கண் ஒட்டு எதிர் ஏற்புத்திசு நோய் (GVHD)

மாற்றின குருதியுற்பத்தி முதல்நிலை செல் மாற்று (HSCT) சிகிச்சையின் ஒரு சிக்கலே கண் ஒட்டு எதிர் ஏற்புத்திசு நோய் ஆகும். ஏற்பு மற்றும் வழங்கல் செல்களுக்கு இடையில் இணக்கமின்மையால், வழங்கல் செல்களினால் ஏற்பு திசுக்களுக்கு எதிராக  ஒரு நோயெதிர்ப்பு பதில்வினை நிகழ்கிறது. குருதியியல், நோயெதிர்ப்பியல், வளர்சிதைமாற்றவியல் மற்றும் புதுத்திசுவளர்ச்சியியல் நோய்களுக்கான ஒரு பொது சிகிச்சையே குருதியுற்பத்தி முதல்நிலை செல் மாற்றுசிகிச்சை. குருதியுற்பத்தி முதல்நிலை செல் மாற்றுசிகிச்சை, கண் ஒட்டு எதிர் ஏற்புத்திசு நோயால் மட்டுப்படுத்தப்படுகிறது. மாற்றின குருதியுற்பத்தி முதல்நிலை செல் மாற்று சிகிச்சையைத் தொடர்ந்து நோய்கள் ஏற்பட இதுவே முக்கிய காரணம். மானிட  வெள்ளணு விளைவிய (HLA) உருவாக்கிகளே நோயெதிர்ப்பு பதில்வினையைத் தூண்டி கண் ஒட்டு எதிர் ஏற்புத்திசு நோய்க்கு வழிகோலும் மிக முக்கிய காரணிகள் ஆகும்.

எலும்பு மச்சை மாற்றுசிகிச்சை (BMT) என்ற சொல்லுக்குள் அடக்கப்பட்டாலும், மாற்றுசிகிச்சையின் வகை வழங்கல் செல்களின் மூலாதாரத்தைப் பொறுத்தே அமைகிறது. மூலாதாரத்தில்  ஒரேநபர், ஒரேயினம் அல்லது மாற்றினம் அடங்கும். எலும்பு மச்சையில் இருந்து மட்டுமல்லாமல், சுற்றோட்ட இரத்தம் மற்றும் நச்சுக்கொடி இரத்தத்தில் இருந்தும் வழங்கல் செல்களை அறுவடை செய்ய முடியும்.

கண் ஒட்டு எதிர் ஏற்புத்திசு நோய் ஏற்புதிசுவுக்கு எதிரான வழங்கல் (ஒட்டு) செல்லின் நோயெதிர்ப்பு பதில்வினை ஆகும். இதன் விளைவாக உறுப்பு மண்டலங்களுக்கு எதிராக ஒரு நோயெதிர்ப்பு தாக்குதல் ஏற்படுகிறது.

வழங்கல் செல்களால் பொதுவாக குறிவைக்கப்படும் திசுக்களில் அடங்குவன:

 • இரைப்பைக்குடல் மண்டலம்
 • கல்லீரல்
 • தோல்
 • வாய்
 • நுரையீரல்
 • கண்கள்

மரபாக, நோய் உருவான நேரத்தின் அடிப்படையில், கண் ஒட்டு எதிர் ஏற்புதிசு நோய் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டு வருகிறது:

 • கடுமையானது
 • நீடித்தது

மாற்றின குருதியுற்பத்தி முதல்நிலை செல் மாற்று (HSCT) சிகிச்சைக்குப் பின் முதல் நூறு நாட்களில் கடும் கண் ஒட்டு எதிர் ஏற்புத்திசு நோய் ஏற்படும். நீடித்த கண் ஒட்டு எதிர் ஏற்புத்திசு நோய் அதற்குப்பின் உருவாகும். கண் பிரச்சினைகள் பெரும்பாலும் நீடித்த கண் ஒட்டு எதிர் ஏற்புத்திசு நோயோடு தொடர்புடையவை.

மச்சையழுத்தக் காலகட்டத்தில் (வேதியல் அல்லது கதிர்வீச்சு சிகிச்சையால் எலும்பு மச்சையில் உள்ள செல்களைக் கொல்லுதல் மச்சையழுத்தம் எனப்படும்) கடும் மற்றும் நீடித்த நோய்களுக்கு இடையில் இருக்கும் நூறுநாட்கள் பிரிவு உண்மையென நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், மச்சை அழுத்தம்  அற்ற  மாற்றின குருதியுற்பத்தி முதல்நிலை செல் மாற்று (HSCT) சிகிச்சை மற்றும் தீவிரம் குறைக்கப்பட்ட நிலை ஆகியவை கடும் கண் ஒட்டு எதிர் ஏற்புத்திசு நோய் உருவாவதில் இரண்டு மாத தாமதத்தோடு தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது.  அதே சமயத்தில்  கடும் மற்றும் நீடித்த கண் ஒட்டு எதிர் ஏற்புதிசு நோய் ஒரே நேரத்தில் சிகிச்சை பெற்ற நோயாளிகளில், எடுத்துக்காட்டாக நிணசெல் உட்புகல் கொண்டவர்களிடம், கண்டறியப்பட்டுள்ளது. இங்ஙனம், தற்போதைய கருத்தொற்றுமையின்படி, கண் ஒட்டு எதிர் ஏற்புத்திசு நோயை, கடும் மற்றும் நீடித்த வகைகளாக தீர்மானிப்பது  மாற்று சிகிச்சைக்குப் பின் அறிகுறிகள் தோன்றும் நேரம் அல்ல; முக்கியமாக மருத்துவ வெளிப்பாடே என கருதப்படுகிறது.

