பின்பேற்றுச் சீழ்க்காய்ச்சல்

மகப்பேற்றைத் தொடர்ந்து பெண்களுக்கு ஏற்படும் ஒரு தொற்றே பின்பேற்றுச் சீழ்க்காய்ச்சல் ஆகும். உலக அளவில், குருதிப்போக்கு மற்றும் கருச்சிதைவுக்குப் பின்தாய்மார் மரணத்துக்கான மூன்றாவது மிகப் பரவலான காரணம் இதுவே. ஆண்டுதோறும் ஏற்படும் 500 000 தாய்  மரணத்தில் உலக அளவில் 15% இதனால் ஏற்படுகிறது என்று .சு.நி. கூறுகிறது. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில், இனப்பெருக்க பருவத்தில் பெண்களுக்கான நோய்ப்பளுவில் இது ஆறாவது இடத்தை வகிக்கிறது. நீடித்த இடுப்பு அழற்சி நோய், பெண்களில் மலட்டுத்தன்மை போன்ற பல பிரச்சினைகள் இதனால் உருவாகின்றன.

பின்பேற்றுச் சீழ்க்காய்ச்சல் இனப்பெருக்கப் பாதைத் தொற்று என வரையறுக்கப்படுகிறது. பனிக்குடப் படலம் கிழிவதில் இருந்து அல்லது பேறுகால வலி ஏற்படுவதில் இருந்து பேற்றுக்குப் பின் 42 ஆம் நாளுக்கு இடைப்பட்ட காலம் வரை எப்போது வேண்டுமானாலும் இந்நோய் ஏற்படலாம். கீழ் வருவதில் ஏதாவது ஒன்று காணப்படும்:

 • காய்ச்சல் ( வாய்க் காய்ச்சல் 38.5°C/101.3°F அல்லது சிலவேளைகளில் அதிகம்)
 • இடுப்பு வலி
 • பெண்னுறுப்பில் அசாதாரணக் கசிவு உ-ம். சீழ் இருத்தல்
 • கசிவில் அசாதாரணத் துர் நாற்றம்
 • கருப்பை அளவு சுருங்குவதில் தாமதம்

(பின் பேற்றுச் சீழ்க்காய்ச்சல் என்பதை விட பின்பேற்றுத் தொற்று என்று கூறுவது மிகப்பொதுவானது ஆகும். பின்பேற்றுச் சீழ்க்காய்ச்சலில் தொற்று மட்டுமல்லாமல் கூடுதல் இன உறுப்புத் தொற்றும் தற்செயலான தொற்றும் உருவாகும்-.சு.நி)

1998 (மரணத்துக்கான காரணக் கணிப்பீடு) மற்றும் 2001-03 (மரணம் பற்றிய சிறப்புக் கணிப்பீடு) ஆகிய ஆண்டுகளின் தாய் இறப்பு விகிதமான முறையே 16% மற்றும் 11 %, பின்பேற்றுச் சீழ்க்காய்ச்சலால் ஏற்பட்டது என இந்திய மாதிரிப் பதிவு முறை (SRS) கணித்துள்ளது. மகாராஷ்ட்டிரத்தின் கிராமப் பகுதியில்  நடத்தப்பட்ட  ஒரு மக்கள்தொகை அடிப்படை ஆராய்ச்சியில் பின்பேற்று இரத்தப்போக்குக்குப் பின் அடுத்த பெரும் தாய் இறப்புக் (13.2%)  காரணம் பின்பேற்றுச் சீழ்க்காய்ச்சல் என அறிந்துள்ளது.

(தாய் இறப்பு விகிதம்: கர்ப்ப காலம் எவ்வளவாகவோ, மற்றும் கர்ப்பத் தரிப்பிடம் எதுவாகவோ இருந்தாலும், கர்ப்பம் தொடர்பான அல்லது கர்ப்பத்தால் அல்லது அதன் மேலாளுமையால் தூண்டப்பட்ட (நேரடி அல்லது மறைமுக பேறுகால இறப்பு)    கர்ப்பமாக இருக்கும்போது  அல்லது கர்ப்பம் முடிவுற்ற பின் 42 நாளில் ஏற்படும் மரணம் (விபத்தாலோ அல்லது தற்செயலான காரணத்தாலோ அல்ல).

பின்பேற்றுச் சீழ்க்காய்ச்சல், போதுமான முன்பேற்று  பராமரிப்பு, பரிந்துரைப்பு மற்றும் பேறுகாலச் சிக்கல்களுக்குக் காலத்தில் செய்யப்படும் சிகிச்சை, நிறுவன மகப்பேறு மற்றும் பிறப்புக்குப் பின்னான பராமரிப்பு ஆகியவற்றால்  தடுக்கக் கூடியதே.

