack Incorporated 2012. P 253- 254.

Brightbill Frederick S, McDonnell Peter J, Farjo Ayad A, McGhee Charles NJ, Serdarevic Olivia N. Corneal Surgery- Theory, Technique and Tissue. Fourth Edition. Mosby Elsevier. 2009. P 229- 240.

Yanoff Myron, Duker Jay S. Ophthalmology. Third Edition. Mosby Elsevier 2009. P 292- 293.

http://eyewiki.aao.org/Mooren's_Ulcer

file:///C:/Users/drscg/Downloads/2452011152621203.pdf

http://www.ncbi.nlm.nih.gov/pubmed/6364814

Yanoff Myron, Sassani Joseph W. Ocular Pathology Sixth Edition. Mosby Elsevier 2009. P 284- 285.

Nema HV, Nema Nitin. Textbook of Ophthalmology. Fifth Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2008. P 151- 152.

Srinivasan M et al. Clinical characteristics of Mooren’s ulcer in South India. Br J Ophthalmol 2007; 91(5): 570- 575.

Watson PG. Management of Mooren’s ulceration. Eye (London) 1997; 11 (pt 3): 349- 356.

Lewallen S, Courtright P. Problems with current concepts of the epidemiology of Mooren’s corneal ulcer. Ann Ophthalmol 1990; 22(2): 52- 55.

Brown SI, Mondino BJ. Therapy of Mooren’s ulcer. Am J Ophthalmol 1984; 98:1- 6.

Wood TO, Kaufman HE. Mooren’s ulcer. Am J Ophthalmol 1971; 71(1pt 2): 417- 422.

Mooren A. Ophthalmiatrische Beobachtungen. Berlin: A Hirschwald 1867; 107- 110. (German).

Bowman W: Case 12, p 112 in the parts concerned in the operations of the eye (1849), cited by Nettleship E: Chronic Serpiginous Ulcer of the Cornea (Mooren’s ulcer). Trans Ophthalmol Soc UK 1902; 22: 103- 144.

 

பின் வரும் அறிகுறிகள் காணப்படும்:

 • கடும் கண் வலி
 • நீரொழுகல்
 • அயல் பொருள் உணர்வு
 • செம்மை
 • ஒளிக்கூச்சம்
 • பார்வை மங்கல்

மூரன் புண் ஏற்படுவதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் இது ஒரு தன்தடுப்பு அடிப்படை கொண்டது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவை வருமாறு:

 • புண்ணுக்கு அடுத்து இருக்கும் கண்சவ்வில் ஊனீர் செல்களும் நிணநீர் செல்களும் இருத்தல்.
 • கண்சவ்வுக்கும் வெண்படல மேற்திசுவுக்கும் சுற்றி வரும் எதிர்மப்பொருட்களை நோயாளியின் ஊனீர் காட்டும்.
 • உப்புநீரில் கரையும் வெண்படல விளைவியத்தால் புறத்தூண்டல் பெற்று IgA, IgG மற்றும் IgM மற்றும் நிணநீர்செல்கள்  போன்ற இம்யூனோகுளோபுலின் ஊனீர் அளவுகள் கூடுதல்.
 • வெண்படலத்துக்குரிய திசுவலையப் புரத விளைவியத்துக்கு எதிர்மப்பொருள் அளவுகள் அதிகரித்தல்.
 • அழுத்த T செல் விகிதத்தோடு ஒப்பிடும்போது உதவும் T செல் அதிகரித்தல்.
 • சில நோயாளிகளில் நோய்த்தடுப்பழுத்தப் பொருட்களுக்கு பதில்வினை சாதகமாக இருத்தல்.
 • கால்கிரானுலின் C இருப்பது. இது ஒரு தனித்துவமான வெண்படலத்தில் இருக்கும் அதனோடு தொடர்புடைய புரதம் ஆகும். இது மூரன் புண் கொண்ட நோயாளிகளில் இருந்து எழும் தன்னியக்க எதிர்மப் பொருட்களின் இலக்கும் ஆகும். இந்தக் கால்சியப் பிணைப்புப்  புரதம் இழை உருளைப் புழுவின் பரப்பில் காணப்படும் சாயச்சார்பற்ற செல் புரதத்தோடு ஒத்ததாக உள்ளது. இத்தொகுதிப் பொருளை ஒரு இழை உருளைப்புழுவில் இனம் காணுவது, நோயாளிகளில் தொடர் ஒட்டுண்ணி தொற்றால் மூரன் புண் ஏற்படும் வெண்படல தன்தடுப்புத் தன்மை உருவாவதோடு ஒத்து நோக்கும் ஐயத்தையும் எழுப்புகிறது.

பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நோயாளிகளுக்கு வெண்படலத்தில் பல பாதிப்புகள் ஏற்படக்கூடிய பொது வழியை மூரன் புண் உருவாக்குகிறது. காயம் அல்லது தொற்று இயல்பான வெண்படல விளைவியங்களைப் பாதித்து தன்தடுப்பு பதில்வினைக்கு வழிகோலுகிறது. வெண்படலம் மேலும் பாதிக்கப்பட்டு மாறுதல் அடைந்த வெண்படல விளைவியங்களை வெளிவிடுகிறது.  இதனால் வெண்படல திசுவலை முற்றிலுமாக சிதைவடையும் வரை இவ்வினை அதிகமாகி நிலைத்து செயல்புரிகிறது.

மூரன் புண்ணோடு தொடர்புடைய சில நிலைகள்:

 • காரத்தினால் விளையும் காயங்கள்
 • காயம்
 • சிற்றக்கி
 • அக்கி அம்மைத் தொற்று
 • ஒட்டுண்ணி தொற்று
 • கண்புரை அறுவை
 • வெண்படல அறுவை

கடந்த காலங்களில் மூரன் புண்ணோடு தொடர்பு படுத்தப்பட்டவை:

 • ஊட்டச்சத்தின்மை
 • வளர்சிதைமாற்றக் கோளாறுகள்
 • முக்கோண மண்டையோட்டு நரம்பை உள்ளடக்கிய தூண்டல் கோளாறுகள்.
 • உயிர்ச்சத்து B1 குறைபாடு

கல்லீரல் அழற்சி C வைரஸ் தொற்றால் நீடித்த கல்லீரல் அழற்சி கொண்ட நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த தொற்று சிகிச்சையையும் விளைவையும் பாதிப்பதால் இதனை கண்டறிந்து விலக்க வேண்டும்.

பெரும்பாலான நேர்வுகள் நோய்க்காரணம் அறியாதவையே. ஆகையால் இக்கோளாறு விலக்குதல் முறை மூலமாகவே கண்டறியப்படக் கூடும்.

 

வரையறைப்படி முக்கிய மூரன் புண் எந்த ஒரு மண்டலம்சார் கோள்றுடனும் தொடர்புடையதல்ல. இதற்கு ஒரு புறனடையாக சில வேளைகளில் கல்லீரல் அழற்சி C-யுடன் இது தொடர்புடையதாக இருக்கும். இது வெண்படல அழற்சியோடு தொடர்புடையது அல்ல. கோலஜென் குருதிக்குழல் நோய்களுடன் தொடர்புடைய மேலும் பல பொதுவான விளிம்பு வெண்படல அழற்சிப் புண்களில் இருந்து இதனால் இது வேறுபடுத்தப்படுகிறது. இரத்தப்புற்று, தோல்சீழ்ப்புண், மேகம் போன்ற பிற மண்டலம் சார் நோயாளிகளுக்கும் விளிம்புப் புண் வெண்படல அழற்சி உண்டாகலாம். இந்த மரபாக ஏற்படும் நோய்க்காரணம் அறியா ஒரு நோய் வகையின் வகை  I அல்லது வகை  II ஆக வெளிப்படலாம்.

காயம், கண்புரை அறுவை, சிற்றக்கி, அக்கிஅம்மை மற்றும் காரவகை இரசாயனங்களால் ஏற்படும் வேதியல் காயம் போன்ற பிற வகையிலான வெண்படல அழற்சியைத் தொடர்ந்து ஓர் இரண்டாம் நிலை மூரன் புண் போன்ற விளிம்போர வெண்படல புண் அழற்சி உருவாகலாம்.  இவை உண்மையான மூரன் புண்ணாக இனம் காணப்படவில்லை. எனினும் ஒரு மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்ட தன் – விளைவிய நோயியல் நுட்பம் உள்ளடங்கி உள்ளதை இது காட்டுகிறது.

கடும் நோய் அதிகரிப்புள்ள ஒரு சிறு நோயாளிக் குழிவினருக்கு கல்லீரல் அழற்சி C ஊனீர் நேர்மறையாக  உள்ளது.

நோய் வரலாறு, மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆய்வக சோதனையைப் பொறுத்து மூரன் புண் நோய்கண்டறிதல் அமையும். பிற மண்டலம் சார் நோய்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த ஆய்வக சோதனை அவசியம்.