கீழ்வருவனவற்றைப் பொறுத்து கண் ஒட்டு எதிர் ஏற்புத்திசு நோய் பரவல் அமைகிறது:

 • வயது
 • வழங்கல் செல் இணக்கம்
 • நோய் முன்தடுப்பு நடவடிக்கைகள்
 • ஏற்புத்திசு சூழல்

குறிப்புகள்:

http://eyewiki.aao.org/Ocular_Graft_Versus_Host_Disease

http://emedicine.medscape.com/article/429037-overview

http://www.aao.org/eyenet/article/ocular-graftvshost-disease-downside-of-success-2

http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3770225

http://www.bostonsight.org/PROSE-treatment/Conditions-PROSE-Treats/Graft-vs-Host-Disease-GVHD

http://bjo.bmj.com/content/early/2016/06/06/bjophthalmol-2015-307666.abstract

Holland Edward J, Mannis Mark J, Lee W Barry. Ocular Surface Disease: Cornea, Conjunctiva and Tear Film. Elsevier Saunders 2013. P 179- 182.

Vogelsang Georgia B, Pavletic Steven Z. Chronic Graft Versus Host Disease: Interdisciplinary Management. Cambridge University Press 2009. P 199- 206.

Yanoff Myron, Duker Jay S. Ophthalmology Third Edition. Mosby Elsevier 2009. P 235- 236.

Atkinson Kerry, Champlin Richard, Ritz Jerome, Fibbe Willem E, Ljungman Per, Brenner Malcom K. Clinical Bone Marrow And Blood Stem Cell Transplantation Third Edition. Cambridge University Press 2004. P 1553- 1559.

Benitez-del-Castillo Jose M, Lemp Michael A. Ocula Surface disorders. JP Medical Publishers 2013. P 117- 124.

Hoffman Ronald, Benj Edward J Jr.,Silberstein Leslie E, Heslop Helen, Weitz Jeffrey, Anastasi John. Hematology- Basic Principles And Practice Sixth Edition. Elsevier Saunders 2013. P 1592- 1611.e11.

Heymer Berno. Clinical and Diagnostic Pathology of Graft-Versus-Host Disease. Springer- Verlag Berlin Heidelberg 2002.

Hoyt Creig S, Taylor David. Pediatric Ophthalmology and Strabismus Fourth Edition. Elsevier Saunders 2013. P 120- 122.

Filipovich AH, Weisdorf D, Pavletic S, et al. Diagnosis and scoring of chronic graft-versus-host disease. NIH consensus development conference on criteria for clinical trials in chronic graft-versus-host disease: Diagnosis and Staging. Working group report. Biol Blood Marrow Transplant 2005; 11: 945- 956.

Jabs DA, Wingard J, Green WR, et al. The eye in bone marrow transplantation. III. Conjunctival graft-versus-host disease. Arch Ophthalmol. 1989; 107: 1343- 1348.

Kiang E, Tesavibul N, Yee R, et al. The use of topical cyclosporine A in ocular graft-versus-host disease. Bone Marrow Transplant 1998; 22: 147- 151.

Robinson MR, Lee SS, Rubin BI, et al. Topical corticosteroid therapy for cicatricial conjunctivitis associated with chronic graft-versus-host disease. Bone Marrow Transplant 2004; 33: 1031- 1035.

McGuirk JP, Weiss ML. Promising cellular therapeutics for prevention or management of graft-versus-host disease (a review). Placenta 2011; 32: S304- S310.

Westeneng AC,Hettinga Y, Lokhorst H, et al. Ocular graft-versus-host disease after allogeneic stem cell transplantation. Cornea 2010; 29: 758- 763.

Holler E. Risk assessment in haematopoietic stem cell transplantation: GvHD prevention and treatment. Best pract Res Clin Haematol 2007; 20: 281- 294.

Agomo E, Tan A, Champlin R, et al. Role of ocular surface disease index (OSDI) in chronic ocular graft vs. Host disease (OGVHD). Invest Ophthalmol Vis Sci 2008; 49S: 2369.

Chang-Strepka J. Videokeratoscopic indices in chronic ocular graft versus host disease (OGVHD). Invest Ophthalmol Vis Sci 2009; 50S: 2610.

 

கண் வெளிப்பாடுகள் வெகுவாக வேறுபடுகிறது.

நோயாளிக்கு காணப்படும் கண்சார் அறிகுறிகள்:

 • உலர்தல்
 • உறுத்தல்
 • ஒளிக்கூச்சம்
 • மங்கல் பார்வை
 • சிவப்பு
 • சீழ்க் கசிவு

கடும் நோய்க்கான அறிகுறிகள்:

 • கண்சவ்வு வீக்கம் அல்லது விழிச்சவ்வு வீக்கம்
 • போலிப் படலம் உருவாதல்
 • வெண்படலத் தொற்று

தீவிர வெளிப்பாடுகளில் அடங்குவன:

 • வெண்படலப் புண்
 • வெண்படல ஓட்டை
 • நிரந்தர பார்வையிழப்புக்கான சாத்தியக் கூறு

கண் ஒட்டு எதிர் ஏற்புத்திசு நோய் உருவாவதோடு தொடர்புடைய நிறுவப்பட்ட ஆபத்துக் காரணிகள்:

 • வழங்குநர் மற்றும் ஏற்குநருக்கு இடையில் இருக்கும் மானிட வெள்ளணு விளைவியப் பொருத்தம் இன்மை.
 • பாலின மாறுபாடு எ.டு. ஆண் வழங்குநர் பெண் பெறுநர்க்கு மற்றும் பெண் ஆணுக்கு.
 • முதல்நிலை  செல்லின் ஆதாரநிலை
 • எடுக்கப்பட்ட தடுப்பு மருந்து அல்லது கட்டுப்பாட்டு சிகிச்சைகள்
 • வழங்குநர் மற்றும் பெறுநரின் அதிக வயது
 • கடும் கண் ஒட்டு எதிர் ஏற்புத்திசு நோய் வரலாறு (நீடித்த நோய் இருக்கும்பட்சத்தில்)

உகந்த மானிட வெள்ளணு விளைவிய மாற்று பெற்றவர்களுக்கும் கண் ஒட்டு எதிர் ஏற்புத்திசு நோய் காணப்படலாம். இதற்கு முக்கிய காரணம் செயலாற்றல் பெற்ற சிறு திசுவிணக்க விளவியங்கள் ஆகும். இவை வகைப்படுத்தப் பட்டபோது கணக்கில் கொள்ளாமல் விடுபட்டுப் போனவை.

