வெள்ளெழுத்து என்பது படிப்படியான, வயதுடன் சம்பந்தப்பட்ட இணக்கவீச்சு (accommodative amplitude) இழப்பாகும். இது வாழ்வின் ஆரம்பக் கட்டத்திலேயே தொடங்கும். 50 வயதுகளில் முழுப்பார்வை இழப்பு ஏற்படும். பிரஸ்பயோப்பியா (presbyopia) என்ற சொல் இரு கிரேக்கச் சொற்களில் இருந்து உருவானது: பிரஸ்பஸ் (presbus =முதியவர்) மற்றும் ஆப்ஸ் (ops= கண்).
இணக்கம் என்பது கண்ணின் குவியப் புள்ளி, தொலைவில் இருந்து அருகில் உள்ள பொருளில் குவிவதற்கு அனுமதிக்கும் கண்ணின் ஒளித்திறனின் ஓர் இயங்கும், ஒளியியல் மாற்றம். கண்ணின் ஒளியியல் அமைப்பின் விலகல் திறனை அதிகரிக்க வைக்கும் ஆற்றலே இணக்கம். அருகில் உள்ள பொருட்களின் தெளிவான பிம்பத்தை உருவாக்க அது ஏற்படுகிறது. இணக்கம் ஏற்படுத்துவதற்காகப் பிசிர்ப்பொருட்கள் சுருங்குகின்றன; வில்லை நுண்மண்டலங்கள் தளர்வடைகின்றன; படிக வில்லை அதிகக் கோள வடிவை அடைகிறது; இதனால் விலகல் திறன் அதிகரிக்கிறது. வெள்ளெழுத்தைத் தவிர இணக்கத்தைப் பாதிக்கும் வேறு கோளாறுகள் மிக அரிதே. காரணம் எதுவாக இருந்தாலும், அது அருகில் உள்ள பொருட்களுக்கு மங்கல் தோற்றத்தை அளிக்கிறது; மேலும் நீண்ட நேரம் கண் அருகில் நோக்கி வேலை செய்யும் போது பாதிப்பு அடைகிறது.
இணக்கம் அற்ற ஒரு விலகல் பிழை இல்லாத கண்ணில், கண்ணின் ஒளியியல் முடிவிலியில் (கண்ணில் இருந்து 6 மீட்டர்கள்) அல்லது அதற்கும் அப்பால் இருக்கும் தூரப் பொருட்கள் விழித்திரையில் குவிகின்றன. கண்ணுக்கு மிக அருகில் இருக்கும் ஒரு பொருளின் தெளிவான பிம்பத்தை விழித்திரையில் பெற கண் இணக்கம் அடைகிறது. கிட்டப்பார்வை கொண்ட கண்கள் ஒளி ஆற்றலுக்கு அதிக தூரமாய் இருப்பதால், ஒளியியல் முடிவிலியில் இருக்கும் பொருளின் கூர்மையாக குவிக்கப்படும் பிம்பத்தைப் பெற முடிவதில்லை. கிட்டப்பார்வைக் கண்கள் கண்ணுக்கு அருகில் இருக்கும் பொருளை ஒளியியல் முடிவிலியில் இருக்கும் பொருளைவிடத் தெளிவாக குவியச் செய்யும். மாறாக, தூரப்பார்வை கொண்ட இளம் வயதினர், ஒளியியல் முடிவிலியில் உள்ள பொருளை ஒளி ஆற்றலில் இணக்கத்தை அதிகரிப்பதின் மூலம் தெளிவாகக் குவிக்க முடியும். ஆனால் அவர்களின் இணக்க வீச்சு தூரப்பார்வையின் அளவை விட அதிகமாக இருக்க வேண்டும்.
