வெண்படலக் கூம்பல்

வெண்படலக்கூம்பல் ஓர் அழற்சியற்ற நோய். இது இருபக்க வெண்படல நோய் (ஆனால் பொதுவாக சமச்சீரற்றது). படிப்படியாக நோய் முற்றி வெண்படலம் கூம்பு வடிவம் ஆகும்.  கிட்டப்பார்வை மற்றும் முறையற்ற பார்வைச் சிதறலால் பார்வை இழப்பு முதன்மையாக ஏற்படும். வெண்படலம் வடுவுறலால் இரண்டாம் நிலையாகப் பார்வை இழப்பு உருவாகும்.

வெளித்தள்ளிய கூம்பு வடிவ வெண்படலமும், மோசமான பார்வைத் திறனும் கொண்ட ஒரு நோயாளியைப்பற்றி டுடெல் 1729-ல் விவரித்தார்.  இருக்கும் இடத்தையும் வடிவத்தையும் வைத்து ஆரம்பத்தில் வெண்படலக் கூம்பல் விரிவாக வரையறுக்கப்பட்டது. வட்ட அல்லது காம்பு வடிவும், மையத்தில் கூம்பு வடிவ புடைப்பும் கொண்டவை அல்லது தாழ்ந்த பை கொண்ட நீள்வட்டக் கூம்பு ஆகியவை இதில் அடங்கும்.

வெண்படலமானி/பிளாசிடோ வட்டின் உதவியால் மார்க் ஆம்ஸ்லர் வெண்படலக் கூம்பல் நோயாளிகளின் வெண்படல மாற்றங்களை விளக்கினார்.  அவர் இந்நோயின் இரு கட்டங்களை மருத்துவ ரீதியாக வகுத்தார்:

 • உள்ளுறை கட்டம்: பிளாசிடோ வட்டால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.
 • ஆரம்பக் கட்டம்:  ஆரம்பக் கட்டம் இரு வகையாக வகுக்கப்பட்டுள்ளது:

-         வீரியம் குறைந்த வெண்படலக் கூம்பல்: பிளாசிடோ வட்டின் இணை அச்சை 1-4 பாகை விலகலுக்கு உட்படுத்துகிறது.

-         ஆரம்ப அல்லது மித வெண்படலக் கூம்பல்: பிளாசிடோ வட்டின் இணை அச்சை 5-8 பாகை விலகலுக்கு உட்படுத்துகிறது.

பொதுமக்கள் மத்தியில் வெண்படலக் கூம்பல் நோய் அதிக அளவில் உள்ளது. வெண்படல இடவியல் சோதனை மூலம் ஆய்வு செய்தால் இது இன்னும் அதிகமாகும்.  வெண்படல இடவியல் சோதனை ஒரு கணினி மூலம் செய்யப்படும் ஆய்வாகும்.  இது வெண்படலத்தின் முப்பரிமாண பிம்பத்தை உருவாக்குகிறது. ஆண் பெண் வேறுபாடு இன்றி இந்நோய் அனைத்து சமுதாயத்தினரையும் பாதிக்கிறது. பொதுவாக இது கண்ணை மட்டும் பாதிக்கும் நோய். சில வேளைகளில் மண்டலம் சார் நோய்களோடு சேர்ந்தும் காணப்படும்.

இளவேனிற்கால வெண்படலக் கண்சவ்வழற்சி, விழித்திரை நிறமியழற்சி, லெபார் பிறவிக் குருடு, பல இணைப்புத்திசு கோளாறுகள் (ஈலர்-டன்லாஸ் மற்றும் மார்பன் நோய்த்தாக்கங்கள்), இடப்புற இதய அடைப்பிதழ் தொய்வு, மரபுவழி ஒவ்வாமைத் தோலழற்சி, டவுண் நோய்த்தாக்கம் ஆகிய கண்நோய்கள் பொதுவாக இதனுடன் தொடர்புடையதாக இருக்கும்.

மரபுவழி ஒவ்வாமை வரலாறு, குறிப்பாக கண் ஒவ்வாமைகள், விறைப்பான தொடுவில்லை அணிதல், கடுமையாக கண் தேய்ப்பு ஆகியவை குறிப்பான ஆபத்துக் காரணிகள் ஆகும். பெரும்பலான வெண்படல கூம்பல் தானாகவே உருவாகும். சில பிறவியாக வருவதாக இருக்கும்.

பருவ வயதை எட்டும்போது பொதுவாக வெண்படலக் கூம்பல் வெளிப்படும். முப்பது அல்லது நாற்பதுகளில் அதிகரித்து பின் தானாகவே கட்டுப்படும். சில, பின்னர் தொடங்கி எந்த வயதிலும் கட்டுப்படும் அல்லது அதிகரிக்கும்.

குறிப்புகள்:

Agarwal Amar, Agarwal Athiya, Jacob Soosan. Refractive Surgery. Second Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2009. P 19- 24.

U Rajendra Acharya, Ng Eddie YK, Suri Jasjit S. Image Modeling of the Human Eye. AR TECH HOUSE, INC. 2008. P 9- 11.

Khurana A K. Comprehensive Ophthalmology. Sixth Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2015. P 30.

Foster C Stephen, Azar Dimitri T, Dohlman Claes H. Smolin and Thoft’s The CORNEA-Scientific Foundations & Clinical Practice. Lippincot Williams & Wilkins. Fourth Edition. 2005. P 889- 910.

Yanoff Myron, Duker Jay S. Ophthalmology. Third Edition. Mosby Elsevier 2009. P 299- 302.