உடல்நோயியல்:

கண் ஒட்டு எதிர் ஏற்புத்திசு நோயில் நோயெதிர்ப்பு பதில்வினை வழங்கல் T-நிணநீர்செல்கள் ஏற்புத்திசுக்களுக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு காரணமான செல்கள், கடும் GVHD-யில் T-உதவும் வகை 1 செல்களும், நீடித்த நோயில் T-உதவும் வகை  2 செல்களும்  ஆகும்.

நீடித்த GVHD-க்குப் பின்னிருக்கும் அமைஉத்தி தெளிவாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. பல் உறுப்பு மண்டலங்களில் தன்- விளைவியங்களுக்கு சகிப்புத்தன்மை குறைவதும்  அழற்சி எதிர்வினைகளும் காணப்படுகின்றன.

GVHD-யில் கண்சவ்வழற்சியை ஒரு பகுதிசார் கண் எதிர்வினையாகக் கானமுடிகிறது. இருப்பினும் அமைஉத்தியைப் புரிந்துகொள்ள இயலவில்லை. கண்சவ்வுச் சார்  நோயெதிர்ப்பு உருவாக்கும் அழற்சியில் T செல்களின் பெருக்கம் இருப்பதை பாய்தல் செல் அளவியல் சுட்டிக்காட்டியுள்ளது. நிணநீர் செல் கழிவு வெளியேற்றம் மற்றும் மாற்றணுசூழ்தல், தடிமனான செல்கள், மேற்திசு செல் நசிவு, சார் மேற்திசு நுண்-கொப்புளம் உருவாகுதல் மற்றும் விளைவாக கண்சவ்வின் முழு மேற்திசுவும்  பிரிதல் ஆகியவற்றை GVHD  நோயாளிகளில் திசுவியல் காட்டுகிறது.மேற்திசு தேய்வும் குடுவை செல் சிதைவும் கூட அறிவிக்கப்படுகிறது.

GVHD-யில் வழங்குநர் நிணநீர்செல்கள் கண்ணீர் சுரப்பியை ஊடுறுவி பரவலாக நார்ப்பெருக்கத்துக்கும் கண்ணீர் குறைபாட்டுக்கும் வழிகோலும்.

பெரயோடிக் அமில  ஸ்கிஃப்- சுரப்பிக்குழி மற்றும் நுண்நாளங்களில் நேர்மறைப் பொருள் திரட்சி, நாளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும்  T-செல் ஊடுறுவல், திசுவலை நார்செல்களின் எண்ணிக்கைக் கூடுதலும் செயலூக்கமும் மற்றும் மிகை புறசெல் திசுக்கூழ் நார்ப்பெருக்கம் ஆகியவற்றை நீடித்த GVHD மற்றும் உலர் கண் நோய்த்தாக்கம் (DES) வெளிபடுத்தும்.  நீடித்தத் தோல் GVHD பொதுமைப்படுத்தப்பட்ட விழிவெளியுறை-தோல் படையுடன் மாற்றம் அடைவது போல் சுரப்பி நுண் இடை வெளியின் துலங்கித் தோன்றும் நார்ப்பெருக்கம் காணப்படுகிறது. GVHD நோயாளிகளில் கண்ணீர்ச் சுரப்பி ஆய்வு, சுரத்தல் தொய்வையும் குழலுக்குள் மேற்திசு செல் சிதைவுகளையும் காட்டுகிறது. நோயெதிர்ப்புத் திசுவேதியியல் ஆய்வுகள் முதன்மையாக CD4 (வகைப்படுத்தும் தொகுதி 4) மற்றும்  CD8 T-செல் ஊடுறுவலை நீடித்த GVHD நோயாளியின் கண்ணீர்ச்சுரப்பியின் நாளச்சுற்றுப் பகுதியில் காட்டுகின்றன.

மெய்போமியன் சுரப்பிச் செயலிழப்பு (MGD), GVHD கொண்ட நோயாளிகளில் உலர் கண் அறிகுறிகளுக்கு வழிகோலும். மெய்போமியன் சுரப்பிகள் கண்ணீர் படலத்தின் லிப்பிட் கூறை சுரக்கிறது.

 

கண் GVHD-ஐ மருத்துவ ரீதியாகக் கண்டறிய நோயாளியின் முழுமையான நோய் வரலாறு மற்றும் கண் பரிசோதனை தேவை. மண்டலம் சார் GVHD மற்றும் உட்கொள்ளப்பட்ட மருந்துகள் ஆகியவை நோய் வரலாற்றில் அடங்கும்.

கண்ணைப் பாதிக்கும் தன்தடுப்பு மற்றும் கோலெஜென் குழல் நோய்கள் ஆகியவற்றின் வெளிப்பாட்டைப் போலவே கண் GVHD-யின் மருத்துவ வெளிப்பாடு இருக்கலாம். ஆனால் GVHD பின் அறையை பொதுவாக பாதிப்பதில்லை (மிக அரிது).

