மாதவிடாய்க்கு முந்திய நோய்த்தாக்கம்

இனப்பெருக்க வயதில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான சுகாதாரப் பிரச்சினையே மாதவிடாய்க்கு முந்திய நோய்த்தாக்கம் ஆகும். ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியோடு தொடர்புடைய மனநிலை மாற்றத்தோடு இணைந்த சில உடலியல் அறிகுறிகளையும் குறிக்கும் மாதவிடாய்க்கு முந்திய நோய்த்தாக்கம் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கிறது.

உறவுகளையும், பணித்திறனையும் சமூக நடவடிக்கைகளையும் பாதிக்கும் நீடித்தக் கோளாறு என மருத்துவ ரீதியாக மா.மு.நோ. அறியப்படுகிறது. மக்கள் தொகை அடிப்படையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பங்கு பெற்றவர்களில் 91 % பேருக்கு ஏதாவது ஓர் அறிகுறி இருப்பதையும், 10.3% பேருக்கு மா.மு.நோ. இருப்பதையும், 3.1% பேருக்கு மாதவிலக்குக்கு முந்திய இயல்பற்றமனநிலைக் கோளாறுக்கான  (PMDD) அறிகுறிகள் இருப்பதையும் கண்டறிய முடிந்தது.  PMS மற்றும் PMDD ஆகிய இரண்டுமே மோசமான உடல்நிலை மற்றும் மனவியல் துன்பத்துடன் தொடர்புடையவை*.

கல்லூரி மாணவிகளிடையே குஜராத்தில் நடத்தப்பட்ட ஒரு குறுக்குவெட்டு ஆய்வு, கடந்த 12 மாத காலத்தில், ஆய்வில் பங்கேற்றவர்களில் 91.4 % பேர், மாதவிடாய் சுழற்சியில் பாதி காலம்  குறைந்த பட்சம்  ஒரு மாதவிடாய்க்கு முந்திய அறிகுறியால் (மிதமானதில் இருந்து கடுமையானது வரை) பாதிக்கப்பட்டனர் என்று காட்டுகிறது. மிகவும் பரவலாகக் காணப்பட்ட அறிகுறிகள்,  களைப்பு/ஆற்றலின்மை (68.3 %), பணியில் ஆர்வமின்மை (60.1%) மற்றும் கோபம்/எரிச்சல் (59.9%).**

PMS / PMDD –க்கான ஆபத்துக் காரணிகளில் அடங்குவன: மனவழுத்தம், மரபுக் காரணிகள், உடல் பருமன், பிற சுகாதாரப் பிரச்சினைகள், மனக்கவலை, பதட்டம் மற்றும் உளவியல் கோளாறுகள். ஆரோக்கியமான உணவு மற்றும் தகுந்த உடல் பயிற்சிகள் அடங்கிய வாழ்க்கை முறையே PMS-ஐத் தடுக்கவும் கையாளவும் தேவைப்படும் முதல் படி.

குறிப்புகள்:

www.emedicinehealth.com/

* link.springer.com/article

** www.indianjpsychiatry.org

medlineplus.gov/ency

www.acog.org

மாதவிடாய்க்கு முந்திய அறிகுறிகள் இனப்பெருக்க வயதில் இருக்கும் 90% பேரை அவர்கள் வாழ்நாளில் எப்போதாவது பாதிக்கும் என்பது அறியப்பட்ட ஒன்றே. மாதவிடாய் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிகுறிகள் தென்படுகின்றன. மாதவிடாய்க்கு இரு நாட்களுக்கு முன் கடுமையாகி மாதவிடாய்க்குப் பின் இரண்டொரு நாளில் குறைகிறது. பெண்களுக்குப் பெண்கள் அறிகுறிகள் மாறுபடுகின்றன. கீழ்க்காணும் மாற்றங்களாக அறிகுறிகள் காணப்படும்:

மனநிலை-மனக்கலக்கம், நரம்புத்தளர்ச்சி, மனநிலை ஆட்டம், எரிச்சல், மறதி, குழப்பம், மனச்சோர்வு, தூக்கமின்மை.

நடத்தை- இனிப்பு நாட்டம், அதிக உணவு, அழுகை, மனஒருமை இன்மை, ஒலிக்கூச்சம், மது ஏற்புதிறனில் மாற்றம்.

உடலியல்- தலைவலி, படபடப்பு, களைப்பு, எடை கூடல், உப்புசம், மார்பு வீக்கமும் மென்மையும், மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு, மயக்கம்.

மாதவிடாய்க்கு முந்திய இயல்பற்ற மனநிலைக் கோளாறு (PMDD):  இது மாதவிடாய்க்கு முந்திய நோய்த்தாக்கத்தை விட கடுமையானது (PMS). மனநிலை சார் அறிகுறிகள் ஒன்றுபோல் இருந்தாலும் கடுமையாகவும் அதிக பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் இருக்கும். PMS-ன் உடலியல் அறிகுறிகள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.