இணக்கத்துக்கான ஒளியியல் தேவைகள்: இணக்கத்தின் போது படிக வில்லையின் ஒளியியல் திறன் அதிகரிக்கிறது (அதாவது வில்லையின் குவிய தூரம் குறைகிறது). இதன் விளைவாக, கண் குவிதலை தூரத்தில் இருந்து அருகாமைக்கு மாற்றுகிறது, இதனால் அண்மைப் பொருளின் பிம்பம் விழித்திரையில் விழுகிறது. விழித்திறனில் ஏற்படும் டயோப்ட்ரிக் மாற்றம் இணக்கத்தை வரையறுக்கிறது. மேலும் இணக்கம் டயோப்டர் அலகால் அளக்கப்படுகிறது (D). ஒரு டயோப்டர் என்பது மீட்டரின் தலைகீழ்; ஒளிதிரும்பல் அளவீடு. ஒரு புள்ளி பிம்பத்தை நோக்கி ஒளிக்கதிர்கள் குவிதல் நேர் திரும்பல் எனப்படும். ஒளியியல் முடிவிலியில் இருக்கும் ஒரு பொருள் விழிவெண்படலத்தில் சுழி திரும்பலை எதிரமைக்கிறது. வெண்படலமும் படிக வில்லையும் ஒளியை விழித்திரையில் குவிக்க நேர் திரும்பலை சேர்க்கின்றன. ஒளியியல் முடிவிலியில் இருக்கும் ஒரு பொருளில் இருந்து கண்னுக்கு முன் 1.0 மீட்டரில் இருக்கும் ஒரு பொருளுக்கு கண் இணக்கம் அடைந்தால் அது 2 D இணக்கம். இவ்வாறு, இணக்க பதில்வினை என்பது ஒளியியல் முடிவில் இருக்கும் ஒரு பொருளில் இருந்து ஓர் அண்மைப் பொருளுக்குக் குவிதலை மாற்றுவதற்கு கண் உள்ளாகும் ஒளியியல் திறன் அதிகரிப்பு ஆகும்.
கண்ணின் இணக்கப் பொறியமைப்பில் பிசிர்த் தசை, பிசிர்ப் பொருள், விழிநடுப்படலம், முன்பின் மண்டலம்சார் நார்கள், விழிவில்லை உறை மற்றும் விழிவில்லைகள் அடங்கும்.
வெள்ளெழுத்து வயது சார்ந்தது என்றாலும் உலகெங்கிலும் இதற்கான வயது நிலை வேறுபடுகிறது. எடுத்துக்காட்டாக, நிலநடுக்கோட்டுக்கு அருகில் வாழும் மக்களுக்கு வெள்ளெழுத்து விரைவில் ஏற்படுகிறது. இந்தியாவில் 37 வயதில் வெள்ளெழுத்து ஏற்படுகிறது. இருப்பிடத்தை விட சுற்றுப்புற வெப்பநிலையே முக்கிய மாறி என ஆய்வுகள் கூறுகின்றன. சுற்றுப்புற வெப்பநிலை அதிகமாக இருந்தால் வெள்ளெழுத்து விரைவில் ஏற்படும்.
அண்மை இணக்கப் புள்ளி வாசிப்பதற்கு அல்லது அண்மைப் பணிகளுக்கு ஏற்ப இணக்கம் அடைய கடினமாக அல்லது முடியாமல் இருக்கும் போது வெள்ளெழுத்து ஏற்படுகிறது. இணக்க வீச்சு 5 டயோடர்களுக்கும் (20 செ.மீ.அண்மை இணக்கப் புள்ளிக்கு ஒத்ததாக) குறைவாக இருக்கும் போது பலருக்கு அண்மைப்பணி கடினமாக இருக்கும்.
வெள்ளெழுத்து ஆரம்பித்துவிட்டால் அது படிப்படியாக 10-12 ஆண்டுகள் அதிகரித்துப் பின் நிலையாக இருக்கும். 40 வயதின் ஆரம்ப கட்டத்தில் பொதுவாக வெள்ளெழுத்துக்கு +1.00 D வாசிப்புக்கான அதிகரிப்பு தேவைப்படும். 55 வயதில் இதுவே + 2.50 D க்கு நிகராகும்.
குறிப்புகள்
Yanoff Myron, Duker Jay S. Ophthalmology Third Edition. Mosby Elsevier 2009. P 1059- 1060.
Yanoff Myron, Duker Jay S. Ophthalmology Third Edition. Mosby Elsevier 2009. P 107- 117.
Levin Leonard A, Albert Daniel M. Ocular Disease: Mechanisms and Management. Saunders Elsevier 2010.
http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1444-0938.2008.00256.x/full
http://emedicine.medscape.com/article/1219573-overview#a1
Helmholtz von HH. Handbuch der Physiologishen Optik Third Edition Vol 1, Menasha, Wisconsin: The Optical Society of America, 1909.
Schachar RA. Cause and treatment of presbyopia with a method for increasing the amplitude of accommodation. Ann Ophthalmol 1992; 24: 445- 452.
Schachar RA, Huang T, Huang X. Mathematic proof of Schachar’s hypothesis of accommodation. Annals of Ophthalmology 1993; 25(1): 5- 9.
Mukherjee PK. Ophthalmic Assistant. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2013. P 85- 86.