கண் GVHD நோயாளிகளில் 60-90 % நீடித்த GVHD யால் பாதிக்கப்படுகின்றனர். இது மண்டலம் சார் GVHD-யின் ஆரம்பக்கட்டமாக இருக்கலாம். கண் பாதிப்பு பெரிய அளவில் வேறுபடும்.  இலேசான பாதிப்பில் இருந்து கடுமையான பாதிப்பு வரை இருக்கும்.  இமை, கண்ணீர்ச் சுரப்பி,  கண்சவ்வு, கண்ணீர்ப்படலம், வெண்படலம், விழிவில்லை, கண்நீர்மம், விழித்திரை மற்றும் கண் நரம்பு ஆகியவற்றைப் பாதிக்கக்கூடும்.

கண்பரப்பு மற்றும் கண்ணீர்ச்சுரப்பி நோய்களே பொதுவாகக் காணப்படுபவை.

HSCT சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் பார்வைக் கூர்மையையும் தரமான வாழ்க்கையையும் பேண கண் GVHDயை தகுந்த முறையில் கண்டறிந்து மேலாண்மை அளிக்க வேண்டும்.

உலர்கண் நோய்த்தாக்கம் அல்லது  கண்சவ்வுவெண்படல அழற்சி 70% GVHD நோயாளிகளுக்கு உள்ளது.

உலர்தல், அரிப்பு, மங்கல் பார்வை, ஒளிக்கூச்சம், சிவப்பு மற்றும் சீழ்க் கசிவுடன் பின் வரும் குறிகளும் காணப்படலாம்:

 • உலர்கண் அம்சங்கள்
 • கண்ணீர்ச்சுரப்பி செயலிழப்பு
 • கண்ணீர் முனை தானே மூடல் (SLPO)
 • வடு கண்ணிமைத் துருத்தல்
 • வடு இமையுட் பிறழ்ச்சி
 • இமைமயிர் உட்சுருளல்
 • மெய்போமியன் சுரப்பிச் செயலிழப்பு
 • கண்சவ்வழற்சி மற்றும் நார்ப்பெருக்கம்
 • வடு இமைமூடாமை
 • கிருமியற்ற கண்சவ்வழற்சி
 • கண்சவ்வு வீக்கம்
 • போலிப்படலம் உருவாதல்
 • விழிப்பள்ள வெண்படல நோய்
 • வெண்படல மேற்திசு அரிப்பு
 • வெண்படலத் தொற்று
 • நீடித்த இழை வெண்படல நோய்
 • வெண்படல வடு
 • சுண்ண வெண்படலச் சிதைவு
 • வெண்படலப் புண்
 • வெண்படலத் துளை
 • கருவிழிப்படல அழற்சி
 • கருவிழி ஒட்டல்
 • விழித்திரைக் குழல் அழற்சி
 • விழித்திரைக் குருதிக் கசிவு
 • கண் நரம்புநோய்

வகைப்படுத்தல்:

பன் வகைப்படுத்தல் அமைப்பு கண் GVHD யை வகைப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

கண் GVHD யில் கண்சவ்வுப் பாதிப்பிற்கு ஒரு மருத்துவக் கட்ட அமைப்பை 1989 ஆம் ஆண்டு ஜேப்ஸும் பிறரும் முன்மொழிந்தனர்.

கண் GVHD  யில் கண்சவ்வழற்சிக்கு  மருத்தவக் கட்ட அமைப்பு (ஜேப்ஸும் பிறரும், 1989):

 • கட்டம் I: குருதிமிகைப்பு
 • கட்டம் II: குருதிமிகைப்புடன் கண்சவ்வு வீக்கம் மற்றும்/அல்லது ஊனீர்க்குருதிக் கசிவு
 • கட்டம் III: போலிப்படல/படலக் கண்சவ்வழற்சி
 • கட்டம் IV: வெண்படல மேற்திசு உரிதலுடன் போலிப்படல/படலக் கண்சவ்வழற்சி

கண் GVHD யின் கட்டங்கள் (கியாங் மற்றும் பிறர், 1998):

 • கட்டம் 1 அல்லது மருத்துவ அறிகுறிகள் அற்ற கட்டம்: கண்ணீர் வடிதல், இலேசான குறிப்பிட்டு சொல்ல முடியாத சிரமம் மற்றும் ஒளிக்கூச்சம். இலேசான கண்சவ்வு வீக்கம்; ரோஸ் பெங்கால் சாயமேறும் சாத்தியக் கூறு. பிற அறிகுறிகள் தோன்றும் முன் ஒரு மாதம் வரை இது நீடிக்கும், அல்லது நோயாளி இன்னும் கடுமையான கண் GVHD வடிவத்துக்கு முன்னேறும் வரை நீடிக்கும்.
 • கட்டம் 2 அல்லது செயல் கட்டம்: சளி-சீழ் கண்சவ்வழற்சி. போலிப்படல கண்சவ்வழற்சி, புள்ளிவெண்படல அழற்சி அல்லது வெண்படல சிராய்ப்புகள். பொதுவாக நோயாளிகளுக்கு மண்டலம் சார் GVHD வெளிப்பாடு காணப்படும்.
 • கட்டம் 3 அல்லது குணமடையும் கட்டம்: இரண்டாம்நிலை உலர்தல், மெய்போமியன் துளை அடைப்புடன் ஒழுங்கற்ற இமை விளிம்பு, இமைவிளிம்புத் தகடு அல்லது முகட்டில் வடுவுறல், மற்றும் புள்ளி வெண்படல  மேற்திசு நோய்.
 • கட்டம் 4 அல்லது சிதைவுறும் கட்டம்: வெண்படல நசிவு அல்லது வெண்படலம் ஓட்டையாகும் சாத்தியக் கூறு.