குறிப்புகள்:

apps.who.int/iris/bitstream/10665/44145/6/9789241546669_6_

www.who.int/healthinfo/statistics/bod_maternalsepsis.pdf

planningcommission.nic.in/aboutus/committee/strgrp/stgp_fmlywel/sgfw

www.bettercaretogether.org/sites/default/files/resources/Hussein%20%

www.cghr.org/wordpress/wp-content/uploads/RGI-CGHR-Maternal-Mortality-in-India

www.healthline.com/health/puerperal-infection#Overview1

www.rcog.org.uk/globalassets/documents/guidelines/gtg_64b.

பின்பேற்றுச் சீழ்க்காய்ச்சல் இனப்பெருக்கப் பாதைத் தொற்று என வரையறுக்கப்படுகிறது. படலம் கிழிவதில் இருந்து அல்லது பேறுகால வலி ஏற்படுவதில் இருந்து பேற்றுக்குப்  பின் 42 ஆம் நாளுக்கு இடைப்பட்ட காலம் வரை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். கீழ்க்காணும் அறிகுறிகள் அல்லது நோய்க்குறிகளில் இரண்டோ அல்லது மேலோ காணப்படும்:

 • காய்ச்சலோடு (38°C அல்லது அதற்கு மேல்) குளிரும் பொதுவான உடல் சோர்வும் இருக்கலாம்.
 • கீழ் வயிற்று வலி.
 • கீழ் வயிற்று மென்மை.
 • கருப்பைச் சுருக்க விகிதம் குறைவதில் தாமதம் (முதல் எட்டு நாட்களில்<2 செ.மீ./நாள்)
 • துர்நாற்றமுள்ள சீழ்க்கசிவு
 • இலேசான யோனி குருதிப்போக்கு

குறிப்புகள்:

apps.who.int/iris/bitstream/10665/44145/6/9789241546669_6_eng.pdf

www.royalberkshire.nhs.uk/Downloads/GPs/GP%20proto

www.who.int/healthinfo/statistics/bod_maternalsepsis.pdf

குழந்தைப் பிறப்புக்குப் பின் இனப்பெருக்கப் பாதையில் ஏற்படும் நுண்ணுயிரித் தொற்றே பின்பேற்றுச் சீழ்க்காய்ச்சல். ஸ்ட்ரெப்டோகோகி, ஸ்டாஃபிலோகோசி, எஷெச்சீச்சியா கோலி (ஈ.கோலி), குளோஸ்டிரீடியம் டெடானி, குளோஸ்டிரீடியம் வெல்ச்சி, கிளமிடியா மற்றும் கோனாக்கோக் (பால்வினை நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரி) ஆகியவற்றால் இந்நோய் உண்டாகலாம். பின்பேற்ற்சுச் சீழ்க்காய்ச்சலில் ஒன்றுக்கு மேற்பட்ட நுண்ணுயிரிகளும் பாதிப்புக்குக் காரணமாக இருக்கலாம். இந்த நுண்ணுயிரிகள் மருத்துவமனையில், உட்காரணிகளால் அல்லது வெளிக்காரணிகளால் நோய் உருவாக்குபவைகளாக இருக்கலாம்.

மருத்துவமனைத் தொற்று: மருத்துவமனையில், மருத்துவமனை சூழல் அல்லது நோயாளியிடம் இருந்தே தொற்று உருவாகலாம்.

உள்நுண்ணுயிரி- இந்த நுண்ணுயிரிகள் பொதுவாக யோனி அல்லது குதத்தில் நோய் எதையும் உருவாக்காமலேயே இருக்கும் (சில வகைகள்: ஸ்ட்ரெப்டோகோகி , ஸ்டாஃபிலோகோசி, ஈ.கோலி, க்ளாஸ்டிரியியம் வெல்ச்சி). உள்நுண்ணுயிரிகள் யோனியில் இருந்து கருப்பைக்குப் பரவும்:

 • இடுப்பு சோதனையின் போதும் கருவிகளைப் பயன்படுத்தும் போதும்.
 • திசு சிதைவால் தடைப்பட்ட பேற்றின் போது.
 • படலம் கிழிந்து நேரம் கடக்கும் போது நுண்ணுயிரிகள் கருப்பைக்குள் நுழையலாம்.