எட்டப்பார்வை உள்ளவர்கள் இருப்பில் இருக்கும் தங்கள் இணக்கத்திறனில் ஒரு பகுதியை தொலைவில் குவிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு முதிரா வெள்ளெழுத்து இருக்கலாம். குறைந்த அளவிலான கிட்டப்பார்வை இதற்கு மாறாக வெள்ளெழுத்து அறிகுறிகளின் தாமதமான தொடக்கமாக இருக்கக் கூடும்.
பெரும்பாலான இணக்கக் கோளாறுகள் இருகண் சார்ந்தவை. ஆகவே. ஒரு நோயாளிக்கு எட்டப்பார்வைதெளிவு சீரமைக்கப்பட்டிருந்தால் அண்மை மங்கல் பார்வை இரு கண்களிலும் ஒன்றுபோல் இருக்க வேண்டும். ஒருபக்க இணக்கக் கோளாறு இருந்தால் அது நரம்புட்கருவடி மூன்றாம் நரம்பு, பிசிர் நரம்புமுடிச்சு (அடிஸ் நோய்த்தாக்கம்) அல்லது விளைவாக்கி பிசிர்ப்பொருளையே (மருந்தியல் தசைச்செயலிழப்பு அல்லது இணக்க வாதம்) சார்ந்த்தாக இருக்கும்.
இணக்கக் கோளாறுகள் காட்டும் அறிகுறிகள்:
போதுமான வெளிச்சம் இன்மை, மோசமான முரண்நிலை ஆகியவற்றின் போது அறிகுறிகள் தீவிரமாகும். நாள் முடிவில் மிக அதிகமாகும்.
இளம் கண் வில்லையின் ஒளியியல் திறனில் மாற்றங்களைக் கொண்டு வர இணக்க அமைப்பை அனுமதிக்கும் ஆற்றலின் நுண்ணிய சமநிலை இழப்பால் வெள்ளெழுத்து ஏற்படுகிறது.
வயது ஆக ஆக கண் இணக்கம் அடைவதற்கு அல்லது தன் குவியத்தை மாற்றிக்கொள்வதற்கான திறன் குறைகிறது.
இணக்கத்திற்கான நரம்பியல் வழித்தடம்:
இணக்கம், குவிதல் மற்றும் பாவைமிகை இறுக்கத்துடன் தொடர்புடையது. இவை இணக்க எதிர்வினை என்ற முச்செயலை உருவாக்குகின்றன.
இணக்கதிற்கான நரம்பியல் வழித்தடம் எடிஞ்சர்-வெஸ்ட்பாலின் வால் பகுதி அல்லது நடுமூளையில் மூன்றாம் நரம்பு சார்பரிவுணர்வு உட்கருவில் ஒருவேளை தோன்றலாம். இப்பகுதிகள் பெருமூளைப்புறணி மற்றும் முன் நடுமூளைக் கூரையில் இருந்து உள்ளீடுகளைப் பெறுகின்றன. மூன்றாம் நரம்பு உட்கருவில் இருந்துவரும் நார்கள், பின்னர் பிசிர் நரம்பு முடிச்சுக்கு சென்று, அங்கு பிசிர்ப்பொருளுக்குச் செல்லும் சார்பரிவுணர்வு நார்களுடனும் பாவை சுருக்குத்தசையுடனும் இணைகின்றன. பின்னர் குறுகிய பிசிர் நரம்புகள் வழியாக அவை கண்களின் உட்தசைகளை அடைகின்றன.
சார்பரிவுணர்வுக் கட்டுப்பாடு என்பது மருத்துவ ரீதியாக மிக முக்கியமானது ஆகும். இருப்பினும், பிசிர்ப் பொருளும் பரிவுணர்வு உள்ளீடுகளைப் பெறுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. பரிவுணர்வு செல்தடம் வழியாகவே பெரும்பாலும் இணக்கம் உருவாக்கப்படுவதால், அது மஸ்காரின் ஏற்பி தடுப்பியால் (ஒரு வகையான அசெட்டைல்கோலின் ஏற்பிகள்) வெற்றிகரமாக எதிரிடையாக்கப்படுகிறது. மஸ்காரின் எதிர்ப்பிகளோடு, இணக்க வாதம் எப்போதும் பாவை விரிதலோடு தொடர்புடையதாக உள்ளது.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் மஸ்காரின் எதிர்ப்பிகள்:
ஹோமாடிராபின், ஸ்கோப்போலேமின் (ஹயோசின்) மற்றும் அட்ரோபைன் ஆகியவை பொதுவாக மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும்.