2004-ல் ஒரு மாற்று வகைப்படுத்தல் அமைப்பு ராபின்சன் மற்றும் பிறரால் முன்மொழியப்பட்டது.  இந்த அமைப்பில், கண்சவ்வு GVHD-க்கு மருத்துவ ரீதியான தரப்படுத்தும் திட்ட அளவைகள், நீடித்த GVHD நோயாளிகளில் கவனிக்கப்பட்ட கண்சவ்வு நோயியலை அடிப்படையாகக் கொண்டது.

கண்சவ்வு GVHD-க்கு மருத்துவ ரீதியான தரப்படுத்தும் திட்ட அளவைகள் (ராபின்சன் மற்றும் பிறர், 2004)

 • தரம் 1: குறைந்தபட்சம் ஓர் இமையில் குமிழ் அல்லது இமை சார் கண்சவ்வில் கண்சவ்வு குருதிமிகைப்பு ஏற்படுகிறது.
 • தரம் 2: கண் சவ்வு மேற்திசு உரிதலோடும் அல்லது இல்லாமலும்,  குறைந்தபட்சம்  ஓர் இமையில் மொத்தப் பரப்பில் <25%  பகுதியை உள்ளடக்கி, மேல் இமையின் மேல் ஓரமாக, அல்லது, கீழ் இமை இமைவிளிம்புத் தகட்டின் கீழ் ஓரமாக இமைசார் கண்சவ்வு நார்க்குழல் மாற்றங்கள் நிகழுகின்றன.
 • தரம் 3: இமைசார் கண்சவ்வு நார்க்குழல் மாற்றங்கள், மேல் இமையின் மேல் ஓரமாக அல்லது கீழ் இமையின் இமைத் தகட்டின் கீழ் ஓரமாக நிகழ்கிறது. இது மொத்தப்பரப்பில்  குறைந்தபட்சம் 25-75% பாகத்தைப் பாதிக்கும்.
 • தரம் 4: இமைசார் கண்சவ்வு நார்க்குழல் மாற்றங்கள் குறைந்த பட்சம் ஓர் இமையின் >75% பாகத்தை வடு இமையுட்பிறட்சியோடும் இல்லாமலும் பாதிக்கும்.

மருத்துவச் சோதனைகள்:

 • ஸ்கிர்மர் சோதனை:  நீடித்த கண் GVHD-யில் கண்ணீர்ச் சுரப்பி செயல்பாட்டைக் கண்டறிவதில்  ஸ்கிர்மர் சோதனை துணைபுரிகிறது. புதியதாக உருவான வெண்படலக் கண்சவ்வு அழற்சி உலர்கண்நோயுடன் ஸ்கிர்மர் மதிப்பெண் 6-10 எம்எம் அல்லது ஸ்கிர்மர் மதிப்பெண் ± 5 எம்எம் கொண்ட அறிகுறிகள் காட்டும் ஒரு நோயாளிக்கு பிற உறுப்பு பாதிப்பும் இருந்தால் அவை நீடித்த கண் GVHD கண்டறியும் அளவீடுகள் ஆகும்.
 • கண் பரப்பு நோய் அட்டவணை (OSDI): மாற்று சிகைச்சைக்கு முன் அல்லது மாற்று சிகிச்சைக்குப் பின் கண் GVHD இல்லாத நோயாளிகளை விட நீடித்தக் கண் GVHD நோயாளிகளுக்கு கண் பரப்பு நோய் அட்டவணை புள்ளிவிவரப்படி அதிகமாக உள்ளது என அறியப்பட்டுள்ளது (அகோமோ மற்றும் பிறர் 2008).
 • காணொளி வெண்படல மானி: நீடித்தக் கண் GVHD நோயாளிகளில் அதிகப் பிறழ்ச்சி காணப்படுமாயின் மதிப்பீட்டிற்குக் காணொளி வெண்படல மானி பயன் படுத்தலாம்.

திசுநோயியல்:

வெண்படல திசுவாய்வியல், திசுநோயியல், நிணசெல் கழிவுப்வெளியேற்றம், மற்றும் மாற்றணுசூழ்தல், மேற்திசு செல்நலிவு, சார் மேற்திசு நுண்கொப்புளம் உருவாதல், மற்றும் முடிவாக GVHD நோயாளிகளின் கண்சவ்வில் மேற்திசு முற்றிலுமாகப் பிரிதல் ஆகியவற்றைக் காட்டும்.

கண்டறிதல் அடிப்படைகள்:

கண் GVHD-யின் கண்டறிதல் அடிப்படை, நீடித்த GVHD-யின் மருத்துவ சோதனை அடிப்படைகளுக்கான தேசிய சுகாதார கருத்தொற்றுமை மேம்பாட்டுத் திட்ட  நிறுவனங்களால் 2005-ல் உருவாக்கப்பட்டன. 5 நிமிடங்களில் 5 எம்எம் என்ற சராசரி  ஸ்கிம்மெர் மதிப்பு அல்லது  6- 10 எம்எம் என்ற சராசரி ஸ்கிம்மெர் மதிப்புடன் வெண்படலக்கண்சவ்வு உலர்நோய் தொடக்கம் பிளவுவிளக்கு சோதனையில் காணப்படுதல் ஆகியவை இன்னுமொரு உறுப்பு மண்டலப் பாதிப்போடு இணைந்து காணப்படுதலே நீடித்த GVHD கண்டறிதலுக்குப் போதுமானது என்று கண்டறிதல் மற்றும் கட்டப்படுத்துதுதல் பணிக்குழு குறியுள்ளது.