குறிப்புகள்:

www.emedicinehealth.com

www.acog.org/Patients

மாதவிடாய்க்கு முந்திய நோய்த்தாக்கத்தின் உறுதியான காரணம் தெரியவில்லை. இருப்பினும், அண்மைக் கால ஆராய்ச்சியின் பயனாகக் கீழ்வருபவை நோய்க்காரணிகளாகக் கருதப்படுகின்றன:

செரோட்டோன் குறைபாடு: மா.மு.நோ. பாதிப்பு கொண்டவர்களுக்கு செரட்டோனின் அளவு குறைவாக உள்ளது.

மக்னீசியம் மற்றும் கால்சியம் குறைபாடு: இவற்றைக் கூடுதல் சத்தாக அளிக்கும் போது உடலியல் மற்றும் உணர்வியல் அறிகுறிகள் மேம்படுகின்றன.

இயல்பான ஊக்கநீர் மாற்றங்களுக்கு மிகை எதிர்வினை: எஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் அளவுகள் இந் நோய்த்தாக்கம் அற்ற பெண்களைப் போலவே உள்ளன.

வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் ஏற்பட்ட தவறுகள் (உணர்வியல், பால்வினை அல்லது உடலியல்) பிற்கால மத்திய இனப்பெருக்கப் பருவங்களில் மா.மு.நோ. ஏற்பட ஆபத்துக் காரணிகளாக உள்ளன.

ஆபத்துக் காரணிகள்: உடல்பருமனும் புகைபிடித்தலும் மா.மு.நோய்த் தாக்கத்துக்கான ஆபத்துக் காரணிகள் ஆகும். 30kg/m2 அல்லது அதற்கு மேலும் உடல் நிறை அட்டவணை  (BMI) கொண்ட பெண்களுக்கு உடல் பருமன் அற்ற பெண்களோடு ஒப்பிடும் போது மா.மு.நோ. ஏற்படும் ஆபத்து மூன்று மடங்கு அதிகம் ஆகும். புகைக்கும் பெண்களுக்கு அறிகுறிகள் அதிகமாக இருக்கும்.

கருமுட்டை சுழற்சி உள்ள பெண்களை இந்நோய் பாதிக்கும்.  இளம் கன்னிகளை விட முதிர் கன்னிகளுக்கு அறிகுறிகள் கடுமையாக இருக்கும். 40 வயதில் பெண்களுக்கு இதனால் பாதிப்பு அதிகம். மாதவிடாய்க்குப் பிந்திய கட்டத்தில் இது தானாகவே சரியாகி விடும்.

குறிப்புகள்:

emedicine.medscape.com/article/953696-overview#a3

emedicine.medscape.com/article/953696-overview#a6

emedicine.medscape.com/article/953696-overview#a7

www.ncbi.nlm.nih.gov/pubmed/25098348

மாதவிடாய்க்கு முந்திய நோய்த்தாக்கம் மருத்துவ ரீதியாக, அறிகுறிகளைக் கொண்டு கண்டறியப்படுகிறது. மனச்சோர்வு, மனக்கலக்கம், மாதவிலக்கு நிற்பதற்கு முன்னான அறிகுறிகள், நீடித்தக் களைப்பு நோய்த்தாக்கம், குடல் எரிச்சல் நோய்த்தாக்கம், தைராயிடு நோய் போன்றவற்றின் அறிகுறிகளில் இருந்து வேறுபடுத்தி இந்நோய் கண்டறியப்படும். மனச்சோர்வும் மனக்கலக்கமுமே  இந்நோய் அறிகுறிகளுடன் ஒன்றுபோல் காணப்படலாம். இருப்பினும் இந்நிலைகளுக்கான அறிகுறிகள் மாதம் முழுவதும் காணப்பட்டு மாதவிடாய்க்கு முன் அல்லது மாதவிடாயின் போது மோசமாகும்.

அறிகுறிகளின் பதிவை வைத்துக் கொள்ளுவது மா.மு.நோ. பற்றி சுகாதார வல்லுநர்கள் அறிந்து கொள்ள உதவும். ஓரிரு மாதங்களுக்கு நோயாளிகள் தங்கள் அறிகுறிகளைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துவர். இந்த அறிகுறிகள் பற்றி நன்கு அறிந்து கொள்ளவும் நோயாளியின் மாதவிடாய் சுழற்சியோடு அதன் தொடர்பையும் நன்கு அறியவும் இப்பதிவுகள் உதவும். நோய் கண்டறியும்  சில அறிகுறிகள் வருமாறு:

மாதவிடாய்க்கு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்னரே அறிகுறிகள் குறைந்தபட்சம் மூன்று மாதவிடாய் சுழற்சிக்குத் தொடரும்.