வெளிநுண்ணுயிரி: இந்த நுண்ணுயிரிகள் அசுத்தக் கரம், கிருமியகற்றாத கருவிகள், பால்வினைத் தொற்று மற்றும் யோனிக்குள் நுழைக்கப்படும் அயல்பொருட்கள் மூலம் பரவுகின்றன. டெட்டனஸ் பெசிலி கிராமப் புறங்களில் பரவலாகக் காணப்படும். தாய்வழி மற்றும் சிசு டெட்டனஸ் நோய் வழக்கமான தடுப்பூசி மற்றும் நிறுவன சுகாதாரமான பேற்றாலும் கண்காணிப்பாலும் இந்தியாவில் ஒழிக்கப்பட்டு விட்டன.

ஆபத்துக்காரணிகள்: சில பெண்களுக்கு பின்பேற்று சீழ்க்காய்ச்சல் பரவும் ஆபத்து அதிக உள்ளது:

 • நீடித்த/தடைபடும் பேறு
 • பேற்றின் போது பலகட்ட யோனி சோதனை (5-க்கும் மேல்)
 • முன்கூட்டி பனிக்குடப் படலம் கிழிதல்
 • அறுவைப் பேறு
 • பேற்றுச் சோதனைகள்
 • பிறப்புக்குப் பின் குருதிப்போக்கு
 • முன்னரே இருக்கும் பால்வினைத் தொற்று
 • சரிசெய்யப்படாத கர்ப்பப்பை வாயழற்சி அல்லது யோனி அழற்சி
 • பேற்றின் போது சுகாதாரமற்ற கையாளல் முறை
 • இறந்த கரு, கொடிப் பகுதிகள் அல்லது படலங்களை அகற்ற நேரம் தாழ்த்தல்.
 • உடல்பருமன்
 • குறைந்த சமூகப் பொருளாதார நிலை
 • மோசமான ஊட்டச்சத்து
 • முதல் குழந்தைப் பேறு
 • இரத்தச் சோகை, நீரிழிவு

சமுதாயக் காரணிகள்

 • பயிற்சி பெறாதவரால் பிரசவம்
 • போக்குவரத்து வசதி இன்மை
 • மருத்துவ மனைக்கும் பெண் வீட்டிற்கும் தொலைதூரம்
 • பராமரிப்பைத் தடுக்கும் பண்பட்டுக் காரணிகள்
 • சமுதாய நிலைக் குறைவால்  பொதுவாக மோசமான ஆரோக்கியம்
 • பின்பிறப்பு சீழ்க்காய்ச்சலின் அறிகுறிகள் பற்றிய அறிவுக் குறைவு
 • பேற்றுக்குப் பின் சிகிச்சை கிடைத்தல்

குறிப்புகள்

apps.who.int/iris/bitstream/10665/44145/6/9789241546669_6_eng.pdf

www.royalberkshire.nhs.uk/Downloads/GPs/GP%20protocols%20and%20guidelines/Maternity%20Guidelines%20and%20Policies/Postnatal/Postpartum%20infection_V4.0_GL893.pdf

www.who.int/healthinfo/statistics/bod_maternalsepsis.pdf

pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=147093

பிறப்புக்குப் பின்னான சிக்கல்களை மதிப்பிட பொதுவான மருத்துவ வரலாறும் மருத்துவப் பரிசோதனையும் முக்கியமானவைகள் ஆகும். வெப்பநிலை, நாடி, மூச்சு, இரத்த அழுத்தம் மற்றும் மார்பு, வயிறு, குறியடிப்பகுதி, கால், குழந்தைப்பிறப்புக்குப் பின்னான கசிவுகள் ஆகிய முக்கிய நோய்க்குறிகளை ஆய்வதும் இன்றியமையாதது ஆகும்.

கீழ் வருவன போன்ற குழந்தைப் பிறப்புக்குப் பின் வரும் ஆறு வார காலங்களில் உண்டாகும் பல நோய் உருவாக்கும் காய்ச்சலை வேறுபடுத்திக் காணவேண்டும்:

 • சிறுநீர்ப்பாதைத் தொற்று
 • புண் தொற்று (அறுவைப் பேறு)
 • மார்புக் கட்டி
 • ஆழ் நரம்பு குருதி உறைவு
 • மூச்சுப்பாதைத் தொற்று
 • மலேரியா, குடல்காய்ச்சல், எச்.ஐ.வி போன்ற பிற நோய்கள்.