Wang Ming, Swartz Tracy S. Keratoconus & Keratoectasia - Prevention, Diagnosis, and Treatment. SLACK Incorporated 2010. 

Denniston Alastair K O, Murray Philip I. Oxford Handbook of Ophthalmology. Third Edition. Oxford University Press 2014. P 258- 259.

Eagle Ralph C, Jr. Eye Pathology – An Atlas and Text. Second Edition. Lippincott Williams & Wilkins, a Wolters Kluwer business 2011. P 88.

Wang Ming, Swartz Tracy Schroeder. Irregular Astigmatism – Diagnosis and Treatment. SLACK Incorporated 2008. P 53- 59.

Barbara Adel. Textbook on Keratoconus- New Insights. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2012. 

Copeland Jr Robert A, Afshari Natalie A.Copeland and Afshari’s Principles and Practice of CORNEA Vol.1. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2013. P 819- 834.

Sihota Ramanjit, Tandon Radhika. Parsons’ Diseases of the Eye. Twenty second Edition. Reed Elsevier India Private Limited 2015. P 216- 218.

http://emedicine.medscape.com/article/1194693-overview

http://emedicine.medscape.com/article/1196836-overview#a1

http://eyewiki.org/Keratoconus

http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4762162

http://www.hindawi.com/journals/bmri/2015/795738

Saxena Sandeep. Clinical Ophthalmology: Medical and Surgical Approach. Second Edition. Jaypee- Highlights Medical Publishers, Inc. 2011.P 66- 69.

Nema HV, Nema Nitin. Textbook of Ophthalmology. Fifth Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2008. P 169- 170.

Kalevar V. Clinical Ophthalmology. Ane Books India. 2008. P. 166.

McMahon TT, et al. A new method for grading the severity of keratoconus: the Keratoconus Severity Score (KSS). Cornea. 2006; 25(7): 794- 800.

Rabinowitz YS, Rasheed K. KISA% index: a quantitative videokeratography algorithm embodying minimal topographic criteria for diagnosing keratoconus. J Cataract Refract Surg. 1999; 25(10): 1327- 1335.

Maeda N, Klyce SD, Smolek MK. Automated keratoconus screening with corneal topography analysis. Invest Ophthalmol Vis Sci. 1994; 35(6): 2749- 2757.

Amsler M. Le keratocone fruste au javal. Ophthalmologica 1938; 96: 77- 83 (French).

Duddell B. A treatise of the Diseases of the horny-coat of the eye, and the various kinds of cataract. London: J Clark 1729.

 

அறிகுறிகள் பல திறத்தன. நோயின் கட்டத்தைப் பொறுத்து அமைவன. நோயின் ஆரம்பக் கட்டத்தில் அறிகுறி எதுவும் இருக்காது. நோய் முற்றிய நிலையில் பார்வைக் குறைவும் மங்கலும் காணப்படும்.

 • ஒற்றைக்கண் இரட்டைப்பார்வை
 • மங்கல் பர்வை
 • பார்வைக் கூர்மை குறைதல்
 • பார்வைக் குறைபாடு அதிகரித்தல், கண்ணாடிகளால் சீரமையாது.
 • பார்வைப் புலன் கெடுதல்
 • முரண் உணர்திறன் குறைவு
 • ஒளி ஆதாரங்களை சுற்றி கீற்று அல்லது சிதறல்
 • இரு கண் பார்வை வேறுபடுதல்
 • ஒளிக்கூச்சம்
 • ஒளியச்சம்
 • கண்களைப்பு
 • இரவில் பார்வை குறைதல்
 • அரிப்பு

ஒற்றைக்கண் இரட்டைப்பார்வை, பார்வைக் கூர்மை குறைதல், முரண் உணர்திறன் குறைதல் ஆகியவை மையக் கடினக் கண்புரைபோன்ற பிற கோளாறுகளிலும் காணப்படும்.

வெண்படலக் கூம்பலின் காரணம் தெரியவில்லை.  இது ஒரு தனிக் கோளாறாக இருக்க முடியாது. மாறாக, மரபியல் மற்றும் சூழலியல் சார்ந்த பல காரணங்களின் ஒரு தோற்றவமைப்பு  வெளிப்பாடாக இருக்கலாம்.

வெண்படலக் கூம்பலின் மரபியல் வரன்முறை முழுமையாக வரையறுக்கப்படவில்லை. முன்னர் 90 % நேர்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நேர்பவை என நம்பப்பட்டது. குடும்ப உறுப்பினர்களை மதிப்பிட  வெண்படல காணொளி வரைவி வந்தபின் வாரிசுகள் ஆய்வுக்குட்படுத்தப் படுகின்றனர்.  இந்த ஆய்வுகள் சில குடும்ப உறுப்பினர்களிடம் வெண்படல மாறுதல்கள் தொடர்ந்து ஏற்படுவதைக் காட்டுகின்றன. இது மேலாதிக்கத் தன்னினக்கீற்று மரபியல் வரன்முறையை உணர்த்துகிறது.