மருத்துவ அம்சங்கள்:

மூரன் புண் அதிகரிக்கும், பிறைவடிவ, விளிம்போர  வெண்படலப் புண் ஆகும். விழித்திரை - வெண்படல சந்திப்பில் இருந்து சிறிதே மையத்தை நோக்கி இருக்கும். இதனோடு சிதைவுற்ற ஒரு தொங்கும் விளிம்பு காணப்படும். முன்னேறிச் செல்லும் விளிம்பில் முன்புற, திசுவலைசார் வெளிர்மஞ்சள் ஊடுறுவி இருப்பது இதன் இயல்பு. பின் அதற்கு மேல் ஒரு புறத்தோல் குறைபாடு உருவாகலாம்.  இந்தப் புண் சுற்று வட்டத்திலும் மையமாகவும் முன்னேறும். முதலில் ஆழ் மற்றும் பின் முன்புற திசு வலையை அதிகரித்துச் செல்லும் திசுவலை சிதைவு பாதிக்கும். திசு வலை சிதைவை அடுத்து, ஒரு மறுபடி மேற்திசு வளர்ச்சியுற்ற, வெண்படல அழற்சியோடு கூடிய, வடுவுற்ற மற்றும் மெலிந்த வெண்படலம் மீதியாக இருக்கும். குறைந்த அளவே திசுவலை கொண்ட நோயாளிகளுக்கு ஒன்றில் தானாகவே அல்லது சிறு காயத்தைத் தொடர்ந்து ஓட்டை ஏற்படக்கூடிய அபாயம் இருக்கும்.

கடும் மூரன் புண்ணால் முழு வெண்படலமும் சுற்றுச் சந்திப்பு திசுக்களும் பாதிக்கப்படலாம். வெண்படலத்தில் ஓட்டை விழக்கூடும். அதனோடு கண்புரை, இரண்டாம்நிலை கண்ணழுத்தம் மற்றும் விழிநடுப்படல அழற்சி ஆகியவை காணப்படும்.

திசுவலைத் திசுக்களின் மையப்பகுதியில் மங்கலான திசுவலைத் திசுவில் கடும் விளிம்போர மெலிதாதலோடு நீடித்த மூரன் புண் இறுதியாக ஏற்படுகிறது. இதில் வெண்படலப் பாதிப்பு இருக்காது. ஆனால் தொடர்புடைய கண்சவ்வு மற்றும் மேல்வெண்படல் அழற்சி இருக்கக் கூடும். புண்னுக்கும் சந்திப்புக்கும் (லிம்பஸ்) இடையில் தெளிவான இடைவெளி இருப்பதில்லை. வடுவுறல் இயல்பானது. இது முறையற்ற வெண்படல சிதறல்பார்வையோடு இயைந்து இருக்கலாம்.

வெண்படல பரப்பியல்:  விளிம்போர ஆழப்படுதலும் கடும் முறையற்ற சிதறல் பார்வையும் காணப்படும்.

வெண்படலப் புண்ணுறல் குறித்து மூன்று வடிவவகைகளை ஸ்ரீநிவாசன் மற்றும் கூட்டாளிகள் (2007) விளக்கினர்:

 • பகுதி விளிம்போரப் புண்ணுறல்: மூக்கு, நெற்றி, மேல், கீழ் சார்புப் புண்கள் என இது மேலும் பகுக்கப்படும். மூக்கு மற்றும் நெற்றிசார் புண்கள் பரவலானவை.
 • முழு விளிம்போரப் புண்ணுறல்: வெண்படல விளிபோரத்தை நோய் முற்றிலும் ஆக்கிரமிக்கும். மைய வெண்படலம் ஒரு தீவு போல விடப்படும். அதில் ஒளிபுகா நிலை உருவாகும்.
 • ஒட்டுமொத்த வெண்படலம் புண்ணுறல்: முழு திசு வலையும் நார்க்குழல் படலத்தால் ஆக்கிரமிக்கப்படும்.

வாட்சன் மற்றும் கூட்டாளிகள் (1997), மருத்துவ அம்சங்களின் அடிப்படையிலும், முன் பகுதி ஒளிர்சாய உட்செலுத்தல் முறையிலும், சிகிச்சைக்கான பலன் அடிப்படையிலும் இந்நோயை மூன்றாக வகைப்படுத்தினர்.