தேசிய சுகாதாரக் கருத்தொற்றுமை மேம்பாட்டுத் திட்ட  நிறுவனங்கள் புதிதாக நோய் கண்டிருப்பதை வரையறுத்துள்ளது: உலர்ந்த, மொறுமொறுப்பான அல்லது வலியுள்ள கண்கள், வடுவுடனான கண்சவ்வழற்சி, உலர்கண் நோய், மற்றும்  புள்ளி வெண்படல நோய் இணையும் பகுதிகள் மேலும் கண்கோளத்தைச் சுற்றி நிறமி மிகைப்பு, உலர்ந்த சளி சுரப்பால் காலையில் கண்களைத் திறப்பதில் கடினம் மற்றும் இமையழற்சி ஆகியவை தனித்துவக் குறிகள் (நீடித்த GVHD-யில் காணப்படும், ஆனால் இவைகளைக் கொண்டு மட்டுமே நீடித்த GVHD-யை உறுதிசெய்ய இயலாது). அறிக்கையின்படி, ஒரு கண்டறிதல் குறி அல்லது ஒரு தனித்துவக் குறி (திசுவாய்வியல் மற்றும் ஆய்வக சோதனையால் உறுதிசெய்யப்பட்டது) மற்றும்/அல்லது இன்னுமொரு உறுப்பு மண்டலத்தில் தனித்துவ குறி இருப்பதைக் கொண்டு நீடித்த GVHD-யைக் கண்டறியலாம். GVHD-யை வகைப்படுத்துவதில் இது இரு புதிய வகைகளை சேர்க்க அடிப்படையாக அமைகிறது: நிலைத்த, திரும்பிவரும், அல்லது காலம் தாழ்ந்து தொடங்கும் கடும் GVHD (> 3 மாதங்கள்) மற்றும் மேற்படிதல் நோய்த்தாக்கம் (நெற்றிப்பகுதியோடு தொடர்பற்றது); இதில் கடும் மற்றும் நீடித்த வகை அம்சங்கள்  ஒருசேரத் தோன்றுகின்றன. கண்சார் கண்டுபிடிப்புகளை  மட்டுமே அடிப்படையாகக் கொண்ட நீடித்த GVHD (ஒரு தனித்துவ குறி காணப்படுதல்)  உலர்கண் திசுஆய்வியல் சான்றால் அல்லது ஸ்கிம்மர் சோதனையால் மற்றும் வேறு ஓர் உறுப்பில் தனித்துவமான வெளிப்பாட்டோடு சேர்ந்து காணப்பட்டால்  உறுதிசெய்யப்படும். கண் GVHD யைக் கண்டறிய  வழக்கமான திசுவியல் சோதனை பெரிய அளவில் பலன் அளிப்பதில்லை. கண்ணீர்ச் சுரப்பி திசு ஆய்வியல் ஊடுறுவல் கொண்டதனால் அது சுரப்பியின் செயல்திறனைக் குறைக்கும் ஆபத்து கொண்டது.

வேறுபடுத்திக்  கண்டறிதல்:

ஒரே மாதிரியான மருத்துவ அம்சங்கள் இருப்பதால் பின்வருபவற்றில் இருந்து GVHD-யை வேறுபடுத்திக் காண வேண்டும்:

 • தன்தடுப்பு நோய்கள்
 • கோலஜென் குழல் நோய்கள்

மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே மருத்துவ மேலாண்மை செய்யப்பட வேண்டும்.

GVHD நோயாளிகளுக்கு  சிகிச்சை அளிக்க  பிற மருத்துவக் குழுக்களின் ஒத்துழைப்போடு கூடிய பல்துறை அணுகுமுறை இன்றியமையாதது ஆகும்.  குருதியியல் மற்றும் புற்றுநோயியல் சேவைகள் மற்றும் முதல்நிலை செல் மாற்று சேவைகளோடு இணைந்து செயலாற்றுதல் இதில் அடங்கும்.

கண் GVHD மேலாண்மையில் அடங்குவன:

I.              முதல்நிலைத் தடுப்பு

II.            இரண்டாம் நிலை சிகிச்சை அணுகுமுறையில்  மேல் மற்றும் மண்டலம்சார் மருந்துகளும் அறுவை சிகிச்சையும் அடங்கும்.

I.              முதல்நிலைத் தடுப்பு

கண் GVHD-யைத் தடுப்பதே சிறந்த அணுகுமுறை.

 • சூழல் மாற்றங்கள்: குறைந்த ஈரப்பதம் உள்ள சூழல்களைத் தவிர்த்தல் உலர்கண் அறிகுறிகளைக் குறைக்கும். வீட்டில் ஈரப்பதமூட்டிகளை குறிப்பாகத் தூங்கும் போது பயன்படுத்துதல் நன்மை பயக்கும்.
 • புற ஊதாக்கதிர் பாதிப்பு: புற ஊதாக்கதிர் பாதிப்பைக் குறைப்பதும் பயன் அளிக்கும்.
 • கண் மதிப்பீடு: தொற்று, கண்புரை மற்றும் உட்கண் அழுத்தம்  கண்டறிய தொடர் கண் மதிப்பீடு. ஆகவே HSCT க்கு முன்னர் ஒரு முழு கண் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது.
 • சைக்ளோஸ்போரின் மேல்மருந்து: சைக்ளோஸ்போரின் மேல்மருந்தை  (0.05%) முற்காப்பாகப் பயன்படுத்தி வந்தால் நோய்க்கடுமை குறையும்.