இணக்கத்தின் பொதுவான அளவுமட்டங்கள் பெரிய அளவில் வேறுபடும். வயதுக்கு ஏற்ப இணக்கத் திறன் குறைகிறது. குழந்தைகளுக்கு இணக்கத் திறன் அதிகம். 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வெள்ளெழுத்து இருப்பது அரிதே.
இணக்கப் பொறிநுட்பம்:
இணக்கப் பொறிநுட்பம் பற்றிய விளக்கத்தை 1855 ஆம் ஆண்டு ஹெல்ம்ஹோல்ட்ஸ் அளித்தார். இணக்கமற்ற இளம் கண் தொலை நோக்கி குவியும் போது பிசிர் தசை தொய்வுறுகிறது. விழிவில்லை மையத்தைச் சுற்றி நுழைவுற்றிருக்கும் முன் மண்டல நார்களின் மீதான நிலை இழுவிசை, வில்லையை ஒப்பீட்டளவில் தட்டையாக மற்றும் இணக்கமற்ற நிலையில் வைத்திருக்க ஒரு வெளிப்புறம் நோக்கிய இழுவிசையை செலுத்துகிறது. அண்மைக் குவியத்திற்கு, பிசிர்தசை சுருங்கி, பிசிர்ப்பொருளின் உட்புற மேற்பகுதி முன் நகர்ந்து கண்ணின் அச்சை நோக்கிச் செல்லுகிறது. இது பிசிர் தசையின் பின் இணைப்பை இழுத்து விழிவில்லை மையத்தைச் சுற்றி இருக்கும் அனைத்து மண்டல நார்களின் மீதும் நிலை இழுவிசையை செலுத்துகிறது. விழிவில்லை உறை பின்னர் உட்குவிந்து வில்லை இணக்கம் பெறுவதற்கான விசையை அளிக்கிறது. விழிவில்லையின் முன் பரப்பு வளைவு மற்றும் குறைந்த அளவுக்குப் பின் பரப்பு வளைவு அதிகரிப்பில் இருந்து விழிவில்லையின் ஒளியியல் திறனில் இருந்து இணக்க அதிகரிப்பு வருகிறது.
இணக்க முயற்சி முடிவடைந்த உடன், பிசிர் தசைகள் தளர்கிறது; மேலும், விழிநடுப்படலத்தின் பின் இணைப்பின் நெகிழ்விசை பிசிர் தசைகளை அதன் தட்டையான இணக்கமற்ற நிலைக்கு மீண்டும் இழுக்கிறது. பிசிர்ப்பொருளின் மேற்பகுதியின் புறம்நோக்கிய நகர்வு மீண்டும் ஒருமுறை வில்லையின் நடுப்பகுதியைச் சுற்றி இருக்கும் முன் மண்டல நார்களின் இழுவிசையை கூட்டி உறை வழியாக வில்லையை இழுத்து தட்டையான இணக்கமற்ற வடிவத்துக்குக் கொண்டு வருகிறது.
இணக்க பொறிநுட்பத்தின் மாற்றுக் கொள்கை:
சாச்சார் (1993), வரன்முறையான ஹெல்ம்ஹோல்ட்சின் கொள்கைக்கு முரண்பட்டு, இளம் வயதினரில் இணக்கத்தின் போது மண்டல இழுவிசை அதிகரிக்கிறது என்ற கொள்கையை முன்மொழிந்தார். அடிப்படையான கருதுகோள்களாவன:
வெள்ளெழுத்தை உருவாக்கும் கண் மாற்றங்கள்
வெள்ளெழுத்தை உருவாக்கும் கண் மாற்றங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன:
அண்மைப் பார்வைக் குறைவின் பிற காரணங்கள்:
வெள்ளெழுத்தை நேரடியாகவே கண்டறியலாம். நோயாளியின் வயது பெரும் அளவில் கருதத்தக்கது. நன்கு ஒளியூட்டப்பட்ட தர வரிசையிலான வரிகளை ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருந்து வாசித்தலின் மூலம் அண்மைப் பார்வையின் அளவையும் பொருத்தமான விலகல் திறனையும் தீர்மானிக்கலாம்.
இணக்க வீச்சைக் கொண்டு இணக்கத்தைத் தீர்மானிக்கலாம்.