 • ஒரு பக்க மூரன் புண்: இது கடுமையாக வலிதரும் புண். முதியவர்களுக்கு ஏற்படும். பாதிக்கப்பட்ட கண் சிவப்பாக இருக்கும். ஆனால் அழற்சி லிம்பசில் (சந்திப்பு) இருந்து 3 மி.மீ. அப்பால் செல்லாது. புண், கண் கோளத்தை சுற்றி இருக்கும். வெண்படல மையத்தில் ஒளிபுகாமை உருவாகும்.  மைய வெண்படல திசுவலை இதன் விளைவாக அகற்றப்படும். முன் பகுதி ஒளிர்சாய உட்புகுத்தல், மேல் வெண்படலம் மற்றும் கண்சவ்வு இரத்தக் குழாய்களின் சிறுகுழல் அடைப்புடன் படலசந்திப்பில்  சுற்றுவட்டப் பாதிப்பையும் படலசந்திப்பு மற்றும் புண்ணின் அடிப்பகுதியில் இருந்து கசிவும் காணப்படும். மேலும், மேலோட்ட குழல் வலைப்பின்னலின் குழல் ஊடுறுவல் ஒருபக்க மூரன் புண்ணின் தனித்தன்மை ஆகும்.
 • இருபக்க கடும் மூரன் புண்: இளம் நோயாளிகளுக்கு ஏற்படும் இதில் வலி அதிகமாக இருப்பதில்லை. படலசந்திப்பு விளிம்பில் இருந்து 2 மி.மீ. தொலைவில் சாம்பல் திட்டுகள் உருவாகும். இவை பின் இணைந்து தனித்தன்மை வாய்ந்த மூரன் புண்ணாக மாறும். முதலில் சுற்று வட்டமாகவும் பின் மையமாகவும் பரவும். ஒளிர்சாய உட்புகுத்தலில் குழல் கசிவும் புண்ணின் அடிப்பகுதிக்குச் செல்லும் புதுக்குழல் தோற்றமும் காணப்படும். மேல் வெண்படல மாற்றம் மற்றும் அடைப்பும்  படலசந்திப்பு சுற்றுவட்ட சிதைவும் ஏற்படும்.
 • இருபக்க வலியற்ற மூரன் புண்:   சிறிது அழற்சியுடன்  நீர் ஒழுகல் கொண்ட இது  நடுத்தர வயதுடைய நோயாளிகளுக்கு ஏற்படும். இரு கண்களும் பாதிக்கப்பட்டு இருப்பது போல் தோன்றினாலும் நோய் ஒரு கண்ணிலேயே கடுமையாக இருக்கும். பெரும்பாலான நேர்வுகள் மெதுவாக அதிகரிக்கும். ஆனால் சில தானாகவே குணமாகும். குழல் அமைவு இயல்பாக இருக்கும். ஒரு சில புதுக் குழல்கள் புண்ணின் அடிப்பகுதிக்குச்  செல்லும்.

மூரன்புண் மருத்துவ ரீதியாக கண்டறியப் படுவது என்றாலும்   வாட்சனின் வரையறைகள் பொருந்தி வருமானால் அனைத்து சோதனைகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

வாட்சனின் வரையறைகள்:

 • பிறை வடிவ விளிம்போர வெண்படலப் புண்
 • புண்ணின் மைய ஓரத்தில் பரந்துபட்ட சிதைவு
 • முன்னேறிச் செல்லும் விளிம்பில் வெண்படல ஊடுருவிகள்
 • விழிநடுப்படல அழற்சி இல்லாமை
 • கண்டறியக்கூடிய மண்டலம் சார் நோய் இல்லாமை

ஆய்வகச் சோதனையில் அடங்குவன:

இரத்தப்பரிசோதனை:  முழு மற்றும் வகையீட்டு தட்டணு உள்ளடக்கிய  இரத்த அணு கணக்கீடு மற்றும் சிவப்பணு வீழ்படிவு விகிதம் (ESR) ஆகியவை இதில் அடங்கும்.

ஊனீரியல்: வாதகாரணி, எதிருட்கரு எதிர்பொருள், எதிருட்கருசெல் உட்திசு திரவ எதிர்பொருள் அளத்தல், பால்வினை நோய் ஆய்வகச் (VDRL) சோதனை மற்றும் ஒளிர்சாய ட்ரெப்போனிமால் எதிர்பொருள் உறிஞ்சல்  (FTA - ABS) சோதனை  ஆகியவை இதில் அடங்கும்.

மேலும், கல்லீரல் நொதிகள், இரத்த யூரியா நைட்ரஜன், ஊனீர் புரத எலக்ட்ரோபோரசிஸ் மற்றும் சிறுநீர் ஆய்வு போன்ற சில அளவீடுகளும் தேவைப்படலாம்.