II.            இரண்டாம்நிலை  சிகிச்சை அணுகுமுறை:

1.       மண்டலம்சார் மருத்துவ சிகிச்சை:

 • நோயெதிர்ப்பு அழுத்தம்: மண்டலம் சார் நோயெதிர்ப்பு அழுத்த மருந்துகள் GVHD-யின் வெளிப்பாட்டை தடுப்பதில் பலனளிக்கலாம்.  ஆனால் இதனால் ஏற்படும் நன்மைகளோடு தொற்று, கல்லீரல் நச்சு, சிறுநீரக நச்சு, மிகை இரத்த அழுத்தம் மேலும் மரணம் ஆகிய ஆபத்துகளையும்  எண்ணிப்பார்க்க வேண்டும். டேக்ரோலிமூஸ், பைக்கோஃபெனலேட் மொஃபெடில், சைக்ளோஸ்போரின், மெத்தோடிரெக்ஸேட், சிரோலிமஸ், ஆன்டிதைமோசைட் குளோபுலின், புற ஊதாக்கதிர் ஒளி சிகிச்சை மற்றும் கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள் மருந்துகளில் அடங்கும். இந்த மண்டலம் சார் சிகிச்சைகள் கடுமையான அல்லது சிகிச்சை எதிர்ப்பு நேர்வுகளுக்கே பெரும்பாலும் பயன்படுத்தப்படும். ஏனேனில் நீடித்த பயன்பாட்டால் நீண்ட கால எதிர் விளைவுகள் ஏற்படக் கூடும். இதற்குப் பதில் குறிப்பிட்ட உறுப்பு மண்டலத்தை குறி வைத்துக் கண் நோயெதிர்ப்பு அழுத்திகள் மூலம் முதல் நிலை சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

2.      பகுதிசார் மருத்துவ சிகிச்சை:

கண் மசகு, கண்ணீர் ஆவியாதலைக் குறைத்தல், கண் பரப்பு அழற்சியைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நோய்திர்ப்பு அழுத்தம் ஆகியவை பலனளிக்கும் சிகிச்சை முறைகள் ஆகும்.

. மசகு மற்றும் கண்ணீர் ஆவியாதலைத் தடுத்தல்:

 • பதப்படுத்தியற்ற செயற்கைக் கண்ணீர்: பதப்படுத்தியற்ற செயற்கைக் கண்ணீர் மற்றும் கண் மசகுக் களிம்புகள், மசகு அளிப்பதற்கும் கண்ணீர் படலத்தில் அழற்சி கடத்திகளை நீர்த்துப்போகச் செய்வதற்கும் சிறந்த அணுகுமுறை.
 • கண்ணீர்நாள அடைப்பு: தற்காலிகமாக  சிலிக்கான் செருகி கொண்டு அல்லது நிரந்தரமாக வெப்பத் தீய்ப்பின் மூலமாகக் கண்ணீர் நாளத்தை அடைப்பதனால் கண் பரப்பில் இருந்து கண்ணீர் வடிதலைக் குறைக்க முடியும்.
 •  ஈரப்பத அறை கண்ணாடிகண்ணீர் ஆவியாதலைக் குறைக்கவும் நோயாளிக்கு  இதம் அளிக்கவும்  ஈரப்பத அறை கண்ணாடி உதவுகிறது.​
 • மெய்போமியன் சுரப்பி செயலிழப்பு சிகிச்சை: மெய்போமியன் மற்றும் ஜீயிஸ் சுரப்பிகளின்  செயலிழப்பால் உலர் கண் நோய் அதிகரிக்கும். இவை  இரண்டும் பொதுவாகக் கண்ணீர் படலத்தில் வெளிப்புற லிப்பிட் அடுக்கை  உருவாக்குகின்றன. வெண்படல பரப்பில் இருந்து கண்ணீர் ஆவியாவதை குறைப்பதில் லிப்பிட் அடுக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.

சிகிச்சையில் அடங்குவன:

 • வெதுவெதுப்பான ஒத்தடம்
 • இமை சுகாதாரம்
 • வாய்வழி டெட்ரோசைக்ளின்கள் அல்லது அசித்ரோமைசின்

. கண்பரப்பு அழற்சியைக் குறைத்தல் மற்றும் நோயெதிர்ப்புஅழுத்தல்

 • கோர்ட்டிக்கோஸ்டிராய்டு மேல்மருந்து: கோர்ட்டிக்கோஸ்டிராய்டு மேல்மருந்து கண்பரப்பு அழற்சியைக் குறைக்கிறது. தீங்களிக்கும் பொருட்களைச் சூழ்ந்திருக்கும் பகுதியில் வெளியேற்றதவாறு திட்டமிட்ட செல் இறப்பு எனும் உத்தியின் மூலமும் செல்கள் மூலம் ஏற்படும் அழற்சியைத் தடுப்பதன் மூலமும்  இது நிறைவேற்றப்படுகிறது. பெரும்பாலும் ஸ்டிராய்டு மேல்மருந்துகளுடன் முற்காப்பு மேல்மருந்து நுண்ணுயிர்க் கொல்லிகள்  இணைத்து சிகிச்சை அளிக்கப்படுகின்றன.  பக்க விளைவைத் தடுக்க இவை படிப்படியாக குறைக்கப்படும்.  கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகளால் ஏற்படும் பக்க விளைவுகள் கண்காணிக்கப்படும். ஊடுறுவிகள், மேற்திசு குறைபாடுகள், வெண்படல திசுவலை மெலிதல் கொண்ட  நோயாளிகளில் இவை முரண் குறிப்புகள் அளிக்கும்.
 • சைக்ளோஸ்போரின் மேல்மருந்து: சைக்ளோஸ்போரின் ஏ மேல்மருந்து ஓர் எதிர் அழற்சி மருந்தாகும். இது பகுதி சார்ந்து T நிணநீர்செல்களைத் தடுப்பதோடு கண்சவ்வில் சைட்டோகைன் உற்பத்தியையும் தடுக்கிறது. சைக்ளோஸ்போரின் கண்ணீர்ச் சுரப்பி திசு அழிவையும் உலர் கண்ணையும் குறைக்கிறது. வெண்படல உணர்திறன், கண்ணீர் ஆவியாகும் வீதம், கண்ணீர் உடைதல் நேரம், முக்கிய சாயமேறல் மதிப்பெண், குடுவை செல் அடர்த்தி, கண்சவ்வு செதிள்செல் இடமாற்றம், மற்றும் அழற்சி செல் எண்ணிக்கை ஆகியவற்றில்  சைக்ளோஸ்போரின் மேல்மருந்து சிகிச்சைக்குப் பின் மேம்பாடுகள் காணப்படும்.  மசகு மற்றும் மேல் ஊக்கமருந்துகளால்  பலன் கிடைக்காதபோது  இது நீடித்த GVHD மற்றும் உலர்கண் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