ஒருகண் இணக்க வீச்சை கீழ்க்காணும் முறைகளில் அளக்கலாம்:
தானியங்கி விலகல்பிழைமானிகள் கொண்டு கணக்கியல் மற்றும் இயங்கியல் படி இணக்கத்தின் துல்லியமான புறநிலை அளவீடுகள் செய்யப்படுகின்றன. இயங்கு ஒளிமானிகள் இணக்க பதில்வினையின் ஒரு நிகழ்நேர வரைபட உருக்காட்சியை வழங்குகிறது. நிகழும் நேரத்திற்கு ஏற்ப எவ்வளவு தூரம் இணக்க பதில்வினை வேறுபடும் என்பதையும் இவை குறிப்பிட்டு காட்டும். கண்ணின் இணக்க வீச்சின் உணமை அளவீட்டைப் புறநிலை முறைகள் வழங்கும்.
மஸ்காரின் எதிர்ப்பிகளை (உ-ம். பிலோகார்ப்பின்) வெளிப்புறமாகப் பூசுவதின் மூலமும் இணக்கம் தூண்டப்படக்கூடும். விலகல்மானியைக் கொண்டு உச்ச இணக்க பதில்வினையை அடையும் வரை இணக்க பதில்வினையை 30-45 நிமிட காலவரையறையில் அளக்க முடியும்.
இணக்க எல்லையை மதிப்பிடல்:
வேறுபடுத்திக் கண்டறிதல்:
வெள்ளெழுத்துக்கான மிகவும் பரவலான காரணம் இணக்க செயலிழப்பு ஆகும்.
இணக்கக் குறைபாடு உள்ள பிற நிலைகளில் இருந்து வெள்ளெழுத்தை வேறுபடுத்திக் காணவேண்டும்.
வெள்ளெழுத்தைப் போலல்லாமல் இணக்க அதிகரிப்பும் அரிதாகக் காணப்படலாம்:
மருத்துவக் கண்காணிப்பின் கீழ் நோய்மேலாண்மை செய்யப்பட வேண்டும்.
கண் அமைப்பு தொலைதூரப் பார்வைக்கு சீராக இருக்க விலகல் பிழைகள் சரியாக நீக்கப்பட்டு தொலைப்புள்ளி முடிவிலியில் வைக்கப்பட வேண்டும்.
மருத்துவ சிகிச்சை
இருகுவிய அல்லது வாசிப்புக் கண்ணாடியாகக் கூட்டல் வில்லைகள் பயன்படுத்தப்படுகின்றன. அண்மைப் பார்வைக்கு மிகைத் திருத்தம் செய்யப்படுவதே கூட்டல் கண்ணாடிகள் கொண்டு வாசிப்புக்குச் சேர்க்கையின் பெரும்பாலான பிரச்சினைகள் உண்டாகின்றன.
தொலைப்பார்வை சரிசெய்தல் மற்றும் தகுந்த திறனை அறிய சோதனை சட்டங்கள் பயன்படுத்துதல் ஆகியவை நல்ல பலனை அளிக்கும்.
அறுவை சிகிச்சையின் மூலம் வெள்ளெழுத்து மேலாண்மை:
இயற்கையான இணக்கத்தில் இணக்க மற்றும் போலி இணக்கக் கூறுகள் இருக்கும். இணக்கத்தை (அதாவது மெய் ஒளியியல் திறன் மாற்றம்) அருகில் உள்ளதைத் தெளிவாகப் பார்க்கும் திறனில் இருந்து வேறுபடுத்திக் காண வேண்டும். இருகுவிய அல்லது பன்குவிய ஆழம் (உ-ம். பயன்படு அண்மைப் பார்வையின் வேறுபடும் விகிதத்தை அளிக்கும்). இத்தகையப் பார்வை போலி-இணக்கம் என அழைக்கப்படும்.
கண்புரை அறுவைக்குப் பின் விழிவில்லைக்குப் பதிலாக பன்குவிய வில்லை சிகிச்சையின் போது பொருத்தப்படுகிறது. விழிவில்லை நல்ல நிலையில் இருந்தால் அதைப் பாதுகாக்கும் வகையில் வெள்ளெழுத்துக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
சில நவீன பன்குவிய உட்கண் வில்லைகள் விலகல் மற்றும் சிதறல் கொள்கைகளின் சேர்க்கையைப் பயன்படுத்துகின்றன.
நோய்முன்கணிப்பு:
கூட்டல் திறன் கண்ணாடிகளே கண் களைப்பு கொண்ட பெரும்பாலான நோயாளிகளின் வாசித்தலுக்கு போதுமானவை. நோயாளிகள் அறுபது வயதை எட்டும் வரை கூட்டல் திறன் அதிகரிக்கப்பட வேண்டும். பின் அது நிலைத்தன்மை அடையும்.