நோய்க்கூறியல்:

மூரன்புண் வெண்படலத்தை மூன்று பகுதிகளில் பாதிக்கும்:

 • மேலோட்டமான திசுவலை: மேலோட்ட திசுவலையில் ஊனீர் செல்கள், நிணநீர்செல்கள், சாயச்சார்பற்ற செல்கள், புதுக்குழல் கூறுகள் மற்றும் பாதிப்புற்ற கொலாஜன் மடல் ஆகியவை காணப்படும்.
 • நடுத்திசுவலை:  நடுத்திசுவலையில் நார்த்திசுக்களின் எண்ணிக்கை கூடி இருக்கும்.
 • ஆழ்திசுவலை: ஆழ்திசுவில் முக்கியமாக இரத்தவிழுங்கணுக்கள் ஊடுறுவி இருக்கும். மேற்திசு அடிப்படலம் சிதைவுற்றிருக்கும். ஊடுறுவியின் வளர்விளிம்பு முக்கியமாக சாயச்சார்பற்ற செல்களைக் கொண்டிருக்கும்.

கண்சவ்வு: கண்சவ்வு குறுக்குவெட்டில், கண்சவ்வு திசுவலையில், ஒற்றைக்கரு ஊடுறுவிகள் காணப்படும். இதில் ஊனீர் செல்கள், திசுசெல்கள் மற்றும் அமிலச்சார்பு செல்கள் இருக்கும்.

வெண்படலம் மற்றும் கண்சவ்வு புறத்திசு அடிப்படலத்தில் திசுவில் இருத்தப்பட்ட தானெதிர்பொருட்களும் நிரப்பிகளும் கூட காணப்படுவதாக அறிவிக்கப்படுள்ளன.

வேறுபடுத்திக் கண்டறிதல்:

மூரன் புண் ஓர் அரிதான நோயாகும். கீழ்க்காணுவது போன்ற வெளிப்புற அழற்சி மற்றும் அழற்சியற்ற நோய்களில் இருந்து வேறுபடுத்திக் காணுவதே இதன் நோக்கம்:

 • டெரியன் விளிம்பு சிதைவு: இது ஓர் அழற்சி அற்ற விளிம்பு வெண்படல மெலிதல் கோளாறு. பொதுவாக இருபக்கமானதாகவும் மேற்புறமானதாகவும் இருக்கும். மேல் அல்லது மேலோட்டமான அழற்சி இல்லாத பட்சத்தில்  அதிக வலியோ அல்லது அழற்சியோ இருப்பதைல்லை.  வெண்படல மேற்திசு பாதிப்பின்றி இருக்கும். சுற்றோட்டமாக நோய் மெதுவாகப் பரவும். மைய வெண்படலப் பாதிப்பு இருப்பதில்லை.
 • ஒளிபுகும் விளிம்புச் சிதைவு: இதில் கீழ்ப்புற வெண்படல மெலிதல் ஏற்படும். மேலும் ஒழுங்கற்ற விதிக்குப் புறம்பான சிதறல் பார்வை உருவாகும். ஆனால் மூரன் புண் போல அழற்சியும் வலியும் இருப்பதில்லை.
 • முதுமைப் பள்ளச் சிதைவு: படல சந்திப்புக்கும் வளைவுக்கும் இடையில் முதிய நோயாளிகளுக்கு மெலிதல் உருவாகும். இருப்பினும் அழற்சியோ குழலுருவாதலோ இருப்பதில்லை.
 • புற விளிம்பு வெண்படல அழற்சி:  ஸ்டேபிலோகாக்கல் இமையழற்சியோடு இணைந்தும்  விளிம்பு ஊடுறுவிகளோடும் காணப்படும். இந்த ஊடுறுவி பொதுவாக ஒருபக்கமானது. இதற்கும் படல சந்திப்பிற்கும் இடையில் ஒரு தெளிவான பகுதி இருக்கும். வலி அதிகாமாக இருப்பதில்லை. இதன் போக்கு தீங்கு விளைவிக்காமல் தானகவே குணமாகும் இயல்புடையது.
 • கோலஜன் குருதிக்குழல் நோய்கள்: மண்டலம் சார் செம்முருடு, முடக்கு வாதம், பன்தமனி அழற்சிக் கணுநோய், வேஜ்னர் நுண்குருணையழற்சி போன்ற கோலஜன் குருதிக்குழல் நோய்களோடு விளிம்பு வெண்படல ஊடுறுவிகளும் மூரன் புண் போன்ற புண்களும் அழற்சியும் காணப்படும். முடக்கு வாதத்தோடு தொடர்புடைய தனித்தன்மை வாய்ந்த விளிம்பு பள்ளங்கள் படல சந்திப்பிற்குள் 1 மி.மீட்டரில் காணப்படும். கீழ் வெண்படலப் பகுதியில் இது இருபக்கமாக இருக்கும். இது மேலோட்டமானதாகவும் வளர்ச்சி அடையாமலும் காணப்படும். அல்லது வளர்ந்து மேற்திசு சிதைவு, குறிப்பிடும் அளவுக்கான திசுவலை மெலிவோடு டெசமெட் படலப் பிதுங்கலும் இருக்கும். இறுதியாக துளை ஏற்படும். விளிம்புப் பள்ளங்கள் வெண்படலத்தைச் சுற்றி அமையும்.  அரிதாக எஞ்சி இருக்கும் மைய வெண்படல திசுவலையின் முழு மேற்பகுதியும் அழிந்து மறையும்.