வெண்படலக் கூம்பல் பல்வேறு வகையான மண்டலம் சார் மற்றும், கண் சார் நிலைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

மண்டல சார்பு:

 • மரபியல் ஒவ்வாமை (ஓர் ஒவ்வாமை எதிர்வினையை உருவாக்கும் மரபியல் முன் தீர்மானிப்பு): மரபியல் ஒவ்வாமையே வெண்படலக் கூம்பலோடு தொடர்புடைய ஒரு முக்கியமான பரவலான நிலையாகும். இதனை இளவேனிற்கால  வெண்படல கண்சவ்வழற்சியில் காணலாம். மண்டலம் சார் மரபியல் ஒவ்வாமையில் கண் கசக்குதல் வெண்படலக் கூம்பல் உருவாக ஒரு பங்கு வகிக்கிறது.
 • டவுண் நோய்த்தாக்கம் (முந்நிறமி 21):  டவுண் நோய்த்தாக்கத்தில் (முந்நிறமி 21)  கடும் நீர்கோர்ப்பு அதிகமாக நிகழும். ஒருவேளை கண்கசக்குதலால் மற்றும்/அல்லது இந்த நோயாளிகளுக்கு வெண்படல அறுவை போதுமான அளவுக்கு செய்யப்படாததால் நோய் மேலும் வளர அனுமதிக்கப்படுகிறது.
 • ஈலர்ஸ்-தானியோஸ் நோய்த்தாக்கம்
 • மார்பன் நோய்த்தாக்கம்
 • கிரௌசான் நோய்த்தாக்கம்
 • அபெர்ட் நோய்த்தாக்கம்

கண் தொடர்பானவை:

 • லேபர் பிறவிக் குருடு
 • விழித்திரை நிறமி அழற்சி
 • குறைப்பிரசவ விழித்திரைநோய்
 • ஃபியூக் வெண்படல அகத்தோல் தேய்வு
 • பின் பன்வடிவத் தேய்வு

பொது மக்கள் இடையில் அதிக அளவில் இந்நோய் இருப்பதால் சில நோய்களின் தொடர்பு தற்செயலானதாக இருக்கலாம்.

ஆய்வுகள் பல்வேறு நோய்க் காரணிகளைக் காட்டுகின்றன:

 • வெண்படல மேற்திசுவில் நொதிக் கோளாறுகள்: லைசொசோமால் நொதிகள் (கேட்டலேஸ் மற்றும் கேத்தப்சின்) அதிகரிக்கும்போதும் புரோட்டியோலைடிக் நொதிகள் குறையும் போதும் வெண்படல திசுவலை சிதைவடையக்கூடும்.
 • வெண்படல மேற்திசு வெளிப்பாட்டில் வேறுபாடு: மரபியல் வெளிப்பாட்டிலும் புரத வெளிப்பாட்டிலும் வெண்படலக் கூம்பல் மற்றும் கிட்டப்பார்வை உடையவருக்கு இடையில் வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தப்படும் வெண்படல மேற்திசு.
 • மூலக்கூறு குறைபாடு:  இயல்பான வெண்படல மேற்திசு போலல்லாமல் மூலக்கூற்றுக் குறைபாட்டை உண்டாக்கும் நீர்வழிப்புரதம் அக்வாபோரின் 5 , வெண்படலக் கூம்புதலில் இல்லாத அசாதாரண நிலை.
 • ஊண்மச்சிதைவு செயல்பாடுதிசுவலையில் ஊண்மச்சிதைவு நடைபெறும். நொதி தடுப்பிகளின் செயல் குறைவதால் இது நிகழலாம்.
 • வெண்படல் கொலாஜெனில் கோளாறுகளும் அதன் குறுக்கு இணைப்புகளும்:  வெண்படலக் கொலாஜெனில் கோளாறுகளும் அதன் குறுக்கு இணைப்புகளும் வெண்படலக் கூம்பலின் காரணமாக இருக்கலாம்.
 • கண் கசக்குதல்:  கண் கசக்கலுக்கும் திசுவலைச் சிதைவுக்கும் சைட்டோகைன் காரணம் என கூறப்படுகிறது. ஒவ்வாமைத் தோலழற்சி, டவுண் நோய்த்தாக்கம்,  லெபர் பிறவித் திமிரம் ஆகிய நோய்களோடு  காணப்படும் வெண்படலக் கூம்பல்  கடும் கண் கசக்குதலோடு தொடர்புடையதாக இருக்கலாம்.
 • கடின தொடுவில்லை அணிதல்

நோய் உடல்கூறியல்:

வெண்படலத்தின் அனைத்து அடுக்குகளும் வெண்படலக் கூம்பலால் பாதிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. திசுவலை மெலிதல், போமேன் அடுக்கு சிதறுதல், அடி மேற்திசு செல்களில் இரும்பு படிந்து பிளைஷர் வளையம் உருவாதல் ஆகியவை மிகவும் காணப்படும் அம்சங்கள் ஆகும்.  டெசிமெட் படலத்தில் மடிப்புகளும் உடைவுகளும் ஏற்பட்டு நீர்க்கோவையும் கால்வாய்களும் உருவாகி சிதறுண்ட வடுக்களை உண்டாக்குகின்றன.

 

விலகல், வெண்படல அளவியல், வெண்படல இடவரைவு மற்றும் பிளவு-விளக்குப் பரிசோதனை ஆகியவை  வெண்படல நோய்கண்டறிதலுக்கு உதவுகின்றன.

விலகல்: அதிகரிக்கும் கிட்டப்பார்வை மற்றும் ஒழுங்கற்ற சிதறல் பார்வை ஆகியவற்றால் பார்வை மங்குவதாக வெண்படலக் கூம்பல் நோயாளிகள் கூறுவர். கண்ணாடிகளால் நேர் செய்யப் பலமுறை முயன்றும் நிறைவான சீரமைவு ஏற்படுவதில்லை.  கண்ணாடிகளும் மென் தொடுவில்லைகளும் ஆரம்பத்தில் நிறைவான பார்வையை அளிக்கலாம். ஆனால் வரவர பார்வை குறையும். விறைப்பான வாயு ஊடுறுவக்கூடிய  தொடுவில்லைகள் தேவைப்படும்.