. ஒரேநபர் ஊனீர் கண் சொட்டுகள்: ஒரேநபர் ஊனீர் கண் சொட்டுகள் (20-50%) கண் GVHD நோயாளிகளுக்கு உலர்கண்ணுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. செயற்கை கண்ணீரைப் போல் அல்லாமல் இவற்றில் அல்புமின், அகத்தோல் வளர்ச்சிக் காரணி, ஃபைப்ரோனெக்டின், உயிர்ச்சத்து ஏ, நரம்பு வளர்ச்சிக் காரணி மற்றும் கல்லீரல் செல் வளர்ச்சிக் காரணி ஆகியவை காணப்படுகின்றன.  இவை அனைத்தும் நிலைத்த கண்ணீர்ப்படலத்தைப் பேண உதவுகின்றன. அசுத்தமாகி தொற்றை உருவாக்கக் கூடிய ஆபத்து இதில் உள்ளது.

. வெண்படலத் தொடு வில்லைகள்: கடும் அல்லது கட்டுப்படாத உலர் கண் நோய் இருப்பவர்களுக்கு வெண்படலத் தொடு வில்லைகள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பெரிய தொடு வில்லைகள் வெண்படலப் பரப்பைத் தொடாமல் அதற்கு மேல் கண்னீர் நிரம்பிய ஒரு கூரையை உருவக்குகின்றன. இதில் ஜூபிடர் வில்லைகள் மற்றும் மரபு வடிவமைப்புடனான புரோஸ் (PROSE) வில்லைகள் அடங்கும்.

. சளிமுறிவு மருந்துகள்: கடும் இழை வெண்படல அழற்சிக்கு அசெட்டைல்சிஸ்டின் (10%)  பயன்படுத்தலாம்.

. புதிய சிகிச்சை முறைகள்: நோயெதிர்ப்புமிதப்படுத்தி டிரானிலாஸ்ட் (ரிசபென்) மேல்மருந்து, டேக்ரோலிமுஸ் மேல்மருந்து மற்றும் ரெட்டினாய்க் அமிலம் ஆகியவை புதிய மருந்துகளில் அடங்கும். இருப்பினும் பெரிய அலவிலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

3. அறுவை சிகிச்சை:

கடுமையான GVHD-க்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். இவற்றில் மருந்துச் சிகிச்சைகள்  அறிகுறிகளைக் குறைத்து கண் பரப்பை காக்க முடியாமல் இருக்கும்.

 • இமைத்தைப்பு:  கண் பரப்பைக் காக்க இமைத்தைப்பு தேவைப்படும்.  தையல், ஒட்டுப்பசை அல்லது போட்டுலினம் நச்சு ஆகியவற்றைக் கொண்டு இமைத்தைப்பை செய்யலாம்.  கடுமையான GVHD-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர இமைத்தைப்பு தேவைப்படுவதால் பெரும்பாலான நோயாளிகளுக்கு தையலே சிறந்த உத்தி.
 • பனிக்குடப் படல ஒட்டு: வெண்படலப் பரப்பைப் பாதுகாக்க பனிக்குடப் படல ஒட்டு சிகிச்சை செய்யலாம். ஒன்று அல்லது பல அடுக்காக  தையல் அல்லது ஃபைப்ரின் பசையால் பனிக்குடப்படலம் ஒட்டப்படும். உயிர்த்திசு புரோகெரா அல்லது ஆம்பியோடிஸ்க் போன்ற  தாங்கியின் துணையோடும் ஒட்டலாம்.
 • சையானோகிரைலேட் பசை ஒட்டு: சிறு வெண்படல மெலிவு மற்றும்  துளைகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.
 • ஆழ் முன் மடல் வெண்படல  அமைப்பு: பெரிய அளவிலான வெண்படல மெலிதலுக்கு இது பயன்படுகிறது.
 • ஊடுறுவல் வெண்படல அமைப்பு: பெரும் அளவிலான வெண்படல மெலிவுக்கு இம்முறை பயன்படுத்தப்படும். வெண்படல ஓட்டு பெரிய அளவினதாக இருக்குமானால் அவசர நிலையாக ஊடுறுவல் வெண்படல அமைப்பு சிகிச்சை செய்யப்படும். இணைந்து இமைதைப்பும் பனிக்குடப் படல ஒட்டும் கருதப்படும்.

நோய்முன்கணிப்பு:

மண்டலம் சார் கடும் GVHD –யில் கண்பாதிப்பு அரிது என்றாலும் அது நோய்முன்கணிப்பில்  ஒரு மோசமான காரணியாக கருதப்படுகிறது. அன்றாடக வாழ்க்கை தரத்தையும் நடவடிக்கைகளையும் பாதித்தாலும் நிரந்தர பார்வை இழப்புக்கு இது வழிகோலுவதில்லை.

 

சிகிச்சை அளிக்காவிட்டால் பின்வரும் சிக்கல்கள் உருவாகக் கூடும்.

 • வெண்படல வடு
 • கணீர்ச்சுரப்பி வடு
 • வெண்படலம் மெலிதல் அல்லது மேற்திசு உடைதல்
 • வெண்படலம் குழலரும்பல்
 • வெண்படலத் தொற்று
 • வெண்படலப் புண்
 • வெண்படல ஓட்டை

 • PUBLISHED DATE : Apr 12, 2018
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Apr 12, 2018

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.