 

மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே நோய்மேலாண்மை செய்ய வேண்டும்.

புண் பரவலை தடுப்பதும் மறு மேற்திசு உருவாக்கத்தை ஊக்குவிப்பதும்தான் சிகிச்சையின் நோக்கம். புண் ஆறிய பின் வலி, ஒளிக்கூச்சம், அழற்சி,  வெண்படல குருதி மிகைப்பு மற்றும் வீக்கம் ஆகியவை குறுகிய காலத்தில் மறைந்து போகும்.

பிரௌவுண் மற்றும் மோண்டினோ (1984) ஒரு படிப்படியான அணுகுமுறையை பரிந்துரைத்தனர். இதில் கோர்ட்டிகோஸ்டிராய்டுகள், வெண்படல அறுவை மற்றும் மண்டலம் சார் சுயதடுப்பு அழுத்திகள் ஆகியவை அடங்கும்.

மருத்துவ சிகிச்சை:

மேல்மருந்தாகக் கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள்: உடனடியாக துளை ஏற்படும் அபாயம் இல்லாத போது தொடக்க கட்டத்தில் கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள் மேல்மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. புண் முழுவதுமாகக் குணமாகிவிட்டால் இதைப் படிப்படியாகக் குறைத்துப் பின் நிறுத்த வேண்டும். இரு பக்கமும் ஒரே நேரத்தில் ஏற்படாத நேர்வுகளில் கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகளைக் கொண்டு தீவிர சிகிச்சை அளிக்கலாம்.  ஆனால் இருபுறமும் ஒரே நேரத்தில் உண்டாகும் நேர்வுகளில் கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகளைக் கொண்டு தீவிர சிகிச்சை அளிக்கக் கூடாது. இந்நோயுடன் மூட்டு வாதம் உடைய நோயாளிகளில் கோர்ட்டிக்கோ ஸ்டிராய்டுகளைக் கொண்டு மிகக் கவனமாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

மூரன் புண் நோயாளிகளுக்கு இரண்டாம் கட்ட நுண்ணுயிர் தொற்றைத் தடுக்க நுண்ணுயிர்க்கொல்லிகளும், பிசிர்த்தசை அமைப்புகளின் பிடிப்புகளால் ஏற்படும் வலியைத் தடுக்க பிசிர்த்தசைவாதத் தடுப்பிகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

 • மண்டலம் சார் தன்னெதிர்ப்புத் தடுப்பிகள்: இருபக்கமாக அதிகரித்துவரும் நோய்க்கும் கண்சவ்வு அறுவையால் புண் முழுமையாக குணமடையாதவருக்கும் மண்டலம் சார் தன்னெதிர்ப்புத் தடுப்பிகள் பயன்படுத்தலாம். ஓரிரு மாதங்களில் குணமடையாவிட்டால் இதை மெதுவாக நிறுத்திவிட வேண்டும். குணம் தெரிந்தால் முழுமையாகக் குணம் அடையும் வரைத் தொடரலாம். இரத்தம் புரதம் மற்றும் இரத்த எண்ணிக்கையைப் பரமரிக்க மருந்தின் அளவு வலிபார்த்து அளிக்கப்படும். பொதுவாக அளிக்கப்படுபவை: ஊக்கமூட்டிடன் அல்லது இல்லாமல் சைக்ளோபாஸ்பாமைட், அசத்தியோபிரைன் மற்றும் மீத்தோடிர்க்சேட். சிலர் மூரன் புண்ணுக்கு மண்டலம் சார் மற்றும் மேல்மருந்தாக சைக்ளோஸ்போரின் A –யை பயன்படுத்துகின்றனர். மேல்பூச்சு சைக்ளோஸ்போரினின் திறன் பகுதிசார் கண் நோய்த்தடுப்பு நோயியல் எதிர்வினையை குறைப்பதில் உள்ளதாகக் கருதப்படுகிறது.

கோலஜென் குழல்நோய்களோடு தொடர்புடைய விளிம்பு வெண்படல புண்களுக்கு மண்டலம்சார் நோயெதிர்ப்பு அழுத்திகளைப் பயன்படுத்தலாம். கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகளை உள்ளடக்கிய மண்டலம் சார் நேயெதிர்ப்பு அழுத்திகள்  வெண்படல அழற்சி புண்ணுறும் வெண்படல அழற்சி ஆகியவற்றிற்கு பலன் தரும். சைட்டோடாக்சிக் மருந்துகள் நீடித்த நன்மை பயக்கும்.