ஆய்வகச் சோதனை:

 • முழு இரத்த எண்ணிக்கை
 • சிறுநீர் ஆய்வு
 • மின்பகுளி மதிப்பீடு
 • இடுப்பு அல்லது கருப்பை திசு ஆய்வு
 • இரத்தத் திசு ஆய்வு
 • இடுப்பு குருதியுறைவு, ஆழ் நரம்புக் குருதியுறைவு, நுரையீரல்  தொற்று, அல்லது அறுவை சிகிச்சை ஆகியவற்றின் திரளாய்வு
 • கருவுறலில் எஞ்சிய பகுதி, இடுப்புக் கட்டி அல்லது குருதிக்கட்டி ஆகியவற்றைக் கண்டறிய இடுப்பு கேளாவொலி சோதனை உதவும்.
 • இடுப்பு குருதியுறைவைக் கண்டறிய முரண்-அதிகரிப்பு CT  அல்லது MRI பயன்படும்.

குறிப்புகள்

emedicine.medscape.com/article/796892-differential

www.healthline.com/health/puerperal-infection#Riskfactors4

apps.who.int/iris/bitstream/10665/44145/6/9789241546669_6_eng.pdf

தொடக்கத்திலேயே நோயைக் கண்டறிதல், சிகிச்சை, சிக்கல்களைத் தடுத்தல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் ஆகியவையே பின்பேற்றுச் சீழ்க்காய்ச்சல் நோய்மேலாண்மையின் நோக்கம் ஆகும்.

தனிமைப்படுத்தல் மற்றும் காப்பின்கீழ் பராமரிப்பு:  பிற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தொற்று பரவாமல் தடுக்க நோயாளியைத் தனிமைப்படுத்தி பரமாரிப்பு அளித்தலே இந்நோய் பராமரிப்பின் அடிப்படை.

நுண்ணுயிர்க் கொல்லிகள் அளித்தல்:  48 மணி நேரம் காய்ச்சல் வராமல் இருக்கும் வரை பல நுண்ணுயிர்க் கொல்லிகள் அளிக்கப்படுகின்றன. 72 மணி நேரம் வரை காய்ச்சல் கட்டுக்குள் வரவில்லை என்றால் மருத்துவர் நோயாளியையும் சிகிச்சையையும் மருத்துவ மறு மதிப்பீடு செய்வார்.  உயர் சிகிச்சைகள் பரிந்துரைக்கப்பட வேண்டும்.

நரப்பிசிவுநோய் தடுப்பு: நரப்பிசிவு நோய்கான தடுப்பு மருந்து அளிக்க வேண்டும்.

அதிக அளவில் நீராகாரம்: நீர்ச்சத்திழப்பைத் தடுக்கவும் காய்ச்சலைக் குறைக்கவும் அதிக அளவில் நீர்ப்பொருள் அளிக்க வேண்டும். கடுமையான நேர்வுகளுக்கு முதலில் நரம்பு வழியாகத் திரவம் செலுத்தப்பட வேண்டும். பெண் மயக்க நிலையில் இல்லாமலும் வரும் சில மணி நேரங்களில் அறுவை சிகிச்சை தேவை இல்லை என்றாலும் வாய்வழி நீர்ச்சத்து கொடுக்கலாம்.

நச்சுக்கொடிச் சிதைவுகள் தங்கவில்லை என்பதை உறுதிப்படுத்துதல்: நச்சுக்கொடியின் சிதைவுகள் உடலில் தங்கி இருப்பதும் பின்பேற்று சீழ்க்காய்ச்சலுக்கான ஒரு காரணம் ஆகும். எண்ணிம நுட்பம் பயன்படுத்தி உறைவு மற்றும் பெரிய நச்சுக்கொடித் துண்டுகளையும் கண்டறிவது அவசியம்.

பிறந்த குழந்தைப் பராமரிப்பு: தாய், கடும் நோய்வாய்ப் படவில்லை எனில் குழந்தையைத்  தாயுடன்இருக்க அனுமதிக்கலாம். ஆனால் தொற்று தாயிடம் இருந்து சேய்க்குப் பரவாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொற்றை ஆரம்பத்திலேயே அறிந்து கொள்ள கவனமான கண்காணிப்பு அவசியம்.

குறிப்புகள்:

apps.who.int/iris/bitstream/10665/44145/6/9789241546669_6_eng.pdf

www.gfmer.ch/SRH-Course-2010/national-guidelines/pdf/Management-

 

பின்பேற்று சீழ்க்காய்ச்சல்  நோய், குறிகீழ்ப்பகுதி, யோனி, கருப்பைவாய் அல்லது கருப்பையில் ஏற்படுகிறது. கடும் நேர்வுகளில் கருக்குழல், சூல்பையில் பரவி இடுப்புப் பகுதி செல் திசுக்களில் கருப்பைச் சுற்று தசைநார் அழற்சி  மற்றும் இடுப்பு குறிகீழ்ப்பகுதி அழற்சியையும் இரத்தத் தொற்று நோயையையும் உண்டாக்கக் கூடும்.