மாதவிடாய் தொடங்கி முதல் நாள் அல்லது இரண்டாம் நாள் அறிகுறிகளின் தீவிரம் குறையும்.

சில இயல்பான நடவடிக்கைகளுக்கு அறிகுறிகள் இடையூறு ஏற்படுத்தும்.

மா.மு.நோ. வை உறுதி செய்ய எந்த ஆய்வுகளும் கிடையாது.

குறிப்புகள்:

www.emedicinehealth.com

www.acog.org/Patients

மாதவிடாய்க்குப் பிந்திய நோய்த்தாக்கத்தின் அறிகுறிகள் இலேசாக இருந்தால், ஆரோக்கிய உணவு, உடல்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களால் சீர் செய்ய இயலும். அதிக உணர்வுக் கோளாறுகள் இருக்குமானால் நடத்தை ஆலோசனை மற்றும் மனவழுத்தக் கட்டுப்பாட்டின் மூலம் நோயாளிகள் கட்டுப்பாட்டைத் திரும்பப் பெறமுடியும்.

ஆரோக்கிய உணவு: உணவில் எளிய மாற்றங்கள் செய்து மா.பி.நோ. வின் அறிகுறிகளைக் குறைக்கலாம்:

முழு தானிய ரொட்டி, பருப்பு வகைகள், பார்லி, பழுப்பரிசி, பீன்ஸ், பயறு போன்றவைகளை உண்ணவும். முழு தானியங்களில் கூட்டு கார்போஹைடிரேட்டுகள் உள்ளன. இவை மனநிலை மாற்றங்களையும் உணவு விருப்பத்தையும் குறைக்கும்.

பழங்கள், கீரை, காய்கறிகள், கொழுப்பு குறைந்த பாலாடை, தயிர் மற்றும் பாலை உணவில் சேர்த்துக்கொள்ளவும் (சுண்ணாம்புச் சத்து நிறைந்தவை).

கொழுப்பு, உப்பு மற்றும் சீனியைக் குறைக்கவும்.

காபின் மற்றும் மதுவைத் தவிர்க்கவும்.

மூன்று வேளை முழு உணவை உண்ணாமல் ஆறு வேளை குறைந்த அளவு உணவு உட்கொள்ளவும். அல்லது மூன்று வேளை குறைந்த அளவு உணவுண்டு மூன்று வேளை சிற்றுண்டி இணைத்துக் கொள்ளவும். இது இரத்தச் சர்க்கரை அளவைக் குறைத்து அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவும்.

அதிக அளவில் நீராகாரம் உட்கொள்ளவும் (நீர் அல்லது பழச்சாறு; குளிர்பானம், மது அல்லது காபின் உள்ள பானங்களைத் தவிர்க்கவும்)

உடல்பயிற்சி: அறிகுறிகள் வெளிப்படும் நாட்களில் மட்டுமன்றி, உடல் பயிற்சியைத் தொடர்ந்து செய்யவும். தினமும் 30 நிமிட மூச்சுப் பயிற்சிகள் செய்வது அறிகுறிகளைக் குறைக்க உதவும். துரித நடை, ஓட்டம், சைக்கிள் சவாரி, நீச்சல் ஆகியவை இதில் அடங்கும். இதனால் இதயத் துடிப்பும் நுரையீரல் செயல்பாடும் சீர்படும். களைப்பையும் மனச்சோர்வையும் அகற்றும்.

உடலோய்வு உத்திகள்: அழுத்தப் பகுதிகள் இனங்காணப்பட வேண்டும். அழுத்தம் குறைக்கப்படும் போது அறிகுறிகளும் குறையும். அறிகுறிகளைக் குறைக்க மூச்சுப் பயிற்சி, தியானம் மற்றும் யோகா உதவும்.

போதுமான தூக்கம்: முறையான தூக்கம் வாழ்க்கை முறை மாற்றத்துக்கு முக்கியம். ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுவது முறையான தூக்க நடத்தை எனலாம் (வார இறுதியிலும் கூட).

ஊட்டச் சத்து: கால்சியம் (சுண்ணாம்பு) , மக்னீசியம், உயிர்சத்து E ஆகியவை அறிகுறிகளைக் குறைக்க உதவும்.

புகைத்தலை விடுதல்

அறிகுறிகள் கடுமையாக இருந்து நடைமுறை வாழ்க்கையைப் பாதித்தால் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும். கடுமையான நேர்வுகளுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் அடங்குவன:

(அ) இயக்குநீர் கருத்தடைகள்: முட்டை விடுப்பை இவை தவிர்த்து உடலியல் அறிகுறிகளை அகற்றும்.