நீடித்த கல்லீரல் அழற்சி C நோயுடையவர்களுக்கு மண்டலம் சார் நேயெதிர்ப்பு அழுத்திகள் எதிர் விளைவை அளிக்கக் கூடுமாதலால் அதை முன்னரே தவிர்த்துவிட வேண்டும்.

 • இண்டர்ஃபெரான் - α2b: மூரன் புண்ணுக்கும் கல்லீரல் அழற்சிக்கும் இடையில் உள்ள ஒரு தொடர்பு அண்மையில் கண்டறிவிக்கப்பட்டது. மரபான சிகிச்சைக்கு குணமடையாத சில இருபக்கப் புண் நேர்வுகள், நீடித்த கல்லீரல் அழற்சி C க்கு இண்டர்ஃபெரான் - α2b யால் சிகிச்சை அளிக்கப்பட்ட போது குணமடைந்தன.
 • ரெப்ட்ரான்: இது ஒரு புதிய சிகிச்சை முறை. இதில் இண்டர்ஃபெரானுடன் எதிர் வைரல்  மருந்தான ரிபாவிரின் சேர்க்கப்படுகிறது.
 • லெசிதினேட்டட் சூப்பராக்சைடு டிஸ்மியூட்டேஸ் மேல்மருந்து: கோர்ட்டிக்கோஸ்டிராய்டு மேல்மருந்து சிகிச்சை தோல்வியுற்ற நோயாளிகளுக்கு இது ஒரு புதிய சோதனை முறை சிகிச்சை.  இதில் லெசிதினேட்டட் சூப்பராக்சைடு டிஸ்மியூட்டேஸ் மேல்மருந்து பயன்படுத்தி மட்டுப்படுத்தப்பட்ட திசு அழிவு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கட்டு தொடு வில்லைகள் அசௌகரியத்தைக் குறைத்து  மேற்திசு குணமடைதலை ஊக்கப்படுத்துகிறது. கண்சாவ்வு சார் ஹெப்பாரின் ஊசியும்  கொலாஜெனேஸ் தடுப்பு மேல்மருந்தும் கூட பயன்படுத்தப்படுகிறது.

அறுவை சிகிச்சை:

 • கண்சவ்வு அறுவை: கோர்ட்டிக்கோஸ்டிராய்டு மேல்மருந்தால் அரைகுறை பலன் அல்லது முற்றிலும் பலன் இல்லாமல் இருக்கும் நோயாளிகளுக்கு  புண்ணிற்கு அடுத்து கண்சவ்வு அறுவை மேற்கொள்ளப்படும். வெண்-வெளிப் படல சந்திப்பில் இருந்து ஏறக்குறைய 3 மி.மீ. அளவுக்கு வெண்படலப் புண்னை அடுத்து இருக்கும் கண்சவ்வு வெட்டி அகற்றப்படும். புண் படுகை மேற்திசுவும், புண்மைய வெண்படலத்தில் 0.2 மி.மீட்டரும் எளிய நீக்கல் முறையில் அகற்றப்படுகிறது.
 • வெப்பசிகிச்சை: பாதிக்கப்பட்ட வெண்படலத்தின் அடுத்திருக்கும் கண்சவ்வுப்பகுதியில் வெப்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. கண்சவ்வு அறுவை போன்ற பலனையே இது அளிக்கிறது.
 • திசுப்பசை (ஐசோபியூட்டைல்-சையனோகிரைலேட்) : வெண்படலத் துளை 1 மி.மீட்டருக்கும் குறைவாக இருந்தால் திசுப்பசை பயன்படுத்தலாம். வெண்படலத் துளை விழுமுன் இட்டால் புண்ணுறுதல் நிற்கும். இப்பசை பாலிமரைஸ் ஆகி நீர் படும்போது கட்டியாகிறது.
 • வெண்படல அறுவை:  வெண்படலத் துளை அளவில் பெரியதாக இருந்தால் ஒட்டு பயன்படாது. அறுவை மேற்கொள்ளப்படும்.

-         ஒட்டிணைப்பு: ஓர் ஓரம் ஒடுங்கிய வெண்படல திசு முதற் கொண்டு விளிம்பை ஊடுறுவும் வெண்படல அறுவை வரை இதில் அடங்கும். குறைபாட்டை நிரப்ப ஒரு சிறு வெண்படல திசு ஒரு புறம் குறுகிய அடைப்பாக ஒட்டப்படுகிறது.  ஓட்டை விழுந்த பகுதியின் விளிம்பு நரம்புப் பொருட்களும் மேற்புறத் திசுக்களும் இன்றி சுத்தம் செய்யப்படுகிறது.