வெண்படல அளவியல்: வெண்படலக் கூம்பல் இருந்தால்    அளவியல்  பிம்பம்  செங்குத்தாக, அதிகச் சிதறலுடன், ஒழுங்கற்று , பெரும்பாலும் வட்டமாக இல்லாமல் நீள்வட்டம்  அல்லது முட்டை வடிவில்  காணப்படும்.   47.2 டயோப்டர்கள் அல்லது கூடுதல் அளவு  வெண்படலக் கூம்பல் நோயைக் குறிக்கலாம். சில வெண்படல நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் இருப்பதில்லை.

வெண்படல மேற்பரப்பு வரைவி/கணினி வெண்படலப் பட வரைவி: கண்டறிதலுக்கு இது உதவுகிறது. குறிப்பாக உயிர் நுண்காட்டியல் குறிகளான வோக்ட்  கால்வாய் மற்றும் பிளஷர் வளையம் இல்லாதபோது இது பயனுள்ளதாக இருக்கிறது. இந்த அளவையியலின் மூலம் பல அளவியல் அட்டவணைகள் கிடைக்கின்றன.

மீயொலி வெண்படலக் கன அளவுமானி: பிளவு விளக்கு அல்லது வெண்படலப் படவரைவியின் மூலம் வெண்படலக் கூம்பல் என்ற ஐயம் எழுந்துள்ள நோயாளிகளில் வெண்படல மெலிவை உறுதிப்படுத்த  மீயொலி வெண்படலக் கன அளவுமானி பயனுள்ளதாக இருக்கும். ஆர்ப்ஸ்கேன் வெண்படலப் பரப்புவரைவு அமைப்பு மற்றும் அக்குலஸ் பெண்டாகாம் ஆகிய இரண்டுமே பரப்பு மற்றும் கன அளவு வரைபடங்களை அளிக்கின்றன.  நோய் கண்டறிதலுக்கு இது பயன்படுகிறது.

நோயின் கடுமையையும்,  வெண்படல வடிவத்தையும் அடிப்படையாகக் கொண்டு வெண்படலக் கூம்பல் வகைப்படுத்தப்படுகிறது:

வடிவ-அடிப்படையிலான வகைப்படுத்தல்:

கூம்பு வடிவ வெண்படலம் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது:

 • காம்புக் கூம்புகள்: காம்புக் கூம்புகள் 5 மி.மீ. விட்டம் கொண்டவை. வெண்படலத்தின் மையம் அல்லது மையத்திற்கு சற்று கீழே இவை அமைகின்றன.
 • நீள்வட்டக் கூம்புகள்: விட்டம் பெரிதாக இருக்கும்;  வெண்படலத்தின் மையத்திற்கு  கீழ் மூக்குசார் அல்லது கீழ்நெற்றிசார் நிலையில் இருக்கும்.
 • உருண்டைக் கூம்புகள்: இவை பெரியவை; 75% வெண்படலப் பரப்பை ஆக்கிரமிக்கின்றன; அரிதானவை.

கடுமை அடிப்படையிலான வகைப்படுத்தல்:

I.இலேசான வெண்படலக் கூம்பல்:

புறமானது; வெண்படல நோய்க்குறிகள் பெரும்பாலும்  இருப்பதில்லை அல்லது குறைந்த அளவுக்கு இருக்கும்.

 • கண்ணாடிமூலம் சரிசெய்தல்: ஒரு அல்லது இரு கண்களிலும் பலதடவை கண்ணாடி சீரமைப்பு நிறைவேறாத வரலாறு. மற்றும் அது விலகலின் போது ஒளிபுகா ஒளிச்சிதறலோடு மிதமானதில் இருந்து அதிக அளவு கிட்டப்பார்வையையும் காட்டும்.
 • வெண்படல அளவியல் மதிப்புகள்: முறையற்ற சிதறல்பார்வை வெண்படலமானி மதிப்பீடுகள் நோய்கண்டறிதலோடு நிலையாக இருக்கும் (இயல்பை விட அதிகமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை – ஏறக்குறைய 45 டயோப்டர்கள்).
 • கணினி துணையுடனான வீடியோகெரட்டோகிராபி: இது பின் வருவனவற்றைக் காட்டலாம்:

-         கீழ் வெண்படலம் ஆழப்படுதல் (கூம்புவெண்படல நோயாளிகளின் ஏறக்குறைய 80% பேருக்கு)

-         நடு வெண்படல சிதறல்பார்வை ஆழப்படுதல் (கூம்புவெண்படல நோயாளிகளின் ஏறக்குறைய 15% பேருக்கு)

-         சம இருபக்க நெற்றிசார் ஆழப்படுதல் (மிக அரிது)

 • ஒளியியல் ஒத்திசைவு வெட்டுவரைவு வெண்படலத் தடிப்பு அளவியல் : இதன் மூலம் அச்சிணை வெண்படல மெலிதலை அளவிடலாம்.
 • நோய்கண்டறியும் விறைப்பு தொடு வில்லைகள்: ஒளிர் சோடியச் சாயம் இட்ட பின் தட்டை வெண்படல அளவியல் அளவீடுகளுக்கு சமமாக நோய்கண்டறிதல் விறைப்பு  தொடு வில்லையின் அடிவளைவு  வருமாறு இடும்போது காம்பு வடிவம் கீழுள்ள கண்ணீர்படலத்தில் காணப்படும்.
 • வெண்படல உணர்திறன்:  வெண்படல உணர்திறன் குறையும்.
 • கண்ணீர்ச் சுரப்பு:  கண்ணீர்ச் சுரப்பு குறையும்.