(ஆ) மனச்சோர்வழுத்திகள்:  மனநிலை அறிகுறிகளைக் குறைக்கும்.

(இ) மனக்கலக்க எதிர்மருந்துகள்:  மனக்கலக்கம் பெரும் அறிகுறியாக இருந்தால் இவை துணைபுரியும்.

(உ)ஊக்கமருந்தற்ற எதிரழற்சி மருந்துகள்: வலியைக் குறைக்கும். நீண்ட நாள் பயன்பாடு பரிந்துரைக்கப்படவில்லை.

(ஊ) நீர்பிரிப்பிகள்: சிறுநீரகம் வழியாக மிகை நீர் அகற்றப்படும். எடை குறைக்கவும், மார்பு வீக்கம் தடுக்கவும், உப்புசம் குறைக்கவும் பயன்படும்.

குறிப்புகள்:

www.acog.org/Patients/FAQs

www.emedicinehealth.com

மாதவிடாய்க்கு முந்திய நோய்த்தாக்கம் மோசமான உடல் நிலை மற்றும் மிகை உளவியல் துன்பத்தோடு தொடர்புடையது. எனவே ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் உடல் பயிற்சி போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்களால் இதன் அறிகுறிகளைத் தடுக்க முடியும்.

ஆரோக்கிய உணவு: உணவில் எளிய மாற்றங்கள் செய்து மா.பி.நோ. வின் அறிகுறிகளைக் குறைக்கலாம்:

முழு தானிய ரொட்டி, பருப்பு வகைகள், பார்லி, பழுப்பரிசி, பீன்ஸ், பயறு போன்றவைகளை உண்ணவும். முழு தானியங்களில் கூட்டு கார்போஹைடிரேட்டுகள் உள்ளன. இவை மனநிலை மாற்றங்களையும் உணவு விருப்பத்தையும் குறைக்கும்.

பழங்கள், கீரை, காய்கறிகள், கொழுப்பு குறைந்த பாலாடை, தயிர் மற்றும் பாலை உணவில் சேர்த்துக்கொள்ளவும் (சுண்ணாம்புச் சத்து நிறைந்தவை).

கொழுப்பு, உப்பு மற்றும் சீனியைக் குறைக்கவும்.

காபின் மற்றும் மதுவைத் தவிர்க்கவும்.

மூன்று வேளை முழு உணவை உண்ணாமல் ஆறு வேளை குறைந்த அளவு உணவு உட்கொள்ளவும். அல்லது மூன்று வேளை குறைந்த அளவு உணவுண்டு மூன்று வேளை சிற்றுண்டி இணைத்துக் கொள்ளவும். இது இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவும்.

அதிக அளவில் நீராகாரம் உட்கொள்ளவும் (நீர் அல்லது பழச்சாறு; குளிர்பானம், மது அல்லது காபின் உள்ள பானங்களைத் தவிர்க்கவும்)

உடல்பயிற்சி: அறிகுறிகள் வெளிப்படும் நாட்களில் மட்டுமன்றி, உடல் பயிற்சியைத் தொடர்ந்து எடுக்கவும். தினமும் 30 நிமிட மூச்சுப் பயிற்சிகள் செய்வது அறிகுறிகளைக் குறைக்க உதவும். துரித நடை, ஓட்டம், சைக்கிள் சவாரி, நீச்சல் ஆகியவை இதில் அடங்கும். இதனால் இதயத் துடிப்பும் நுரையீரல் செயல்பாடும் சீர்படும். களைப்பையும் மனச்சோர்வையும் அகற்றும்.

உடலோய்வு உத்திகள்: அழுத்தப் பகுதிகள் இனங்காணப்பட வேண்டும். அழுத்தம் குறைக்கப்படும் போது அறிகுறிகளும் குறையும். மூச்சுப் பயிற்சி, தியானம் மற்றும் யோகா அறிகுறிகளைக் குறைக்க உதவும்.

போதுமான தூக்கம்: முறையான தூக்கம் வாழ்க்கை முறை மாற்றத்துக்கு முக்கியம். ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுவது முறையான தூக்க நடத்தை எனலாம் (வார இறுதியிலும் கூட).

ஊட்டச் சத்து: கால்சியம் (சுண்ணாம்பு) , மக்னீசியம், உயிர்சத்து E ஆகியவை அறிகுறிகளைக் குறைக்க உதவும்.

புகைத்தலை விடுதல்

குறிப்புகள்:

www.acog.org/Patients

www.emedicinehealth.com

• PUBLISHED DATE : Aug 25, 2017
• PUBLISHED BY : NHP Admin
• CREATED / VALIDATED BY : R. Davidson
• LAST UPDATED ON : Aug 25, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.