-         பகுதி ஊடுறுவல் வெண்படல அறுவை: விளிம்பில் துளை பெரிதாக இருந்தால் இச்சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

-         ஊடுறுவல் வெண்படல அறுவை: ஊடுறுவல் வெண்படல அறுவையின் மூலம் ஆறிய மூரன் புண் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இதில் சரியான பலன் கிடைப்பதில்லை. நோய் திரும்ப வருதல் மற்றும் நோய் கொடைத் திசுவிலும் பரவல் ஆகியவற்றால் திசு நசிவும் உருதலும் உண்டாகலாம். இதனால் ஊடுறுவல் வெண்படல அறுவை சிக்கல் நிறைந்ததாக மாறுகிறது. ஊடுறுவல் வெண்படல அறுவை, ஒளியூடுறுவா அல்லது வடுவுற்ற வெண்படலம் கொண்ட ஓர் ஆறிய மற்றும் நோயற்ற கண்ணில் பார்வையை சிறிதளவு மீட்கலாம்.

-         பிறைவடிவ வளைய மடல ஒட்டு: துளை விழாத விளிம்பு வெண்படல மெலிதல் உள்ள நேர்வுகளில் அரிதாக இம்முறை பயன்படுத்தப்படுகிறது.

-         மைய மடல் வெண்படல அறுவை: அழற்சியை விரைவாக ஆற்றும் நோக்கத்தோடு நோய்த்தாக்கம் அடைந்ததாகக் கருதப்படும் வெண்படல திசுவலை மைய மடல் வெண்படல அறுவை மூலம் அகற்றப்பட வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

 • பனிக்குடப் படல மாற்று: இது ஒரு மாற்று சிகிச்சை. ஒரு நோய்த்தடுப்பியல் செயல்முறையால் சிதைவுற்ற கண் பரப்பையும் திசுவலையையும் செப்பனிட இச்சிகிச்சை செய்யப்படுகிறது. இதனுடைய சரியான நுட்பம் அறியப்படவில்லை.  இதற்கு எதிரழற்சி மற்றும் எதிர்நோய்த்தடுப்பியல் பண்புகள் உள்ளன என கண்டறியப்பட்டுள்ளன. ஒரு பனிக்குடப் படல அடுக்கு புண்ணால் குறைபாடு கொண்ட பகுதியில் திசுவலையம் கீழப்புறமாக அமையுமாறு வைக்கப்படுகிறது. ஒரு புண்ணால் குறைபாடு கொண்ட திசுவலையத்தில் பல அடுக்கு பனிக்குடப் படல மாற்று சிகிச்சையையும் அளிக்கலாம்.
 • வெண்படல புறத்திசு அறுவை: மறு கண்ணில் ஆரோக்கியமான கொடைத் திசு இல்லாதபோது நிலை புறத்திசு குறைபாட்டுக்கு இச்சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 • கண்சவ்வு மடல்: கண்சவ்வு மடல், சௌகரியத்தை அளிக்கலாம்; கண் அழற்சியைக் குறைக்கும்; அறுவை மற்றும் மருத்துவ சிகிச்சைகள் பலன் அளிக்காதபோது பலன் அளிக்கும்; திசுவலை அழற்சியால் அடிக்கடி புறத்திசு சிதைவடைவதால் உண்டாகும் வலிக்கு நிவாரணம் அளிக்கும். நீண்ட கால உள் நோயாளியாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் இல்லாத பலவீனமான முதியோருக்கு இது குறிப்பாக பயன் அளிக்கும்.

நோய்முன்கணிப்பு:

கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள் மற்றும் கண்சவ்வு அறுவையால் ஒரு பக்க நோய் உடையவர்களுக்கு ஓரளவு சிறந்த பலன் கிடைக்கும்.

இரு பக்க கடும் நோய் கொண்டவர்களுக்கு குணமடைதல் மோசமாகவே இருக்கும். துளை விழிதல் மற்றும் கண் அமைப்பை காத்தால் ஆகியவையே மருத்துவத்தின் முதல் நோக்கம்.

 

சிக்கல்கள் பின்வருமாறு:

 • கருவிழிப்படல அழற்சி
 • இரண்டாம்நிலை கண்ணழுத்தம்
 • கண்புரை
 • வெண்படலத் துளை
 • இறுதிக்கட்ட வெண்படலம் மெலிந்து கண்சவ்வுபோல் ஆகும்.

 • PUBLISHED DATE : Jul 14, 2017
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Jul 14, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.