II. மிதமான வெண்படலக்கூம்பல்:

 • விழித்திரை மானி: எதிர்வினைச் சிதைவு: “கத்தரி எதிர்வினை” காணப்படும்.
 • சார்லக்ஸ் குறி: சார்லக்ஸ் எண்ணெய்த் துளி எதிர்வினை, வெண்படல நீட்சியால்  கரும் வட்ட நிழலால் சூழப்பட்ட கூம்பு முனையில் இருந்து உருவாகும் ஒர் பிரகாசமான எதிர்வினை. வெண்படலத்தை கண்பாவை விரிவாக்கத்துக்குப் பின் நேரடித் திறன் சமமான கண்மாணி கொண்டு பார்க்கும்போது சார்லக்ஸ் குறி அல்லது எண்ணெய்த்துளி அடையாளம் காணப்படும்.
 • முன்சான் குறி: கீழ் நோக்கிப் பார்க்கும் போது வெண்படலத்தால் கீழ் இமையில் உருவாக்கப்படும் ‘V’  வடிவ குறியே முன்சான் குறி ஆகும்.
 • ரிசூட்டி குறி: தற்காலிகமாக வெண்படலத்துக்குக் குறுக்காக ஒரு ஒளிக்கற்றையை செலுத்தும்போது மூக்குசார் சந்திப்பில் காணப்படும்  அம்பு வடிவக் குறியே ரிசூட்டி குறி.
 • புலப்படும் வெண்படல நரம்புகள்: வெண்படல நரம்புகள் வெளித்தோன்றல்.
 • வோட் ஸ்ட்ரையே (நுண்னிய அழுத்த வரிகள்): இவை ஆழ் திசு வலையில் காணப்படும். கண் கோளத்தில் அழுத்தம் அளிக்கும் போது  நுண்ணிய அழுத்த வரிகள் தெளிவாகத் தெரியும்.
 • ஃபிளஸ்சர் வளையம்: கூம்புப் புடைப்பின் அடிப்பகுதியில்  வளைய வடிவில் அடி மேற்திசுவில் இரும்புப் படிவு.
 • வெண்படலம் வடுவுறல்:   இது பல நிலைகளில் காணப்படும்:

-         மேலோட்டமான வடு நார்,புகை அல்லது கணு சார்ந்ததாக இருக்கும்

-         ஆழ் திசுவலை வடு ஆறிய சிறு வீக்கத்தைக் குறிக்கலாம்.

-         சிலருக்கு டெசிமெட் படல அளவில் வடு காணப்படும். தோற்றம் ஒரே மாதிரியாக இருக்கும். பின் பன்வடிவ வெண்படலத் தேய்வு காணப்படும். இது பின் பன்வடிவ வெண்படல சிதைவின் வேறு வடிவமாக இருக்கக் கூடும்.

 • வெண்படல அளவியல் மதிப்புகள்: வெண்படல அளவியல் மதிப்பு 45-52 டயோப்டர்கள் ஆகும். தர வெண்படல அளவியலில் எதிரொளித்த பிம்பங்களின் துடிப்பு இருக்கக் கூடும். ஏனெனில், மெலிந்த வெண்படலம் உடனடியாக கண் துடிப்பைப் பரப்புகிறது.

கண்ணழுத்தமானியில் சோதனைப்பொருளின் இத்தகைய துடிப்பும் குறிக்கப்பட வேண்டும்.

 • பார்வை ஒத்திசைவு வரைவியல் தடிமனளவி:  அச்சின் இருபுற (பொதுவாக கண்பாவைக்குக் கீழ்) திசுவலை மெலிதலைக் காட்டும்.

II. வளர்ச்சியுற்ற வெண்படலக் கூம்பு:

 • அதிகரிக்கும் அனைத்து வெண்படலக் குறிகள், அறிகுறிகள் மற்றும் பார்வை இழப்பு/சிதைவு (வோக்ட் வரி, பிளஷர் வளையம் உட்பட மற்றும்/அல்லது வடுவுடன்காணப்படும்).
 • கடும் வெண்படல நீர்க்கட்டி: வெண்படலத்தில்  கடுமையாக மிகைநீர் கோர்ப்பதாலும், டெஸ்மெட் படலம் கடுமையாக கிழிவதால் வெண்படல திசுவலையத்தில் திரவம் திரள்வதாலும்  கடும் வெண்படலக் கட்டிகள் ஏற்படுகின்றன. மேற்புற வெண்படல மேற்திசு வீங்கி திரவம் வெண்படல மேற்திசு வழியாகக் கசியும். கிழிந்த டெஸ்மெட் படலம் தனக்குள் சுருளுகிறது. நாட்பட, உட்செல்கள் பின் திசுவலை குறைபாட்டின் மேல் பரவுகிறது.

வெண்படலக் கூம்பைத் தரவரிசைப் படுத்தல்:

வெண்படல இடவமைவியல் தகவலை பயன்படுத்தி வெண்படலக்கூம்பு வெண்படல வடிவக் காரணிகளை பரிசோதிக்க    பல அளவியல் குறியீடுகள் உள்ளன. பரவலாக அறியப்பட்ட குறியீடுகள்: ரேபினோவிட்ஸ் மற்றும் மேதா மற்றும் க்ளைஸ்.

