Chikungunya-Fever.png

சிக்கன்குனியா காய்ச்சல்

சிக்கன்குனியா காய்ச்சலும் நுண்ணியிரிகளினால் பரவும் நோயாகும். நுண்ணியிர்கள் தொற்றிய  ஏடிஸ் வகை கொசுக்களால் இந்நோய் பரப்பப்படுகிறது. இவ்வினக் கொசுக்கள் வீடுகளில் உள்ள நீர் சேமிக்கும் கொள்கலன்களில் முட்டை இட்டுப் பெருகுகின்றன. பகலில் கடிக்கும். தொகவிரிடே (togaviridae) குடும்பத்தைச் சேர்ந்த ஆல்ஃபாவைரஸ் (alphavirus) இன நுண்ணுயிரிகளால் இந்நோய் ஏற்படுகிறது. நுண்ணுயிரிகளைக் கொண்ட கொசுக்கள் கடிக்கும்போது மனிதனுக்கு இந்நோய் உண்டாகிறது. அறிகுறிகள், உடலில் காணப்படும் மாற்றங்கள் (எடுத்துக்காட்டு: மூட்டுக்களில் வீக்கம்), ஆய்வகச் சோதனை, பாதிக்கப்பட்ட கொசுக்களால் கடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக் கூறுகள் ஆகியவற்றால் சிக்கன்குனியா காய்ச்சல் கண்டறியப்படுகிறது. சிக்கன்குனியாவுக்கு என்று தனிப்பட்ட மருத்துவம் எதுவும் இல்லை. அறிகுறிகளைக் கொண்டே நோய்ப் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்புகள்: www.who.int
www.nvbdcp.gov.in
www.cdc.gov
www.icmr.nic.in

மூட்டு வலியோடு திடீரெனத் தோன்றும் காய்ச்சலே இதன் பொதுவான அம்சமாகும். பிற அறிகுறிகளில் அடங்குவன:

 • தசை வலி
 • சோர்வும் குமட்டலும்
 • தலைவலி
 • சொறி
 • மூட்டு வலி மிகவும் பலவீனப்படுத்தும். ஆனால் சில நாட்களிலோ வாரங்களிலோ நின்று போகும்.

குறிப்புகள்: www.cdc.gov

நுண்ணியிரியைக் கொண்ட கொசு கடிப்பதினால் இந்நோய் ஏற்படுகிறது. சிக்கன்குனியா நோய் வாய்ப்பட்ட ஒரு மனிதனைக் கடிப்பதினால் கொசுவுக்கு இந்நுண்ணுயிரி தொற்றுகிறது. நோயரும்பும் காலம் (தொற்று ஏறி நோயாக மாறும் கால அளவு) 2-12 நாட்கள்.ஆனால் பொதுவாக இது 3-7 நாட்களாக உள்ளன. அரவமற்ற சிக்கன்குனியாவும் (நோயாக உருவாகாத தொற்று) அரிதாக ஏற்படுவது உண்டு.

குறிப்புகள்: www.nvbdcp.gov.in
www.cdc.gov

IgM & IgG எதிர் சிக்கன்குனியா நோயெதிர்ப்புப் பொருட்கள் இருப்பதை EISA மதிப்பீடு  (Enzyme-linked Immunosorbent assays) உறுதி செய்யலாம்.

பல்வேறு RT-PCR தொடர் மறுவினை (reverse transcriptase–polymerase chain reaction) முறைகளும் உண்டு. ஆனால் அவை வெவ்வேறு உணர்திறன் (variable sensitivity) கொண்டவை.

மருத்துவ மாதிரிகளில் இருந்து கிடைத்த RT-PCR விளைபொருட்களை (products) பயன்படுத்தி நுண்ணுயிரியின் மரபணு உள்ளமைப்பை ஆராயமுடியும் (genotyping). இது பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட நுண்ணுயிரி மாதிரிகளோடு ஒப்பிட்டு ஆராய வழிகோலும்.

குறிப்புகள்: www.who.int
www.icmr.nic.in

இந்நோயைக் குணப்படுத்த குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை.

 • வலிநிவாரணிகளான பாரசெட்டமால், இபுபுரூபன் போன்றவை வலியைக் குறைக்க உதவும்.
 • அசைகுளோவிர் (acyclovir) போன்ற நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளைக் கொடுக்கலாம் (ஆனால் பிற கோளாறுகளைக் கொண்ட நோயாளிகளுக்கு மருத்துவர் ஆலோசனையின்படியே தரப்படவேண்டும்)
 • நீர் அருந்துதல்: அதிக அளவில் நீராகாரங்களை எடுப்பதால் உடல் நீர்ச்சத்து இழந்து போகாமல் தவிர்க்கலாம்.

குறிப்புகள்www.who.int

சிக்கன்குனியாவுக்குக் குறிப்பிட்ட தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை. டெங்குவைப் போன்று கொசுவால் பரவும் பிற வைரஸ் நோய்களை போன்றே இதற்கும் தடுப்பு முறைகள் கையாளப்படுகின்றன.

 • DEET, பிக்காரிடின், எலுமிச்சை யூக்காலிப்டஸ் எண்ணெய் ஆகியவையால் ஆன கொசுவிரட்டிகளை உடலின் தெரியும் பகுதிகளில் பூசவும். எப்போதும் மருந்துப் பெட்டிகளின் வெளியட்டைகளில் எழுதப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.
 • கையும் காலும் முற்றிலும் மறையும்படி ஆடை அணியவும் (துணிகளில் பெர்மெத்ரின் போன்ற கொசுவிரட்டிகளைத் தெளிக்கவும்)
 • கதவுகள், ஜன்னல்களை பாதுகாப்பான வலையால் மூடவும்.
 • மேலும் சிக்கன்குனியா காய்ச்சல் உள்ள ஒருவர் தன்னைக் கொசு கடியில் இருந்து பாதுகாத்துக் கொண்டால் நோய் மேலும் பரவாது தடுக்க முடியும். அவர் வெளியில் இருக்கும் போது கொசுவிரட்டி மருந்துகளைப் பயன்படுத்தியும், அறைக்குள் இருக்கும் போது திரைகளாலும் கொசுவலையாலும் கொசுக்கடியில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்புகள்www.cdc.gov

 • PUBLISHED DATE : May 19, 2015
 • PUBLISHED BY : NHP CC DC
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Jul 08, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.