இடுப்பு அழற்சி நோயும் மலட்டுத் தன்மையும் பின்பேற்றுச் சீழ்க்காய்ச்சலின் தாமதமாக ஏற்படும் சிக்கல்கள்.

குறிப்புகள்:

apps.who.int/iris/bitstream/10665/44145/6/9789241546669_6_eng.pdf

www.healthline.com/health/puerperal-infection#Diagnosis5

ஆபத்துக் காரணிகளை இனங்காணுதல், தொற்றைத் தடுக்கும் உலகளாவிய தடுப்பு முறைகள், ஆரம்பக் கட்டத்திலேயே நோயறிகுறிகளையும் நோய்க்குறிகளையும் கண்டறிதல் ஆகியவை பின்பேற்று சீழ்க்காய்ச்சலைக் கணிசமான அளவில் தடுக்கும்.

பிறப்புக்கு முன் பராமரிப்பு: பிறப்புக்கு முன்னான மருத்துவ கண்காணிப்பின் போதே மருத்துவர் பல ஆபத்துக் காரணிகளைக் கண்டறிந்து தகுந்தபடி சிகிச்சைகள் அளிக்க முடியும். இரத்தச் சோகை, நீரிழிவு, பால்வினைத் தொற்று, கரு-இடுப்பு அளவுமாறல் ஆகியவற்றைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பின்பேற்று சீழ்க்காய்ச்சல் நேர்வுகளைக் குறைக்க இயலும்.

குழந்தைப் பேற்றுப் பராமரிப்பு: பின்பேற்று சீழ்க்காய்ச்சலைத் தடுக்க மேற்பார்வையுடன் கூடிய மருத்துவ மனைப் பேற்றையே ஊக்குவிக்க வேண்டும்:

 • தாய்க்குத் தொற்று ஏற்படாமல் தடுக்க மருத்துவ மனைகள் தொற்றற்ற நிலையில் பேணப்பட வேண்டும்.
 • பேற்று வரைபடத்தைப் பயன்படுத்தி குழந்தைப் பேற்றில் ஏற்படும் காலதாமதத்தைத்  தடுத்தல் பேறுகால சிகிச்சையின் முக்கிய அம்சம் ஆகும் (வலி ஏற்பட்டு 18 மணி நேரத்துக்குள் குழந்தை பெறுவதே நோக்கம்).
 • கன்னிக்குடம் உடைந்த பின் நேரம் கடத்துவது (12 மணி நேரத்துக்கு மேல்) நச்சுக்கொடி சிதைவுகள் உடலில் இருந்து அகற்றப்படாமல் இருப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் (கன்னிக்குடம் உடைந்து 24 மணி நேரத்துக்குள் குழந்தைப் பேறு நிகழ வேண்டும்).

பின்பேற்று மேலாண்மை: சிறந்த முறையில் சுத்தம் பேணப்பட்டால் குழந்தைப் பேற்றுக்குப் பின் ஏற்படும் தொற்றைத் தடுக்க முடியும். அறிகுறிகளை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் சிக்கல்களையும் தவிர்க்கலாம். தொடர்ந்து அனைத்து முக்கிய குறிகளையும் (உடல்வெப்பம், நாடி, இரத்த அழுத்தம், மூச்சு விகிதம்) ஒரு மகப்பேற்று எச்சரிக்கைப் பதிவு அட்டையில் குறித்து வர வேண்டும். பேற்றின் போது உடல்நலக் குறைவு கொண்ட பெண்மணிகள் அனைவரையும் அடிக்கடி தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.

சமுதாயத்தில் பாதுகாப்பான தாய்மையை ஊக்குவிக்கவும், தனிநபர், குடும்பம் மற்றும் பிற சமுதாய உறுப்பினர்களும் அதைப் புரிந்து கொண்டு உதவி புரியவும் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்களுக்கும் துணை செவிலிய  மருத்துவப்பணி மகளிருக்கும் உள்ள பங்கைச் சிறப்பாக வலியுறுத்தி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்புகள்:

www.who.int/mediacentre/factsheets/fs348/en/

apps.who.int/iris/bitstream/10665/59429/1/WHO_

 

 • PUBLISHED DATE : Sep 04, 2017
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Sep 04, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.