I.              ரேபினோவிட்ஸ் குறியீடு:  ரேபினோவிட்ஸ், KISA % குறியீட்டை உருவாக்கினார். இது கணினி படவியல் மூலம் கிடைக்கும் முடிவுகளை அளவீடாக மாற்றும் வழிமுறையைத் தருகிறது. கீழ்வருபவற்றைக் KISA % பயன்படுத்துகிறது:

 • வெண்படல, நடு வெண்படல அளவியல் மதிப்பு  (K மதிப்பு), நடு வெண்படலம் கூராதலைக் குறிக்கிறது.
 • கீழ்-மேல் ஒளிவிலகல் சமச்சீரின்மை (I- S) மதிப்பு
 • வெண்படல அளவியல் சிதறல்பார்வை (AST) அட்டவணை: இது SimK1- SimK2 யை அடிப்படையாகக் கொண்டு முறையான வெண்படல சிதறல்பார்வை பாகையை அளவீடு செய்கிறதுகணினிமாதிரி  வெண்படல அளவியல் (SimK) அட்டவணை  தடித்த மற்றும் மிகவும் வளைந்த நடுக்கோடுகளின் விலகல் திறனைப் பற்றிய தகவலை அளிக்கிறது. எண்ணியலில் இது K1 மற்றும் K2 என வெளிப்படுத்தப்படுகிறது. மேலும் இந்த இரண்டு மதிப்புகளுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு (SimK1- SimK2), வெண்படல பார்வைச் சிதறலின் அளவு மதிப்பீட்டை வழங்குகிறது.
 • வளை ஆர அச்சு (SRAX) மதிப்பு:   அதிகமாக வளைந்த மேல் அரை-நடு மற்றும் அதிகமாக வளைந்த கீழ் அரை-நடு அச்சிற்கு இடையில் உள்ள கோணத்தை மிகச் செங்குத்தான ஆர அச்சின் வளைவு அளக்கிறது.

ரேபினோவிட்சின் கண்டறிதல் அடிப்படையில் மூன்று வெண்படல வரைவியலில் இருந்து பெறப்பட்ட குறியீடுகள் உள்ளன. இது அசாதாரண மதிப்பைக் காட்டினால்  மருத்துவர் கூம்புவெண்படல கண்டறிதலை கருதவேண்டும். இந்தக் குறியீடுகளாவன:

 • K மதிப்பு (நடு வெண்படல அளவியல்): வெண்படலக் கூம்பலில் ஏற்படும் வெண்படல நடுப்பகுதிக்  கூராதலை இது அளவீடு செய்கிறது. 47.20 D அல்லது அதற்கு மேல் மதிப்பு இருந்தால் வெண்படலக் கூம்பலைக் குறிக்கிறது.
 • I-S மதிப்பு (கீழ்-மேல் மதிப்பு): வெண்படலக் கூம்பலில் உருவாகும் கீழ் எதிர் மேல் வெண்படல விலகல் சமச்சீரின்மையை இது அளவீடு செய்கிறதுஒரு நேர்மரை மதிப்பு மிகைக் கீழ் ளைவையும் ஒரு எதிர்மறை மதிப்பு மிகை மேல் ளைவையும் சுட்டிக்காட்டும். வெண்படலக் கூம்பல் ஐயத்துக்கு  I-S மதிப்பு, 1.4D மற்றும் 1.8D –க்கு இடையில் இருப்பது வெட்டலகுப் புள்ளி என வரையறுக்கப்படுகிறது.  I-S மதிப்பு 1.8D –க்கு மேல் இருந்தால் மருத்துவ ரீதியான வெண்படலக் கூம்பலுக்கு வெட்டலகுப் புள்ளி என வரையறுக்கப்படுகிறது.
 • KISA% , K, I-S மதிப்புகள், SRAX மற்றும் ASTஆகியவற்றை ஓர் அளவுடன் உள்ளடக்கி, முறையான மற்றும் முறையற்ற சிதறல்பார்வையை ஓர் அட்டவணையாக அளவீடு செய்கிறது. இந்த அட்டவணை மிகு உணர்திறன் கொண்டது. அசாதாரண வெண்படலக் கூம்பலில் இருந்து இயல்பு வெண்படலத்தைப்  பிரித்துக் காட்டுகிறது. 100% மேல் உள்ளது வெண்படலக் கூம்பலை சுட்டிக்காட்டும். 60-100 % ஐயத்தை உணர்த்தும்.

II.மேதா மற்றும் கிளய்ஸ் கணினி வல்லுநர் திட்டம்:  வெண்படல வரைபடம் மற்றும் இரட்டை முடிவு மரப்படத்தில் இருந்து எட்டு குறிப்பிகளை எடுத்து அமைத்த நீள் பண்புகாட்டி மதிபீட்டை அடிப்படையாகக் கொண்டு மேதா மற்றும் கிளைஸ் ஒரு கணினி வல்லுநர் திட்டத்தை வகுத்தனர். இத்திட்டம் இடவியல் வரைபடத்தில், வெண்படலக் கூம்பல் கடுமைக்கான ஒரு அளவீட்டளவிலான சதவிகித மதிப்பீட்டெண்ணை ஒதுக்குகிறது. இது வெண்படலக் கூம்பல் குறியீடு % (KCI%)எனப்படும். இந்த KSS மதிபீட்டெண் கீழ்வருவனவற்றைப் பயன்படுத்தும்:

II.மெக்மாகன் மற்றும் உடன்பணியாளர் வெண்படலக்கூம்பல் கடுமை மதிப்பீட்டெண்  (KSS): வெண்படலக் கூம்பலின் கடுமையைத் தரவரிசைப் படுத்த, மெக்மாகன் மற்றும் உடன்பணியாளர், வெண்படலக் கூம்பல் இணைந்த நீள்வெட்டு மதிப்பீட்டு (CLEK) ஆய்வால்,  வெண்படலக் கூம்பல் கடுமை மதிப்பீட்டெண்  (KSS) என்ற ஒரு முறையை பரிந்துரைத்தனர். இந்த மதிப்பீட்டெண் பயன்படுத்துவது:

 • மருத்துவக் குறிகள் (வோக்ட் வரி, ஃபிளஷர் வளையம், வெண்படல வடு)
 • இரு வெண்படல வரைவியல் குறியீடுகள் (சராசரி வெண்படலத் திறன் மற்றும் மேல் வரிசைப் பிறழ்ச்சிக்கு சராசரி வர்க்க மூலப் (RMS) பிழை.
 • 1-5  தர அமைப்பை உருவாக்க வரைவியலின்  மானிட (Manual) விளக்கம்.

KSS மதிப்பீட்டெண்ணின் நன்மைகள்:

 • சிறந்த மறுபடி வழங்கல் தன்மை
 • ஒரு வரைவியலாருக்கு மட்டுப்படுத்தப்படவில்லை
 • KISA% போல் அல்லாமல், இது நோய் இருப்பு அல்லது இல்லாமையை இன்ங்காணுவதை விட வெண்படலக் கூம்பலின் கடுமையை தரவரிசைப்படுத்துகிறது.

திசுநோயியல்:

வெண்படலக் கூம்பலால் வெண்படலத்தின் அனைத்து அடுக்குகளும் பாதிக்கப் படுகின்றன. வெண்படலக் கூம்பலில், முறையற்ற மேற்திசு, போமான் அடுக்கில் உடைப்பு, மேற்திசுவுக்கு அப்பால் விரிவடையும் பிளவுகளில் நார்க்கட்டி உருவாதல் ஆகியவை காணப்படும்.  அடி வெண்படல மேற்திசு செல்களில் இரும்பு படிவதே ஃபிளஷர் வளையத்தின் தனித்தன்மை ஆகும். நீர்க்கட்டியுடன், டெசமெட் அடுக்கில் உடைப்புகளையும், இயல்பாக இருக்கும் டெசமெட் படலம் உள்நோக்கி வளைதலையும் காணலாம். டெசமெட் படலக் கிழிதலுடன் உட்திசு செல் இழப்பையும் சில ஆய்வுகள் அறிவிக்கின்றன.

மின்னணு நுண்காட்டியியல்: வெண்படலத்தில் ஒரு சில அடுக்குகளே இருப்பதைக் காட்டுகிறது. அடுக்கில் காணப்படும் கோலஜென் நுண்நார் தடித்து, இழைகளுக்கு இடையில் வெளி அதிகரித்து இருக்கும்.

வேறுபடுத்திக் காணும் கண்டறிதல்:

வேறு பல தளர்வு அல்லது மெலிதல் கோளாறுகளில் இருந்து வெண்படலக் கூம்பலை வேறுபடுத்திக் காண வேண்டும்:

 • ஒழுங்கற்ற விளிம்புச் சிதைவு
 • டெரியன் விளிம்புச் சிதைவு
 • வெண்படலப் பிதுங்கல்
 • காயத்துக்குப் பின் வெண்படலத் தளர்வு
 • புண்ணால் வெண்படலம் மெலிந்து வெளித்தள்ளுதல்

பொதுவாக பிளவு விளக்கு அல்லது வெண்படல வரைவியல் மூலம் வேறுபாடு உய்த்துணரப்படும்.

மருத்துவ கண்காணிப்பின் கீழ் நோய் மேலாண்மை செய்ய வேண்டும்.

மருத்துவ சிகிச்சை:

 • கண்ணாடி மூலம் சரிசெய்தல்:  ஆரம்பக் கட்டத்தில் கிட்டப்பார்வையால் ஏற்படும் சிதறல் பார்வை கண்ணாடி மூலம் சீர் செய்ய முயற்சி செய்யப்படும். ஆரம்பக் கட்ட நோய் உள்ளவர்களுக்குக் கண்ணாடி சிறந்த பலன் கொடுக்கும். முறையற்ற சிதறல் பார்வையினால் கண்ணாடியின் பலன் மட்டுப்படும். பின் தொடுவில்லை தேவைப்படும்.
 • திட வாயு-ஊடுறுவும் (RGP) தொடு வில்லைகள்: கண்ணாடி போதுமானதாக இல்லை என்னும் போது திட வாயு ஊடுறுவக்கூடிய தொடுவில்லைகளே முதல் கட்டமாகப் பயன்படுத்தப்படும். முதுகுசவாரி வில்லைகள், தூயநீர்க்களிம வில்லைகள், பன்வளைவுத் தொடுவில்லைகள் ஆகியவையே பயன்படுத்தப்படும் பிற வகை தொடுவில்லைகள் ஆகும். தொடு வில்லைகள் அணியத் தொடங்கும் போது, உறுத்தல், ஒவ்வாமை (எ-டு: மாக்காம்புக்கட்டி கண்சவ்வழற்சி), வெண்படல அரிப்பு, புதுக்குழல் தோன்றல்,  ஆகியவை ஏற்பட்டு முற்றிலுமாகப்  பொறுக்க முடியாத நிலை ஏற்படலாம். தொடு வில்லைகள் அதிக அளவு பயன் உள்ளவைகளாக இருந்தாலும் வெண்படல வடு ஏற்படும் அபாயம் உள்ளது.

அறுவை சிகிச்சை:

தொடுவில்லைகளால் பலன் இல்லாத போது அறுவை சிகிச்சைக்குச் செல்லலாம்:

தொடுவில்லைகள் தோல்வியுறக் காரணம்:

 • பார்வைக்கூர்மை பற்றாக்குறை
 • வில்லை சகிப்பு பற்றாக்குறை
 • அடிக்கடி வில்லை மாற்றுதல்
 • விளிம்பு மெலிதாதல்

அறுவை முறைகள்:

 • வெண்படல அறுவை: இதுவே வழக்கமான அறுவை  முறை. இந்த சிகிச்சைக்குப் பின் வெண்படலக் கூம்பல் ஏற்படுவது அரிது. திரும்ப வருவதற்கான காரணங்கள்:

-         அறுவையின் போது கூம்பு சரிவர அகற்றப்படாமை

-         வெண்படல கொடையில் கூம்பு கண்டறியப்படாமை

-         பெறுபவரில் செல் செயல்பாடுகள் கொடை பெற்ற வெண்படலப் பொருளில் மாற்றம் விளைவித்தல்.

படல வெண்படல அறுவை: அறுவை நுட்பத்தில் சிக்கல் இருப்பதாலும், பார்வைக் குறைவு ஏற்பட வாய்ப்பு  இருப்பதாலும் இம்முறை பலனளிக்கக் கூடியதாக இருந்தாலும் விரும்பப்படுவதில்லை.

புறவெண்படல அறுவை: இது வெற்றி அளிப்பதேயானாலும் பார்வை சம்பந்தமாக சிறந்த விளைவுகளை அளிப்பது இல்லை என்பதால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

ஊடுறுவும் வெண்படல அறுவை: இதுவே பரவலாகக் கடைபிடிக்கப்படும் முறை. அறுவையின் போது வழங்குநர்/பெறுநர் அளவு வேறுபாட்டைக் குறைத்தால் அறுவைக்குப்  பின்னான கிட்டப்பார்வை குறையும். வெண்படல ஒட்டு ஏற்கப்படாமை, கண்ணழுத்தம், புரை உருவாதல், ஒத்தப்பார்வையின்மை, சிதறல்பார்வை மற்றும் தொற்று ஆகிய சிக்கல்களில் அடங்கும்.

ஆழ்முன்னடுக்கு வெண்படல அறுவை (DALK): ஊடுறுவும் அறுவைக்கு மாற்றாக இது முன்மொழியப் பட்டது. சமீபத்திய அறுவை சிகிச்சை முன்னேற்றங்கள் இம்முறையில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.  முக்கிய சாதகங்கள் வருமாறு:

 • அமைப்பு மாறாமல் இருத்தல்
 • ஒட்டு நிரகரிப்பு ஆபத்துக் குறைவு

பெரும் குமிழ் உத்தி, போன்ற புதிய உத்திகள் அறுவை கால அளவைக் குறைத்துள்ளன; அறுவை முறை பாதுகாப்பு மேம்பட்டுள்ளது; ஊடுறுவும் அறுவை போன்றே சிறந்த பார்வைத் திறனை அளிக்கிறது. ஒட்டு-பெறுநர் இடைமுகத் தெளிவின்மை, டெஸ்மெட் படலத் துளை மற்றும் திசுவலை ஒதுக்கம் ஆகியவையே இம்முறையின் சிக்கல்கள் ஆகும்.

 • உள்வெண்படல வளையப் பகுதி: வெண்படல வடு இல்லாத நோயாளிகளில் கிட்டப்பார்வையையும் சிதறல் பார்வையையும்  குறைப்பதிலும், கண்ணாடியால் சரிசெய்யும் பார்வைக் கூர்மையை மேம்படுத்துவதிலும் இவை சில வெற்றிகளைத் தந்தன.  INTACS  என்பவை அகத்திசுவலை வளையப் பகுதிகள்; இவை இயந்திர ரீதியாக அல்லது ஃபெம்டோசெகண்ட் லேசர்  மூலமாக வெண்படல விளிம்பில் வைக்கப்படுகின்றன;
 • இணைந்த ரிபோஃபிளேவின் – கேளா ஒலி வகை A கதிர்கள் (UVA) கோலஜன் குறுக்கு-இணைப்பு: உயிர்ச்சத்து B2-வை UVA-யுடன் இணைத்து வெண்படல திசுவலை ஒளியியல் பன்பகுதிச்சேர்க்கை செய்யப்படுகிறது. இந்தச் செயல் முறையால் வெண்படல கோலஜன் விறைப்பு பெற்று மேலும் தளர்வடையாமல் காக்கப்படுகிறது.

நோய்முன்கணிப்பு:

பெரும்பாலான நோயாளிகளில் முதலில் முன்னேறிச் சென்றாலும் வெண்படலக் கூம்பல் சில காலங்களில் நிலையாகிறது. விறைப்பு தொடு வில்லை மூலம் பல நோயாளிகள் சமாளித்துக் கொள்ளுகின்றனர்.

தொடுவில்லை மூலம் பலன் கிட்டவில்லை என்றால் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

பெரும்பாலும் வெண்படலக் கூம்பல் நோயாளிகள் முற்றிலுமாகப் பார்வையை இழந்து போவதில்லை.

 

வெண்படலக் கூம்பல் நோயின் சிக்கல்களாவன:

 • கடும் வெண்படல நீர்க்கட்டி: வளர்ச்சியுற்ற வெண்படலக் கூம்பல் கடும் வெண்படல நீர்க்கட்டியாக மாறுவதில்லை. டெசிமேட் படலம் உடைந்து வெண்படல வீக்கம் ஏற்படுவதே இதற்குக் காரணம்.
 • இரண்டாம் கட்ட வெண்படல வடுவுறல்.

 • வெண்படலக் கூம்பலைத் தடுக்க நோயாளிகள் கண்களைத் தேய்க்காமல் இருக்க வேண்டும்.

 • PUBLISHED DATE : Oct 23, 2017
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Oct 23, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.